Tweet | ||||||
Tuesday, September 11, 2012
ஓட்ஸ் பாப்கார்ன் தந்தூரி சிக்கன் ப்ரை
ஓட்ஸ் பாப்கார்ன் தந்தூரி சிக்கன் ப்ரை
தேவையானவை
எலும்பில்லாத சிக்கன் – 200 கிராம்
ஊறவைக்க
மிளகாய் தூள் - ¾ தேக்கரண்டி
ஷான் தந்தூரி – ¾ தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ¾ தேக்கரண்டி
லெமன் ஜூஸ் – 1 தேக்கரண்டி
உப்பு – ½ தேக்கரண்டி
உருக்கிய வெண்ணை – 1 தேக்கரண்டி
சிக்கனுடன் கலந்து கொள்ள
முட்டை வெள்ளை கரு – 1
சிக்கன் கோட்டிங்கிற்கு
ஓட்ஸ் - 1 மேசைகரண்டி
கார்ன் ப்ளார் மாவு – 2 மேசைகரண்டி
ப்ரட் க்ரம்ஸ் – 1 மேசைகரண்டி
எண்ணை + பட்டர் – பொரிக்க் தேவையான அளவு
செய்முறை
சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.
ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
வெள்ளை கருவை நன்கு நுரை பொங்க அடித்து ஊறவைத்த சிக்கனுடன் சேர்த்து மேலும் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
ஓட்ஸ், ப்ரட் கிரம்ஸ், கார்ன் மாவை ஒன்றாக கலந்து ஊறிய சிக்கனை ஒவ்வொன்றாக எடுத்து பிறட்டி பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
ஒரு வாயகன்ற வானலியில் எண்ணையை சூடாக்கி தீயின் தனலை மீடியமாக வைத்து எல்லா பாப்கார்ன் சிக்கனையும் சிவற பொரித்து எண்ணையை வடித்து எடுக்கவும்.இது போல அழகாக குட்டியாக பாப்கார்ன் சைஸுக்கு சிக்கனை கிரிஸ்பியாக பொரித்து வைத்தால் குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான்.
குக்கும்பர் சாலடுடன் பார்டியில் குழந்தைகளுக்கு வைக்கலாம்.
இதை பாயிஜாவின் பார்டி ஈவண்டுக்காக அனுப்புகிறேன்.
Labels:
அசைவம்,
கிட்ஸ் ஸ்பெஷல்,
குழந்தை உணவு,
சிக்கன்,
பார்டி உணவு
Subscribe to:
Post Comments (Atom)
8 கருத்துகள்:
செய்து பார்ப்போம்... மிக்க நன்றி சகோ...
சுவையான ஸ்நாக்...குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சிக்கன் ப்ரை...சூப்பப்ர்...
thanks for linking this recipe to my event and using the logo. Expecting more recipes from you
திண்டுக்கல் தனபாலன் செய்து பார்த்து சொல்லுங்கள்
வாங்க கீதா ஆச்சல் பையன் எப்படி இருக்கிறார் நல்ல இருக்கீறாரா?
இப்ப நல்ல டைம் போகுமே
வருகைக்கு மிக்க் நன்றி
நன்றி சிநேகிதி
Delicious and super crispy fry.
மிக அருமை ஜலீலா...
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா