Monday, June 2, 2014

கேரட் பாஸ்தா - Carrot Pasta



குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸ் கொடுத்தனுப்ப எத வைத்தாலும் அப்படியே திரும்பி ( போன மச்சான் திரும்பிவந்தான்னு ) வருதேன்னு அம்மா மார்கள் கவலை படுவதுண்டு. மதிய உணவுக்கு மெனக்கிடுவதை விட காலையில் குழந்தைகள் லன்ச் பாக்ஸ்க்கு விதவிதமாக கொஞ்சம் சிரமம் பார்க்காமல் செய்து வைத்தால் குழந்தைகள் குஷியுடன் சாப்பிட்டுவருவார்கள்.
இரவு முழுவதும் வயிறு காலியாக இருக்கிறது, அதில் காலையில் ஏதாவது பாலை குடித்து விட்டு போனால் இந்த பஸ்ஸில் அல்லது ஆட்டோவில் சுற்றி சுற்றி போய் சேருவதறகுள் அடிக்கிற இந்த வெயிலுக்கு வாந்தி தான் வரும்.

அதுவும் குழந்தைகளுக்கு நூடுல்ஸ் பாஸ்தா என்றால் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். இது போல் செய்து வைத்தால் ரொம்ப ஈசியாக நோகாமல் சாப்பிடுவார்கள். 
பாஸ்தா முதல் நாளே வேக வைத்து, வைத்து கொண்டால் 10 நிமிடத்துக்குள் செய்து லன்ச் பாக்ஸ் க்கு அனுப்பி விடலாம். தேவைப்பட்டால் இதில் எலும்பில்லாத சிக்கனை கூடசேர்த்து கொள்ளலாம்.

(முக நூலில் சமையல் அட்டகாசம் பேஜில் ஒரு தோழி(nafeesa Banu) ஈசியான லன்ச் பாக்ஸ் ரெசிபி கேட்டதால் இந்த பாஸ்தா) 

தேவையான பொருட்கள் 

வேகவைத்த பாஸ்தா - அரை கப்
வெங்காயம் - பொடியாக நறுக்கியது இரண்டு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு விழுது -  அரை தேக்கரண்டி 
தக்காளி பேஸ்ட் -  ஒரு மேசை கரண்டி
கேரட் பொடியாக நறுக்கியது - இரண்டு மேசைகரண்டி
உப்பு -  அரை தேக்கரண்டி
மிளகாய் தூள்  - கால் தேக்கரண்டி
பட்டர் + எண்ணை - ஒரு தேக்கரண்டி



செய்முறை

நான்ஸ்டிக் பேனில் எண்ணை + பட்டரை ஊற்றி வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கேரட் , மிளகாய் தூள், உப்பு சேர்த்துவதக்கி 3 நிமிடம் வேகவைக்கவும்.
பிறகு தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு பிரட்டி 2 நிமிடம் ஒரு சேர கிளறி இரக்கவும்.


Linking to Gayathri's walkthrough memory lane hosted by The big tooth 

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் பாஸ்தா என்றால் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள் என்பது உண்மை தான்.... ஆனால் உடலுக்கு......?

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் இணைத்து விட்டேன்...

+1

நன்றி சகோதரி...

Jaleela Kamal said...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தனபாலன் சார்.

குழந்தைகளுக்கு இட்லி தோசையை வைத்தால் கண்டிப்பாக சாப்பிடமாட்டார்கள், தோசை கூட பிட்சா போல் செய்து வைத்தால் சாப்பிடுவார்கள்,

சில பாஸ்தா வீட் பாஸ்தா என்று தான் போட்டு இருக்கும் அதை பார்த்து தான் வாங்குவது,


இத்தாலி, பிலிப்பைன் , அரபு நாடுகளில் பாஸ்தா உணவு இல்லாமல் இருக்காது.

ராஜி said...

நான் கேரட் சேர்க்காம செய்து கொடுப்பேன்.

Shoba said...

Nice

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா