அரேபியர்களின் பாரம்பரிய சாதவகைகளான மட்டன் கப்சா, சிக்கன் கப்சா, மட்டன் மந்தி , சிக்கன் மந்தி ,சிக்கன் மத்பி, மட்டன் மத்பி, மக்லூபா போன்றவை போல் இது சிக்கன் மஜ்பூஸ்.
இது அரேபியர்களின் பிரியாணி.
பாரம்பரிய சமையல்
அரேபியர்களின் உணவு வகைகளின் காரம் அவ்வளவாக இருக்காது. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள், என் மகன்கள் இருவருக்கும் பிரியாணியில் தக்காளி, வெங்காயம் எதுவும் வாயில் தட்டக்கூடாது. இந்த வகை பிரியாணியில் அதிக தக்காளியோ வெங்கயாமோ கிடையாது.
இது சிக்கனை வேகவைத்து அந்த தண்ணீரில் சாதத்தை தம்மில் விடுவது.
Chicken Majboos
அரிசியை களைந்து ஊறவைக்கவும். ((அரபிக் சாத வகைகளுக்குன்னு பிரத்தேயக மாக பயன் படுத்துவது ஒரு சில பிராண்ட் அரிசிவகைகள், இதில் நான் பயன் படுத்தியுள்ளது டோனார் லாங்கிரைன் ரைஸ்))
சிக்கனில் மேலே கொடுக்கப்பட்டுள்ள மசாலாவை சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்க்கி அதில் எண்ணையை ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்/.
அடுத்து தக்காளியை அரிந்து சேர்த்து , தக்காளி பேஸ்டையும் சேர்த்து கிளறவும்.
அடுத்து ஊறவைத்த சிக்கனை போட்டு நன்கு கிளறவும்.
ஒன்றிற்கு இரண்டு பங்கு அளவு தன்ணீர் அளந்து ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
ஒன்றிற்கு இரண்டு பங்கு அளவு தன்ணீர் அளந்து ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
அடுத்து சிக்கனனில் சிறிது மிளகு தூள் , ஆலிவ் ஆயில் 2 மேசைகரண்டி, சிறிது உப்பு சேர்த்து பிரட்டி ஒவனில் கிர்ல் செய்ய வேண்டும்.கிரில் செய்ய ட்ரேயில் சிக்கனை அடுக்கி வைத்து விட்டு,
அடுப்புகரியை நன்கு கங்காக்கி (சூடு படுத்தி) ஒரு பாயில் பேப்பரில் வைத்து சிக்கனின் நடுவில் வைத்து மூடி வைக்கவும்.
முற்சூடு படித்திய ஓவனில்
10 நிமிடம் கீழ்ட்ரேயிலும், 10 நிமிடம் மேல் ட்ரேயிலும் வைத்து கிரில் பண்ணவும்,
சுவையான அரபிக் பிரியாணி அதிக எண்ணை இல்லாமல் ஆரோக்கியமான மஜ்பூஸ் ரெடி
இதற்கு தொட்டு கொள்ள பக்க உணவாக விரும்பிய சாலட் வகைகள், இனிப்பு வகைகள் செய்து கொள்ளலாம்.
பிரியாணிக்கு வைக்கும் ரெய்த்தாவுக்கு பதில் டொமேட்டோ சல்சா.
தக்காளி , வெங்காயம் , பச்ச மிளகாய் , உப்பு, பேசில் இலை அல்லது ஒரிகானோ சிறிது சேர்த்து கொர கொரப்பாக அரைத்து பக்க உணவாக வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.
Arabic Biriyni Step by Step Majboos - Traditional Arabic Biriyani
Tweet | ||||||
8 கருத்துகள்:
சுவையான மஜ்பூஸ் சூப்பர்...!
நன்றி சகோதரி...
படங்களுடன் விளக்கம் அருமை அக்கா...
வித்தியாசமாக உள்ளது.அரபி சாப்பாடு என்றால் எண்ணெய் மசாலா குறைவாக சுவையாக இருக்கும்.
வித்தியாசமாக உள்ளது.அரபி சாப்பாடு என்றால் எண்ணெய் மசாலா குறைவாக சுவையாக இருக்கும்.
உங்கள் தொடர் ஊக்கத்திற்கு மிக்க நன்றி தனபாலன் சார்
சே.குமார் வருகைக்கு மிக்க நன்றி
ஆமாம் ஸாதிகா அக்கா என் சின்ன பையனுக்கும் அரபி பிரியாணி தான் ரொம்ப பிடிக்கும்.
அவனுக்கு எண்ணை அதிக மாக இருக்ககூடாது. வெங்காயம் தக்காளி வாயில் அகப்படகூடாது
என்னை இல்லாமல் வீட்டிலேயே செய்து விடுவது
இது செய்து ரொம்ப மாதம் ஆகிறது. படங்கள் தான் சரியாக இல்லாததால் போஸ்ட் பண்ணாமல் இருந்தேன்..
அரபி பிரியாணி பகிர்வு லேட்டாக கொடுத்தாலும் மிக அருமை!படங்கள் சரியில்லை என்று உங்கள் சிறிய தவறுகளை சுட்டிக் காட்டுவதும் அருமை!
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா