அரேபியர்களின் கப்ஸா ரைஸ் சமைப்பது எப்படி?
அரபு நாடுகளில் அவர்கள் அன்றாடன் உண்ணும் உணவு வகைகளில் இந்த கப்ஸா
சாதம்(ரைஸ்) மும் ஒன்று. இது சவுதியில்
தான் மிகவும் பிரபலம், சவுதி கப்ஸா என்று தான் சொல்வார்கள்.
கப்ஸா ரைஸ்/சவுதி கப்ஸா – 2 முறை/Lolipop Kabsa/அரபிக் கப்ஸா
இதில் இரண்டாவது முறை தான்
நான் அடிக்கடி செய்வது.
தேவையானவை
·
சிக்கன் லாலி பாப் 8 துண்டுகள்
·
அரிசி - அரை கிலோ (இரண்டறை
ஆழாக்கு)
·
எண்ணை - 50 மில்லி (கால் டம்ளர்)
·
பட்டை ஒரு விரல் நீளம் -இரண்டு
·
ஏலம் - முன்று
·
கிராம்பு – நாலு
·
காய்ந்த பெரிய எலுமிச்சை
·
வெங்காயம் - முன்று
·
தக்காளி - முன்று
·
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னறை
டேபுள் ஸ்பூன்
·
பட்டர் - ஒரு தேக்கரண்டி
·
உப்பு தேவைக்கு
செய்முறை
1.
- அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
- லாலிபாப் சிக்கனை சுத்தம் செய்து குக்கரில் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
- வெந்த்தும் லாலி பாப் சிக்கனை தனியாக வடிகட்டி அதில் மசாலாக்களை சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
- ரைஸ்குக்கரில் எண்ணை + பட்டர்
விட்டு காய்ந்த எலுமிச்சை, பட்டை , ஏலம், பிரிஞ்சி இலை,கிராம்பு சேர்த்து தாளித்து
வெங்காயம், தக்காளி சேர்த்து சிவறாமல் வதக்கி சிக்கன் வெந்த தண்ணீரை ஒன்றுக்கு
ஒன்னறை அளவு அளந்து ஊற்றி உப்பு சேர்த்து ரைஸ்குக்கரில் சமைத்து எடுக்கவும்.
- இதைக்குக்கரிலும் செய்யலாம். தனியாக தம் போட்டும் இரக்கலாம்.
- குக்கரில் வைக்கும் போது தண்ணீர் அளந்து ஊற்றியதும் இரண்டு விசில் வந்த்தும் குக்கரை ஆஃப் செய்து ஆவி வெளியானதும் இரக்கி ஃபோர்க்கால் பிரட்டி விடவும்.
- தம் போடுவதாக இருந்தால் அரிசி தட்டி தண்ணீர் அளந்து ஊற்றியதும் கொதிக்க விட்டு தீயின் தனலை சிம்மில் வைத்து 20 நிமிடம் தம் போடவும்.
- வெள்ளை வெலேருன்னு சிக்கன்
மனத்துடன் அப்படியே பிடிச்சி சாப்பிட நல்ல இருக்கும். குழந்தைகளுக்கு இந்த சாதம்
ரொம்ப பிடிக்கும்.
சிக்கனில் சேர்க்க வேண்டிய மசாலாக்கல் மிளகாய் தூள்,உப்பு தூள், கார்ன் மாவு + கிரம்ஸ் பவுடர். சேர்த்து பிரட்டி ஊறவைக்கவும்.
- இப்போது ஏற்கனவே மசாலா போட்டு ஊறவைத்த சிக்கனை டீப் ஃப்ரை அல்லது ஷாலோ பிரை செய்து எடுக்கவும்.
- இதற்கு பக்க உணவு ஏற்கனவே பொரித்து வைத்துள்ள லாலிபாப் சிக்கன் ,டொமெட்டோ சல்சா , சாலட் வகைகள் மிக அருமையாக இருக்கும்.(அல்லது)சிக்கன் மட்ட்னை கிரில் அலல்து கபாப் போல் செய்து சாப்பிடலாம்
குழந்தைகளுக்காக ஸ்பெஷலாக நான்
தயாரித்த கப்ஸா ரைஸ் அடுத்த பதில் போடுகிறேன்.
இந்த சாப்பாட்டுக்கு காரம் +
கலர் தேவைப்பட்டால் முழு மிளகு சிறிதும் சாஃப்ரானும் சேர்த்து கொள்ளலாம்.
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு
ஆயத்த நேரம் - 25 நிமிடம்
சமைக்கும் நேரம் - 30 நிமிடம்
அரேபியர்களில் கப்ஸா ரைஸ் சமைப்பது எப்படி?
How to make Arabic Kabsa Rice
கப்ஸா ரைஸ்/saudi kabsa – 1 முறை
தேவையானவை
·
முழு கோழி – இரண்டு (அ)
சிக்கன் லாலி பாப் 8 துண்டுகள்
·
அரிசி - அரை கிலோ (இரண்டறை
ஆழாக்கு)
·
எண்ணை - 50 மில்லி (கால் டம்ளர்)
·
பட்டை ஒரு விரல் நீளம் -இரண்டு
·
ஏலம் - முன்று
·
கிராம்பு – நாலு
·
காய்ந்த பெரிய எலுமிச்சை
·
வெங்காயம் - முன்று
·
தக்காளி - முன்று
·
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னறை
டேபுள் ஸ்பூன்
·
பட்டர் - ஒரு தேக்கரண்டி
·
உப்பு தேவைக்கு
செய்முறை
- முழு கோழியை சுத்தம் செய்யவும்.
- அரிசியை இருபது நிமிடம் ஊறவைக்கவும்.
- அதில் அரிசி ஒன்றுக்கு ஒன்னறை பங்கு தண்ணீர் 3
3/4 அளவு வறுகிறது நான்கு டம்ளரக எடுத்து
கொண்டு சுத்தம் செய்த கோழியை அப்படியே போட்டு வேகவிடவும்.
- வேக வைத்து அந்த தண்ணீரை தனியாகவும் கோழியை தனியாகவும்
வைக்கவும்.
- சட்டியை காயவைத்து அதில் எண்ணை பட்டரை ஊற்றி பட்டை,ஏலம்,கிராம்பு போட்டு மனம்
வந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.சிவற விட வேண்டாம்.
- பிற்கு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்ச வாடை போகும்
வரை வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்துள்ள கோழி வெந்த
தண்ணீரை தாளித்த சட்டியில் அளந்து ஊற்றவும். .
- கொதிவந்ததும் அரிசியை தட்டி உப்பும் சேர்த்து கொதிக்கவிட்டு
வெந்து வைத்துள்ள கோழியையும் சேர்த்து தீயை குறைத்து தம் போடவும்.
- இது தான் அரேபியர்களின் கப்ஸா சோறு.
குறிப்பு:
அரேபியர்கள்
காரம் அவ்வளவாக சாப்பிடமாட்டார்கள். அவர்கள் செய்யும் பிரியாணியில் கூட அவ்வளவாக மசாலா
இருக்காது,கோழியோ கறியோ முழுசா சட்டியில் போட்டு தான்
வேக விடுவார்கள். நோன்பு கஞ்சிக்கு கூட நாம் கீமா போடுவோம் அவர்கள் அப்பட்டியே
முழுசா மட்டன் அல்லது சிக்கனை போட்டு ரொம்ப நேரம் வேக விட்டு செய்வார்கள்.மசாலா
அதிகம் சேர்க்க மாட்டார்கள்.ஆனால் இது ரொம்ப மஸ்த்(வெவி) சிலருக்கு இந்த
சாத்த்தில்கோழியை போட பிடிக்கவில்லை என்றால் அதை அப்படியே பட்டரில் வறுத்து மசாலா
எதுவும் சேர்க்காமல் சாப்பிடுவார்கள் .நான் அப்படி தான் செய்வது.
Tweet | ||||||
8 கருத்துகள்:
எண்ணெய் மற்றும் மசாலா அதிகம் இல்லாமல் இருக்கும் சவுதி கப்சா எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.சிக்கன் வேகவைத்த நீரில் சமைப்பது வித்தியாசம் .பகிர்தலுக்கு நன்றி ஜலீலா.த ம 2
வாவ்... சூப்பர்... புதிய செய்முறை குறிப்பு...
நன்றி...
படங்களுடன் செய்முறைக் குறிப்பு அருமை அக்கா...
சிக்கன் மசாலாவில் ஊறவைத்து பொரித்து கப்ஸா ரைஸ் உடன் பரிமாறினால் சுவையை கேட்க வேண்டுமா?
ஆமாம் ஸாதிகா அக்கா என் பிள்ளைகளுக்கு இப்படி செய்தால் ரொம்ப பிடிக்கும், மசாலா எண்ணை அதிகம் இல்லாமல் செய்வது உடலுக்கு நல்லதில்லையா?வருகைக்கு மிக்க நன்றி
நன்றி தனபாலன் சார்
மிக்க நன்றி சே குமார்
ஆமாம் ஆசியா முன்பு அப்ப்டியே தான் எடுத்து பொரிப்பது , இப்போதெலலாம் சிறிது மசாலா போட்டே பொரித்து எடுப்பது , சுவை அருமையாக இருக்கும் வருகைக்கு மிக்கநன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா