என் இனிய தமிழ் மக்களே. என்னும் வலை பூவை எழுதி கொண்டு இருந்த அன்னு செய்த பிரியாணி ,
அன்னு வின் வலைப்பூக்கள்
தாய் தரும் கல்வி
ஆங்கிலம் பேசலாம்
இனிய ரமதான்
அன்னு அறுசுவை , வலைப்பூ, முகநூல் தோழி. இப்ப பிள்ளைகளுடன் பிஸியாக இருப்பதால் இப்போதைக்கு பிளாக்கில் எழுவதுவதை நிறுத்தி வைத்துள்ளார்கள்.
எங்க டாடி இறந்த போதும், எனக்கு உடல் நிலை சரியில்லாத போதும் எனக்கு ஆறுதலாக குர் ஆன் ஹதீஸ்களை மெயில் மூலம் மிகவும் அனுப்பி வைத்து என் மனக்கவலையை போக்கினார். அனைவருக்கும் மிகவும் உதவினாவர். .
அலிகார் பிரியாணியை லைட் மசாலா வெள்ளை பிரியாணின்னு சொல்லலாம், இல்லை சூப் பிரியாணி
காரமில்லாத அதிக மசாலாக்கள் இல்லாத பிரியாணி.
இது அன்னுவின் அலிகார் /Aligar பிரியாணி சஹருக்கு செய்து சாப்பிட்டோம். மிக அருமை. அன்னு சிக்கனில் செய்து இருந்தாங்க நான் இதை மட்டனில் செய்துள்ளேன்.
நோன்பில் சஹருக்கு பிளைன் சாதம், பருப்பு இல்லை சால்னா, பக்க உணவு அப்பளம், பொரிச்ச கறின்னு செய்து அத்தனையும் சூடு படுத்தி பிறகு கழுவி வைக்கனும். ஆகையால் நான் பெரும் பாலும் மட்டன் சேமியா, கட்டு சாதங்கள், புலாவ் , பிரியாணி இது போல் கொஞ்சம் லைட்மசாலாவாக உள்ள சமையலை தான் செய்வேன்.
- தேவையான பொருட்கள்
- எலும்புடன் மட்டன் - 400 கிராம்
- முதலில் சிக்கன் ஸ்டாக் செய்ய:
- பூண்டு 9 பற்கள்
- துருவிய இஞ்சி - 1/2 மேஜைக்கரண்டி
- சோம்பு, தனியா - 3/4 மேஜைக்கரண்டி தனித்தனியாக எடுத்து ஒரு சிறிய துணியில் பொட்டலம் கட்டிக்கொள்ளவும்.
- பெரிய / கறுப்பு ஏலக்காய் -1
- பிரியாணி இலை - 1 (கட்டாயம் இல்லை)
- குறுமிளகு - 3/4 தேக்கரண்டி
- இலவங்கம் - 4
- சிறிய பச்சை மிளகாய் 6
- நறுக்கிய பெரிய வெங்காயம் 1 கப் (
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் 2 கப்
- எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
- பூண்டு பற்கள் - 10
- இஞ்சி 4 துண்டுகள் (1” சைஸில்)
- பட்டை -1 துண்டுகள் (1” சைஸில்)
- ஜாதிக்காய் 1 துண்டுகள் (ஒரு ஜாதிக்காயை உடைத்து சிறிய இரண்டு துண்டுகள் போட்டால் போதுமானது 1/4 அளவு
- ஜாவித்ரி - 1 சிறிய பூக்கள் (நம்ம ஊரு தாழம்பூவை காய வைத்தது போலிருக்கும், ஜாதிக்காய் மேலுள்ள பூ. சிறிய பூக்களாக போடவும்)
- மேற்கண்ட அனைத்தையும் சிறிதே சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்து விழுதாக வைத்துக் கொள்ளவும்.
- குறுமிளகு - 1/2 தேக்கரண்டி
- கருப்பு / பெரிய ஏலக்காய் - 1
- எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
- தயிர் 3/4 கப்
- பாஸ்மதி அரிசி - 2 கப் (400 கிராம்) 2 டம்ளர்
- சுடு நீர் (தயார் செய்த ஸ்டாக்குடன் சேர்த்து 3 கப்/ 600 மில்லி/ ( முன்று டம்ளர்
செய்முறை: 1
பின் நல்ல கனமான மூடியைப்போட்டு மூடிவிட்டு 20 நிமிடம் வரை குறைந்த அளவு தீயில் ‘தம்’மில் விடவும்
- இந்த பிரியாணியின் சிறப்பம்சமே அதன் வெள்ளை வெளேர் நிறம்தான். அரைத்த விழுதை கரியும் வரை வதக்க வேண்டாம்.
- முழு ஜாதிக்காயில் கால்வாசி போதும். அதிகம் சேர்த்தால் ஒரு மாதிரி தொண்டை எரியும், தலை சுத்துவது போன்றுமிருக்கும்.
- அதிக அளவில் செய்யும்போது தண்ணீர் குறைத்துக் கொள்ளவும்.
- இதே போல் மட்டனிலும் செய்யலாம். மட்டனில் செய்பவர்கள் ஸ்டாக் செய்யும்போது முழுக்கவே மட்டன் துண்டுகளை வேக விட்டு (அல்லது இன்னும் ஒரு விசிலில் வெந்து விடும் போன்ற நிலை வரை) எடுக்கவும்.
- ஸ்டாக் தயாரித்த பின் கறி இல்லாமல் பிளெயின் சாதமாக கூட இப்படி கிளறி எடுத்துக் கொள்ளலாம். எந்த கறி சால்னாவுடனும் அருமையாக இருக்கும்.
- தேவையானால் ஆரஞ்சு கலரை 1 தேக்கரண்டி பாலில் கலக்கி கடைசியில் தெளித்துக்கொள்ளவும்.
இதில் என் அளவுக்கு சில மாற்றத்துடன் செய்து கொண்டேன், மற்றபடி அன்னு செய்முறைவிளக்கம் அப்படியே எடுத்து போட்டுள்ளேன்.
நன்றி அன்னு ( என் இனிய தமிழ் மக்களே)
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
5 கருத்துகள்:
:)
பாசமிகு அக்கா.... மிக மிக மிக மிக மிக சந்தோஷம்.... உங்களின் எதிர்பாராத தொலைபேசி அழைப்பும் இந்த பதிவும். என்னுடைய ரெசிப்பியும் உங்களைப் போன்ற கிரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏட் ஷெஃப் வலைப்பூவிலா... மிகுந்த சந்தோஷம்க்கா.... நோன்பு து’ஆக்களில் நினைவு வைங்க. இன் ஷா அல்லாஹ் சென்னை வரும்போது கண்டிப்பாக சந்திப்போம்க்கா :)
வஸ் ஸலாம்.
different biriyani...yummy
அலிகார் பிரியாணி...
அருமை...
ஹாய் ஜலீலா அக்கா எப்படி இருக்கீங்க எனக்கு ஒரு உதவி என் இனிய இல்லம் பாயிஜா வோட ப்ளாக் என்னால் ஒபன் செய்து பார்க்க முடிய்லை நான் உங்க ப்ளாக் ஆசியா அக்கா ப்ளாக் என் இனிய இல்லம் ப்ளாக் ரொம்ப வருடங்களாக் பார்த்து வருகிறேன் ஆனால் இப்ப பாயிஜாவோட ப்ளாக் மட்டும் பார்க்க முடியலை எப்படி ஒபன் செய்து பார்ப்ப்து
parvin
https://www.facebook.com/faiza.kader.31?fref=ts
ithil add aakki kollungkaL
avangka kayal samaiyal enRa website poddu irukkaangka
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா