Shammi Kabab/Shami Kabab Sandwich/Mutton vadai/Mutton kheema Patties/Mutton Kheema Tikki
ஹோட்டலில் ஸ்டாட்டராக பரிமாறும் ஷம்மி கபாப் இஸ்லாமிய இல்லங்களில் பிரசத்தி பெற்ற ஒரு ஸ்நாக்ஸ் வகை. எனக்கு ரொம்ப பிடித்த ஸ்டாட்டர் இது.
Mutton kheema Patties /Mutton Tikki/Shammi Kabab
Ramalan Recipe/ நோன்பு கால சமையல்
தேவையான பொருட்கள்
|
செய்முறை
கடலை பருப்பை அரைமணி நேரம் ஊறவைக்கவும்.அதற்குள் கொத்திய கறியை கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதில் காஞ்சமிளகய்,பூண்டு, பச்ச மிளகாய், உப்பு போட்டு சுருட்டி வேக வைத்து தண்ணிரை வற்ற விடவும்.
வற்றியதும் அதில் ஆலிவ் ஆயில்,வெங்காயம் போட்டு மேலும் ஒரு முறை பிறட்டி, கொத்து மல்லியும், தேங்காயை பொடியாக அரிந்து அல்லது துருவி சேர்த்து ஊறவைத்த கடலை பருப்பையும் சேர்த்து சுருட்டி கரம் மசாலா பொடி சேர்த்து ஆறவக்கவும்.
.
ஆறியதும் மிக்சியில் முதலில் மைதா, கார்ன்பிளார் மாவை போட்டு பிறகு ஆறிய கலவையை போட்டு நன்கு அரைக்கவும்
சில நேரம் கறி வடை செய்யும் போது உதிர்ந்து போகும் அதற்கு முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து பிசறி சுடலாம்.
ஒரு தோசை கல்லை சூடு படுத்தி கொஞ்சமாக எண்ணை ஊற்றி காயவைத்து வேண்டிய வடிவில் தட்டி போடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு நன்கு அழுத்தி விட்டு மறுபக்கம் வெந்ததும் கருகாமல் பொன்னிறமாக இருக்கும் போதே எடுத்து விடவேண்டும்.
மதியம் பிளைன் சாதத்துடன் , பருப்பு , கத்திரிக்காய் ரசத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
காலை அல்லது இரவு உணவிற்கு பிரட்டுடன் சாண்ட்விச் போலவும் செய்யலாம்.
குழந்தைகளுக்கு பள்ளிக்கு எடுத்து செல்ல ரிச்சான சாண்ட்விச்.
How to make Mutton Shammi kabab - Step by Step
இது ரொம்ப ஷாப்டான பக்க உணவு மற்றும் ஸ்ட்டாடர், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது.
நோன்பு காலங்களில் செய்யும் ஸ்பெஷல் வகை இந்த ஷாமி கபாப் .
ப்ளைன் சாப்பாட்டுக்கு , கத்திரிக்கா ரசம் வைத்து இதை பக்க உணவாக வைத்து சாப்பிட மிக அருமையாக இருக்கும். இந்த காம்பினேஷன் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
Tweet | ||||||
2 கருத்துகள்:
அட்டகாசமாக செய்து உள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...
அருமை... வாழ்த்துக்கள்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா