Saturday, December 19, 2009

வேட்டைக்காரனை டரியலாக்கி வந்த குறுஞ்செய்திகள் சில......


விஜய் படம் ரிலீஸ் என்றாலே நம்ம பயலுகளுக்கு கொண்டாட்டம் தான்......
அப்படி என்னதான் சந்தோசமோ
வேட்டைக்காரனை பற்றி கலாய்த்து குறுஞ்செய்தி அனுப்பும் பயலுகளுக்கு...
இந்த பயலுக அனுப்புற குறுஞ்செய்தி தமிழில் உள்ள எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும்
என்பதும் அவர்களுக்கு தெரியும்...............
இருந்தாலும் என்ன பண்றது காய்ச்ச மரம்தானே கல்லடி படும்.........

விஜயின் அவ்வ்வ்வ் மன்னிச்சுடுங்க சன் பிக்சர்ஸின் ...... வேட்டைக்காரனை
டரியலாக்கி வந்த குறுஞ்செய்திகள் சில......


1. காதல் என்பது விஜய் படம் மாதிரி.
பார்க்காதவன் பார்க்க துடிப்பான்.
பார்த்தவன் சாக துடிப்பான்


2.டைரக்டர்:நம்மளோட அடுத்த
படம் 100நாள் ஓடனும்
விஜய்: இல்லை 200நாள் ஓடனும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்
விஜய்: ங்கொய்யால முதல்ல ஜோக் அடிச்சது யாரு
நீயா? நானா?


3.ரிப்போர்ட்டர் : சார் உங்களோட வேட்டைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி
தள்ளி போய்ட்டே இருக்குதே ஏன்?
விஜய் : சென்சார் போர்டு மெம்பர்ஸ் படத்த பாக்க பயப்படுறாங்க.


4.முதல் பரிசு அடையார்ல பிளாட்,
ரெண்டாவது பரிசு கார்
போட்டி நடக்கும் இடம்: சேப்பாக்கம் கிரவுண்டு.
தகுதி: எதையும் தாங்கும் இதயம்
போட்டி என்னன்னா, விஜய் நடிச்ச ஒரு படம் பாக்கனும்
போட்டியின் விதிகள் : படம் பாக்கும் போது வாந்தி எடுக்கக்கூடாது,
அவர் என்ன பண்ணினாலும் திட்டாம படம் பாக்கனும்...
முக்கியமா உயிரோட இருக்கனும்


5.விஜய் அரசியலில் சேர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் தன்னுடைய முதல் பட்ஜெட்டை எப்படி தயாரிப்பார்.--
ஆந்திராவின் பட்ஜெட்டை ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுப்பார் (ரீமேக்)


6.குயில புடிச்சி கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம்
"விஜய" புடிச்சி காச கொடுத்து நடிக்க சொல்ற உலகம்
அது எப்படி நடிக்கும் ஐயா..
படம் எப்படி ஓடும் ஐயா?


7.விஜயின் அடுத்த 7 படங்கள் வேட்டைக்காரன்,
சமையல்காரன், குடிகாரன், பைத்தியக்காரன், பிச்சைக்காரன், குடுகுடுப்பைக்காரன்


8.டிரைவர் : சாரி சார் பெட்ரோல் டிரை ஆகிடிச்சு..
இனிமேல் வண்டி ஓரு அடி கூட முன்னாடி நகராது
விஜய்: சரி ரிவர்ஸ் எடு வீட்டுக்காவது போகலாம்.


9. 140 பேரைக் கொன்ற சதாமுக்கு தூக்குத்தண்டனை.
6 கோடி பேரை கொல்ல வரும் வேட்டைக்காரன் விஜய்க்கு என்ன தண்டனை?.


10.எமன் : நான் உன் உயிரை எடுக்க போகிறேன்.
உன் கடைசி ஆசை என்ன?.
விஜய்: நான் நடிச்ச வேட்டைக்கரன்படத்தை நீங்க பாக்கனும்.
எமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல பாத்தா
நீ என்ன கொல்ல பாக்குறியே.......


11.ரிப்போர்ட்டர்: விஜய் சார் ஏன் வேட்டைக்காரன் வேளியாகும் தேதிய சொல்லலமட்றீங்க
விஜய்: சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடும்
அதான் சொல்லலை.


இது எனக்கு மெயிலில் வந்தது.
12 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

வேட்டைக்காரன் வேட்டை இங்கேயும் நடக்குதா.

அதான் நீங்களே சொல்லியாச்சே ”என்ன பண்றது காய்ச்ச மரம்தானே கல்லடி படும்.........” சரிதான் ரைட்டு.

Unknown said...

ஆகா - இங்கேயுமா

ஓடு ஓடு ஓடு ...

சிங்கக்குட்டி said...

ஹ ஹ ஹ ஹா..

குடுகுடுப்பைக்காரன் சூப்பர்...:-)

Chitra said...

6.குயில புடிச்சி கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம்
"விஜய" புடிச்சி காச கொடுத்து நடிக்க சொல்ற உலகம்
அது எப்படி நடிக்கும் ஐயா..
படம் எப்படி ஓடும் ஐயா? ...............அக்கா.................... சிரிப்போ சிரிப்பு. அட்டகாசம், இதிலேயும்.

SUFFIX said...

ஹா.ஹா. அனைத்து ஜோக்குகளும் அருமை, வாய்விட்டு சிரிக்க வச்சுட்டிங்க, அய்ய்யோ அட்டகாசம் தாங்க முடியல!! -:)

போவாஸ் said...

நீ புகுந்து கலக்கு மச்சி....சூப்பரு.

சாருஸ்ரீராஜ் said...

ஜலிலா அக்கா சுப்பர் , படிச்சு படிச்சு (சிரிச்சு சிரிச்சு) வயிறு வலிக்குதுப்பா , சூப்பர் காமெடி

பாவா ஷரீப் said...

இப்போது 50பைசா clinic + shampoo வாங்கினால் வேட்டைக்காரன் டிக்கெட் இலவசம்.
இந்த சலுகை படம் ரசிகர்கள் உயுரோடு இருக்கும் வரை மட்டுமே .... விரைவில் முந்துங்கள்.........

சீமான்கனி said...

வேட்டைக்காரன் தலைப்ப பத்த உடனே ஓட நெனச்சேன்...பின் நம்ம அக்கா அப்படி எல்லாம் கொடுமைகாரவங்க இல்லன்னு தொடர்ந்து படிச்சேன்...எல்லாம் ஹி,,ஹி,,,ஹி,,,,அக்கா சூப்பர்...என் பயம் போயிருச்சு...நன்றி அக்கா...:P

Jaleela Kamal said...

வேட்டைகாரன், இது மெயில் லா தான் எனக்கு வந்தது.

யார் மனதையும் புண்படுத்தனும் என்றூ போடல.

வேட்டைகாரன் என்றதும் ஆளாலுக்கு தல தெரிக்க ஓடுறீஙக்.

அதுவும் சித்ரா அருமையான பாட்டு வேறு.


கருவாச்சி என்ன உயிரோடு இருக்கும் வரை வந்து வாங்கினால் கிளினிக் + ஷாம்பு இலவசமா??

எல்லாரையும் வயிறு குலுங்க சிரிக்கவைத்து விட்டது இந்த பதிவு.

நவாஸ், ஜமால், ஷபி, சிங்கக்குட்டி, சித்ரா, சாருஸ்ரீ, கருவாச்சி, சீமான் கனி, நன்றி


போவாஸ் வருகைக்கு மிக்க நன்றி.

Chitra said...
This comment has been removed by a blog administrator.
தமிழ் குமார் said...

உங்க தளத்திற்கு தெரியா தனமா வந்துட்டன்.இனிமே வர மாட்டன்.எனக்கு பிடித்த நடிகர் விஜய்.இதேபோல் எந்திரன் வரும்போது போடுவீர்களா.மொக்க ஜோக் அதுக்கு கமெண்ட் வேற ?????

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா