குழந்தைகள் லன்ச் பாக்ஸ் க்கு என்ன வைப்பது என்று குழம்பிக்கொள்ளும் தாய்மார்களுக்கு இதோ சுலபமான உருளை சாண்ட்விச்.இதில் ஆலிவ் ஆயில் பயன் படுத்தி உள்ளேன் அதற்கு பதில் பட்டர் + எண்ணையும் பயன்படுத்தியும் செய்யலாம்.
இதே போல் பீட்ரூட் மற்றும் கேரட்டிலும் செய்யலாம்
பூண்டு உருளை மயோ சாண்ட்விச்
Garlic , Potato Mayo mini Sandwich
Small bun with potato Sandwich - Lunch box recipe
தேவையான பொருட்கள்
உருளை கிழங்கு – 1 (50 கிராம்)
ஆலிவ் ஆயில் – ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் – கால் தேக்கரண்டி
பூண்டு பொடி – கால் தேக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
மையானஸ் – 1 தேக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் – ஒரு தேக்கரண்டி
சிறிய பன் – 2 எண்ணிக்கை
செய்முறை
ஒரு வாயகன்ற நான் ஸ்டிக் பேனில் ஆலிவ் ஆயில் சேர்த்து வெட்டிய உருளையை சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடம் வேகவைக்கவும்.
அதில் மிளகு தூள், பூண்டி பொடி, உப்பு சேர்த்து உருளை நன்கு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.
பன்னை இரண்டாக வெட்டி லேசாக் சூடு படுத்தவும்.
பன்னின் இருபுறமும் மயானஸ் மற்றும் சில்லி சாஸையும் தடவி நடுவில் ரோஸ்ட் செய்த உருளையை வைத்து மூடவும்.
சுவையான பூண்டு உருளை மையோ சாண்ட்விச் ரெடி.
குழந்தைகள் பன்னில் வைத்து கொடுப்பதால் சுலபமாக சாப்பிட்டு விடுவார்கள்.
இதே போல் கேரட், பீட்ரூடையும் வைத்து செய்து கொடுக்கலாம்.
பரிமாறும் அளவு : 1 குழந்தைக்கு
ஆயத்த நேரம்: 5 நிமிடம்
சமைக்கும் நேரம் : 7 நிமிடம்
இரண்டு சாண்ட்விச்கள் செய்யலாம்.
Tweet | ||||||