ஹஜ் பெருநாளுக்கு குர்பாணி கொடுத்து அதில் உள்ள் ஈரல், மண்பத்தை தில், நுரை எல்லாம் ஒரேயடியாக செய்து சாப்பிடமுடியாது அதை இப்படி ஸ்பேர்பாட்ஸ் புலாவாக செய்தால் எல்லா சத்துக்களும் அடங்க்கிய பிரியாணி ரெடி. ஏற்கனவே ஆட்டு ஈரல் பிரியாணி இங்கு கொடுத்துள்ளேன்.
பெருநாள் முன்பே இந்த ரெசிபியை கொடுக்கனும் என்று இருந்தேன் , கொஞ்சம் லேட்டாகி விட்டது. லேட்டானா என்ன எப்ப வேணுமானாலும் சமைத்து சாப்பிடலாமே.
ஆட்டு ஸ்பேர் பாட்ஸ் கீரை புலாவ் ( அ) ஸ்பேர் பாட்ஸ் கீரை பிரியாணி
Goat Spare Parts Biriyani/Pulav
கடலை பருப்பு தேங்காய் பால் பாலக் கீரை பிரியாணி/புலாவ்
தரமான பாசுமதி அரிசி – 300 கிராம்
மட்டன் – கால் கிலோ
(நுரை,ஈரல்,கிட்னி,தில்)- கால் கிலோ
எண்ணை – 75 மில்லி ( நெய்யில் செய்பவர்கள் பாதி எண்ணை பாதி நெய் போட்டு கொள்ளலாம்)
பட்டை, ஏலம்,கிராம்பு, பிரிஞ்சி இலை - தலா இரண்டு இரண்டு
வெங்காயம் – முன்று
தக்காளி – முன்று
கொத்துமல்லி தழை – சிறிது
பச்ச மிளகாய் – இரண்டு
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் – ஒரு தேக்க்ரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு (2tps) ( ருசிக்கு தகுந்தவாறு )
தேங்காய் பவுடர் – மூன்று மேசை கரண்டி
பாலக் கீரை – அரை கட்டு
கடலை பருப்பு – 50 கிராம்
கேரட் -50 கிராம், வாழக்காய் பாதி, கத்திரிக்காய் - 1
செய்முறை
1. அரிசியை களைந்து ஊறவைக்கவும்,கடலை பருப்பையும் ஊறவைக்கவும். தேங்காய் பவுடரை கரைத்து வைக்கவும் (அரை முறி தேங்காய் அரைத்து பாலெடுக்கவும்.) மட்டனை , ஸ்பேர்பாட்ஸ் வகைகளை தனியாக கழுவிவைக்கவும்.வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் அரிந்து வைக்கவும்.கேரட் ,வாழைக்காய், கத்திரிக்காயை பெரிய துண்டுகளாக போட்டு வைக்கவும்.
3..வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
4. தக்காளி ,பச்சமிளகாய், கொத்துமல்லி கீரை சேர்த்து 5 நிமிடம் வதக்கி மிளகாய் தூள்,தனியாதூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
5.மட்டனை சேர்த்து கிளறி 5 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
6. ஈரல் வகைகள்,கத்தரி வாழை ,கேரட் சேர்த்து வதக்கவும்.
7.மசலா வகைக்ள் கிரிப்பாக தீயின் தனலை 5 நிமிடம் சிம்மில் வைத்து மூடி போடவும்.
8.க்கரில் இரண்டு விசில் விட்டு இரக்கவும்
10.தேங்காய் பால் + தண்ணீர் அரிசிக்கு ஒன்றுக்கு ஒன்னறை மடங்கு வீதம் ஊற்றவும்.நன்கு கொதிக்க விடவும்.
11 ஊறிய அரிசி + கடலை பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.
12 கழுவி வைத்துள்ள பாலக் கீரையை சேர்க்கவும் . (அரைக்கீரை கிடைத்தால் அதுவும் போடலாம்)
13. குக்கரை மூடி மிதமான தீயில் இரண்டு விசில் விட்டு இரக்கவும்.
14.வையான ஸ்பேர் பாட்ஸ் புலாவ் ரெடி.
குறிப்பு:
இது ஒரு வகையான வித்தியாசமான புலாவ். இதை ( ஸ்பேர் பாட்ஸ் மட்டனை தாளித்து வேகவைத்து ) அடுத்து தேங்காய் சாதம் போல் செய்து தம் போடும் போது இந்த தாளித்த கூட்டு, கடலை, பருப்பு அரிசி சேர்த்துதம்போட்டு கடைசியாக கீரையும் சேர்த்து சிறிது நேரம் தம்மில் விடலாம்) இரண்டு விதமாக செய்யலாம்.
ரொம்ப சத்தானது, கர்பிணி பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எல்லோரும் செய்து சாப்பிடலாம்.
இது இஸ்லாமிய இல்லங்களில் எஙக் வீடுகளில் செய்யும் பல வகை பிரியாணிகளில் இதுவும் ஒன்று.
இதில் பாலக்கீரைக்கு பதில் சிறுகீரை மற்றும் வேறு எந்த கீரையும் சேர்த்து செய்யலாம்.
//பேலியோ டயட் செய்பவர்கள், இதில் அரிசி, கடலை பருப்பு சேர்த்து தம் போடாமல் அப்படியே கட்டியாக கூட்டாக செய்து ஒரு வேளை உணவிற்கு சாப்பிடலாம்.//
Tags: Hemoglobin , Paleo Diet, Palak Vegetable Biriyani, Liver Biriyani,
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
2 கருத்துகள்:
ஆஹா! நாவூறும் சத்தான பிரியாணி.
விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........
பணம்அறம்
நன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா