தேவையான பொருட்கள்
டார்க் சாக்லேட் – 50 கிராம்
கோக்கோ பவுடர் – 1/3 கப்
மைதா – 1/3 கப்
பேக்கிங் பவுடர் – அரை தேக்கரண்டி
ப்ரவுன் சுகர் – 1/3 கப் (அ) நார்மல் சுகர்
பட்டர் – 3 மேசைகரண்டி
சால்ட் – ¼ பின்ச்
முட்டை – 2
நட்ஸ் மெகடேமியா நட்ஸ் – 3 மேசைகரண்டி
செய்முறை
மைதா பேக்கிங் பவுடர் கோக்கோ பவுடரை சலித்து வைக்கவும்.
டார்க் சாக்லேட் மற்றும் பட்டரை டபுள் பாயிலர் செய்யவும்.
உருக்கிய பட்டர் மற்றும் டார்க் சாக்லேட்டில் சர்க்கரையை பொடித்து சேர்த்து நன்கு கலக்கவும்.
கலவையில் முட்டையை நுரை பொங்க அடித்து கலக்கவும்.
சலித்து வைத்த மைதா கோக்கோ பேக்கிங் பவுடரை சிறிது சிறிதாக தூவி கலக்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கி பேக்செய்யும் ட்ரேவில் ஊற்றி சமப்படுத்தி நட்ஸை பொடித்து தூவவும்.
ஓவனை 200 டிகிரி செல்சியசில் 25 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
கவனிக்க
டார்க் சாக்லேட்க்கு பதில் நார்மல் நட்ஸ் சாக்லேட்டும் சேர்க்கலாம்.
ப்ரவுன் சுகருக்கு பதில் நார்மல் சர்க்கரையும் சேர்க்கலாம்.
Tweet | ||||||