Friday, November 16, 2018

வெந்தய கீரை சுரைக்காய் பகோடா







//போட்டோ சரியா இல்ல பழைய போஸ்ட் , பிறகு நல்ல போட்டோ இணைக்கிறேன்.//


வெந்தய கீரை சுரைக்காய் பகோடா
வெந்தய கீரை வயிற்று புண்ணிற்கு மிகவும் நல்லது, கசப்பாக இருக்கும் இதை பருப்புடன் சமைப்போம் , இப்படி பகோடாவாக செய்யும் போது நீர்காயான சுரைக்காய் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து கொண்டால் அருமையாக பகோடா வாக சாப்பிடலாம்.


வெந்தய கீரை – சிறிய கட்டு
சுரைக்காய் – அரை கப் துருவியது
கடலை மாவு – 150 கிராம்
அரிசி மாவு 50 கிராம்
மிளகாய் தூள் – அரை தேக்க்ரண்டி
இஞ்சி துருவியது  -1 மேசைகரண்டி
சர்க்கரை – அரை தேக்க்ரண்டி
உப்பு – தேவைக்கு
பச்ச மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
இட்லி  சோடா – ஒரு சிட்டிக்கை (தேவைப்பட்டால்)
செய்முறை
ஒரு வாயகன்ற பேசினில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கெட்டியாக பிசையவும். தண்ணீர் சேர்க்கதேவையில்லை, சுரைக்காயில் உள்ள தண்ணீரே போதுமானது.
வானலியில் எண்ணையை காய வைத்து மிதமான தீயில் சிறிது சிறிதாக கிள்ளி போட்டு கருகாமல் பொரித்து எடுக்கவும்.
சுவையான சத்தான சுட சுட பகோடா ரெடி, மாலை நேர சிற்றூண்டி அல்லது கால நேரம் உப்புமாவுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

மொரு மொரு பகோடா
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

1 கருத்துகள்:

Jaleela Kamal said...

இதுல இந்த பகோடாக்கு படங்கள் சரியாக இல்லை, பிறகு சேர்க்கிறேன்,

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா