இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும்.
சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில்.
https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
#முஸ்லீம்வீட்டுகல்யாண# பச்ச போடும் நாஷ்டா #பாய் வீட்டுமட்டன் சேமியா பிரியாணி#
#பாய்வீட்டு# கல்யாணத்தில் செய்யும் டிபன் வகைகளில் மிகவும் பிரபலமான உணவு
இதில் ஆட்டுகறீ 1 1/4 கிலோ என்பது கல்யாண விருந்துகளுக்கு அப்படி சேர்க்கனும் சாதாரனமாக வீட்டில் செய்வதாக இருந்தால் முக்கால் கிலோ போட்டால் போதும்.டால்டான்னு சொன்னது பெரிய விருந்து களீல் டால்டா சேர்ப்பார்கள்.
தேவையான பொருட்கள்
சேமியா - 800 கிராம் பாக்கெட்
ஆட்டு கறி - 1 1/4 கிலோ
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/2 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - எட்டு தேக்கரண்டி
எண்ணெய் - அரை கப் (100 கிராம்)
நெய் - 50 கிராம் கால் கப்
மிளகாய் தூள் - முன்று தேக்கரண்டி
டால்டா or ghee - இரண்டு தேக்கரண்டி (சேமியா வறுக்க)
கொத்தமல்லி தழை - அரை கட்டு
புதினா - பத்து இதழ்
பச்சை மிளகாய் - ஐந்து
பட்டை - ஒரு அங்குலம் துண்டு இரண்டு
ஏலம், கிராம்பு - தலா இரண்டு
தயிர் - அரைகப்
உப்பு தேவைக்கு
மூஸ்லீம் வீட்டு கல்யாணடிபன் செய்வது எப்படி
சேமியாவை கருக விடாமல் சிவக்க நெய் அல்லது டால்டா சேர்த்து வறுத்து ஆற வைக்கவும்.
எண்ணெயை காய வைத்து பட்டை, ஏலம், போட்டு வெங்கயத்தை அரிந்து போட்டு வதக்கவும். வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி தக்களியை போட்டு மிளகாய் தூள், உப்பு சேர்த்து மூடிபோட்டு தக்காளியை வேக விடவும்.
வெந்ததும் கறியை போட்டு இரண்டு மூன்று நிமிடம் கிளறிக்கொண்டே இருக்கவும். பிறகு தீயை சிம்மில் வைத்து கறியை போட்டு வேக விடவும்.
சேமியா அளவு ஒன்றுக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் சேமியாவை கொட்டி இரண்டு மூன்று கொதி வந்ததும் சிம்மில் வைத்து வேக வைத்து அடுப்பை ஆஃப் பண்ணி விட்டு பத்து சிறூ தீயில் வைத்து தம்மில் விடவும், பதினைந்து நிமிடம் கழித்து பிரட்டி விட்டு பரிமாறவும்.
சுமார் 9 லிருந்து 10 பேர் சாப்பிடலாம்
இதற்கு தொட்டுக்கொள்ள புதினா துவையல், எல்லா வகையான ஊறுகாய்கள் பொருத்தமாக இருக்கும்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
அரேபியா பாரம்பரிய இந்த குனாஃபா அரேபியர்களின் திருமணம் மந்தி கப்ஸா என்னும் பிரியாணியுடன் ஸ்வீட்க்கு செய்வார்கள் மற்றும் ரோட்ரோர கடைகளில் நோன்பு காலங்களில் அதிக அளவில் செய்து விற்கப்படும்,
அந்த குனாஃக்கு என்று குனாஃபா சேமியா உண்டு அது இங்குள்ள எல்லா சூப்பர் மார்கெட்களிலும் ப்ரோஜன் ஏரியாவில் கிடைக்கும், ஒரு பாக்கெட் விலை 10 திர்ஹம், இந்த குனாஃபாவை பாக்கிஸ்தாணி சேமியாவான ஷீர்குருமா செய்யும் சேமியாவிலும் நம்ம ஊரில் உருது முஸ்லீம்கள் பாரம்பரியமாக ஈத் பெருநாளுக்கு செய்யும் சுருள் சுருளாக உள்ள ஷீர் குருமா (பாயாசம்), செய்யும் சேமியாவிலும் செய்யலாம் அதுவும் இல்லாமல் பபிரட்டிலும் சுலபமாக செய்ய்யலாம் .சுவைத்து மகிழுங்கள், செய்து பார்த்தவர்கள் கிழே உள்ள மெயிலுக்கு நீங்கள் செய்து பார்த்த போட்டோவை அனுப்பிவைக்கவும்.
குனாஃபா என்பது அரபிக் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று . இதற்கென குனாஃபா சேமியா சூப்பர் மார்கெட்டுகளில் ப்ரோஜன் ஏரியாக்களில் கிடைக்கும்.அது கிடைக்காதவர்கள் நம்ம ஊரு சேமியாவிலும் செய்யலாம். அப்படியே ப்ரட்டிலும் செய்யலாம்.
ப்ரட் குனாஃபா
தேவையான பொருட்கள்
வொயிட் ப்ரட் – 4 ஸ்லைஸ்
லுர் பார்க் பட்டர் – 3 மேசைகரண்டி
பொடியாக நறுக்கிய பிஸ்தா பருப்பு – 50 கிராம்
ப்ரெஷ் கிரீம் – ½ டின்
நெஸ்ல் கிரீம் – ½ டின்
சதுர வடிவ அல் மராய் சீஸ் கியுப் – 3 துண்டுகள்
சுகர் சிரப் – தேவையான அளவு
சாப்ரான் – 4 அல்லது 5 இதழ்
எலுமிச்சை சாறு – ½ தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் அல்லது கேவ்ரா எசன்ஸ் - ஒருதுளி
செய்முறை
புட் ப்ராசசர் அல்லது மிக்சியில் ப்ரட்டை பொடித்து கொள்ளவும்.
பிசறி வைத்த பிரட்டை இரண்டாக பிரித்து கேக் செய்ய்ம் மோல்டில் பாதி பகுதியை சமபடுத்தி அழுத்தி வைக்கவும்
ஒரு பவுளில் நெஸில் கிரீம், சீஸ் கியுப்,ப்ரஷ் கிரீம் முன்று சீஸையும் மிக்ஸ் செய்து பொடித்து வைத்துள்ள பிஸ்தாவை பாதி அளவு சேர்க்கவும். சிறிது வால்நட்டையும் பொடித்து சேர்க்கவும்.
சமபடுத்தி வைத்த ப்ரட்டின் மேலே பரவலாக ஊற்றி வைகக்வும்.
அதற்கு மேல் மீதி எடுத்து வைத்த ப்ரட் கலவையை மேலே பரவலாக வைக்கவும். வைத்து 180 டிகிரி யில் 20 நிமிடம் பிரீ ஹீட் செய்து 20 நிமிடம் பேக் செய்யவும், பிறகு 10 நிமிடம் வைத்து எடுக்கவும். குனாபா ரெடி ஆனதும் சர்விங் ப்ளேட்டில் மாற்றி மேலே பிஸ்தா கொண்டு அலங்கரிக்கவும்.
சுகர் சிரப் – அரை டம்ளர் சர்க்கரை அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கலக்கி கொதிக்கவைத்து அதில் சாப்ரான்,லெமன் சாறு,ரோஸ் வாட்டர் அல்லது கேவ்ரா வாட்டர் சிறிது சிறிது சேர்த்து வைக்கவும்.
குனாஃபா ரெடி ஆனதும், அதை சர்விங் பிலேட்டில்வைத்து ஒரு போர்க் வைத்து குத்தி விட்டு அதில் இந்த சுகர் சிரப் ஊற்றி சாப்பிடனும்
கிழே வீடியோ லின்கை கிளிக் செய்து பார்க்கவும், மறக்காமல் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
சேமியா குனாஃபா
ஷீர் குருமாவுக்கு செய்யும் சேமியா அல்லது பந்து போல உள்ள நம்ம ஊரு சேமியா – 50 கிராம்
பட்டர் – 3 மேசைகரண்டி
பொடியாக நறுக்கிய பிஸ்தா பருப்பு – 50 கிராம்
ப்ரெஷ் கிரீம் – 1/4 டின்
நெஸ்ல் கிரீம் – 1/4 டின்
சதுர வடிவ அல் மராய் சீஸ் கியுப் – 2 துண்டுகள்
சுகர் சிரப் – தேவையான அளவு
சாப்ரான் – 2
எலுமிச்சை சாறு – 1/4 தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் அல்லது கேவ்ரா எசன்ஸ் – ஒருதுளி
ஷீர் குருமா சேமியாவில் பட்டரை உருக்கி கலக்கி வைக்கவும். இரண்டு பாதியாக பிரிக்கவும்.
ஒரு கேக் மோல்டில் பாதி சேமியாவை சமப்படுத்தி வைக்கவும்.
ஒரு பவுளில் நெஸில் கிரீம், சீஸ் கியுப்,ப்ரஷ் கிரீம் முன்று சீஸையும் மிக்ஸ் செய்து பொடித்து வைத்துள்ள பிஸ்தாவை பாதி அளவு சேர்க்கவும். சிறிது வால்நட்டையும் பொடித்து சேர்க்கவும்.
சமபடுத்தி வைத்த சேமியாவின் மேலே பரவலாக ஊற்றி வைகக்வும்.
அதற்கு மேல் மீதி எடுத்து வைத்த சேமியா கலவையை மேலே பரவலாக வைக்கவும். வைத்து 180 டிகிரி யில் 20 நிமிடம் பிரீ ஹீட் செய்து 20 நிமிடம் பேக் செய்யவும், பிறகு 10 நிமிடம் வைத்து எடுக்கவும். குனாபா ரெடி ஆனதும் சர்விங் ப்ளேட்டில் மாற்றி மேலே பிஸ்தா கொண்டு அலங்கரிக்கவும்.
நான் இதில் சுகர் சிரப் தயாரிக்க வில்லை என்னிடம் குலோப் ஜாமூன் ஜீரா ( சுகர் சிரப்) மீதியானது இருந்தது அதில் சாப்ரான் எலுமிச்சை சாறு சேர்த்து செய்தேன்
சுகர் சிரப் – அரை டம்ளர் சர்க்கரை அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கலக்கி கொதிக்கவைத்து அதில் சாப்ரான்,லெமன் சாறு,ரோஸ் வாட்டர் அல்லது கேவ்ரா வாட்டர் சிறிது சிறிது சேர்த்து வைக்கவும்.
அரபிக் ஸ்வீட் குனாஃபா
Arabic Bread Kunefah/Kunafa - 1
Bread - 4 Slices
Butter - 3 tbspn
Chopped Pisthachio - 50 gram
Fresh Cream - 1/2 tin
Nestle Cream - 1/2 tin
Almarai Cheese cubes - 3 nos
Sugar syrub - required qty
Saffron - 4 to 5 Strands
Lemon juice 1/2 tpn
Arabic Vermicille Kunafa in Indian Twist - 2
Indian Sheer kurma Vermicille - one bunch (50 gram)
அரேபியர்களின் கப்ஸா ரைஸ் சமைப்பது எப்படி? அரபு நாடுகளில் அவர்கள் அன்றாடன் உண்ணும் உணவு வகைகளில் இந்த கப்ஸா சாதம்(ரைஸ்) மு...
About Me
Jaleela Kamal
சமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு.
தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.