Monday, February 9, 2009

சுடிதார் தைக்கும் போது

1. சுடிதார் தைக்கும் போது பள்ளிக்கு செல்லும் பிள்ளை களுக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி லைனிங் கொடுத்து தைக்கவும்.



2. மெல்லியா ஆடையாக இருந்தால் பெண்களுக்கு நெளிந்து கூன் போட்டு நடக்க வேண்டி வரும்.



3. இப்படி தைப்பதால் ரொம்ப பிரியா நடக்கலாம்.



4. எப்போதும் ஆடைகளை வயது வந்த பெண்களுக்கு அணிவிக்காதீர்கள்.



5. நான்கு விரல் லூசாகா இருக்கும் அளவிற்கு தையுங்கள்.முக்கியமா கழுத்து சிறிய கழுத்தாக தைக்கவும்.



6. டெய்லரிடம் கொடுக்கும் போது சொல்லி கொடுங்கள்.



7. நெக் பெருசா வைத்தால் தான் நல்ல தைக்கவரும் என்று டெய்லர்கள் அவர்கள் இழ்டத்துக்கு வைப்பார்கள்.



8. விலை உயர்ந்த துணியை தைக்க கொடுக்கும் போது உள்ளே பிரித்து பயன் படுத்துமாறு துணி விட்டு தைக்கவும்.




9. காட்டன் சுடிதார் தைக்க கொடுக்கும் போது ஒரு நாள் முழுதும் தண்ணீரில் நனைத்து பிறகு காய்ந்ததும் அய்ர்ன் செய்து கொடுங்கள்.




10. அப்படியே தைக்க கொடுத்தால் ஒரு முறை போட்டு துவைத்து மறு முறை போடும் போது கை கூட நுழைக்க முடியாது.



11. காசு கரியானது தான் மிச்சம்.அதே போல காட்டன் லைனிங்க் கொடுத்து தைத்த சுடிதாரை அலசி காய வைக்கும் போது லனிங்க் பகுதியை திருப்பி நல்ல உதரி போட வேண்டும்.



12. நல்ல பகுதி பக்கம் காய வைத்தால் உள்ளே உள்ள காட்டன் துணி சுருங்கி நிற்கும் அயர்ன் செய்ய ரொம்ப டைம் எடுக்கும்.




ஜலீலா

சூடு வாய் பொத்து விட்டதா?

ஆ ஆ காரம் சூடு வாய் பொத்து விட்டதா?

1. டீ (அ) வெண்ணீர் குடிக்கும் போது தெரியாம சூடா வாயில் வைத்து நாக்கு பொத்து போய் விட்டதா? கவலை வேண்டாம் உடனே ஒரு மேசைகரண்டி முழுவதும் தேன் எடுத்து குடிங்க. சரியாகி விடும்.



2. ரொம்ப கார சாரமாக சாப்பிட்டு விட்டீர்களா ? அதற்கும் தேன் தான் குடிக்க வேண்டும்.





3.பிறகு கொஞ்ச நாளைக்கு நாக்குக்கு எந்த டேஸ்டும் தெரியாது.




(வடிவேலு சூட ஏதோ சாப்பிட்டு விட்டு இரண்டு காது வழியா ஆவி பறக்குமே அது நெஜம் தான். ஒரு நாள் வெளியில் போகும் அவசரத்தில் சுடாக டீ குடித்து விட்டேன் அவ்வளவு தான் இரண்டு காதும் பிஞ்சு போற அளவுக்கு ஒரு வலி ஒரு நிமிடம் என்ன் ஆயிற்று என்றே தெரியல, பிறகு உடனே தேன் சாப்பிட்டேன் சூப்பர்.)

ஹி ஹி ஹி ஹா ஹா
ஜலீலா

Sunday, February 8, 2009

இரவில் தூங்கும் முன் செய்ய வேண்டிய எட்டு அமல்கள்.

இரவில் தூங்கும் முன் செய்யவேண்டிய எட்டு அமல்கள்



1.இஸ்திக்பார் (அஸ்தஃபிருல்லாஹல் அளிம்) - 10 தடவை

2.குல்ஹுவல்லாஹ் சூரா - 3 தடவை

3. ஷஹாதத் கலிமா (2 ம் கலிமா) - 5 தடவை
அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரிக்கலஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலஹு.

4.அல்ஹம்து சூரா - 4 தடவை

5.தவ்ஹீது கலிமா - 7 தடவை
ஸுபஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹில் அலிய்யுல் அளீம்.


6.சலவாத்து - 10 தடவை
அல்லாஹிம்ம ஸல்லி அலா செய்யதினா முகம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அதத மாபி இல்மில்லாஹி ஸலவாத்தன் தாயிமத்தன் பித வாமி முல்கில்லாஹ்.

7. தம்ஜீது கலிமா(3 வது கலிமா) - 8 தடவை
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல்முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீது பியதிஹில் கைர் வஹுவ அலா குல்லி ஷய்யின் கதீர்.


8.அவ்வல் கலிமா - 10 தடவை

ஜலீலா

Monday, February 2, 2009

கீபோர்ட் கீளினிங் டிப்ஸ்

1. கீபோர்டில் அதிகமாக உணவு துகள்கள், தூசி எல்லாம் கீழே போய் அடைந்து கொள்ளும் அதற்கு கீபோர்டை தலை கீழா கவிழ்த்து தட்டினாலே எல்லாம் வந்து கீழே விழுந்துவிடும்.



2.அதில் ஏதாவது கொட்டிவிட்டால் அதை அப்படியே துடைக்க கூடாது தலை கீழாக சீல்ங் ஃபேன் துடைப்பது போல் பிடிந்து கொண்டு காட்டன் பட்ஸ் (அ) பெயிண்டிங் பிரெஷ் கொண்டு துடைக்கவும்.ஒவ்வொரு எழுத்தாகவும் கழட்டி துடைக்கலாம்.



3. இதில் டாய்லெட்டில் இருக்கும் கிருமியவிட மோசமான கிருமிகள் அதைல் இருக்குமாம். அதற்காக தான் அவ்வளவு முக்கியம் அதை கீளின் செய்வது.



ஜலீலா பானு, துபாய்.

முதுகு வலியா?இடுப்பு வலியா? மூட்டு வலியா?





1. முதுகு வலி மற்றும் இடுப்பு வலி, மூட்டுவலியால் அவதி படுபவர்கள் ஏதாவது கீரிம் அல்லது அதற்குன்டாண ஆயிண்ட் மெண்ட் தடவி கொண்டு ஹாட் வாட்டர் பேக் ஒத்தனம் கொடுக்கத்தால் பாதி வலி குறையும்.



2 .ஹாட் வாட்டர் பேக் இல்லாதவர்கள் ஒரு மெல்லிய துணியில் சூடன சாதம் ஒரு கை பிடி அளவு வைத்து கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். இல்லை ஒரு சிறிய பாலித்தின் பையில் சாதத்தை போட்டும் ஒத்தடம் கொடுக்கலாம்.




3. . தலைக்கு தலையணை வைக்காமல் காலுக்கு ஒரு பெரிய தலையணை வைத்து தூங்கினாலும் வலி குறையும்.





4. எந்த பொருளையில் நேரடியாக குனிந்து எடுக்ககூடாது,சிறிது உட்கார்ந்து எடுக்கவேண்டும்.

5. குழந்தைகளை குளிக்க வைக்கும் போது ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து குளிக்க வைக்கனும்.

6. அதிக வெயிட்டை தூக்கக்கூடாது, பக்கெட்டில் தண்ணீர் கூட அரை பக்கெட் அளவிற்கு தான் தூக்கனும், மூச்சை தம் பிடித்து கொண்டு தூக்கக்கூடாது.

7. சேரில் உட்காரும் போது நேரக உட்கரனும் வளைந்து உட்காரக்கூடாது.
நீந்தும் உடற்பயிற்சி முதுகுவலிக்கு மிகவும் நல்லது.


எலும்பையும் உறைய வைக்கும் குளிர்

எலும்பையும் உறைய வைக்கும் குளிர் வெளி நாடு களில் அதற்கு தினம் இஞ்சி சாய் , இஞ்சி காப்பி, சாப்ரான் பால் , மிளகு பால் , சுக்கு மிளகு போன்றவை போட்டு குடிக்கலாம்.





சூப் வகைகளும் அடிக்கடி குடிக்கலாம்.


பாலக் சூப், தக்காளி சூப், சிக்கன் சூப், காய்கறி சூப்


ஆட்டு கால் சூப், மட்டன் எலும்பு சூப் போன்றவை குடிக்கலாம்.


ஜலீலா பானு துபாய்.





Sunday, February 1, 2009

பெசரட் தோசை

தேவையான பொருட்கள்

முழு பாசி பயறு - ஒரு கப்
அரிசி - கால் கப்
சின்ன வெங்காயம் - ஆறு
இஞ்சி ஒரு துண்டு
பச்ச மிளகாய் - இரண்டு
உப்பு - தேவைக்கு





செய்முறை
************

முழு பாசி பயிறையும், அரிசியையும் ஒன்றாக சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
காலையில் அதனுடன் சின்ன வெங்காயம்,இஞ்சி, பச்சமிளகாய் சேர்த்து அரைக்கவும்.அரைத்து தோசைகளாக வார்க்கவும்.

குறிப்பு
குழந்தைகளுக்கு என்பதான் வெங்காயம் சேர்த்து அரைக்கிறோம் பெரியவர்கள் சாப்பிடுவதாக இருந்தால் பொடியாக அரிந்து சேர்த்து சுடலாம்.இதில் புரொட்டீன் அதிகம் உள்ளது, குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.ஜலீலா

நல்லது.
ஜலீலா