Thursday, March 18, 2010

தம் கேபேஜ் - tham cabbage - diet





ட‌ய‌ட்டுக்கு ஏற்ற‌ சைட் டிஷ், இதில் தேங்காய் எதுவும் சேர்க்க‌வில்லை.ச‌ப்பாத்தி ப‌ரோட்டாவிற்கு தொட்டு சாப்பிட‌ ந‌ல்ல‌ இருக்கும்.இதே போல் காலிபிள‌வ‌ரில் செய்தால் சுவை அபார‌மாக‌ இருக்கும்.

கேபேஜ் = கால் கிலோ
எண்ணை = இரண்டு தேக்கரண்டி
வெங்காயம் = ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் = அரை தேக்க‌ர‌ண்டி
மிளகாய் தூள் = அரைதேக்கரண்டி
கொத்துமல்லி தூள் = கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு = அரை தேக்கரண்டி(தேவைக்கு)
கரம் மசாலா தூள் = கால் தேக்கரண்டி

கேபேஜை பொடியாக அரிந்து கொள்ளவும்.
வான‌லியில் எண்ணை விட்டு வெங்காய‌ம் போட்டு வ‌த‌க்க‌வும்.
வ‌த‌ங்கிய‌தும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வ‌த‌க்கி, பொடியாக‌ அரிந்த‌ கேபேஜை சேர்த்து வ‌த‌க்கி ஐந்து நிமிட‌ம் முடி போட்டு த‌ம்மில், சிறு தீயில் வேக‌ விட‌வும்.பிற‌கு தூள் வ‌கைக‌ளை சேர்த்து (க‌ர‌ம் ம‌சாலா த‌விர‌) மீண்டும் ஐந்து நிமிட‌ம் த‌ம்மில் வேக‌ விட‌வும்.
க‌டைசியாக‌ க‌ர‌ம் ம‌சாலா தூவி இர‌க்க‌வும்.






//முட்டை கோஸ் என்றாலே யாருக்கும் பிடிக்காது அதை பிரைட் ரைஸ்,KFC சால‌ட் , க‌ட‌லை ப‌ருப்போடு கூட்டு, முர்த‌பாவில் , ச‌மோசாவில் எல்லாம் சிறிது சேர்த்து கொண்டால் பிடிக்காத‌வ‌ர்க‌ளுக்கு சைல‌ண்டா உள்ளே த‌ள்ளிட‌லாம்.//
அசைவ பிரியர்கள் இதில் ஒரு முட்டைய கலந்து கொள்ளலாம், (ஆனால் மங்குனி அமைச்சருக்கு மட்டும் ஸ்பெஷலா டயனோசர் முட்டை தான்)

டிஸ்கி: ஸாதிகா அக்காவிற்கு கேபேஜ்ன்னா பிடிக்காதாம் அதான் ஸாதிகா அக்கா இது போல் செய்து சாப்பிட்டு பாருங்க‌ள்.


Wednesday, March 17, 2010

எக் வெல்லம் இட்லி - egg jaggery idly

தேவையான பொருட்கள்



இட்லி மாவு = 5 இட்லிக்கு தேவையான அளவு
வெல்லம் பாகு (கட்டிப்பாகு) = ஒன்னறை மேசைகரண்டி
நெய் = தேவைக்கு
முட்டை = ஒன்று
உப்பு = ஒரு சிட்டிக்கை





செய்முறை


இட்லி த‌ட்டில் நெய் த‌ட‌வி முட்டையுட‌ன் வெல்ல‌பாகை க‌ல‌ந்து முத‌லில் வெல்ல‌ம் முட்டை க‌ல‌வை, பிறகு மாவில் உப்பு கலந்து ஊற்றவும். மாவு இட்லி குழியில் முக்கால் பாகம் தான் இருக்கனும். அப்ப தான் பொங்கி வர சரியாக இருக்கும்.ஏழு நிமிடங்கள் வேக விட்டு இரக்கவும்.

வெல்ல‌ம் எக் இட்லி (பெரிய‌வ‌ர்க‌ளுக்கு)
மேலே குறிப்பிட்ட‌ பொருட்க‌ளுட‌ன், ஏல‌ப்பொடி கால் தேக்க‌ர‌ண்டி, தேங்காய் துருவ‌ல் ஐந்து தேக்க‌ர‌ண்டி சேர்த்து செய்து கொள்ள‌லாம்.



குறிப்பு

வெல்ல பாகு எடுக்கும் போது முதலில் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து ஒரு கொதி வரும் போது வடிகட்டி கொள்ளவும், வெல்லத்தில் கல் இருக்கும்.பிறகு பாகை வற்றவிட்டு கொள்ளவும்.

இதில் முட்டை சேர்ப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவாகிறது.நல்ல மெத்துன்னு ஷாப்டாகவும் இருக்கும்.இது ஏற்கவே கொடுத்த தேன் இட்லி, மிளகு இட்லி.இதை கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கு டிபனில் செய்து வைக்கலாம்.
இட்லி கேக்குன்னு சொல்லி கொடுங்கள்.
இந்த படம் என் தோழி ரூபி செய்து அனுப்பியது.நான் முன்பு கொடுத்த எக் இட்லி முறையில் செய்து இருக்கிறார்கள்.

Tuesday, March 16, 2010

எனக்கு பிடித்த பத்து பெண்கள்(தொடர் தொடருதுங்கோ)



இந்த தொடர் பதிவுக்கு அழைத்த நீரோடை மலிக்காவிற்கு நன்றி.


தொடர் பதிவுன்னு போட்டு நிறைய நிபந்தனைகளை வேறு போட்டு விட்டார்கள், எல்லோரும் பல பிரபல சாதனை பெண்களை சொல்லி பதிவு போட்டு இருக்கிறார்கள்.ஆனால் கூலி வேலை செய்பவர்களை பற்றி சில பேர் தான் போட்டுள்ளார்கள். அவ‌ர்க‌ளுடைய‌ உழைப்பும் எல்லோருக்கும் தெரிய‌னும். அதான் இப்ப‌டி அவ‌ர்க‌ளை ப‌ற்றி போட்டுள்ளேன்


நிபந்தனைகள் :-

1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது.,
2. வரிசை முக்கியம் இல்லை.,
3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்...







1.லதா மங்கேஷ்கர் இந்தியாவின் மிகச்சிறந்த பாடகி என்ன குரல் வளம்.இவர்களுடைய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் தான்

லதா மங்கேஷ்கர் (Lata Mangeshkar, பி. செப்டெம்பர் 28, 1929) இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற ஒரு பாடகியாவார். இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப் படுபவர்.இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர் ஒருவராவார். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.






2. விமான பணி பெண்கள் என்ன ஒரு கனிவுடன் இன்முகத்துடன் சேவை செய்கிறார்கள். அவர்கள் சீருடையே ஒரு தனி அழகு தான்.









3.செவிலியர்கள், இவர்களுக்கு ரொம்பவே பொறுமை அதிகம், அதிலும் இந்த பிலிப்பைனி நர்ஸுகள் எல்லோரும் ஒரே சைஸ், என்ன ஒரு இனிமையான பேச்சு, அவர்களுக்கு கோபம் வந்தே பார்த்ததில்லை, எரிச்சல் படாமல் நோயாளிகளிடம் நடந்து கொள்ளும் விதம் எல்லாமே சூப்பர்.
அதுவும் ஊசி போட போகிறவர்கள் அவர்கள் தலைமுடியின் வாசத்திலேயே இன்னும் இரண்டு ஊசி போட்ட பரவாயில்லையேன்னு நினைக்க வைக்கும் ரங்கமணிகளை... ஹி ஹி









4.வீடு கட்டும் போது கட்டுமானத்தில் முக்கியமாக சித்தாள் கண்டிப்பாக உண்டு. இந்தியாவில் எல்லா இடங்களில் சித்தாள்களை வைத்து தான் வேலை நடக்கிறது. கணவனால் கைவிடப்பட்ட படிப்பறிவில்லாத நிறைய பெண்களை இந்த வேலையில் பார்க்கலாம்.அதே போல் தமிழ் சினிமாவிலும் (ரஜினி,சத்யராஜ்,தியாகரஜன்) எல்லோருக்கும் ஒரு பிளாஷ் பேக் கதை ஓடும் பார்த்தா அம்மா ஒரு சித்தாளாக தான் இருப்பாள்.





5.இந்திரா காந்தி

இந்திரா காந்தி, சோனியா காந்தி எல்லோரும் இவர்களை பற்றி சொல்லி இருந்தாலும், எனக்கும் இவர்களை ரொம்ப பிடிக்கும்.
இந்திரா காந்தி பாரதத்தின் முதல் பெண் பிரதமர்.இவர் நடை, உடை, பாவானை பேச்சு திறன் எல்லாமே ரொம்ப நல்ல இருக்கும்.

சமீபத்தில் அலகாபாத்தில் உள்ளா ஆனந்த பவன் அங்கு சென்ற போது அவர்கள் சிறு வயது போட்டோக்கள், கல்யாண போட்டோக்கள், மற்றும் பல போட்டோக்கள் பார்த்தேன், அனைத்தும் அவ்வளவு அற்புதம்






6. சோனியா காந்தி
சோனியா காந்தி ஒரு இத்தாலிய பெண்மணி நம் நாட்டு கலாச்சாரத்துடன் வாழ்ந்து கொண்டு சாதனை புரிந்து கொண்டு இருக்கிறார்கள். டெல்லியில் அங்ரேஜி என்று சிலர் ஏளனப்படுத்திய போது இரவு பகல் பாராது ஹிந்தி மொழியை விரைவில் கற்று கொண்டவர்.







7.பெண் ஆசிரியைகள் நிறைய பேருக்கு வீட்டில் இல்லத்தரசிகளுக்கு இரண்டு முன்று குழந்தைகளை சாமாளிப்பது எவ்வளவோ கழ்டமாக இருக்கு. எப்படாப்பா 3 வயதாகும் பள்ளியில் சேர்த்து விடலாம் என்று நினைப்பார்கள்.
ஆனால் ஒரு வகுப்பில் 35 பிள்ளைகள வைத்து அதுவும் கே.ஜி யிலிருந்து 3ஆம் வகுப்பு வரை சமாளிப்பது மிக கடினமே. அப்படி அவர்கள் கற்றுக்கொடுத்து , இருப்பதிலேயே டீச்சர் வேலையில் தான் வேலைகளும் மிக அதிகம். சாட், புராஜெக்ட் என்று இன்னும் பல.








8.ஔவையார் , ஔவையின் ஆத்திசூடியை யாராலும் மறக்க முடியாது.
அதே போல் நெல்லிக்க‌னியும் ஔவையால் தான் பிர‌ப‌லமான‌து.
(அறம் செய விரும்பு, ஐயம் இட்டு உண், ஓதுவது ஒழியேல் இளமையில் கல் , இலவம் பஞ்சில் துயில்,வைகறைத் துயில் எழு, ஊருடன் கூடி வாழ். )








9..வீடு வீடாக பத்து பாத்திரம் தேய்க்கும்(முனிமா, ராக்கமா) பெண்கள் சோம்பல் சடவில்லாமல். காலை 6 மணியிலிருந்து இரவு 8 வரை டைம் மேனேஜ்மென்டோடு வேலை உழைத்து காசு கொண்டு வந்து என்ன புரயொஜனம் அப்படி கழ்டப்பட்டு சம்பாத்தித்து கொண்டு வந்தால் அவர்களுடைய ரிக் ஷா, மூட்டை தூக்கும் ரங்கமணிகள் சாராய கடைக்கே சரியாபோகும்.அடி உதையும் வாங்கி கொண்டு வ‌ந்து வேலை பார்ப்பார்க‌ள். (ப‌ட‌த்தில் உள்ள‌து காஸ்லி வேலைக்காரி ஹி ஹி)











10.பெண் டெயிலர்கள் ஊர் ஊராக ஏற்றுமதியாகும் பல வகையான துணிகளை தைக்கின்றனர். மிக கடின உழைப்பு. இதில் பணி புரியும் நிறைய பெண்களும் ஆதவற்றவர்கள். அவர்கள் சொந்த உழைப்பைக்கொண்டு குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள்.





மலிக்கா சொல்வது போல் நமக்கு நம்மை தான் முதலில் பிடிக்கனும். எனக்கும் என்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

அடுத்து இந்த பதிவ தொடர அழைப்பது

நட்புடன் ஜமால் (கற்போம் வாருங்கள்)
மேனகா சத்யா
சசிகுமார் (வந்தேமாதரம்)
தோழி விஜி





முதல் போட்டோவில் உள்ள உஷா உதுப் இந்தியாவின் பாப் பாடகி, எல்லா மொழிகளிலும் கலக்கலான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர் இவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். பதினொன்றாவதாக அவரையும் சொல்லி கொள்கிறேன், நிபந்தனைய மீறிட்டேனே...

Thursday, March 11, 2010

எக் இட்லி (தேன் & மிளகு) - egg idly honey & pepper








இட்லி என்றாலே அது போல ஒரு லைட்டான உணவு எதுவுமே கிடையாது.நமக்கு சட்னியோ ,குழம்போ வைத்து சாப்பிடுவோம். வயிற்று புண், அல்ச‌ர், வ‌ந்த‌வ‌ர்க‌ள் கூட இந்த‌ இனிப்பு இட்லியை சாப்பிட‌லாம். குழந்தைகளுக்கு என்று தனியாக செய்ய முடியாத போது
இப்படி கொடுத்தால் நல்ல சத்தான இட்லி சாப்பிட்ட மாதிரி ஆச்சு.
முட்டை தேன் இட்லி

முட்டை = ஒன்று
இட்லி மாவு = 5 இட்லி சுட‌ தேவையான‌ அளவு
தேன் = 5 தேக்கர‌ண்டி
நெய் = சிறிது








முட்டையை நுரை பொங்க‌ அடித்து கொள்ள‌ வேண்டும்.அதில் தேனை க‌ல‌ந்து கொள்ள‌வும்.
இட்லி பாத்திர‌த்தில் நெய்யை த‌ட‌வி அதில் ஓவ்வொரு குழியிலும் சிறிது மாவை ஊற்றி அத‌ன் மேல் முட்டை க‌ல‌ந்த‌ தேனை ஊற்றி மேலே சிறிது மாவு ஊற்ற‌வும்.
இதே போல் 5 இட்லியிலும் ச‌மமாக‌ ஊற்றி இட்லி வேக‌ 7 நிமிட‌ம் ஆகும்.
வெந்த‌தும் எடுத்தால் பூப்போல் மெத்துன்னு இருக்கும்.


//குழ‌ந்தைக‌ளுக்கு எந்த‌ ப‌க்க‌ உண‌வும் இல்லாம‌ல் சின்ன‌ பீஸா க‌ட் செய்து அப்ப‌டியே ஒரு ஃபோர்க்கை போட்டு கொடுத்தால் ஈசியாக‌ சாப்பிடுவார்க‌ள்.
ப‌ள்ளி செல்லும் குழ‌ந்தைக‌ளுக்கும் கொடுத்து அனுப்ப‌லாம். //


முட்டை மிள‌கு இட்லி

இனிப்பு இட்லி பிடிக்காத‌ குழ‌ந்தைக‌ளுக்கு இப்ப‌டி மிளகு சேர்த்து செய்து கொடுக்க‌லாம்.



இட்லி மாவு = 5 இட்லிக்குக்கு தேவையான‌ அள‌வு
முட்டை = ஒன்று
மிள‌கு தூள் = ஒரு தேக்க‌ர‌ண்டி
உப்பு = சிறிது
நெய் = சிறிது





மிள‌கு, முட்டை, உப்பை ந‌ன்கு நுரை பொங்க‌ அடித்து கொள்ள‌வும்.
இட்லி த‌ட்டில் நெய்யை த‌ட‌வி முத‌லில் சிறிது இட்லி மாவு பிற‌கு முட்டை க‌ல‌வை மீண்டும் சிறிது இட்லி மாவு ஊற்றி இட்லிக‌ளாக‌ வார்த்து எடுக்க‌வும்.



எங்க‌ளுக்கெல்லாம் (நான் வெஜ் சாப்பிடுபவர்கள்) குழ‌ம்பில்லாம‌ல் இர‌ங்காது என்கிறீர்க‌ளா?

ம்ம் மீன் குழ‌ம்பு, சாம்பார், கால் பாயா , மட்டன் எலும்பு சூப் எல்லாம் இட்லிக்கு பொருந்தும், ஆனால் குழ‌ம்பு க‌ட்டியா வைக்காமால் ஓடு த‌ண்ணீரா வைக்க‌னும்.




இட்லி, பாகற்காய் சாம்பார்
சர்க்கரை வியாதி உள்ளவர்கள், பாகற்காய் சாம்பார் வைத்து கொள்ளலாம். சாம்பாரில் போடுவதால் பாகற்காயில் கசப்பு கூட இதில் தெரியாது.
இந்த ரெசிபி , என் தம்பி, என் தங்கை,என் தோழிகளின் குழந்தைகளுக்காக‌ (8 மாத குழந்தைகளுக்கு) க்காக நான் முயற்சி செய்தது.

Wednesday, March 10, 2010

அரபிகாரர்களின் பிரியாணி(தோழிகளுக்காக)

ஒரு பழக்கடையே நடுவுல வைத்து சாப்பிடுவது இந்த அரபிகளால் தான் முடியும்.

அரபிகாரர்களின் பிரியாணி இப்படி மூட்டை முட்டையா அரிசிய கொட்டி செய்து இத செய்ற சமையன ரொம்ப (கல்யாண சமையல் சாதம் சாப்பிடும் மாய ஜால பூதம் போல இருந்தால் தான் எறி நின்றி கிளற முடியும் போல‌





இந்த கிணற்றில் எத்தனை முழு ஆட்டை இரக்கியிருப்பார்கள்.





//ப‌ழ‌ங்ககால‌த்தில் இஸ்லாமிய‌ இல்ல‌ங்க‌ளில் பெரிய‌ த‌ட்டு தாலாவில் தான் அதை க‌ல‌ம் என்று சொல்வார்க‌ள் ஒரு க‌ள‌த்தில் ஐந்து பேர் கூட்டாக‌ உட்கார்ந்து சாப்பிடுவார்க‌ள்.
இஸ்லாமியர்கள் இப்படி ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது சகோதரத்துவமும், ஒற்றுமையையும் உண்டாகும்,ரிஸுக் விஸ்திரணம் (உணவில் அபிவிருத்தி)ஏற்படும்.
இது இஸ்லாமிய‌ இல்ல‌ க‌ல்யாண‌ங்க‌ளில் 5 ந‌ப‌ர்க‌ள் ஒரு தாலா(ச‌ஹ‌ன், க‌ல‌த்தில்) உட்கார்ந்து சாப்பிடுவோம்.
சில இடங்களில் வாழையிலையிலும் சாப்பிடுவோம்//

டிஸ்கி:இது அருசுவை தோழிகள் (அதிரா, இலா, ஜீனோ,இமா, செல்வி அக்கா, கவி,ஆசியா,ஸாதிகா அக்கா,ஹுஸைன்னாம்மா, பாயிஜா,மேனகா, கீதா ஆச்சல் பீ சீரியஸ், இளமதி, உமா, சகோ.ஹைஷ் இவர்களுக்காக போட்ட பிரியாணி , வாங்க எல்லோரும் சாப்பிடலாம்.
நிறைய என்பதால் என்னால் செய்ய முடியல ஆகையால் ஆள்வைத்து சமைத்தேன் ஹா ஹா.
(இது 3 மண் சாப்பாடு , 1 மண் என்றால் 4 கிலோ)
சகோ.ஹைஷ், அதிரா இலாவிற்கு தெரியாம் இரண்டு முட்டை பிரியாணியுனுள் ஒளித்து வைத்துள்ளேன் . பார்த்து சாப்பிடுங்கள்.

"இது மகளிர் தின ஸ்பெஷல் பிரியாணி" மகளிர் தின கொண்டாட்டம்
மகளிர் தின ஸ்பெஷல் பதிவில் என்னிடம் ஏதும் ஸ்பெஷலா போடலையான்னு கேட்டவர்களும்,மற்ற தோழிகளும் இந்த விருந்தில் கலந்து கொள்ளலாம்.








Monday, March 8, 2010

பேச்சுலர்ஸ் ஆனியன் ஆம்லேட்





வெளிநாடுகளில் பேச்சுலர்களுக்கு ஈசியான காலை உணவு.குப்பூஸுட‌ன் சாப்பிட‌ ந‌ல்ல‌ இருக்கும்.
இந்த ஆம்லேட் தான் முட்டை ரெசிபியிலேயே மிக சுலபம். இந்த ஆம்லேட் எல்லா டிஷ் க்கும் பொருந்தும்.
பிரெட், பன், ரொட்டி, பரோட்டா, சப்பாத்திக்கு இது ஒன்று போதும், ஆபிஸ்க்கு டிபன் எடுத்து செல்லவும் நொடியில் தயாரித்து விடலாம்.





தேவையான பொருட்கள

தேவையான பொருட்கள்
முட்டை = முன்று
உப்பு தூள் = கால் தேக்கரன்டி (தேவைக்கு)
மிளகாய் தூள் = அரை தேக்கரண்டி
பச்ச மிளகாய் = இரண்டு
வெங்காயம் = இரண்டு
எண்ணை = இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
ப‌ட்ட‌ர் = கால் தேக்க‌ர‌ண்டி(தேவைப்ப‌ட்டால்)



செய்முறை
முட்டையில் உப்பு, மிள‌காய் தூள் சேர்த்து ந‌ன்கு அடித்து, வெங்காய‌ம் ப‌ச்ச‌ மிள‌காயை பொடியாக‌ அரிந்து சேர்த்து கலக்கவும்.



தோசை த‌வ்வாவில் எண்ணை+ப‌ட்ட‌ர் சேர்த்து பொரித்தெடுக்க‌வும்.


குறிப்பு
இதில் ட‌ய‌ட் செய்ப‌வ‌ர்க‌ள் வெரும் வெள்ளை க‌ருவில் ம‌சாலா, வெங்காய‌ம், ப‌ச்ச‌மிள‌காயை க‌ல‌க்கி ஆலிவ் ஆயிலில் பொரித்தெடுக்க‌வும்.
இது ர‌ச‌ம் சாத‌ம், ப‌ருப்பு சாத‌ம் , உப்புமா,தட்டு ரொட்டி, இன்னும் ப‌ல‌வ‌கை உண‌வுக‌ளுக்கு பொருந்தும்.




எந்த‌ பக்க உணவும் இல்லை என்றால் இந்த முட்டை இருந்தால் போதும்
இதில் மசாலா சிம்பிளாக போட்டுள்ளேன்.
இது அவசர ஆனியன் ஆம்லேட் என்றும் சொல்லலாம்.
மிளகாய் தூளுக்கு பதில் மிளகு தூளும் சேர்த்து கொள்ளலாம்.
அதிலேயே கொஞ்சம் இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்துமல்லி தழை, மஞ்சள் தூள் சேர்த்தும் அவரவர் ருசிக்கு ஏற்றவாறு சுடலாம்.













மகளிர் தின வாழ்த்துக்கள்





உலகத்தில் உள்ள‌ அனைத்து பெண்களுக்கும்( பெண் பதிவர்களுக்கும்) மகளிர் தின வாழ்த்துக்கள்.






இந்தாங்க எல்லோருக்கும் ஒரு ரோஜாப்பூ.







மகளிர் தின ஸ்பெஷல் செய்திகள் ளை இங்கு சென்று படித்து கொள்ளவும்.அப்படியே காஞ்சனாவின் ஓட்ஸ் பொங்கலையும் சுவைத்து மகிழுங்கள்


மார்ச் 8 மகளிர் தினம் வந்தது எப்படி? இதில் சென்று தெரிந்து கொள்ளலாம்/