Wednesday, December 14, 2011

கருப்பட்டி குழிபணியரம் - Palm sugar kuzipaniyaram



தேவையான பொருட்கள்
கருப்பட்டி குழி பணியாரம்
பச்சரிசி – அரை டம்ளர்
மைதா – அரை டம்ளர்
கருப்பட்டி வெல்லம் – முக்கால் டம்ளர்
துருவிய தேங்காய் – இரண்டு மேசை கரண்டி
பல்லாக நருக்கிய தேங்காய் – இரண்டு மேசை கரண்டி
ஏலக்காய் பொடி – அரை தேக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
வருத்த முந்திரி – 6 ( பொடியாக அரிந்து கொள்ளவும்)
முட்டை – ஒன்று (விருப்ப பட்டால்)
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை




செய்முறை



அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து அத்துடன் மைதா ,உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.அரைத்த மாவில் பொடியாக அரிந்த் தேங்காய், முட்டை,துருவிய தேங்காய் ஏலக்காய் பொடி இட்லி சோடா கலந்து வைக்கவும்.

கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கரைந்த்தும் அதை கலக்கிய மாவில் வடிகட்டவும்.குழி பணியார சட்டியை காய வைத்து எண்ணை + நெய் சிறிது ஊற்றி மாவை முக்கால் பாகம் இருக்குமாறு ஊற்றவும்.தீயின் தனலை மிதமாக வைக்கவும், இல்லை என்றால் கரிந்து விடும்.இரண்டு முன்று நிமிட்த்தில் வெந்து விடும்,ஒரு பக்கம் வெந்த்தும் திருப்பி போட்டு மறுபக்கமும் வேகவிட்டு இரக்க்வும்.

சுவையான கருப்பட்டி குழிபணியாரம் ரெடி.


காலை உணவிற்கு(காரம்+ இனிப்பு) குழிபணியாரத்துடன்  சுண்டலும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். குட்டியாக இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.எத்தனை உள்ளே போகுதுன்னே தெரியாது  செட்டி நாடு ஸ்பெஷல்  குழிபணியாரம்.இது என் சுவைக்கு ஏற்ப செய்துள்ளேன் சுவைத்து மகிழுங்கள்
தேங்காய் பல்லாக கீறிய தேங்காயாக இருந்தால் இன்னும் நல்ல இருக்கும், இதில் துருவிய தேங்காய் சேர்த்துள்ளேன்.




Saturday, December 10, 2011

மேத்தி ரொட்டி, காலி பிளவர் பீஸ் குருமா- methi rotti & cauliflower peas kurma







மேத்தி ரொட்டி காலிப்ளவ்ர் பீஸ் குருமா




மேத்தி ரொட்டிக்கு தேவையானவை

கோதுமைமாவு – அரை கிலோ

எண்ணை – 1 மேசைகரண்டி

உப்பு – முக்கால் தேக்கரண்டி

வெந்தயகீரை(மேத்தி) – ஒரு கட்டு

எண்ணை – சுட தேவையான அளவு.

கரம் மசாலா பொடி – கால் தேக்கரண்டி

மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி

காலிப்ளவர் பீஸ் குருமாவுக்கு.

காலிப்ளவர் – கால் கிலோ

பட்டாணி – 100 கிராம்

வெங்காயம் தக்காளி – தலா ஒன்று

இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு தேக்கரண்டி

கொத்துமல்லி ,புதினா – சிறிது

தேங்காய் பவுடர் – ஒரு மேசை கரண்டி

மிள்காய் தூள் – ஒரு தேக்க்ரண்டி

மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

உப்பு தேவைக்கு

முந்திரி – 5

தாளிக்க

எண்ணை – நெய் – 1 மேசை கரண்டி

பட்டை,ஏலம், கிராம்பு – தலா ஒன்று

பிரியாணி இலை – ஒன்று சிறியது.



செய்முறை \

வெந்தயகீரையை அலசி ஆய்ந்து அத்துடன் கோதுமை மாவு, கரம் மசாலா பொடி ,மிளகாய் தூள்,உப்பு,எண்ணை கலந்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.



குருமாவுக்கு

காலிப்ளவர் பூவை தனித்தனியாக பிரித்தெடுத்து உப்பு கலந்த வெண்ணீரில் இரண்டு நிமிடம் ஊறவைத்து கழுவி எடுக்கவும்.



எண்ணையை காயவைத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயம் அரிந்து சேர்த்து வதக்கவும், வெங்காயம்கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சைவாடை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்க்கவும்.

தக்காளி மடங்கியதும் மசாலாவகைகள், உப்பு கலந்து காலிப்ளவரியையும் பட்டாணியையும் சேர்த்து கிளறி சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

கடைசியாக முந்திரியை பொடித்து அத்துடன் தேஙகாய் பவுடர் சேர்த்து மிக்சியில் அரைத்து குருமாவில் சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்.


ரொட்டிமாவை 10 ரொட்டிகளாக பிரித்து சதுரவடிவ்மாக திரட்டி மாவில் எண்ணை தடவி குறுக்கும் நெடுக்குமாய் சதுரவடிவாக மடித்து மீண்டும் திரட்டி ரொட்டிகளாக சுட்டெடுக்கவும்.

சுவையான மேத்தி ரொட்டியும், காலிப்ளவர் பீஸ் குருமா ரெடி.


Wednesday, December 7, 2011

நீங்கவிதவிதமாவாட்ச்அணிபவர்களா?


 

சிலருக்கு விதவிதமாக வாட்ச் அணிவது ரொம்பபிடிக்கும்.


அதுவும் பெண்கள் இப்பசேலை, சுடிக்குமேட்சாக ,பட்டுசேலைக்கு மேட்சாக வாட்ச் அணியும் கிரேஸ் உள்ளவர்களாக இருக்கின்றனர்



ஆண்கள் லெதர், மெட்டல், கோல்ட் எனபல மாடல்கள் வைத்திருப்பனர்.

அப்படி எல்லாமே உபயோகிக்க போவதில்லை ,சிலவாட்ச்கள் பீரோவில் தூங்கும் அப்படி ரொம்பநாள் கழித்து எடுத்துபோடும் போதுபேட்டரிபோய் விடும்.இல்லை கருத்துவிடும்
பேட்டரி போகமால் இருக்க வாட்ச்டைம் செட் செய்யும் ஸ்க்ரு இருக்கும்.

அதை லேசாக இழுத்து விட்டால் மணி ஓடாது நின்றுவிடும்.
அப்படியே பீரோவில் வைத்து விட்டு எடுத்து பயன்படுத்தும் போது அந்த ஸ்க்ரூவை அழுத்தி விட்டு டைம் செட்செய்து போட்டுகொள்ளலாம்





இதனால் வாட்ச் பேட்டரி நீண்ட நாள் முடிந்து போகாமல்இருக்கும்.

வாட்ச்கருத்து போகாமல் இருக்க செண்ட் போன்ற வாசனை திரவியங்கள் பட்டால்கருத்து வெளுத்து போய்விடும்.

எல்லா பொருட்களுடனும் போட்டுவைக்காமல்தனியாக அதற்குறியபாக்ஸிலோஅல்லது டிஷு பேப்பரில் சுருட்டியோ வைக்கலாம்


Thursday, December 1, 2011

பனீர் வெஜ் மின்ட் கறி -Paneer Mint Curry


தேவையான பொருட்கள்

வதக்கி அரைக்க



புதினா - ஒரு கட்டு

கொத்து மல்லி - அரை கட்டு

கருவேப்பிலை - கால் கட்டு

பச்ச மிளகாய் - நான்கு

இஞ்சி - ஒரு லெமென் சைஸ்

பூண்டு - 5 பல்

வெங்காயம் - முன்று

தக்காளி - நன்கு

எண்ணை - ஒரு மேசை கரண்டி

பட்டாணி - 100 கிராம்

கேரட் - 100 கிராம்

பீன்ஸ் - 100 கிராம்

பன்னீர் - 100 கிராம்



தாளிக்க


எண்ணை

சீரகம்







செய்முறை

முதலில் எண்ணையை காயவைத்து வெங்காயம், இஞ்சி,பூண்டு,தக்காளி,பச்ச மிளகாயை வதக்கவும்.

கடைசியாக கொத்து மல்லி, புதினா, கருவேப்பிலையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி அதையும் சேர்த்து வதக்கவும்.

வதக்கியதை ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

எண்ணையை காய வைத்து சீரகம் தாலித்து அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவேண்டும், அதோடு பண்ணீரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

காய் களை பொடியாக அரிந்து மைக்ரோ வேவில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

இப்போது வெந்த காயை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.

சுவையான ஆரோக்கிய மான மின்ட் கறி ரெடி

எல்லா சத்தும் நிறைந்த கறி, கர்பிணி பெண்களுக்கு ஏற்ற அருமையான சத்தான உணவு. சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கும் பனீர் ரொம்ப பிடிக்கும்.


Sunday, November 27, 2011

ஒரு சோக செய்தி

என் வாப்பாவின் கடைசி தம்பி முஸ்தபா சின்ன வாப்பா ஒரு வருடமாக சுகர் வந்தது தெரியாததால் கிட்னியில் பாதிப்பு ஏற்பட்டு,  கிட்னி பிரப்ளத்தால் இப்ப கொஞ்சம் நாளா படுத்த படுக்கையாகி இன்று காலை . வருஷ கடைசி முஹரம் முதல் நாளில் 12.30 மணிக்கு வஃபாத்தாகிவிட்டார்கள்

///'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் - நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்.//

இறைவனிடம் அன்னாரின் மஃபிரத்துக்காக நானும் துஆ செய்கிறேன் நீங்களும் துஆ செய்யுங்கள்.
மறுமை நாளின் கேள்விகணக்கை எளிதாக்கி
கப்ரின் அதாபிலிருந்து  இடுக்கத்திலிருந்தும், பாதுகாத்து கப்ரில் வெளிச்சத்தையும, விசாலத்தையும் தந்தருள்வானாக.!!
ஆண்டவன் அவர்களின் பாவங்களை ம்ன்னித்து ஜன்னத்துல் பிர்தவுஸில் நுழைய செய்வானக!!

மறுமை வாழ்வை வல்ல ரஹ்மான் சிறப்பானதாக்கி தருவானாக!!ஆமின்

(சின்னடாடி 4 அண்ணன் தம்பிகளில் கடைகுட்டி நல்ல எல்லோரும் நல்ல உதவி செய்யும் குணம் படைத்தவர்.  படிப்பு முடித்ததும் சவுதி சென்று சிலகாலம் இருந்து மீண்டும் இந்தியா வந்து , மறுபடி சவுதி சென்ற்று சில வருடம் இருந்தார் , அப்பதான் சர்க்கரைவியாதி இருப்பது தெரியமலே இருந்து இருக்க்கு. ஊருக்கு வந்து செட்டில் ஆகும் போது செக் பண்ணிய போது தெரிந்து இருக்கு சுகர் லெவல் ஹை கிட்னிய பாதித்து விட்டது.ஒரு வருட காலம் சிகிச்சை பெற்றும் பலன் இல்லை.)

(அண்ணன்கள் பெண்குழந்தைகள் அனைவரை பெற்ற பிள்ளைகள் போல கண்டிப்புடனும் பாசத்துடனும் பாதுகாத்தவர். எல்லோருக்கும் சின்னவாப்பான்னா தனி பிரியம். என் கணவர் சவுதி போயிருந்த போதும் எனக்கு ஹாஸ்பிட்டலுக்கு கூட வருவது பாஸ்போட் எடுக்க எல்லாம் உதவி செய்தது சின்ன டாடி தான்.)


சின்ன வாப்பாவை இழந்து வாடும் எங்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் ஆண்டவன் பொறுமையையும், மனதைரியத்தையும்,தாங்கிக்கொள்ள கூடிய சக்தியையும் கொடுப்பானாக!! ஆமின்










Friday, November 25, 2011

ஆண்களுக்கு ஹிமோகுளோபின்

ஆரோக்கியமான வாழ்க்கையில் பல உடல் உபாதைகளில் உடலில் இரத்தத்தின் அளவு சரியாக இருப்பது மிகவும் முக்கியம்.




ஹிமோ குளோபின் அளவை அடிக்கடி பெண்கள் சரிபார்ப்பது போல் ஆண்கள் யாரும் சரி பார்த்து கொள்வதில்லை.பெண்களுக்கு திருமணம் முடிந்ததும் கர்ப காலத்தில், பிரசவ நேரத்தில் இரத்ததின் அளவை மருத்துவர்கள் சரி பார்ப்பதால் ஹிமோ குளோபின் அளவு குறைவாக உள்ளதை கண்டு பிடித்து அதற்குறிய சிகிச்சையை அளிக்கின்றனர். என்ன உணவு உட்கொண்டால் ஹிமோ குளோபின் அளவு அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

ஆனால் ஆண்கள் தங்கள் ஹிமோகுளோபின் அளவை சரிபார்க்க வாய்ப்பே இல்லை. குறிப்பிட்ட வயதிற்கு பிறகு ஏதேனும் உடல் உபாதைகள் வரும் போது தான் தெரிய வருகிறது.



ஆண்கள் படிப்பிற்க்காக மேற்படிப்பிற்காக ஹாஸ்டலில் தங்க வேண்டிய சூழ் நிலை,உள்ளூரிலேயே வேறு வேறு ஊர்களில் படிப்பு மற்றும் வேலை தேடுதல், வெளிநாடுகளில் படிப்பு மற்றும் வேலைக்காக செல்ல நேர்வதால் முறையான உணவுவகைகளை உட்கொள்வதில்லை.



பெற்றோர்களுடன் இருக்கும் வரை அவர்களுக்கு கவலை இல்லை சத்தான சாப்பாடு வீட்டு சாப்பாடு அம்மாவின் பராமரிப்பில் அமைந்து விடுகின்றன.

ஆனால் இப்படி வெளியிடங்களுக்கு போய் சாப்பிடும் போது சிலருக்கு அந்த வகை சாப்பாடு ஒத்துக்கொள்ளவே நாள் எடுக்கும். (இப்படிதான் ஒருத்தருக்கு உணவு முறை ஒத்துக்கொள்ளாததால் இரத்தில் கேன்சர் வந்து விட்டது அதிர்ஷ்டவசமா இரண்டு வருடமாக சிகிச்சை பெற்று சரியாகி விட்டார்)



அதே போல் வேலை பார்க்கும் ஆண்களும் பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகள் என குடும்பங்களை நேர் வழியில் கொண்டு செல்லவே சரியாக இருக்கு ஆனால் அவர்களுக்கு குறிப்பிட்ட வயதில் மன அழுத்தம் இயலாமை , உடல் சோர்வு , கிட்னி ஸ்டோன், ஈரல் வீக்கம், ஹெர்னியா , அல்சர் , வயிறு எரிச்சல் , ஹார்ட் அட்டாக், உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறை இரத்த அழுத்தம் , சர்க்கரை வியாதி ,கேஸ் பிராப்ளம் இது போல் பல வியாதிகளில் ஓவ்வொருவருக்கும் ஓவ்வொரு மாதிரியான நோய் சூழ் நிலை, உணவு , இருப்பிடத்தை பொறுத்து கண்டிப்பாக தாக்குகிறது.இது போல வியாதிகளுக்கு மற்றும் ஒரு முக்கிய காரணம் மன அழுத்தம், கவலை, சூழ்நிலையாகவும் இருக்கலாம்.







இந்த நோய் ஏன் எப்படி தாக்குகிறது என பார்ப்போம்.



மன அழுத்தம் : பல விழியங்களை மனதிலேயே தேக்கிவைத்து யாரிடமும் மனம் விட்டு பேசாததினால் ஏற்படுகிறது, இதுவே தலை வலியாக மாறுகிறது.



உடல் சோர்வு: சரியான சாப்பாடு கிடைக்காமல் , சரியான நேரத்துக்கு சாப்பிடாமல் அதிக கடின உழைப்பினால் வருகிறது.

இயலாமை உடலில் போதுமான எதிர்ப்பு சக்தி இல்லாததால் இரத்ததின் அளவு குறைத்தல்



கிட்னி ஸ்டோன்: ஆபிஸில் வேலை பார்ப்பவர்கள் அதிக நேரம் கணனியிலேயே இருப்பவர்கள் , சாஃப்ட்வேர் இஞ்சினியர்கள் அவர்களுக்கு கொடுக்கப்படும் பிரஜெக்டுகளில் உட்கார்ந்தால் இரவு பகல் பாராமல் நேரம் போவதே தெரியாது அப்போது தண்ணீரோ , சாப்பாடோ எல்லாம் அவர்களுக்கு சுத்தமாக மறந்து விடுகிறது. அதே போல் பெரிய பெரிய ஷாப்பிங் மாலில் வேலை பார்க்கும் சேல்ஸ் மேன் கள் நின்று கொண்டே தான் இருக்கனும் உட்காரமாட்டார்கள். இதனாலும் அவர்கள் தண்ணீரோ சாப்பாடோ உட்கொள்ள நேரம் கிடைப்பதில்லை. இதனால் கண்டிப்பாக கிட்னி ஸ்டோன் வருகிறது. அப்படியே உட்கார்ந்து இருப்பதாலும் ஈரல் வீக்கமும் ஏற்படுகிறது.



ஹெர்னியா குடல் இரங்கி விடுவது இது லேபர்கள் அதிக வெயிட்டை தூக்குவதால் வருகிறது.அல்சர் வயிறு எரிச்சல் எல்லாமே முறையான சரியான உணவு வகைகள் எடுக்காததால் தான் வருகிறது.



இதற்கெல்லாம் முக்கியம் ஆண்கள் உழைக்கும் காலத்தில் தொடர்ந்து ஜுரம், தலைவலி, வந்தால் உடனே மருத்துவரை அனுகி முதலில் அவரவர் ஹிமோகுளோபின் அளவை முறையாக பரிசோதித்து. அதற்கு தகுந்த சத்து மாத்திரைகள், சத்தான உணவு வகைகள் உட்கொள்வது நல்லது.



உடலில் கிட்னி, லிவர் போன்றவை சரி வர வேலை செய்தால் தான் மற்ற நோய்கள் தாக்காமல் இருக்கும். அதற்கு ஆண்களும் தங்கள் ஹிமோ குளோபின் அளவை சரி பார்த்து கொள்வது நல்லது.



(நல்ல உழைத்து விட்டு கழ்ட பட்டு பிள்ளைகளை படிக்க வைத்து அவர்களுக்கு கல்யாணம் செய்யும் நேரம் கல்யாணத்துக்கு முன் ஹார்ட் அட்டாக்கில் அப்பா இறந்துட்டார் என்று நிறைய இடங்களில் கேள்வி படுவதுண்டு. இது அவர்கள் தங்களை கவனித்து கொள்ளாதது தான் காரணம் என்பது என் கருத்து)



உடல் சோர்வோக இருந்தாலோ உடல் நிலை சரியாக இல்லை என்றாலோ உங்கள் இரத்தத்தில் அளவை (ஹிமோ குளோபின் ) யும் சரி பார்த்து கொள்வது நல்லது.

உடலில் இரத்ததின் அளவு சரியாக சீராக இருந்தால் ஓரளவுக்கு இது போல் நோய் தாக்குதலில் இருந்து விடை பெறலாம்.காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில்டீ காஃபி குடிக்காமல் முடிந்த வரை தண்ணீர் குடிப்பது ஓரளவுக்கு உடல் நிலையை சீராக்கும்.



உணவு வகைகள்



பச்சை கீரை வகைகள்,பச்சை காய்கறிகள்,பழச்சாறுகள், பேரிட்சை,புரோக்கோலி,பீட்ரூட், மாதுளை பழம், அத்தி பழம் ,ஆட்டு ஈரல்,கிட்னி, மட்டன் , மீன் போன்ற உணவு வகைகளை உணவில் அதிகமாக சேர்த்து கொள்வது நல்லது.



பருப்பு சேர்த்து கீரை மற்றும் காய்கறி கூட்டு வகைகள்

அத்திழ ஜுஸ்

மாதுளை ஜூஸ்

பேரிட்சை துவையல்

பீட்ரூட் கூட்டு

ப்ரோக்கோலி சூப்

புரோக்கோலி பாஸ்தா

புரோக்கோலி பொரியல்

எலுமிச்சை ஜூஸ்

சுண்டல் வகைகள்

பழ வகைகளில் ஆப்பில் எல்லோரும் சாப்பிடலாம்.



மாலை நேரம் பசி எடுத்தால் நட்ஸில் குறிப்பா வால்நட் ரொம்ப நல்லது. நட்ஸ் வகைகள் , கருப்பு கிஸ்மிஸ் பழம், பேரிட்சை இது போல் சாப்பிடலாம்

கேழ்வரகு, இன்னும் ரெடிமேடாக கிடைக்கும்.



கோதுமை, கம்பு , கேழ்வரகு போல் இப்ப Flax seed என்னும் ஆளிவிதையில் அதிக சத்து ஒமேகா3 மீன் உணவுக்கு சமமான சத்து உள்ளது. இதை வெஜ்டேரியன்கள் அதிகமாக சாப்ப்பிடலாம்.



ஆளிவிதை ரொட்டி.



கார்ன் பிளேக்சில் அதிக சத்து எல்லாமே அதில் கிடைத்து விடுகிறது, அனைத்து வகையான விட்டமின்களும் அதில் உள்ளது.தினம் பாலுடன் கார்ன் பிளேக்ஸ் கூட ஒரு கப் சாப்பிடலாம், ஓட்ஸ் கஞ்சி போல் காய்ச்சி குடிக்கலாம் ,தினம் அதை குடிக்க விரும்பாதவர்கள் ஓட்ஸ் காய்ச்சி அதில் சிறிது அவல் ஊறவைத்து சேர்த்து இனிப்புக்கு பதிலாக கிஸ்மிஸ் பழம் , சிறிது நட்ஸும் சேர்த்து சாப்பிட்டால் சுவையும் வித்தியாசமாக இருக்கும். சத்தும் அதிகம்.வீட்டில் தயாரிக்கும் ஆரோக்கியமான உணவு போல் வெளியிடங்களில் இருக்காது ,சாப்பிடும் போது காய் கறி, மற்றும் கடல் உணவுகள் மட்டும் அதிகமாக எடுத்து கொள்வது நல்லது.




டிஸ்கி: இந்த பதிவு அதீததில் நவம்பர் ஹெல்த் கார்னரில்.

( இது என் செந்த ஆலோசனை மற்றும் கருத்து. அப்பா, சித்தப்ப்பா மற்றும் குடும்பத்தில் இருவரின் உடல் நிலையை நேரில் கண்டதில் என் கருத்து கணிப்பு)

எங்க டாடிக்கு இடுப்பு எலும்பு ஆப்ரேஷன் 8 மணி நேரமா நடந்தது. ஆனால் ஆப்ரேஷன் சக்ஸஸ் என்று சொன்னார்கள் இரத்ததில் அள்வை கவனிக்கல, கொஞ்சம் நல்ல நினைவு வந்தது சில நேரம் நல்லவும் சில நேரம் குழம்பிய நிலையிலும் பேசினார்கள், அப்படியே வீட்டுக்கும் அனுப்பி ஒரு மாதம் ஆகிவிட்டது. தீடீருன்னு ஆப்ரேஷன் பண்ண காயம் ஆரல பிளட் வந்து கொண்டே இருக்கு சாப்பாடும் ஏற்கல பிஸியோ தரபி வந்தால் நடக்க வைக்கவும் முடியல,உடனே மறுபடி ஹாஸ்பிட்டலில் சேர்த்தால் சத்து இல்லை, பிளட், ஹிமோகுளோபின் அளவு 6 ஆக குறைந்து விட்டது . பொதுவாக 12 லிருந்து 13 இருககனும் அது தான் நார்மல்) அப்பரம் எல்லாம் பார்த்து ஒன்றும் பிளட் ஏற்றியும் ஒன்னும் முடியல .அம்மா எவ்வளவோ போராடினாங்க. .... பிரிவின் துயரால் 

Sunday, November 20, 2011

ராகி பார்லி,கருஞ்சீரக தட்டை - Ragi Barley ,Nijella Seed thattai


மருத்துவ குணமுள்ள சூப்பர் ஸ்நாக்ஸ்.





தேவையானவை


ராகி பவுடர் – அரை டம்ளர்
பார்லி பொடித்த்து – அரை டம்ளர்
உளுந்து வறுத்து பொடித்தது – ஒரு மேசை கரண்டி
அரிசி மாவு – ஒரு மேசை கரண்டி
மிளகு கொர கொரப்பாக திரித்தது – ஒரு தேக்கரண்டி
ஓமம் (AJWAIN)– அரைத்தேக்கரண்டி
இட்லி சோடா மாவு – அரை சிட்டிக்கை
கருஞ்சீரகம் (NAJILA SEED)– அரை தேக்கரண்டி
உப்பு – ருசிக்கு தேவையான அளவு
பட்டர் – ஒன்னறை மேசைகரண்டி
கடலை பருப்பு – ஒரு மேசைகரண்டி





செய்முறை




கடலை பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
ராகி மாவு, அரிசிமாவு, பார்லி உளுந்து பொடித்தது, மிளகு , கருஞ்சீரகம், ஓமம்,பட்டர் , உப்பு , இட்லி சோடா அனைத்தையும் சிறிது நீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
பிசைந்த மாவை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் தட்டைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.
சுவையான சூப்பரான டயட் தட்டை ரெடி




20 தட்டைகள் வரும்.