Sunday, March 7, 2010

இறால் சேப்பங்கிழங்கு வறுவல்



தேவையான பொருட்கள்



இறால் = 12
சேப்பங்கிழங்கு = 2
காஷ்மிரி மிளகாய் தூள் = அரை தேக்கரண்டி
உப்பு ‍= அரைதேக்கரண்டி (தேவைக்கு)
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு தேக்கரண்டி
க‌ருவேப்பிலை = சிறிது
எண்ணை = முன்று தேக்க‌ர‌ண்டி










செய்முறை


இறாலை தோலெடுத்து முதுகிலும் வயிற்றிலும் உள்ள அழுக்கை எடுத்து வினிகர் ஊற்றி கழுவி எடுக்கவும்
சுத்தம் செய்த இறாலில் காஷ்மீரி மிளகாய்தூள்,உப்பு, இஞ்சி பூண்டு,சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
சேப்ப‌ங்கிழங்கை தோலெடுத்து பொடியாக அரிந்து இறாலுடன் சேர்த்து பிசறி வைக்கவும்.
கனமான இரும்பு வானலியில் இரண்டு தேக்க்கரண்டி எண்ணை விட்டு சிறிய பட்டை, கருவேப்பிலை போட்டு தாளித்து இறால் சேப்பங்கிழங்கை சேர்த்து நன்கு வறுத்து ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.
க‌டைசியாக‌ ஒரு தேக்க‌ர‌ண்டி எண்ணை விட்டு மேலும் வ‌றுத்து இர‌க்க‌வும்.

குறிப்பு

காஷ்மீரி சில்லி என்பது நல்ல சிகப்பு நிறத்தில் இருக்கும்.



காஷ்மீரி சில்லி என்பது நல்ல சிகப்பு மிளகாய் தூள் ஆனால் காரம் இருக்காது. இல்லை என்றால் சாதா மிளகாய் தூள்+கொஞ்சம் ரெட் கலர் சேர்த்து கொள்ளலாம்.


இறாலை பலவகையாக மசாலாக்கள் போட்டு வறுக்கலாம் அதில் இது ஒரு வகை.

Saturday, March 6, 2010

தியான பீட விளையாட்டு பிள்ளை



//எல்லோரும் நித்யானந்தாவை அவரவர் பங்குக்கு வறுத்து எடுத்தாச்சு, இனி என் பங்குக்கு சொல்ல ஒன்றுமில்லை அதான் எனக்கு மெயிலில் வ்ந்தது இதையும் படிங்களே//
நித்யானந்தா சற்று முன் தலைப்பு செய்தி "மெயிலில் வந்த தகவல்"



சன் பிக்சர்சின் தீராத விளையாட்டு பிள்ளை எதிர்பார்த்த அளவு வெற்றி நடை போடாத நிலையில் செவ்வாய் மாலை சன் நியூஸ் ரிலீஸ் செய்திருக்கும் "தியான பீட விளையாட்டு பிள்ளை" வெளியிட்ட சில மணித்துளிகளிலேயே உலகெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது.


புன்னகை தளபதி 'நித்தி' இதுவரை பார்த்திராத புதிய கோலத்தில் நடித்திருப்பதே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் படத்தில் நடித்திருக்கும் கதாநாயகி யார் என சஸ்பென்சாக வைத்திருந்ததும் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .


வழக்கமாக ஒரு நாளுக்கு நான்கு ஷோ மட்டுமே படங்கள் திரையிடப்படும் நிலையில் இந்த திரைக்காவியம் அரை மணிக்கொரு முறை சன் நியூஸ் சேனலில் ஒளிபரப்பட்டது அனைத்து ரசிகர்களிடேயும் வரவேற்பு பெற்றது.


குப்பென்று பத்திகொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட அஜித் ரஜினி பிரச்சனை பொசுக்கென்று முடிந்து விட்டது. அடுத்த படம் வேறு வெள்ளி கிழமைதான் வரும்.


அதுவரை பதிவு போட என்ன செய்வது என பதறி கொண்டிருந்த பதிவுலகிற்கு " நித்தியின் சித்து விளையாட்டு " ஸ்டான்ட் காட்சிகள் பெரும் டாபிக் ஆக அமைந்ததால் எல்லோரும் சேனலுக்கு நன்றி தெரிவித்து யூடூப் லிங்க் கொடுத்த வண்ணம் உள்ளனர்.


தங்களது ஆன்மீக குரு இதுவரை எவ்வளவோ தியான முறைகளை சொல்லி தந்துள்ளார். ஆனால் இத்தைகைய புதிய தியான ஆசனங்களை எங்களுக்கு இவ்வளவு நாட்களாய் சொல்லி தராமல் ஏமாற்றி வந்தது ஏன் என படத்தை பார்த்த சீடர்கள் அதிர்ச்சி அடைந்து வருத்தம் தெரிவித்தனர்.


தங்களது எல்லா படங்களுக்கும் இடைவிடாத விளம்பரம் போடுவது போல இந்த படத்திற்கும் சன் டி.வி.யில் "அடுத்த காட்சி 9 மணிக்கு... 9.30 மணிக்கு... 10 மணிக்கு " என இடைவிடாத ப்ளாஷ் நியூஸ் ஓடிய வண்ணம் இருந்தது குறிப்பிடதக்கது.


அதே போல் ஊர் ஊராய் சென்று படத்தின் ரிசல்ட்டை பாலோ அப் செய்யும் தங்களது பாரம்பரிய முறைப்படி, இந்த படத்திற்கும், திருவண்ணமலையில் ஆசிரமம் முற்றுகை, புதுவையில் படம் எரிப்பு, கடலூரில் பறந்தது செருப்பு என விடாது பாலோ செய்து சூடாக ரிசல்ட் சொன்ன சன் நியூஸ் சேனலின் கடமை உணர்வை தமிழ் குடிமகன்கள் மெய் சிலிர்த்து பாராட்டி புளகாங்கிதம் அடைந்தனர்.


படத்தின் பின்னணி இசை நன்றாக வந்திருக்கிறது. குறைவான நேரமே கொடுக்கப்பட்டாலும் டெர்ரராக இசை அமைத்த இசை அமைப்பாளருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.எங்கே படத்தின் காட்சிகள் மக்களுக்கு புரியாமல் போய் விடுமோ என அஞ்சி க்ரியேடிவ் டீம் அமைத்துள்ள வர்ணனை வசனங்கள் அடுத்த வருடத்திற்கான விருது பெரும் சாத்திய கூறுகள் உள்ளது.

படத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி காட்சிகள் இருந்ததால் அதை தாங்களே சென்சார் போர்டாக செயல்பட்டு அனைவரும் பார்க்கும் விதத்தில் U செர்டிபிகேட்டுடன் வெளியிட உதவிய எடிட்டரின் பணி


பாராட்டுக்குரியது"தியான பீட விளையாட்டு பிள்ளை" - சன் பிக்சர்சின் முதல் சூப்பர் டூப்பர் ஹிட்


வெந்தய கீரை பருப்பு - methi dal

வெந்தய கீரை = ஒரு கட்டு
துவரம் பருப்பு = கால் கப்
பாசிப்பயறு = ஒரு மேசை கரண்டி
எண்ணை = ஒரு தேக்கரண்டி
நெய் = அரை தேக்கரண்டி
வெங்காயம் = ஒன்று
பூண்டு = முன்று பல்
தக்காளி = அரை பழம்
மிளகாய் தூள் = கால் தேக்கரண்டி
தனியாத்தூள் = கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு
தேங்காய் துருவல் = ஒரு மேசை கரண்டி






வெந்தய கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.பருப்பு வகைகளை ஊறவைக்கவும்.
குக்கரில் எண்ணை விட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து தாளித்து தக்காளியை அரைத்து ஊற்றி தூள் வகைகள் அனைத்தையும் போட்டு வதக்கி, கீரையை சேர்த்து வதக்கவும்.
கடைசியாக பருப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு, தேங்காய் துருவல், நெய் சேர்த்து குக்கரை மூடி முன்று விசில் விட்டு இரக்கவும்.
ரொம்ப அருமையான சுலபமான வெந்தயக்கீரை பருப்பு.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.


குறிப்பு
டயட்டுக்கு ஏற்ற உணவு, டயட் செய்பவர்கள் (நெய், தேங்காய் சேர்க்க தேவையில்லை). சப்பாத்தியுடன் சாப்பிட நல்ல இருக்கும்.
அபார்ஷன் ஆனவர்கள் வெந்தய கீரை உணவில் சேர்த்து கொண்டால் கர்பப்பையில் உள்ள அழுக்குகள் வெளியாகும்.
கர்ப்பப்பையில் உள்ள அழுக்குக்களை வெளியேற்ற பிள்ளை பெற்றவர்களுக்கும், கருகலைப்பானவர்களுக்கு இதை செய்து கொடுத்தால் நல்லது
உடல் சூடு, வயிற்று புண் வாய் புண் அல்சருக்கும் மிகவும் நல்லது இந்த வெந்தயக்கீரை.
இதில் மேத்தி புலாவ், மேத்தி பரோட்டா, மேத்தி மீன் கூட்டு, மேத்தி சிக்கன் என வித விதமாக செய்யலாம்.
இது குக்கரில் செய்வதால் நல்ல வெந்து இருக்கும் குழந்தைகளுக்கு அப்படியே சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.


மற்ற கீரைகளையும் இதே முறையில் செய்யலாம்.
வெந்தயக்கீரை கிடைக்கவில்லை என்றால் வீட்டிலேயே ஈசியாக சின்ன தொட்டியில் வைத்து பிரெஷாக கூட சமைக்கலாம்.
ஒரு கைப்பிடி வெந்தயத்தை மண்ணில் புதைத்து தண்ணீர் ஊற்றினால் முன்றே நாளில் வெந்தயக்கீரை ரெடி.



Thursday, March 4, 2010

அனைவருக்கும் நன்றி

மழைவெள்ளத்தில் ஷார்ஜா யுத்ஃபுல் விகடன் குட்பிளாக் பகுதியில் வந்துள்ளது ரொம்ப சந்தோஷம். யுத்ஃபுல் விகடனுக்கு நன்றி



இதை யார் அனுப்பினார்கள் என்று தெரியவில்லை அந்த நல்ல உள்ளத்துக்கும் மிக்க நன்றி.





நன்றி யுத்ஃபுல் விகடன்.
மழைவெள்ளத்தில் ஷார்ஜா



இது அருனா மாணிக்கம் அவர்கள் எனக்கு கொடுத்த அவார்டு. மிக்க நன்றி + சந்தோஷம் அருனா



















இதுவரை தொடர்ந்து கருத்து தெரிவித்து மகிழ்வித்து, ஓட்டு போட்டு ஆதவளித்து உற்சாகப்படுத்தும் அனைத்து நல்ல உள்ளங்களான பதிவுல தோழ தோழியர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்வ்கிறேன்.
இதுவரை உள்ள பாலோவர்ஸ் அனைவருக்கும் மிக்க நன்றி





டிஸ்கி: "பெண்களே சந்தோஷம் உங்கள் கையில்" பகுதியில் மங்குனி அமைச்சர்( அவரை நான் மங்குனி அமைச்சர் தான் என்று கண்டு பிடித்ததற்கு) துப்பறியும் நிபுனி பட்டத்தையும், ஆயிரம் பொற்காசுகளையும் தருவதாகவும் சொல்லி இருக்கிறார்.
துப்பறியும் நிபுனி பட்டத்தை அவர் வழங்குவதாகும், ஆயிரம் பொற்காசுகளை ஜெய்லானியிடம் கொடுத்து இருப்பதாகவும் அதை என்னை பெற்றுகொள்ளவும் சொல்லி இருக்கிறார்

Wednesday, March 3, 2010

பெண்க‌ளே ச‌ந்தோஷ‌ம் உங்க‌ள் கையில்






இந்த‌ ப‌திவு ஸாதிகா அக்காவின் என்றும் இள‌மையை தொட‌ர்ந்து எழுதுகிறேன்.



இப்ப இருக்கிற காலகட்டத்தில் சின்ன வயதிலேயே மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் , டென்ஷன் என்று எல்லோருக்கும் வந்து விடுகிறது.


பெண்கள் மொத்த குடும்பத்தையும் ஓட்டி செல்வதால் தனக்கென எதையுமே செய்து கொள்வதில்லை ஆசைப்பட்ட பொருட்கள் கூட வாங்கிக்கொள்வதில்லை, விரும்பிய உணவு கூட செய்து சாப்பிடுவதில்லை.குழந்தைகளுக்கு, கணவருக்கு பிடித்ததை மட்டும் பார்த்து பார்த்து செய்து கொடுப்பாள். ஆனால் த‌ன்னை க‌வ‌னித்து கொள்வ‌தில்லை.
இப்படி பல வேலைகளை இழுத்து போட்டு கொண்டு மன அழுத்தம் மிக அதிகமாகிறது.



சின்ன சின்ன விஷியத்துக்கெல்லாம் டென்ஷன். நாளை என்ன சமையல் முதல் நாளே யோசிங்க, மறுநாள் செய்யும் போது உட்கார்ந்து யோசிச்சீங்கன்ன நல்ல இருக்கிற நாலு முடியும் கொட்ட ஆரம்பித்து விடும்.


இப்படி மன அழுத்தம் அதிகாமாவதால் ஒற்றை தலைவலி, முடி கொட்டுதல், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. காலையில் இருந்து மாய்ந்து மாய்ந்து வேலை பார்த்து சாப்பாடு கூட சாப்பிட மறந்துவிடுகிறார்கள்.
பார்க்க போனால் ஆண்களை விட பெண்கள் தான் சத்தான ஆகாரம் சாப்பிட்டு உடல் நலத்தை பேணிக்கொள்ளனும்.
ஏன்னென்றால் என்றும் எல்லோருக்காக‌வும் நாளெல்லாம் உழைக்க‌ வேண்டி இருக்கு. குழந்தை பெற்றெடுக்கவும் தெம்பு வேண்டும், பூப்பெய்திய காலத்திலேயே நல்ல சத்தான ஆகாரத்தை எடுத்து கொண்டால் குழந்தை பெறும் நேரத்தில் ஓரளவிற்கு தெம்பு கிடைக்கும். இல்லை என்றால் கர்பகாலத்திலேயே ஹிமோகுளோபின் குறைபாடு, சரியா சாப்பிடாமல் லோ பீபி போன்றவை ஏற்படுகிறது
அந்த‌ கால‌த்தில் ஆண் குழ‌ந்தை என்றால் கூட‌ இர‌ண்டு முட்டைய‌ சேர்ர்த்து வைத்து ஊட்டுவ‌து, அதே பெண் என்றால் அடுப‌டியில் கிட‌ப்ப‌வ‌ள் தானே என்று மீதி மிஞ்சிய‌தை போடுவ‌து.


எதற்கும் சலிப்பு வேண்டாம், கோபம், டென்ஷனை கிட்டே நெருங்க விடாதீர்கள், அது உங்கள் முதுமையை படம் போட்டு காட்டும். அதிகமாக கோபப்படுவதால் தான் முகச்சுருக்கம் கூட வருகிறது.



எப்ப பார்த்தாலும் அழுக்கு நைட்டி, எண்ணை வடியும் முகத்துடன் , தலைய சீவாம, தலை சொரஞ்சிக்கிட்டு நின்னா பார்க்கும் கணவருக்கு பேய பார்க்கிற மாதிரி இருக்கும்.

நைட்டி அதான் வசதியா இருக்குன்னு அதோடே காலத்தை கழிக்காதீர்கள், நைட்டியிலும் பல விதம் பல டிசைன்,பளிச்சிடும் வண்ணங்கள் இருக்கு. குறைந்த விலையில் இருக்கேன்னு வாங்கி 10 வாங்கி போடீங்கன்னா அது இரண்டு முறை துவைத்ததும் ஈன்ன்னு பல்லை இளித்து கொண்டு நிற்கும்.அதற்கு நல்லதா நாலு வாங்கி போட்டுக்கொள்ளலாம்.










மேக்கப் போட்டாதான் அழகு என்று கிடையாது, அழகாக தலைய வாரி, முகம் கழுவி நீட்டா டிரெஸ் பண்ணாலே இயற்கை அழகு தான்.


உங்களுக்கென்று வாரத்தில் அல்லது பத்து நாளைக்கு ஒரு நாள் எடுத்து கொள்ளுங்கள்.
நல்ல பிடிச்ச டிரெஸ் போட்டு கொள்ளுங்கள், டிரெஸ்ஸுக்கு மேட்சா வளையல், மணி செட்டுகள் வாங்கி வைத்து கொள்ளுங்கள், முத்து மாலை இது போல் அணியும் போது மனது ரொம்பவே லேசாக இருக்கும்.பிடித்த சமையல் செய்து சாப்பிடுங்கள், யாரைபற்றியும் கவலை வேண்டாம்,உங்களுக்கு பிடித்தவர்களோடு (வேற யார் கூடவும் இல்லை)பிடித்த‌ இடங்களுக்கு கணவர் (அ) குழந்தைகளுடன் செல்லுங்கள். இல்லை பிடித்த தோழி வீட்டுக்கு கூட சென்று வரலாம். தேவையானதை வாங்க‌ ஷாப்பிங் சென்று வரலாம்.
அடுத்த நாளிலிருந்து எபப்வும் போல் வேலை பாருங்கள். அடுத்த பத்தாவது நாள் வரும் வரை.இப்படி செய்தால் கண்டிப்பாக நல்லதெளிவும் புத்துணர்வும் வரும்.





சும்மா நாள் முழுவதும் போடுகிற டீவி சீரியல பார்த்து கண்ணீர் வடிக்காதீங்க,
அத உட்கார்ந்து பார்த்து பார்த்தே வீணா பெருத்து போவீர்கள். அதற்கு பிறகு ஜிம்முக்கு போய் பிரயோஜனம் இல்லை/

இப்ப எவ்வளவோ நகைச்சுவை போடுகிறார்கள். அதற்கென தனி சேனலே வந்து விட்டது (ஹிந்தி, ஆங்கிலம், தமிழ்) என்று விருப்பமான மொழியில் அவரவர் நகைச்சுவைகளை பார்த்து மனதை ரிலாகஸாக வைத்து கொள்ளலாம்.

சீரியல் செலக்டடாக ஏதாவது ஒன்று பார்க்கலாம்.

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்



குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும் வரை நல்ல இன்ரெஸ்ட்டாக காலம் கழியும் அதே பிள்ளைகள் பத்தாம் வகுப்பை நெருங்கும் போது அம்மாமார்களுக்கு அவர்களின் எதிர் காலத்தைப்பற்றி டென்ஷன் ஆரம்பிக்கும்.பையனா இருந்தா அவன் நல்ல படித்து , நல்ல உத்தியோகத்தில் உட்காரனுமே என்று, பெண்ணாக இருந்தால் நல்ல இடத்தில் கட்டி கொடுக்கனுமே என்றும் இப்படி பல எண்ணங்களை போட்டு மண்டையில் குழப்புவதால் தான் அவர்களுக்கு கோபம் , டென்ஷன் அதிகமாகிறது.



சில பேர் எனக்கு தான் இப்படி எல்லாம் நடக்குனமா என்று தன்னை தானே நொந்து கொள்வார்கள், இப்படி சின்ன பிரச்சனை மேலும் மேலும் நினைத்து கொண்டு இருந்தால் தூக்கம் போய் மன அழுத்தம் தான் ஏற்படும்.
டென்ஷன் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் யாருமே கிடையாது. எல்லோருக்கும் ஓவ்வொரு வகையில் பிரச்சனைகள் இருக்கதான் செய்கிறது.



இந்த டென்ஷனை குறைக்க காலையில் பத்து நிமிடம் மூச்சு பயிற்சி செய்யலாம்.
ஏதாவது உங்களுக்கு பிடித்த கை தொழிலை கற்றுகொள்ளலாம்.
மெகந்தி டிசைன் போட கற்று கொள்ளலாம்.








உங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்று கொடுக்கலாம்.

உங்கள் வீட்டு சமையலறையில் நீங்கள் தான் ராணி இதை விட சந்தோஷம் வேர என்ன இருக்கு.


மனதை போட்டு குழப்பாமல் குழந்தைகளை நல் வழி படுத்தி,பிராத்தனைகளில் ஈடுபடுத்தலாம், நாமும் மனதை தெளிபடுத்தி கொள்ளலாம்,

இஸ்லாமியர்கள் மனதிற்குள் திக்ரு செய்யலாம். இது ம‌ன‌தை தெளிவ‌டைய‌ செய்யும்.மற்ற மதத்தினர்களும் அவரவர் ஸ்லோகஙகளை ஜபிக்கலாம்.






பெண்களே சந்தோஷம் உங்கள் கையில் தான் இருக்கிறது. கொஞ்சம் சிந்தித்து செயல் பட்டால் நல்ல மகிழ்சியுடன் இருக்கலாம்


டென்ஷனா? யார்மேலாவது கோபமா?இது முன்பு போட்ட பதிவு இதையும் சென்று பார்க்கவும்




Tuesday, March 2, 2010

மழை வெள்ளத்தில் ஷார்ஜா

ஒரு நாள் மழை பெய்தால் நாறிடும் ஒரு நாள் மழை பெய்தால் நாறிடும் துபாய், எங்க‌ பார்த்தாலும் நீர்தேக்க‌ம். காரெல்லாம் மித‌க்கிற‌து.
பாலைவ‌ன‌ம் என்ப‌தால் ம‌ழையே வ‌ராது என்று யாரும் டிரெயினேஜை ப‌ற்றி யோசிக்க‌ல‌ போல/ மழை பெய்தாலே ஒரு பைப்ப கொண்டு வந்து தான் இந்த தேங்கியுள்ள தண்ணீரை எடுப்பார்கள்






இந்த‌ ப‌ட‌ங்க‌ள் எல்லாம் ஷார்ர்ஜா(ஜார்ஜா) இந்த‌ அள‌விற்கு துபாய் இல்லை.
ஷார்ஜாவில் வீடு ரெண்ட் குறைவு என்று துபாயில் வேலை பார்ப்ப‌வ‌ர்க‌ள் அங்கு த‌ங்கி இருக்கிறார்க‌ள். ஆனால் இந்த‌ இர‌ண்டு நாள் ம‌ழையில் எல்லாம் வெறுத்தே போய் விட்டார்க‌ள்.ஆபிஸ் முடிந்து வீடு போய் சேர‌ குறைந்த‌து 2 லிருந்து 3 ம‌ணி நேர‌ம் ஆகுது என்றார்க‌ள்.







இந்த‌ ப‌ட‌ங்க‌ள் எல்லாம் ஷார்ர்ஜா




(வடிவேலு: ஐய்யோ ஐய்யோ அடி ஆத்தி ஜார்ஜாவுலய இம்புட்டு மல பெய்து) அங்கேயும் ஆரம்பிச்சிட்டீங்களா நம்மூரு பயலுவ‌ அவ்வ்வ்வ்வ்வ்






அப்ப இனிமே சிலுக்கு ஜிப்பா போட முடியாதா ஜார்ஜாவுல‌?











ரோடெல்லாம் குளம் காரு படகு போல தான் மிதந்து கொண்டு வருது திடீருன்னு வண்டி வழியில நின்னுச்சி அவ்வளவு தான் உள்ளே கிடந்து பே முழி முழிக்க வேண்டியது தான். கார திறந்தாலும் தண்ணீ உள்ளே வந்துடும்


வெயில் அடிச்சாலும் தாஙக் முடியாது அனல் காற்று பிரியாணி ஆக்கி வெளியில் கொண்டு வந்து வைத்தால் தானே தம் ஆகிடும்.
மழை அடித்தாலும் அவ்வளவு தான் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு தொடருமா இது இரண்டு நாளிலேயே எப்பா தாங்க முடியல.






//சிங்கப்பூரில் தினம் திடீர் திடீர் என மழை வரும் வந்த கொஞ்ச நேரத்தில் அந்த மழை பெய்த சுவடே தெரியாமல் அவ்வளவு கிளீன் கழுவி துடைத்து விட்டார் போல, அங்கு டிரெயினேஜ் சிஸ்டம் பக்காவா இருக்கு.சூப்பர் இடம் சிங்கப்பூர்//



சில சமயம் துபாயில் பேய் காத்து, ஐஸ் கட்டி மழையும் கூட‌ பெய்யும்.
இப்படி தான் துபாய் வந்த புதிதில் ஒரு ஊரு வெளிய ஒரு ஒரு வீடு என்பது போல் ஒரு இடத்தில் வீடு, காலை ஆபிஸ் போனால் இரவு தான் வருவர் ஆத்துகாரர், வந்து ஒரு மாதத்தில் மண்ணு காத்து உஸ்ஸ்ஸ்ஸ் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு அடிக்குது மண்ணெல்லாம் ஜன்னல் வழியா வருது ஒரே பயம் ( கண்ணாடி கதவு தட தடன்னு ஆடுது) நெஜமாவே பேய் தான் தட்டுதா எல்லா கதவையும் மூடிட்டு டிவிய ஜோரா வைத்து கொண்டு ஒரு நாள் முழுவது பயந்து கொண்டு இருந்தேன். கதவ திறந்ததும் ஹால் அங்கேயே உட்கார்ந்து கொண்டு இருந்தேன்.

இரவு 9.30 மணிக்கு அவர் வீட்டுக்கு வந்தததும் தான் உயிரே வந்தது.
ஆனால் இப்ப அடிக்கிற பேய் காத்தும், மண்ணு காத்தும் என்ன பார்த்து தான் பயந்து ஓடும்...

டிஸ்கி: ஏன் மழை பெய்கிறது, நல்லவங்க நாங்கெல்லாம் (ஜெய்லாணி, கோபிசென்ஷி, நாஞ்சிலார், ஹுஸைனனம்மா, நாஸியா ,மலர் எல்லாம் இருப்பதாலா?
இல்லை நீரோடை மலிக்கா கவிதை எழுதி எழுதி நீரோடையா ஒட விட்டுட்டாஙகளா?
இந்த பதிவு யுத் ஃபுல் விகடன் குட் பிளாக்கில் வந்துள்ளது.

Monday, March 1, 2010

கப்ப கிழங்கு இனிப்பு உருண்டை - tapioca sweet balls



ஒரு வெள்ளி கிழமை இந்த கிழங்கை வாங்கலாம் என்று தினம் வாங்கும் குராசரியில் போன் செய்து கேட்டேன், எப்படின்னு பாருங்க.

நான்: ஹலோ மரவள்ளி கிழங்கு இருக்கா?
குராசரி மேன்: எந்த விளிக்கிது மர வள்ளியா? ஒன்றும் அறியலயேப்பா
நான்: என்ன சொன்ன இவனுக்கு புரியும், (யோசனை) ஆள்வள்ளிகிழங்கு இருக்கா?
குராசரி மேன்: இல்லல்லோ, எந்தப்பா விளிக்கிது நீங்களு ஒன்னும் மனசிலாவுல‌
நான் :ஐய்யோ என்னத்த சொல்லி கேட்பது, மரவள்ளிய நாங்க ஆள் வள்ளி இன்று சாப்பிட்டே ஆகனும்.
நான்: ஆ ஞாபகம் வந்துடுச்சி கப்ப கிழங்கு ,கார்த்திக் ராதாவின் முதல் படமான அலைகள் ஓய்வதில்லையில் கார்த்திக் அந்த படத்தில் பாடியது நினைவுக்கு வந்தது ,வாடி ஏ கப்ப கிழங்கு.

நான்: கப்ப கிழங்கு உண்டா?
குராசரி மேன்: ஓ அதே கப்பயா ஓஒ இப்ப மனசிலாவுது/
குராசரி மேன்: உண்டல்லோ
ஓகே அத கொடுங்க.ஒரு வழியா வாங்கியாச்சி

கேரளத்து மக்களின் தினசரி உணவில் செய்யப்படும், கப்ப கிழங்கு, இதில் நாங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவது இனிப்பு உருண்டைதான். சுவை மிகவும் நன்றாக இருக்கும்.


கப்ப கிழங்கு இனிப்பு உருண்டை



தேவையான பொருட்கள்

கப்ப கிழங்கு = ஒரு முழம் நீளம் ஒன்று

தேங்காய் துருவல் = முன்று பத்தை

சர்க்கரை = முன்று மேசைக்கர‌ண்டி

நெய் = ஒரு தேக்க‌ர‌ண்டி

ஏலக்காய் தூள் = கால் தேக்க‌ர‌ண்டி (தேவைப்ப‌ட்டால்)

உப்பு = ஒரு சிட்டிக்கை

செய்முறை


கிழ‌ங்கை ந‌ல்ல‌ ம‌ண் போக‌ க‌ழுவி தோலை செதுக்கி கேர‌ட் துருவியில் பெரிய‌ துளையில் துருவி கொள்ள‌வும்.


துருவிய‌தை இட்லி பானையில் ஈர‌ துணியை விரித்து அவித்து எடுக்க‌வும்.
அவித்த‌ கிழ‌ங்கில் உப்பு, ச‌ர்க்க‌ரை,தேங்காய் துருவ‌ல் அனைத்தையும் க‌ல‌ந்து உருண்டைக‌ளாக‌ பிடித்து சாப்பிட‌வும்.


ரொம்ப சூப்பரா இருக்கும்


குறிப்பு


இந்த மரவள்ளி கிழங்கில் பிட்சா , கே.எஃப்.சி ஷாப்பில் சாலட் மையானஸுடன் வைத்து இருப்பார்கள்.
குழ‌ந்தைக‌ளுக்கு கொடுத்தால் ந‌ல்ல‌ ச‌த்து. அப்ப‌டியே அவித்து சாப்பிட்டால் ரொம்ப‌ ந‌ல்ல‌து.
இதில் குழ‌ம்பு, பொரிய‌ல்,கூட்டு, அடை என‌ பல‌ உண‌வுக‌ள் த‌யாரிக்க‌லாம்.
இது அதிகமாக சாப்பிட்டால் கேஸ் பிராப்ளம் வரும், மலையாளிகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்