இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும்.
சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில்.
https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
போன பதிவில் சிம்பிள் ப்லைன் காலிப்ளவர் சாதம் தயாரிப்பது எப்படின்னு யுடியுப் போஸ்ட் போட்டு இருந்தேன்.
இந்த வீட்டியோவில் அதற்கு சில டிப்ஸ் இன்னும் என்ன என்ன வகை எல்லாம் காலிப்ளரில் செய்யலாம் என்ற டிப்ஸ்ம், சில பிலாக் லின்க் காலிப்ளவர் வைத்து தயாரித்த புதினா சாதம், தேங்காய் சாதம் , தக்காளி சாதம், புதினா சாதம். பொங்கல் மற்றும் ஃப்ரைட் ரைஸ் லின்குகள் இங்கு கொடுத்துள்ளேன்.
சிம்பிள் கார சட்னி
பேலியோ டயட் ரெசிபி
( கிரில் வகைகள் மற்றும் காலிப்ளவர் த்யிர் சாதம், லெமன் சாதத்துக்கு ஏற்ற பக்க உணவு.
தேவையான பொருட்கள்
(சிவப்பு ) காய்ந்த மிளகாய் (குண்டு) – 4
வெங்காயம் – 50 கிராம்
கல் உப்பு – தேவைக்கு
நல்லெண்ணை அ சூடான நெய் – தேவைக்கு
செய்முறை
மிளகாய் , உப்பு, வெங்காயம் சேர்த்து நல்ல மையாக மிக்ஸியில் அரைக்கவும்.
அதன் மேல் நல்லெண்ணை அல்லது சூடான நெய் ஊற்றி கிரில் மற்றும் பேலியோ டயட்டுக்கு செய்யும் தயிர்சாதம் லெமன் சாதத்துக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும்.
இதில் தாளிப்பு தேவைப்பட்டால் சிறிது எண்ணையில் கடுகு , கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டி 3 நிமிடம் கொதிக்க விட்டு இரக்கவும்.
please click above link and like,comment,subscribe and share with your friends
காலிப்ளவர் சாதம்/Cauliflower rice / low crab diet rice for diet or paleo diet
காலி ப்ளவரை பூந்துருவலாக
துருவி , அரிசி உலை கொதிக்க போடுவது போல கொதிக்க விட்டு அதில் துருவிய காலிப்ளவரை சேர்த்து
உப்பு சேர்த்து வேகவைத்து வடிக்கவும்.
அதில் ப்லேவருக்கு
சிறிதுகொத்து மல்லி தழை சேர்த்து கொள்ளலாம்.
இப்போது டயட் செய்பவர்கள்
லோ கார்ப் உணவாக இதை அரிசி சோறுக்குபதில் செய்து கொண்டு அதற்கு தொட்டு கொள்ள சைட் டிஷ்
ஆக கிரேவி, சால்னா , கூட்டு அல்லது சாம்பார், பொரிச்ச கறி , பன்னீர் மிளகு கூட்டு
, ஈரல் கூட்டு, சுவரொட்டி வறுவல் இது போல பக்க உணவு தயாரித்து மதிய உணவிற்கு எடுத்து
கொள்ளலாம்.
இனி இந்த பிளைன்
காலி ப்ளவர் சாதம் வைத்து என்ன என்ன செய்யலாம் என்று அடுத்த பதிவில் போடுகிறேன்.
ஆண்கள் அணியும் லுங்கி ஓரம் தைப்பது எப்படின்னு சமையல் அட்டகாசங்கள் யுடியுப் சேனலில் விளக்கமாக தைத்து காண்பித்துள்ளேன்.
கண்டிப்பாக எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும் . சப்ஸ்கிரைப் செய்து வைத்து கொள்ளுங்கள்.
இதை கற்றுகொண்டால் பெண்கள் வீட்டில் இருந்த படி ப்ளவுஸ் , சுடிதார் என்றில்லை சின்னாத ஒரே தையல் போடும் கைலி கூட ஓரம் தைக்கலாம்/
லுங்கி ,கைலி /வேஸ்டி தைத்து கொடுத்தே தங்கள் கை செலவுக்கு பொருள் ஈட்டி கொள்ளலாம்.
குப்பைமேனி அல்லது அரிமஞ்சரி, இதன் மற்றொரு பெயர்கள் பூனைவணங்கி, குப்பி, மார்ஜலமோகினி
என அழைக்கப்படுவது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்.
குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும்.
சென்னை சென்றிருந்த போது குப்பை மேனி இலை கையில் கிடைத்ததும் உடனே அதன் ஆங்கில பெயர் என்ன எதற்கெல்லாம் பயன் படுகிறது என்பதை ஆராய ஆரம்பித்து விடுவேன். அதில் கண்டெடுத்தது தான் இந்த குப்பை மேனி இலை.சரி அந்த இலை கிடைக்காதவர்கள் , நாட்டும் மருந்து கடைகளில் இதை பொடியாக தாயாரித்து விற்கிறார்கள். குப்பை மேனி இலையின் பயன்கள்.
சொறி சிரங்கு, உடல் அரிப்புக்கு மேற்பூச்சாக பயன் படுகிறது.
இந்த இலையின் சாறு பாம்புகடிக்கு நஞ்சினை முறிக்கவும் பயன்படுகிறது.
நெஞ்சு சளியை இளக்கி வெளியேற்றவும் பயன்படுகிறது
தோல் வியாதிக்கு மருத்துவ குறிப்புகள் இந்த குப்பை மேனி இலை எல்லா இடத்திலும் படர்ந்து வளர்ந்து இருக்கும். இதன் இலையுடன் சேர்ந்து மணி முத்துக்கள் போல தொங்கும்.
தோல் அரிப்பு மற்றும் தோல் உரிதலுக்கு இதை அரைத்து தேங்காய் என்னையுடன் கலந்து மேல் பூச்சாக தடவலாம்.
குளியல் பொடி தாயாரிக்கும்போது அதோடு இந்த குப்பை மேனி இலை பொடி மற்றும் வேப்பிலை பொடியை சேர்த்து கொள்ளலாம். கலந்து கொண்டு இதை தினம் குளிக்கும் முன் தண்ணீரில் கட்டியாக கலக்கி தேய்த்து குளிக்கலாம்.
குளியல் பொடி அடுத்த குறிப்பில் இனைக்கிறேன்.
கண்டிப்பாக இந்த குறிப்பு அனைவருக்கும் பயன் அளிக்கும் , வீடியோவை கிளிக் செய்து பார்த்து அனைவருக்கும் ஷேர் பண்ணுங்கள்.
மட்டன் ரான் என்பது சிக்கன் ஹோல் லெக் போல மட்டன் லெக் இத மொத்தமாக அப்படியே கிரில் செய்து குடும்பத்தோடு ஒரு தட்டில் சாப்பிடுவது .
ஹஜ் பெருநாள் நேரம் குர்பாணி மட்டன் கொடுக்கும் போது மற்றவர்களுக்கு கொடுத்தது போக மீதியை இப்படி நாம் செய்து கொள்ளலாம்.
இதில் இரண்டு வகையான செய்முறை கொடுத்துள்ளேன்/
தேவையான பொருட்கள்
மட்டன் லெக் – முக்கால் கிலோ
தயிர் – 2 மேசைகரண்டி
சிவப்பு மிளகாய் தூள் ஒரு மேசைகரண்டி
ஆச்சி கபாப் மசலா – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டு மேசைகரண்டி
உப்பு – தேவைக்கு
எலுமிச்சை சாறு – ஒரு மேசைகரண்டி
பப்பாளி காய் பேஸ்ட் – ஒரு மேசைகரண்டி
ஆலிவ் ஆயில் + பட்டர் – 5 தேக்கரண்டி
Mutton Raan, Leg Roast -1 Samaiyal attakaasam by Jaleelakamal
மட்டன் லெக் ஐ அங்காங்கே கீரல் போட்டு உப்பு தடவி சிறுது நேரம் ஊறவைக்கவும். பிறகு தயிரில் எல்லா மசாலாக்களையும் சேர்த்து கலக்கி ஆலிவ் ஆயில் + பட்டரை 4 மேசைகரண்டி ஊற்றி மசாலாவுடன் சேர்த்து மேரினேட் செய்யவும். ( இரவு முழுவதும் ஊறனும்)
கிரில் ட்ரேயில் ரானை வைக்கும் முன் உங்களுக்கு பிடித்தமான காய் கறிகளை கட் செய்து பரவலாக வைத்து அதன் மேல் மட்டன் ரானை வைக்கவும்.
பிறகு ஓவனை 200 டிகிரியில் வைத்து விட்டு நடு ட்ரேவில் ஊறவைத்த மட்டனை கிரில் பண்ணனும். குறைந்தது ஒன்னறை மணி நேரம் ஆகும்.
அரை மணி நேரம் கழித்து திருப்பி விடனும். ஒரு மணி ஆனதும் மேலும் சிறிது பட்டர் ஆலிவ் ஆயில் தெளித்து இரண்டும் பக்கமும் கால், கால் மணி நேரம் கிரில் செய்யவும்.
மட்டன் லெக் ரோஸ்ட்
மட்டன் லெக் ரோஸ்ட் -2மட்டன் ரான்
மட்டன் ரான் என்பது சிக்கன் ஹோல் லெக் போல மட்டன் லெக் இத மொத்தமாக அப்படியே கிரில் செய்து குடும்பத்தோடு ஒரு தட்டில் சாப்பிடுவது .
ஹஜ் பெருநாள் நேரம் குர்பாணி மட்டன் கொடுக்கும் போது மற்றவர்களுக்கு கொடுத்தது போக மீதியை இப்படி நாம் செய்து கொள்ளலாம்.
Goat leg roast 2
மட்டன் லெக் ரோஸ்ட் -2
மிளகாய் தூள் - 1 மேசைகரண்டி
தனியா( கொர கொரப்பாக திரித்தது) - 1 மேசைகரன்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
பூண்டு பொடி - 1 தேக்கரண்டி
வெங்காய பொடி - ஒரு தேக்கரண்டி
வடிகட்டிய கட்டி தயிர் - 2 மேசைகரண்டி
எலுமிச்சை சாறு - 1 மேசைகரண்டி
பப்பாளி காய் - பேஸ்ட் - 1 மேசைகரண்டி
செய்முறை
மட்டன் லெக் ஐ அங்காங்கே கீரல் போட்டு உப்பு தடவி சிறுது நேரம் ஊறவைக்கவும். பிறகு தயிரில் எல்லா மசாலாக்களையும் சேர்த்து கலக்கி ஆலிவ் ஆயில் + பட்டரை 4 மேசைகரண்டி ஊற்றி மசாலாவுடன் சேர்த்து மேரினேட் செய்யவும். ( இரவு முழுவதும் ஊறனும்)
கிரில் ட்ரேயில் ரானை வைக்கும் முன் உங்களுக்கு பிடித்தமான காய் கறிகளை கட் செய்து பரவலாக வைத்து அதன் மேல் மட்டன் ரானை வைக்கவும்.
பிறகு ஓவனை 200 டிகிரியில் வைத்து விட்டு நடு ட்ரேவில் ஊறவைத்த மட்டனை கிரில் பண்ணனும். குறைந்தது ஒன்னறை மணி நேரம் ஆகும்.
அரை மணி நேரம் கழித்து திருப்பி விடனும். ஒரு மணி ஆனதும் மேலும் சிறிது பட்டர் ஆலிவ் ஆயில் தெளித்து இரண்டும் பக்கமும் கால், கால் மணி நேரம் கிரில் செய்யவும்.
மட்டன் லெக் ஐ அங்காங்கே கீரல் போட்டு உப்பு தடவி சிறுது நேரம் ஊறவைக்கவும். பிறகு தயிரில் எல்லா மசாலாக்களையும் சேர்த்து கலக்கி ஆலிவ் ஆயில் + பட்டரை 4 மேசைகரண்டி ஊற்றி மசாலாவுடன் சேர்த்து மேரினேட் செய்யவும். ( இரவு முழுவதும் ஊறனும்)
கிரில் ட்ரேயில் ரானை வைக்கும் முன் உங்களுக்கு பிடித்தமான காய் கறிகளை கட் செய்து பரவலாக வைத்து அதன் மேல் மட்டன் ரானை வைக்கவும்.
பிறகு ஓவனை 200 டிகிரியில் வைத்து விட்டு நடு ட்ரேவில் ஊறவைத்த மட்டனை கிரில் பண்ணனும். குறைந்தது ஒன்னறை மணி நேரம் ஆகும்.
அரை மணி நேரம் கழித்து திருப்பி விடனும். ஒரு மணி ஆனதும் மேலும் சிறிது பட்டர் ஆலிவ் ஆயில் தெளித்து இரண்டும் பக்கமும் கால், கால் மணி நேரம் கிரில் செய்யவும்.
இது போல லெக் ரோஸ்ட் வெளி நாடுகளில் அரபு நாடுகளில் செய்து கிரில் செய்து மந்தி, மத்பி,மக்பூலா, மஜ்பூஸ், கப்சா போன்ற உணவு வகைகளுடன் செய்து சாப்பிடுவார்கள். பாக்கிஸ்தானியர்களும் இது போல பெருநாள் (ஈத் ) ளின் போது குடும்பமாக சேர்த்து ஒன்றாக செய்து ஒரே தட்டில் அனைவரும் ஒற்றுமையாக அமர்ந்து சாப்பிடுவார்கள்.
அந்த காலங்களில் குழந்தைகளுக்கு பாரம்பரியமாக ஒற்றுமை மற்றும் பகிர்ந்து உண்ணுதல் போன்ற நல்ல பழக்க வழக்கங்களை பிள்ளைகளுக்கு கற்று தரும் வகையில் இது போல மொத்தமாக மட்டன் ரான் ( மட்டன் லெக் )என்றில்லை மற்ற உணவு வகைகளையும் இப்படி ஒரே தட்டில் எல்லாரும் அமர்ந்து சாப்பிடுவார்கள்.
இப்போது உள்ள அவசர உலகில் எல்லாரும் ஒன்று கூடி சாப்பிடுவதே ஒரு அதியமாக இருக்கு.. ஏன் நீங்களும் இது போல உங்கள் குழந்தைகளுக்கு பழக்க படுத்தலாமே///
என்னுடைய ஈத் ஸ்பெஷல்
ஓமானி ஹல்வா ரெசிபி பிரபல ஆஸ்திரேலிய நாவல் Zanzibar Wife enRa Novel lil இடம் பெற்றுள்ளது. எனக்கு மஸ்கட் ல இருந்து வரும் இந்த ஹல்வா எனக்கு ரொம்ப பிடிக்கும் பாதிக்கு பாதி எல்லாமே நட்ஸ்வகைகள் ஆரோக்கியமான இந்த குறிப்பை நான் பல முறை செய்து இருக்கிறேன், இதை ஓமானியர்கள் ப்ரட் மற்றும் பன்னுடன் காலை உணவாக சாப்பிடுவார்கள்.
நீங்களும் அனைவரும்
இந்த ஸ்பெஷல் ரெசிபியைஇந்த ஈத் பெருநாளுக்கு முயற்சி செய்து பாருங்கள், செய்து பார்த்து போட்டோக்களைஎன்னுடன்
பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கருத்தையும்
தெரிவியுங்கள்.கிழே லிங்க் கொடுத்துள்ளேன்.
அகர் அகர் என்னும் கடல் பாசியை தண்ணீரில் ஊறவைத்து வடிக்கடி
அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கரைய கொதிக்க விடவும்.
பிறகு பால் சேர்த்து கொதிக்க விடவும்.
நுங்கை மேல் தோல் எடுத்து விட்டு பொடிப்பொடியாக அரிந்து சிறிது பால் சேர்த்து ஒன்றும் பாதியுமாய் அரைக்கவும். சர்க்கரை + ஸ்வீட்டன் கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
ஒரு பெரிய தாம்பாள தட்டில் அகர் அகர் கலவையை ஊற்றி ஆறவைத்து பிரிட்ஜில் வைத்து செட்டாக்கவும்.மேலே பிஸ்தால் அல்லது உங்களுக்கு விருப்பட்ட நட்ஸ் தூவி விடவும். .இரண்டு மணி நேரம் குளிர வைத்தால் போதுமானது, வேண்டிய வடிவில் கட் செய்து பரிமாறவும்.
( நுங்கு சீசன் டைமில் தான் கிடைக்கும் அதை இது போல கடல் பாசியாக செய்து சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும்
///வெங்காயம் தக்காளி விக்கிர விலையில் வெங்காயம் இல்லாம என்ன குறிப்பு போடலாமுன்னு யோசித்தேன், வாழதண்டு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு, மனோ அக்கா ...
About Me
Jaleela Kamal
சமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு.
தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.