Saturday, January 23, 2010

பதிவு திருட்டு ஆகையால் குறிப்பு போட பிடிக்கல.


என் குறிப்புகளை பிரப‌ல தளங்களுக்கு அனுப்பட்டு அங்கு இப்போது போடப்பட்டுள்ளது. நான் ஒரு வருடம் முன் கொடுத்த குறிப்புகளை, இப்போது முடிந்த டிசம்பரில் போடப்பட்டுள்ளது.


ஏற்கனவே அருசுவை, தமிழ்குடும்பம்,சமையலறை, இப்ப பிலாக்கில் உள்ளதையும். பிரபல தளம் மற்றும் சில பேர் பிலாக்குகளில் காப்பி செய்து போட்டுள்ளார்கள்.


இதே முன்று பெண்கள் சேர்ந்து அனைத்து குறிப்புகளையும் எடுத்து ஒரு தளம் போல் ஒரு பிலாக் ஆரம்பித்து போட்டுள்ளார்கள்.


இன்னும் யார் யாரெல்லாம் எடுத்து இப்படி போட்டு வைத்துள்ளார்கள்.என்று தெரியவில்லை.

நிறைய குறிப்புகள் போட்டு வைத்தும் பப்லிஷ் பண்ண மனசு வரல./

58 கருத்துகள்:

SUFFIX said...

அப்படியா வருத்தமாக இருக்கிறது, ஏன் இப்படி? மனம் தளரவேண்டாம்.

ஸாதிகா said...

ஜலி,இதற்கெல்லாம் மனம் தளர வேண்டாம்.இவை யெல்லாம் உங்கள் வளர்ச்சிக்கும் ,உயர்வுக்கும் படிக்கட்டாக நினைத்து வீறு நடை போடுங்கள்.பிளாக் உலகில் மட்டுமல்ல மற்ற தளங்களிலும்.

S.A. நவாஸுதீன் said...

சகோதரி,

பிரபலப்பதிவரா ஆயிட்டாலே இதெல்லாம் நடக்கும். விடுங்க இதுக்கெல்லாம் போய் டென்ஷனாகிக்கிட்டு. நீங்க எப்போதும் போல் உங்க வேலையை செய்யுங்க. அவங்க தானா திருந்தினா திருந்தட்டும்.

இமா said...

ஜலீலா,

உங்கள் கவலை புரிகிறது. இதற்கெல்லாம் மனம் தளரலாமா. இனி இப்படி ஆகாது என்று எண்ணிக் கொண்டு தொடருங்கள் உங்கள் பயணத்தை. எல்லாம் நலமாகும்.

அன்புடன் இமா

jailani said...

சுய அறிவு இல்லாதவர்களின் வேலை.திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது. தெரியும்தானே!!.கவலைப்பட வேண்டாம்.உங்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிரோம்.

மஞ்சூர் ராசா said...

உங்கள்பெயரை குறிப்பிடுவதில் திருடுபவர்களுக்கு என்ன பிரச்சினை என தெரியவில்லை. தொடர்ந்து எழுதுங்கள் இதுப்போன்ற விசயங்களைப்பற்றி கவலைப்படவேண்டாம்.

நாஞ்சில் பிரதாப் said...

இதுக்கு ஏங்க வருத்தப்படறீங்க? இது சாதாரணமான விசயம், நல்ல பதிவுகளை சுடறது ஒண்ணும் புதுசு கிடையாது.

உங்க பதிவுகளை யாரும் காப்பி பண்ணாம இருக்க கிழே உள்ள லின்க்ல போய், அதுமாதிரி பண்ணுங்க... அதுக்கப்புறம் தைரியமா எழுதுங்க, யாரும் ஒண்ணும் பண்ணமுடியாது.

http://www.deluxetemplates.net/1999/02/how-to-stop-visitors-from-stealing-your.html

செ.சரவணக்குமார் said...

அன்புள்ள சகோதரி
இதுக்கெல்லாம் வருத்தப்படாதீங்க, உங்களின் சிறந்த பதிவுகளை புத்தகமாக வெளியிடலாமே?

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

இதெல்லாம் சப்ப மேட்டர்.. நீங்க எங்கியோ போய்க்கிட்டு இருக்கீங்க.. இந்த சாதாரண விஷயங்களைப் பத்தி கவலைப் படாதீங்க... போலிகள் ரொம்ப நாள் நிலைத்திருக்க முடியாது.. உண்மையான சரக்கு உங்களுடையது தானே... அப்புறம் என் போய் கவலைப் படுறீங்க.. தொடர்ந்து ஜமாய்ங்க.. நாங்க இருக்கோம். அப்புறம் என்னுடைய ப்ளாக் கிற்கு வருகை தந்தமைக்கு நன்றி தோழியே...

பலா பட்டறை said...

ரொம்ப கொடுமைங்க இது..:( எவ்வளவு உழைப்பு.:(

போகட்டும் வேற வழி இல்லை. நண்பர்கள் சொல்வது போல மனம் தளராது பதிவு செய்யுங்கள், நண்பர்களுக்காகவாவது.

asiya omar said...

ஜலீலா நானும் உங்களைப்போல் தான்.தனியாக ப்ளாக் என்று இல்லாவிட்டாலும் இரு பிரபல தளங்களில் சமையல் குறிப்பு , டிப்ஸ்,உபயோகமான தகவல் போன்றவைகளை கொடுத்து வருகிறேன்.என்னுடைய குறிப்பும் காப்பி செய்யப்பட்டுள்ளது.என்ன செய்வது,நாம் நம் வேலையை எப்பொழுதும் போல் செய்வோம்,பொழுது போக்கிற்காக செய்தாலும் மன திருப்தி இருப்பதால் தொடர்கிறேன்.காப்பி அடிப்பவர்கள்,திருடி போடுபவர்களுக்கு உழைப்பின் கஷ்டம் தெரியாது.விடுங்கள் ஜலீலா.எப்பொழுதும் போல் குறிப்புக்களை வாரி வழங்குங்கள்.நிச்சயம் பலன் இருக்கும்.

நட்புடன் ஜமால் said...

வருத்தமாகத்தான் இருக்கு.

எங்கெல்லாம் காப்பி அடிச்சாங்கன்னு உங்ககிட்ட சுட்டிகள் இருந்தா குடுங்க - எதுனா செய்ய இயலுமா என்று பார்க்கலாம்.

மனம் தளராமல் - உங்கள் குறிப்புகளை வெளியிடுங்கள்.

SUFFIX said...

பதிவண்பர்களின் அத்தனை கருத்துக்களையும் கவனித்தீர்களா. நமது ம‌ன திருப்திக்காக, மற்றவர்க்ள் படித்து பயன் படுவதற்காக என்ற‌ இவ்விரண்டையும் மனதில் கொண்டு தங்களது சேவையை தொடருங்க்ளேன் ஜலீலா அக்கா!!

sarusriraj said...

ஜலிலா அக்கா மிகவும் வருத்தமாக தான் இருக்கு நீங்கள் மனம் தளராமல் குறிப்பை தொடர்ந்து தாருங்கள் .

மாதேவி said...

"இணையமும் பதிவுத் திருட்டுக்களும்" என்ற சுடுதண்ணி அவர்களின் பதிவைப்பாருங்கள் ஜலீலா.

ஹுஸைனம்மா said...

அக்கா,
எந்த தளம்னு உங்களுக்குத் தெரியும்னு நினக்கிறேன். அப்படின்னா அங்கயே நீங்க கேள்வி எழுப்புங்க அக்கா. அதிலென்ன தவறு? பின் அது குறித்த (பதிவு & உங்கள் பின்னூட்டம்) த்கவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலும், நீங்க நண்பர்கள் குறிப்பிட்டுள்ளபடி இம்மாதிரி திருட்டுக்களைத் தடுக்கும் வழிமுறைகளையும் பயன்படுத்துங்க.

தேவன் மாயம் said...

இதற்கென்று சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். என் அனுமதியில்லாமல் குங்குமம் பத்திரிக்கையே என் இடுகையைப் போட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

அன்புடன் அருணா said...

அட! என் கதையைக் கூட அப்பிடியே போட்டிருக்கிறார்கள்....../http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2009/01/blog-post_18.html/

http://youngtamilan.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88

ஜெட்லி said...

உங்க வருத்தம் புரியுது......
அவங்களை விட்டு தள்ளுங்க !!

Chitra said...

அக்கா, என்ன கொடுமை இது? திருட்டு திரட்டி தடை செய்ய வழி இல்லையா? பதிவர்கள் எல்லாம் சேர்ந்து இது பற்றி யோசித்தால் என்ன?
அக்கா, நீங்கள் ஒரிஜினல். புதிது புதிதாக, சமையல் குறிப்புகள் அட்டகாசமாக ஊறிக்கொண்டே இருக்கும். வருத்த படாதீர்கள். நீங்கள் இன்னும் சாதிக்க வேண்டும்.

அக்பர் said...

மனவருத்தம் தரும் விசயம்தான்.

நண்பர் பிரதாப் கூறியது போல் செய்துபாருங்கள்.

seemangani said...

ஐயோ...இப்டி வேற கேளப்பிடாகளா...உங்கள் உழைப்பு ஒருநாளும் வீண் போகாது...போலிகள் நிலைக்காது மணம் தளர வேண்டாம்...அக்கா...

athira said...

ஜலீலாக்கா பாருங்கள், உங்களுக்கு மனக்கவலை என்றதும் எத்தனை பதிவுகள்.. இவை உற்சாகத்திற்கான பூஸ்ட் கள்.... எனவே “நடப்பதெல்லாம் நன்மைக்கே” என எண்ணிக்கொண்டு, உங்கள் பாதையைத் தொடருங்கள்... நடந்தவற்றை மறந்து மன்னித்து விடுங்கள்.

Riswanarafeek said...

அக்கா வைரத்திற்கு ஈடு வைரம் மட்டுமே அதனை எவரும் அறிவார்கள் மற்றவை நிலைக்காது Dont worry .keep it up

sameer said...

கவலைய விட்டுத்தள்ளுங்க. எப்போதும் போல் உற்சாகம் உங்கள் பணியை தொடருங்க.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வருத்தமான விஷயம்

கவலைப்படாதீங்க ..

அபுஅஃப்ஸர் said...

கொஞ்சம் பெருமைதான் இருந்தாலும் இங்கேர்ந்து எடுத்தது என்று உங்கள் தளத்தின் முகவரி கொடுத்திருந்தால் நல்லாயிருந்திருக்கும்

my kitchen said...

your giving excellent recipes,so that only they r stealing.But they should take ur permission means u feel better.Don't feel dear.

BONIFACE said...

கவலை வேண்டாம் மறுபடியும் எழுதுங்கள்

அன்புடன் மலிக்கா said...

யக்கோவ் இதுக்கெல்லாம் போய் கலங்கி குறிப்பை நிறுத்தலாமா?

இனி இதுபோல்நடக்காதவாறு பார்த்துக்கொள்ள நண்பர் சொல்லியதுபோல் செய்துவிடுங்கள்.

விட்டுதள்ளிவிட்டு அள்ளிப்போடுங்க படைப்புகளை..

" உழவன் " " Uzhavan " said...

இங்கேயும் திருட்டா..ப்ச்

Aruna Manikandan said...

Very sad to hear about this...
We r there for u.. Don't worry

Thaai said...

உங்க encouragementil நான் இப்பொழுது என் blogai அப்டேட் பண்ணிட்டு இருக்கேன். இப்போ நீங்க இப்படி மனம் தளர்ந்து இருந்தால் எப்படி?. திருடர்கள் ரொம்ப நாள் தாக்கு பிடிக்க மாட்டார்கள். தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள்.

இலா said...

அக்காவ்!!! இதெல்லாம் ஜகஜமப்பான்னு சொல்லிட்டு உங்க பதிவைப்போடுங்க... அவங்களுக்கா தெரியணும் இல்லைன்னா இந்த வலையுலகத்தில சமாளிக்க முடியாது...உங்க கன்டென்ட் காப்பி பண்ணவோ இல்லைன்னா டவுன்லோட் செய்ய முடியாதபடிக்கு எதுவும் செய்ய முடியுமான்னு பாருங்க. சில வெப்சைட்களில் பார்வையிட மட்டுமே அனுமதிக்கிறார்கள்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ஏங்க நீங்க பிளாக் எழுதுறது அடுத்தவங்க பார்த்து சமைக்க தானே? இல்ல நீங்களே அழகு பார்க்காவா? இது என்ன வம்பா போச்சு!! இவங்க எழுதுவாங்களாம் நாம ஷோ மாதிரி பார்த்துட்டு போகனுமாம்:) அதற்க்கு உங்க வீட்டு ஷோகேஷில் வைக்க வேண்டியது தானே?:) நீங்க போட்ட படத்தை அப்படியே போட்டா கேள்வி கேட்கலாம்? அத விட்டுட்டு குறிப்பு மட்டும் எழுத்தி அவங்க சொந்தமா செய்து பார்த்து போட்டா போட்டாங்கன்ன ஏங்க கடுப்பு வருது?
நீங்களே எல்லா தமிழ் சைட்டிலும் போய் டிப்ஸ் காபி பண்ணி உங்க டிப்ஸ் குறிப்புன்னு எழுதுறீங்களே இத எங்க போய் கேட்கிறது? எல்லா சைட்டிலும் போய் எழுதுறது அப்புறம் காபி அடிக்காதேன்னு சொல்றது என்ன கொடுமைப்பா இது நீங்க எந்தெந்த சைட்டில் காப்பி அடித்தீங்கன்னு என்னால ஃப்ரூப் பண்ண முடியும். கேட்டா எனக்கு மெயிலில் வந்ததுன்னு சொல்வீங்க நீங்க மட்டும் பந்தாவா பிளாக் எழுத்தலாம் அவங்களுக்கும் எழுத்தனும் ஆசை இருக்கும் தானே? நம்ம தமிழ் நாட்டு பயலுக பொம்பளைக திருந்தவே மாட்டீங்களா? எப்ப பாரு ஆமா சாமி போடுறது கொஞ்சமாவது யோசிக்க பாருங்க ஆமா சாமி வேளையை விடுறதுக்கு:) என்னவோ உங்க சொத்தை எடுத்தது மாதிரி தான் கவலையை படுறீங்க‌
எனக்கு எந்த பிளாக்கும் இல்ல நீங்க வந்து கும்மி அடிக்க உண்மையை சொன்னேன்.
உங்களை விட அனுபவத்திலும் வயதிலும் பெரியவன்

R.Gopi said...

அன்பு ஜலீலா

படிக்கும் போது, மனதுக்கு வேதனையாக இருந்தது.... பிரபலமான அல்லது நன்றாக எழுதும் அனைத்து வலை பதிவர்களுக்கும் இது சகஜமாக நடக்கக்கூடிய ஒன்று...

மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவானேன்...

தொடர்ந்து எழுதுங்கள்... திருடுபவரே வெட்கப்பட்டு ஒரு நாள் திருந்துவர்...

sabeeca said...

சலாம்
ஜலிலா அக்கா. இதெர்க்கெல்லாம் கவலைப்பட்டு. உங்கலுடய்ய திறமைகலை முடக்கிறாதிங்க. என்னைப்போல் வெளீ நாடுகளீல் வசிக்கும் பெண்கலுக்கு ரொம்ப உதவியாக இருக்கு. உஙகலுடய இந்த தளம். மற்றவைகலையெல்லாம் விட்டுத்தல்லுங்க.திரும்பவும் புது பொலிவுடன் உங்லுடய குரிப்புகலை போடுஙக.

Anonymous said...

அனானி,அனுபவத்திலும் வயதிலும் பெரியவன் என்று உங்கள் வரிகளில் உள்ளது செயலில் இல்லையே?ஒருவர் தன் பிளாக்கில் எழுதுவதென்றால் பிறர் காப்பி அடித்து தன் பிளாக்கில் போடுவதற்கல்ல.அதற்கு அனுமதி வேண்டும் என்ற இங்கிதம் கூட தெரியாமல் வக்காலத்து வாங்க வந்திருக்கும் உங்கள் நிலமையை நினைத்தால் சிரிப்பு வருகின்றது.ஜலீலா அக்கா,இதற்கு தகுந்த பதில் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Jaleela said...

கமெண்ட் கொடுக்கும் அனானி யார் என்று கண்டு பிடித்து விட்டேன்.
என்னிடம் ஃப்ரூப் இருக்கு.
எனக்கு பதிவு போட பிடிக்கல.
ஆனால் கண்டிப்பா உங்கள் பதிலுக்கு லின்குடன் பதில் கொடுப்பேன்.

SUFFIX said...

:)

thaaj said...

சலாம் ஜலீலா ரெண்டு நாளா நான் பிசி இதை பார்க்க முடியலை

மனதுக்கு கஷ்டமிருந்தாலும் விட்டுதள்ளுங்க
தொடர்ந்து குறிப்புகளை தாங்க

காப்பி பேஸ்ட் பன்னியவர்கள் உங்கள் பெயரை போட்டாததினால் இது பெரிய மோசடிதான்

வேலன். said...

சகோதரிக்கு வருத்தம் வேண்டாம்..எனது பதிவுகளையும் அவ்வாறு எடுத்துப்போட்டுவிட்டு அதற்கு Copy தடைசெய்யப்பட்டுள்ளது என்று வேறு போடுகின்றார்கள். அவர்கள் மட்டும் எனது பதிவை திருடிபோடலாமாம். ஆனால் அவர்கள் அவ்வாறு போடும் பதிவை வேறு யாரும் எடுக்ககூடாதாம்.
கவலையை விடுங்கள்.தொடரந்து பதிவிடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

அனானி அவர்களே.. கருத்துகளை வெளிப்படையாகக் கூறும் நீங்கள் முகவரியை மட்டும் ஏன் மறைத்து விட்டீர்கள். பயப் படாதீர்கள்.
//நீங்களே எல்லா தமிழ் சைட்டிலும் போய் டிப்ஸ் காபி பண்ணி உங்க டிப்ஸ் குறிப்புன்னு எழுதுறீங்களே இத எங்க போய் கேட்கிறது? எல்லா சைட்டிலும் போய் எழுதுறது அப்புறம் காபி அடிக்காதேன்னு சொல்றது என்ன கொடுமைப்பா இது நீங்க எந்தெந்த சைட்டில் காப்பி அடித்தீங்கன்னு என்னால ஃப்ரூப் பண்ண முடியும்.//

பின்னூட்டம் போடறவங்க எல்லாரும் அறிவற்றவர்கள் அல்ல நண்பரே.. நாங்கள் நடுவு நிலை தவறாது இருக்கவே விரும்புகிறோம்.. தைரியம் இருந்தால், நீங்கள் மேலே கொடுத்த உங்கள் வாக்குமூலத்தை நிரூபியுங்கள்.

இல்லையென்றால், ஜலீலா'வின் பதிவைத்திருடியது நீங்கள் தானோ என்று நம்ப வேண்டியிருக்கும்.

//ஏங்க நீங்க பிளாக் எழுதுறது அடுத்தவங்க பார்த்து சமைக்க தானே? இல்ல நீங்களே அழகு பார்க்காவா? இது என்ன வம்பா போச்சு!! இவங்க எழுதுவாங்களாம் நாம ஷோ மாதிரி பார்த்துட்டு போகனுமாம்:)//

அடுத்தவன் மனைவியோடு சந்தோஷமாக இருப்பதை பார்த்தால் அதிலிருந்து, நீங்கள் உங்கள் மனைவியுடன் எப்படி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று உணர வேண்டுமே தவிர, அவன் மனைவியை அபகரிக்கக் கூடாது. என்ன புரியுதா பெரியவரே...

நிரூபணம் இல்லாது அடுத்த பதிவைப் போட மாட்டீர்கள் என நம்புகிறேன்.. சரக்கு இருப்பவரிடம் கோபம் இருக்காது... நன்றி....

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

ஜலீலா அவர்குளுக்கு,

உங்கள் பதிவை யார் திருடினார்களோ அவர்களின் முகவரியை இங்கே தெரிவியுங்கள்.. நாங்கள் அதைப் பார்ப்பதைத் தவிர்த்து விடுவோம்.. தக்க பாடத்தையும் பின்னூட்டங்கள் மூலம் தெரிவிப்போம். அவர்கள் தவறை நினைத்து வருந்த வேண்டும்.. உங்கள் பெயரை கடைசியில் போட்டு நன்றி தெரிவிக்கும் ஒரு நாகரிகமாவது வரட்டும் அவர்களுக்கு...

என்ன நண்பர்களே..

நன்றி...

S.A. நவாஸுதீன் said...

நண்பர் பிரகாஷ் சொல்வது சரியே

நாஸியா said...

சலாம் சகோதரி!

இதுக்கெல்லாம் ஃபீல் பண்ண கூடாது.. தொடர்ந்து எழுதுங்க.. உங்க சேவை என்னை மாதிரி கத்துக்குட்டிங்களுக்கு தேவை

Anbu Thozhan said...

அட...
ஜலீலா அக்கா... விட்டு தள்ளுங்க...
உங்களோட படைப்பாற்றல் திருட பட்டது வருத்தம் தான்... என்ன பண்றது... அதுக்காக நீங்க இப்டி மனசு ஒடிஞ்சு போலாமா...

கொஞ்சம் பிரபலம் ஆய்டாலே இப்டி தான்....

யோசிச்சு பாருங்க....
பலகோடி கொட்டி எடுத்த படம்.... அதே அன்னிக்கே நெட்ல உலா வருது.... எத்தன பேரோட உழைப்பு.... அதுக்காக feel பண்ணி படமே எடுக்காம விட்டுட்ராங்க்லா..... இத விட கொடும சமீபத்துல படைப்பாளியே வெளியிடாத படத்த சுட்டது தான்....

இத ஏன் சொல்றேனா.....

திருட்டு உங்க படைப்புக்கு மட்டும் நடக்கல so மனச தேத்திட்டு மறுபடி துள்ளி குதிச்சு புது உற்சாகத்தோட வாங்க.... என்னதான் நெட்ல போட்டாலும் தியேட்டர்ல போயி படம் பாக்ற கூட்டம் இல்லாமலா போய்டும்.... ஜமாயுங்க.... நாங்க எல்லாரும் இருக்கோம்...

Anbu Thozhan said...

நாசியா...
நெஜமாவே அடுக்கு மொழில அடி பின்றீங்க போங்க.. இப்டியே போச்சுனா பங்காளிங்க சொன்ன மாத்ரி T R யாரும்பாங்க எல்லாரும் இன்னும் கொஞ்ச நாள்ல ஹா ஹா..

கவிசிவா said...

ஜலீலாக்கா நான் ப்ளாகிங் செய்வதில்லை. ஆனால் சில தளங்களில் நான் கொடுக்கும் குறிப்புகள் அப்படியெ காப்பி பேஸ்ட் செய்து இன்னொரு தளத்தில் வெளியிடுகிறார்கள் நான் செய்திருந்த எழுத்துப்பிழைகள் உள்பட. இதை அவர்கள் தளத்தில் பெயர் பதிவு செய்து கேள்வி எழுப்பினால் என் உறுப்பினர் பதிவையே ரத்து செய்து விட்டார்கள். நான் எழுப்பிய கேள்விகளையும் நீக்கி விட்டார்கள் இதை எங்கே போய் சொல்வது :-(

விட்டுத்தள்ளுங்கள் எப்போதும் போல் உங்கள் பணியை தொடருங்கள்.

அன்புடன்
கவிசிவா

Jaleela said...

அன்பான அனைத்து பதிவுலக தோழ தோழிய நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி.

இத்தனை பேர் வந்து ஆதரவு அளித்தமைய பார்த்தால் ரொம்ப ஆச்சரியமாக இருக்கு.


கண்டிப்பாக குறிப்புகளை உங்களுக்காக தொடருவேன்.

இனி எந்த அனானி வந்தாலும் கவலை இல்லை.

Jaleela said...

ஜமால், நாஞ்சில், பிரகாஷ் உங்கள் முவருக்கும் மிக்க நன்றி.

இன்னும் மெயில் மூலம் உதவியவர்களுக்கும் மிக்க நன்றி

R.Gopi said...

//Jaleela said...
அன்பான அனைத்து பதிவுலக தோழ தோழிய நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி.

இத்தனை பேர் வந்து ஆதரவு அளித்தமைய பார்த்தால் ரொம்ப ஆச்சரியமாக இருக்கு.

கண்டிப்பாக குறிப்புகளை உங்களுக்காக தொடருவேன்.

இனி எந்த அனானி வந்தாலும் கவலை இல்லை.//

*********

This is the SPIRIT we expected from you Jaleela.... Keep rocking with your posts...

We are always here to support and will be with YOU....

Jaleela said...

கோபி, என் பதிவுகளை படித்து தொடர்ந்து ஊக்கமளித்து வரும் உங்களுக்கு மிக்க நன்றி

டவுசர் பாண்டி said...

நம்ப, நாஞ்சில் அண்ணாத்த சொன்னத நானு ஏற்க்கனவே சொல்லி கீரேன், அதுக்கான java கோடிங்க குடுத்து கீரேன் , ஆனா அதுல ரைட் கிளிக் மட்டும் தான் பண்ண முடியாது , ctrl +c பண்ணி காப்பி பண்ண முடியும் , ஆனா அதுக்கோசரம் மனம் தளராத தங்கச்சி !! இது மேரி அட்டூஷியம் எங்கியும் தான் கீது , நம்ப பிளாக்கு ,உலகத்துல கூட ரெண்டு பேரு சண்டையே போட்டாங்கோ !! நீ திருடன் , நீ மட்டும் இன்னா இன்னு , அதுனால , எல்லாம் கவலை படாதே நீங்க பாட்டுக்கினு உங்க வேலைய கண்டினு பண்ணுங்கோ !! ஆல் தி பெஸ்ட்டு

டவுசர் பாண்டி said...

//யோசிச்சு பாருங்க....
பலகோடி கொட்டி எடுத்த படம்.... அதே அன்னிக்கே நெட்ல உலா வருது.... எத்தன பேரோட உழைப்பு.... அதுக்காக feel பண்ணி படமே எடுக்காம விட்டுட்ராங்க்லா..//

சபாஷ் , சபாஷ் அன்புத் தோழன் தலீவா !! நீங்க எங்கியோ போய்ட்டீங்கோ !! உண்மைக்கி இத்தினி கருத்துலையும் இந்த ஒன்னு தான் ரொம்ப கரீக்டான ஆறுதல் தரும் உவமை , மீண்டும் ஒரு சபாஷ் !! யப்பா நானு தான் லேட்டு அதுக்கான காரணப் பதிவு போட்டு கீரேன் பா தோஸ்துங்களா , ரவ முட்சா எட்டிப பாருங்க என் நெலைமைய !!

prabhadamu said...
This comment has been removed by a blog administrator.
jayanthi said...

ஜலீலா
இன்று வலையில் ஏதோ தேடப் போய் என்னுடைய சமையல் குறிப்பை வரிக்கு வரி எழுத்துக்கு எழுத்து ஒரு தளத்தில் கண்டேன்.

நீங்கள் கஷ்டப்பட்டு புதிது புதிதாக கண்டுபிடித்து சமையல் குறிப்புகள் போடுகிறீர்கள். இதைத் திருடிப் போட்டுக்கொள்கிறார்கள் என்றால் கஷ்டமாகத்தான் இருக்கும். கோபமும் வரும்.

சரி அதெல்லாம் விடுங்க. போற்றுவார் தூற்றட்டும். தூற்றுவார் தூற்றட்டும், திருடுவோர் திருடட்டும். நீங்க உங்க பணியை எங்களுக்காக செய்யுங்கள்.

அன்புடன்
ஜெமாமி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா