Monday, August 23, 2010

மிக்ஸ்டு பஜ்ஜி வகைகள் - mixed bajji varietiesபொதுவான பஜ்ஜி கலவைதேவையானவை

கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
ரெட் கலர் - சிறிது
இட்லி சோடா - ஒரு சிட்டிக்கை
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரைத்தேக்கரண்டி (அ) பெருங்காயப்பொடி - கால் தேக்கரண்டி
சூடான எண்ணை - ஒரு ஸ்பூன்

வாழக்காய் (அ) ஏதாவது விருப்பமான காய்
எண்ணை பொரிக்க தேவையான அளவுசெய்முறை
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து கட்டியாக கரைத்து காயை மெல்லிய வடிவில் வெட்டி கலக்கிய மாவில் தோய்த்து எண்ணையை சூடாக்கி பொரித்து எடுக்கவும்.


பொட்டுகடலை துவையல் (அ) புதினா துவையலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
குறிப்பு


கீழே உள்ள லிங்குகளில் எல்லா பஜ்ஜி வகைகளும் இருக்கிறது.என் இழ்டத்துக்கு மசாலா வகைகளை சேர்த்து செய்த்தது.அதே போல் சிறிது மைதா, கார்ன் மாவு சேர்த்து செய்தாலும் , நல்ல பொங்கி குண்டு குண்டாவரும்.மசாலாக்களை அரைத்து ஊற்றியும் பஜ்ஜி மாவு கரைக்கலாம்.

காய் கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.

(எல்லா வகையான காயிலும், ( கத்திரிகாய், வெள்ளரிக்காய்,வாழக்காய்,உருளை,அப்பளம், பேபி கார்ன்,தக்காளி வெங்காயம் போன்றவைகளீலும், கொட மிளகாய், முட்டை, சிக்கன் போன்றவையிலும் செய்யலாம்.)


பஜ்ஜிக்கு கடலை மாவு பயன் படுத்துவதால் மாவு கலக்கும் போது அதில் ( சோம்பு (அ) பெருங்காயப்பொடி (அ) இஞ்சி பூண்டு (அ) பூண்டு பொடி) கலந்து சுட்டால் நல்லது. ரொம்ப தண்ணி மாதிரி கலக்கி பொரித்தாலும் எண்ணை குடிக்கும். நல்ல கட்டியா தயிர் பதத்திற்கு கரைக்கவேண்டும்
வாழக்காய் பஜ்ஜி,முட்டை பஜ்ஜி கார்ன் பஜ்ஜி
சிக்கன்பஜ்ஜி, எங்க வீட்டு பேவரிட்

வெங்காயம பஜ்ஜியை இங்கே சென்று பார்க்கவும்


நோன்பு காலத்தில் ஈசியனா ஸ்னாக் கஞ்சிக்கு அவசரத்துக்கு பஜ்ஜி தான் பஜ்ஜி போட்டா எல்லா வகையிலும் போட்டாகனும்.
39 கருத்துகள்:

சீமான்கனி said...

ஆனியன் பஜ்ஜியும் கத்திரிக்கா பஜ்ஜியும் எனக்கு ரெம்ப பிடிக்கும் அக்கா நீங்க கத்திரிக்கா பஜ்ஜி ஏன் போடலை???பார்செல் கேப்பேன்னு பயமா???

சீமான்கனி said...

ஐ!!!! எல்லா பஜ்ஜியும் எனக்குதான்...

asiya omar said...

பஜ்ஜி எல்லாம் சூப்பர்.அட நேற்று தான் ப்ரெட் வைத்து ஸ்நாக்ஸ் போட்டிக்காக செய்து அனுப்பினேன்.இதுவும் அருமை ஜலீலா.

எம் அப்துல் காதர் said...

நோம்பு தொறக்க (அம்புட்டு ஐட்டமா??) உட்காந்தா சஹர் வரைக்கும் சாப்பிடலாம் போலிருக்கே!!

அதென்ன அது ரெண்டு பேர்ல பப்ளிஷ் பண்றீங்க ஜலீலாக்கா!! ஒட்டு போடும் போது குழப்பமா இருக்கு. ரெண்டு பேருக்குமே போட்டாச்சு. அதனால அம்புட்டும் எனக்குத் தான்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

பஜ்ஜியில இத்தனவகை இருக்கா.. இதபார்த்து பஜ்ஜி செய்திரவேண்டியதுதான்.

நான் கேட்ட ஹரீஸ் எப்போ செய்வீங்க ஜலீலா.. அதை எப்படி செய்யணுன்னு சொல்லித்தாங்க..

ஜெய்லானி said...

ஆஹா சும்மா கலக்குறீங்களே..!!! கெட்டி சட்னியுடன் காம்பினேசன் அசத்தலா இருக்குமே..!!

ஜெய்லானி said...

சரி..சரி ..எல்லாத்திலேயும் நாலு நாலு .முட்டையில மட்டும் எட்டு பார்ஸல் பிளீஸ் ...

ஜெய்லானி said...

//அதென்ன அது ரெண்டு பேர்ல பப்ளிஷ் பண்றீங்க ஜலீலாக்கா!!//

என்ன ஓய் ,நோன்பு திறந்ததும் பீப்பி டவுனா ..? என்னய்யா புதுகுழப்பம் நல்லாதானே போகுது...!!!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

அனைத்தும் அருமை.

Chitra said...

பஜ்ஜியில் இத்தனை வகைகள்!!!!....... நாவில் நீர் ஊறுதே.....!!!

மங்குனி அமைசர் said...

எப்படி இருக்கீங்க , ரொம்ப நாள் ஆச்சு , ஒண்ணுமில்ல ஆணி ஜாஸ்த்தி அதுதான் , அருமையான பஜ்ஜிகள் , ஆமா மேடம் இதுக்கு ஏன் பஜ்ஜின்னு பேர் வந்துச்சு ???

சிங்கக்குட்டி said...

மிக்ஸ் பஜ்ஜி சூப்பர்...!

தங்கமணி வேற ஊர்ல இல்ல, இந்த வாரம் சைடிஷ் ரெடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடி :-)

Tamilulagam said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

சசிகுமார் said...

அருமை அக்கா நன்றாக உள்ளது

Jaleela Kamal said...

சீமான் கனி கத்திரிகாய் பஜ்ஜி, தம்பி சொல்லியாச்சி இல்ல போட்டுடலாம்.

அதெல்லாம் பயமிலல் பார்சல் அனுப்பினா வழியிலேயே எலி அத ஒரு கை பார்த்துடுமே?

Jaleela Kamal said...

நன்றி ஆசியா, பழைய குறீப்புகள் இருக்க கூடாது என்று தான் புதுசா செய்து அனுப்பி உள்ளேன்.

Jaleela Kamal said...

//அதென்ன அது ரெண்டு பேர்ல பப்ளிஷ் பண்றீங்க ஜலீலாக்கா!! ஒட்டு போடும் போது குழப்பமா இருக்கு. ரெண்டு பேருக்குமே போட்டாச்சு. அதனால அம்புட்டும் எனக்குத் தான்//

எம் அப்துல் காதர், நீங்கள் சொலவது புரியல.
எனக்கு தமிழிஷ் சம்மிட் செய்வது கொஞ்சம் கழ்டமா இருந்தது அந்த் நேரத்தில் வேறு யாராவது சம்மிட் கொடுத்திருக்கலாம்

Jaleela Kamal said...

ஆமாம் ஸ்டார்ஜன், ஈசியான குறீப்பு உடனே செய்திடலாம்.
செய்து விட்டு எப்படி இருந்தது என்றூ வ்ந்து சொல்லனும்.
ஹரிஸ் கொஞ்சம் சிரமம் அதை நான் ஓட்ஸில் செய்து இருக்கிறேன். நேரமிருக்கும்போது போடுகீறென்.

Jaleela Kamal said...

ஜெய்லாணி கெட்டி சட்னியும் அரைத்தாச்சு ஆனால் இங்கு தான் போட முடியல்ல.

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி

Jaleela Kamal said...

நன்றி புவனேஷ்வரி


நன்றி சித்ரா

Jaleela Kamal said...

அமைச்சரே சாப்பிட மட்டும் தெரிந்தவர்களுக்கு இத பற்றி தெரியாது.

பஜ்ஜி பொண்ணு பார்க்க வரும் போது மாப்பிள்ளைக்கு செய்து வைப்பாங்களே பஜ்ஜி சொஜ்ஜி அதான்,

Jaleela Kamal said...

நன்றி சிங்கக்குட்டி, செய்து ப்பார்த்து சொல்லுங்கள்

Jaleela Kamal said...

நன்றி தமிழ் உலகம்
நன்றி சசி தம்பி

நட்புடன் ஜமால் said...

வெங்காயமும் முட்டையும் நம் பேவரைட்

GEETHA ACHAL said...

ஆஹா...பஜ்ஜியினை போட்டு கலக்கிவிட்டிங்க அக்கா...டாப் டக்கர்...

எம் அப்துல் காதர் said...

@@ ஜெய்லானி said...

//சரி..சரி ..எல்லாத்திலேயும் நாலு நாலு. முட்டையில மட்டும் எட்டு பார்ஸல் பிளீஸ்//

அடப்பாவி மக்கா,, முட்டை பஜ்ஜியிலே எட்டு பார்சலா?? ஏற்கனவே குண்டா இருக்கிறீர்ன்னு யாரோ எப்பவோ காத்து வாக்கில சொன்னதாக கேள்வி!! இப்ப இது வேறயா?? நடக்கட்டும் நடக்கட்டும் அவ்வ்வ்வவ்....

எம் அப்துல் காதர் said...

//ஆமா மேடம் இதுக்கு ஏன் பஜ்ஜின்னு பேர் வந்துச்சு ???//

//பஜ்ஜி பொண்ணு பார்க்க வரும் போது மாப்பிள்ளைக்கு செய்து வைப்பாங்களே பஜ்ஜி சொஜ்ஜி அதான்//

நோ சமாலிபிஃகேசன் ஜலீலாக்கா!! கேள்வி என்னான்னு படிச்சீங்களா?? ஏன் பஜ்ஜின்னு பேர் வந்துச்சு?? ன்னு தான் அமைச்சர் கேட்டிருக்கார். அதுக்கென்ன பதில் சொல்லுங்க பார்ப்போம். ஹா.. ஹா.. (நாங்களும் தெரிஞ்சுக்குரோமே)

Jaleela Kamal said...

நன்றி சகோ ஜமால்.வெங்காய பஜ்ஜி எல்லோரின் பேவரிட்டும். சென்னையில் காந்தி பீச்சில் கிடைக்கும்ம்/

Jaleela Kamal said...

எம் அப்துல் காதர் பஜ்ஜின்னு ஏன் பெயர் வந்தது தெரியலையே யாராவ்து தெரிந்தால் சொல்லுங்கலேன்

Jaleela Kamal said...

நன்றி கீதா ஆச்சல்

சிநேகிதி said...

வித விதமான பஜ்ஜிகள் சூப்பராக இருக்கு.....
அக்காவின் கை மணத்தில் நிச்சயம் சுவையாக வும் இருக்கும்

Mohamed Ayoub K said...

ஒவ்வொரு வீடா(வலை) போயிக்கிட்டு இருக்கேன், எல்லோரும் நல்லாவே வரவேர்க்குராங்க, ஆனால் யாருமே நோன்பு திறக்க கூப்பிடவில்லை.பரவா இல்லை, அந்த மலிக்கா அக்காவுக்கு கோவமா என்னனு தெரியலை வாசலுக்கு வந்தவனே "வானு" ஒரு வார்த்தைக் கூட கூப்பிடலை.

பஜ்ஜியைப் பற்றிய குறிப்பு நல்லாத்தான் இருக்கு.

அமைச்சரின் கேள்விக்கு நான் அளிக்கிறேன் பதில் ( மங்குனி)

அமைச்சரே ...பஜ்ஜி என்பது நமது முன்னோர்களால்,பொழுதுப் போக்கிற்காக படைக்க பட்ட பண்டம்.

அன்றைய ராஜ சபையில் புழவர் ஓணாண்டி அவர்கள், மாமன்னருக்கு விருந்தோம்பல் ஒன்றை தமது வீட்டில் படைத்தார்.

அப்போது வைக்கப் பட்டதுதான் பஜ்ஜி, மன்னருக்கு பஜ்ஜியைப் பற்றி தெரியாதுனாலே உணவருந்திவிட்டு பஜ்ஜியை எடுத்து மீசையைத் துடைத்தார்.

இதைக் கண்ட புழவர் ஓணாண்டி அவர்கள் ஒருக் கவிதையினை பாடினார்.

விருந்தோம்பிய மன்னா .
விவரம் இல்லையே கண்ணா.
நான் படைத்தது பண்டமே.(பஜ்ஜி)
மீசையைத் துடைத்த முண்டமே.
பஜ்ஜி அறியாத மன்னனும் உண்டோ .
உஜ்ஜி கொட்டாத பாவையரும் உண்டோ.

இந்தக் கவிதையைக் கேட்ட மன்னர், புழவர் ஓணான்டிக்கு என்னப் பரிசாக கொடுத்திருப்பார்?

ஸாதிகா said...

அருமையான பஜ்ஜி வகைகள்.இந்த நோன்பில் உங்களது குறிப்பில் இருந்து நிறைய செய்து இருக்கிறேன் ஜலி.போட்டோவும் மறக்காமல் எடுத்து வைத்திருக்கிறேன்/

Viki's Kitchen said...

அக்கா உங்க பஜ்ஜி மேளா பார்த்து அசந்து போயிட்டேன். கலக்குறிங்க.

R.Gopi said...

அட...அட்....அட....அடடா....

எங்கெங்கு காணினிம் பஜ்ஜியடா.... ஹலோ... இன்னும் ஏதாவது வெரைட்டி பஜ்ஜி விட்டு போயிடுச்சான்னு சொல்லுங்க....

என்னோட ஃபேவரிட் வெங்காய பஜ்ஜி தான்....

Jaleela Kamal said...

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி பாயிஜா

Jaleela Kamal said...

சகோ,அய்யுப் வாங்க உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி,

உங்கள் கமெண்டை பதிவா போட்டாச்சு அங்கு தொடருங்கள்

Jaleela Kamal said...

விக்கி உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி கோபி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா