Wednesday, August 21, 2013

அரபிக் குபூஸ்/குபூஸ் செய்வது எப்படி?/குபூஸ் அரபிக் சப்பாத்தி/How to make Kuboos




அரபிக் குபூஸ் என்பது நாம செய்யும் சப்பாத்தி போல் தான். இது இங்கு துபாயில் எல்லா கடைகளிலும் கிடைக்கும். இதை விலையும் ரொம்ப கம்மி தான்.சிறிய வகை குபூஸில் இருந்து பெரிய குபூஸ் வரை எல்லா டிப்பாட்மெண்ட் ஷாப், குரோசரி கடைகளில் எல்லாம் கிடைக்கும். சமைக்காத நேரம் இதை வாங்கி கொண்டு வெங்காய முட்டையோ அல்லது புல்ஜெய் ஆஃப் பாயிலோ போட்டு சாப்பிடலாம் சுலபமாக வேலை முடியும்.ஆனால் வெளியில் வாங்குவது பிடிக்காததால் நானே செய்து கொடுப்பது. இது முன்பே பகிற எண்ணி எடுத்து வைத்த போட்டோக்கள் இப்போது தான் நேரம் கிடைத்தது,

அரபிகளுக்கு சாப்பாடு இருக்கோ இல்லையோ இந்த குபூஸ் கண்டிப்பாக இருக்கனும். நான் இங்கு வந்த புதிதில் இருந்து  செய்து வருகிறேன். ரொம்ப அருமையாக இருக்கும், முன்று நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம், ரொம்ப சாஃப்டாக இருக்கும், க்டையில் வாங்குவது பிரிட்ஜில் வைத்தால் கடக் முடக் என ஆகிவிடும்.

துபாய் மற்றும் சவுதியில் அரேபியர்கள் உடைய பேமஸான ரொட்டி இந்த குபூஸ். இந்தகுபூஸ் இல்லாமல் அவர்களுக்கு சாப்பாடு கிடையாது. எல்லா வகையான சாண்ட் விச்சுக்கும் இந்த ரொட்டி தான் உபயோகபடுத்துவார்கள்.


Wheat Kuboos





தேவையான பொருட்கள்
மைதா - முன்று டம்ளர்
கோதுமை மாவு - அரை டம்ளர்
ஈஸ்ட் - ஒரு பின்ச்
சர்க்கரை - இரன்டு தேக்கரண்டி
சூடான பால் - அரை டம்ளர்
உப்பு - அரை தேக்கரண்டி
பட்டர் - ஐம்பது கிராம்
HOW TO MAKE ARABIC KUBOOS (HOMEMADE ARABIC KUBOOS)
செய்முறை
சூடான தண்ணிரில் உப்பு,சர்க்கரை,சூடான பால் ,ஈஸ்ட்பட்டரை உருக்கி போட்டு கலக்கி கோதுமை,மைதா கலவையில் கலக்கவும்.
ஒரு கட்ட கரண்டி வைத்து கலக்குங்கள் அப்ப தான் கையில் மாவு ஒட்டாது கலக்கி நல்ல குழைத்து முன்று மணி நேரம்
அப்படியே வைக்கவும்.
மாவை சற்று தளர்த்தியாக குழைக்க வேண்டும்.



பிறகு பெரிய கமலா பழ சைஸ் உருண்டைகள் எடுத்து திக் சப்பாத்தியாக திரட்டி நான் ஸ்டிக் பேனில் போட்டு இருபுறமும் லேசாக சிவற விட்டு எடுக்கனும்.


நிறைய மாவு தோய்த்து சுடுவதால் பேனில் மாவு ஓட்டி கரிந்து விடும், அடுத்த குபூஸை திரட்டி போடும் போது கரிந்த மாவு அதில் ஒட்டும் ஆகையால் ஒரு ஈர துணி கொண்டு அப்ப அப்ப துடைத்து விட்டு போட்டால் நல்ல ப்ரஷாக போட்டு எடுக்கலாம்.

Maida Kuboos















குறிப்பு:
கிரில்லில் சுடும் சிக்கன் அயிட்டங்களுக்கும்,BBQ அயிட்டங்களுக்கும் தொட்டு சாப்பிடலாம். சில்லி சிக்கன்,பட்டர் சிக்கன் போன்றவைக்கும் தொட்டு கொள்ள நல்ல இருக்கும். குழந்தைகளுக்கு பட்டர் தடவியும் கொடுக்கலாம். 

இதே மாவிலேயே நாண், ரூமாலி ரொட்டி எல்லாம் தயாரிக்கலாம்.

Kuboos with Hamuus.

Kuboos with Grill Fish





இந்த குறிப்பு என் தங்கை பஷீராவுக்காக... 


குபூஸுக்கு மெயிலில் வந்த கமெண்ட்.

ஜலீலாக்கா
உங்க குறிப்பு படிச்சு செஞ்சு கொடுத்த குபூஸ் ரொட்டிக்கு எங்க வீட்ல பயங்கர வரவேற்பு.. தெரியுமோ :-)
--
அறுசுவை தோழி தளி கொடுத்த கமெண்ட்
Salaam Jaleelakka,
  i gave ur kuboos recipe to my mom one day(may be an year ago)..yday she called me and said now she iz preparing kuboos often and frm her my aunt also started preparing it...courtesy to you


12 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

குபூஸ் செய்து பார்ப்போம்... நன்றி சகோதரி...

ராஜி said...

பேரே வித்தியாசமா இருக்கு!! செஞ்சு பார்த்துட வேண்டியதுதான்

Anonymous said...

படங்களும் பதிவும் குபூஸ் செய்து பார்க்கத்
தூண்டுகின்றன.
பகிர்விற்கு நன்றி !

'பரிவை' சே.குமார் said...

நாங்க கடையில வாங்கித்தான் சாப்பிடுறோம்... படங்களுடன் அழகா விளக்கிட்டீங்க...

Learn said...

ரொம்ப நல்ல பதிவு

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

இளமதி said...

இங்கே கடைகளில் பார்த்திருக்கிறேன் ஜலீலா.
உங்க செய்முறை ஈஸியா இருக்கு. செய்து பார்க்கிறேன்.
மிக்க நன்றி ஜலீலா அறிவிப்பிற்கும்!

கோமதி அரசு said...

குபூஸ் செய்முறை படங்கள் அருமை. குபூஸ் ருசியும் நன்றாக இருக்கும், செய்து பார்க்க வேண்டும் ஜலீலா .

பிலஹரி:) ) அதிரா said...

அட்டகாசமாக இருக்கு க்பூஸ் ஜல் அக்கா... அதுக்கு கிரில்ட் ஃபிஸ்ஸாஆஆஅ? ஆவ்வ்வ்வ் சூப்பர்.. ஹெல்தி அண்ட் சூப்பர்.

vetha (kovaikkavi) said...

மிக இலேசாக உள்ளது செய்முறை எமது ரொட்டிகள் போல. மிக்க நன்றி சகோதரி.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

F.NIHAZA said...

குபுஸ்..வெளிநாடுகளில் குபுஸ்தான் தேசிய சாப்பாடு போலாகிவிட்டது..குறைந் விலை தான். ஒரு ரியாலுக்கு ஒரு பக்கற்றே கிடைக்குது என்றால் பாருங்களேன்...
குபுஸ்ல கூட ஒவ்வொரு ஸ்பெசல் இருக்கு..
ஈரானி குபுஸ் -ஈரான்..
படாணி குபுஸ்- பாகிஸ்தான்.
இப்படி பல....

பிலஹரி:) ) அதிரா said...

இனிய தாமதமான பிறந்ததின வாழ்த்துக்கள் ஜல் அக்கா. இது உங்கட பிறந்தநாள் குபூஸ்தானே?.. நான் கண்டு பிடிச்சிட்டனே....

மாதேவி said...

என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா