EXPO 2020 & 42nd U.A.E National Day Celebration 02.12.2013
வான வேடிக்கைகளுடன் கொண்டடப்படுகிறது .
நாங்க எங்கும் வெளியில் செல்வதிலை. சரியான டிராபிக்கில் மாட்டி கொள்ளனும், ஆகையால் பொறுமையாக இங்கு டீவியிலேயே கொஞ்சநேரம் பார்த்து கொள்வோம்.
ஓவ்வொரு வருடம் National Day யின் போது என் கணவரில் ஆபிஸில் அழகிய பரிசு பொருட்கள் நல்ல பாக்கிங் உடன் வரும். உயர்ந்த ரக சாக்லேட் வித விதமான பொருட்கள் போன வருடம் தஸ்பி ,UAE வண்ண கொடியி, தஸ்பி, மொபைல் வைக்கும் சின்ன உல்லன் பை மற்றும் பணம் வைக்கும் சுருக்கு பை
2012
2013
இந்த வருடம் UAE வண்ண கொடி கலர்ல் செய்த அழகான பூ கூடை மற்றும் பேனா , சாக்லேட் மற்றும் இந்த குளிருக்கு இதமான ஒரு மஃப்ளர்.
இவ்வள்வு செலவு செய்து அனைவருக்கும் கொடுக்கிறார்களே என்று கேட்ட போது என் கணவர் சொன்னார் இது கைத்தொழில் செய்து பிழைக்கும் ஏழை அரபிகளுக்கு இவர்கள் செய்யும் உபகாரம் என்றார்.
இந்த சமயத்தில் அவர்களிடம் வாங்கினால் அவர்களுக்கு நல்ல வியாபாரம் ஆகும் இல்லையா? அதற்காக தான் என்றார். இது நல்ல விஷியம் தானே
அதே போல் இங்கு எல்லா மால் களிலும் யு ஏ யி வண்ண கொடி கலரில் குடை , டீ ஷர்ட் , தலை குத்து கிளிப்புகள், பூக்கள்,சின்ன குழந்தைகளுக்கு அடுக்கு அடுக்கு கவுன் மற்றும் வாசலில் கட்டும் தோரணங்கள் எல்லாம் விற்க படுகின்றன. மக்களும் சந்தோஷமாக வாங்கி செல்கின்றனர்.
EXPO 2020 - Abdul Kader முக நூலில் பகிர்ந்தது
துபாய் என்ற
ஒரு நகரம் இல்லாமல் போயிருந்தால் இன்றைக்கு இந்தியாவில் பல்வேறு மாநிலத்தில்
வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அடித்தட்டு மட்டும் நடுத்தர மக்களின் வாழ்க்கை
முன்னேற்றம் கேள்விக் குறியாகியிருந்திருக்கும்.
பல மலையாளிகளும் தமிழர்களும் துபாயின் திர்ஹம்ஸை ஊதியமாகப் பெற்று. குடிசை வீடுகளை மாடி வீடுகளாக மாற்றி இருக்கின்றனர். தாயின், தந்தையின் கனவுகளை நிறைவேற்றி இருக்கின்றனர். வறுமையிலிருந்த எத்தனையோ சகோதரர்கள் தங்களின் சகோதரிகளுக்கு மணமுடித்து வைத்திருக்கின்றனர்.
அமீரகம் ஆன்மீகத்தோடு நெருங்கிய தொடர்புடைய நேர்மறை அதிர்வுகள் கொண்ட பூமி...! இங்கே உழைத்து பெறும் ஒவ்வொரு திர்ஹமும் பரக்கத்தானது. சிறு ஊதியம் பெற்றாலும் அவனால் எல்லாவற்றையும் ஓரளவிற்கு அவன் சொந்த ஊரில் நிகழ்த்திக் காட்ட முடிந்திருக்கிறது.
உலகின் பல்வேறு பகுதியிலிருந்து வந்து குடியமர்ந்திருக்கும் அத்தனை மக்களையும் மரியாதையுடனும், அன்புடனும் பாரபட்சமின்றி நடத்தும் அமீரகத்தின் அன்பு மிகக் கம்பீரமானது! பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அவர்கள் கொடுக்கும் முன்னுரிமையை, மரியாதையை இந்த உலகத்தின் இன்ன பிற நாடுகள் பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும்....!
இதோ கடந்த சிலமாதங்களாக ஒட்டு மொத்த அமீரகத்தின் அத்தனை குடிமக்களும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த எக்ஸ்போ 2020ல் துபாய் வென்றிருக்கிறது. அறிவால் இணைவோம் புதிய எதிர்காலத்தை உருவாக்குவோம் (Connecting minds creating the future) என்ற கருத்தாக்கத்தோடு களத்தில் நின்ற துபாயின் வெற்றி திடமான தொலை நோக்குப் பார்வை கொண்ட தெளிவான தலைமைத்துவத்தின் வெற்றி!
ஏற்கெனவே அசுரகதியில் இயங்கிக் கொண்டிருக்கும் துபாய் இன்னும் வேகமாக இயங்கப் போகிறது. அந்த பிரம்மாண்ட உழைப்பு உருவாக்கிக் கொடுக்கும் வாய்ப்புகளால் பல்வேறு தேசங்களைச் சேர்ந்த மனிதர்களின் வாழ்க்கை வளம் பெறப் போகிறது என்பது உறுதி....!
@ தேவா சுப்பையா

Tweet | ||||||
4 கருத்துகள்:
நல்ல பகிர்வு.இங்கு யுஏஇ நேஷனில் டே கொண்ட்டாட்டம் அருமையாக போய்க்கொண்டிருக்கிறது,
எங்களுக்கும் நேஷனல் டே கிஃப்ட் ஒரு அழகான அரபு பாரம்பரிய அலுமினியம் பாக்ஸில் ஒமானி ஹல்வா வந்தது.வாழ்த்துக்கள்,எஞ்சாய்.
துபாய்விட்டு நாங்கள் வந்து இரண்டு வருடங்கள் முடியபோகிறது.
துபாயை நாங்கள் ரொம்ப மிஸ் பண்ணுகிறோம்.
என் கடைசி பையன்(7 வயதாகிறது) அங்கு பிறந்தவன் என்பதால் அந்த நாட்டை மிகவும் நேசிப்பான்.டிசம்பர் 2 அன்று காலை எழுந்து வந்ததும்,அம்மா இன்றைக்கு என்ன டே சொல்லுங்கள் என்றான்.எனக்கோ விளங்கவில்லை.இன்றைக்கு துபாய் நேஷனல் டே மா என்றான்.அவன் சொல்லும் வரை எனக்கு நினைவில்லை.
இப்படி உங்களை போன்ற சிலரின் பகிர்வுகள் பார்க்கும்போது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது.உங்கள் பகிர்வுக்கு நன்றியும்,வாழ்த்துக்களும் அக்கா.
ரொம்ப மிஸ் பண்றோம்.
அழகிய பொருட்கள், பயனளிப்பவையும்கூட!!
// கைத்தொழில் செய்து பிழைக்கும் ஏழை அரபிகளுக்கு இவர்கள் செய்யும் உபகாரம் //
நல்ல விஷயம்.
நல்ல பகிர்வு!!
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா