Monday, November 28, 2016

கத்திரிக்காய் முள்ளங்கி சூப்


#Paleo #diet#soup
#veg##clear #soup #for #perfectdiet
#சைவம்
#பேலியோடயட்சூப்
\சூப்
#Brinjal #Radish
#பேலியோ 

டயட் சூப்/எடை குறைக்க/வெயிட் லாஸ்
எந்த டயட் ஆக இருந்தாலும்  ஒரு நல்ல ஆரோக்கியமான உணவு எதுன்னு கேட்டால் நான் அனைவருக்கும் பரிந்துரைப்பது சூப் தான்.

கீரை சாறு, காய்கறி தண்ணீ சாறு, இல்லை காய்கறி கீரை வகைகளை வேகவைத்து லேசாக ப்ளன்ட் செய்து அப்படியே குடிப்பது, சிக்கன் போன் சூப், மட்டன் நல்லி எலும்பு சூப், ஆட்டு கால் சூப், இறால் மற்றும் இறால் தலை சூப், மீன் தலை சூப் , நண்டு சூப் இப்படி பல வகை சூப் வகைகளை தயாரித்து குடித்தால் ஆரோக்கியமாக  வாழலாம்,
(அறுவை சிகிச்சை நடந்து சிலருக்கு சாலிட் டயட் சாப்பிட கூடாது அப்படி உள்ளவர்களுக்கு இப்படி சத்தாக தயாரித்து அதை சாற்றை மட்டும் வடித்து கொடுக்கலாம்)
டயட்டில் தண்ணீர் தான் 8 டம்ளர் குடிக்கனும் என்றில்லை சூப் ஜுஸ் பால் தயிர் எதுவாக இருப்பினும் சாப்பிடலாம்.

நோயாளிகளோ அல்லது இதய நோயாளிகளோ , ஜுரம், சளி, ஆர்தடைஸ் பிராப்ளம் உள்ளவர்கள் , தொண்டைபுண் வந்து ஒன்றும் சாப்பிட முடியவில்லை என்றால், குழந்தைகளுக்கு, கர்பிணி பெண்களுக்கு எல்லாருக்குமே ஒரு தெம்பான ஊட்ட சத்து அளிக்கும் ஒரு அருமையான சாப்பாடு வகை சூப் தான் , தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை குறைய வாய்ப்பு இருக்கு.
எந்த சூப்பாக இருந்தாலும் இஞ்சி அல்லது பூண்டு சேர்த்து செய்யுங்கள்


எல்லா வகையான காய்கறிகளிலும் , கீரை வகைகளிலும் இந்த சூப்பை செய்து சாப்பிடலாம்.
சுலபமான சூப் எப்படி செய்வது என பார்ப்போம்


தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் – முன்று
முள்ளங்கி – ஒரு துண்டு – 100 கிராம்
இஞ்சி துருவியது – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
மிளகு தூள் – கால் தேக்கரண்டி
தண்ணீர் – 4 டம்ளர்

செய்முறை

கத்திரிக்காய் முள்ளங்கி துருவி கொள்ளவும்.
ஒரு பெரிய வயகன்ற சட்டியில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதில் உப்பு,சீரகம், மஞ்சள் தூள், துருவிய கத்திரிக்காய், முள்ளங்கி மற்றும் இஞ்சியை சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகவிடவும்.
ஒரு டம்ளர் வற்றும் வரை தீயின் தனலை மிதமாக வச்சி வேக விடவும் ( ஸ்லோ குக்கர்).
பிறகு வடிகட்டி தேவைக்கு குடிக்கவும்.


கவனிக்க: இதை பிலன்டரில் லேசா பிளன்ட் செய்து வடிகட்டாமலும் குடிக்கலாம்.
சூப் உடன் கிரில்ட் சிக்கன் மட்டன் அல்லது கிரில் பனீர் வைத்து சாலட் உடன் சாப்பிடலாம்.அல்லது கறிவடை மட்டன் வடை, காய்கறி வடை இதுபோல பக்க உணவு செய்து சாப்பிடலாம்.
சூப் இரண்டு வகை ஒன்று சூப் கு தேவையான காய்களை வேகவைத்ட்து விட்டு அதை பிளன்ட் செய்து அப்படியே மறுபடி கொதிக்க வைத்து குடிப்பது.
மற்றொன்று வேகவைத்து அந்த சூப் சத்துக்களை வடிக்கடி குடிப்பது.
அதில் இது தண்ணீ சாறு சூப் , லிக்விட் டயட் எடுப்பவர்களுக்கு இது உதவும்.
இது போல நான் எல்லா காய்கறிகளிலும் அதாவது டேஸ்ட் இல்லாத காய்களில் செய்து சூப்பாக குடிக்கலாம். பாகற்காயில் கூட இப்படி செய்யலாம் ஆனால் கசப்பு தெரியாமல் இருக்க இதில் பொன்னாகன்னி கீரை மற்றும் கேரட் சேர்த்துகொள்ளலாம்.
( கேன்சர் உள்ளவர்களுக்கு நான் இது போல எல்லாகாய்கறிகளிலும் செய்து கொடுத்து இருக்கேன்) 8 வ்ருடம் முன் 15 நாளில் அவரின் #சோர்வை சரி செய்து இருக்கேன்.
ஆக்கம்

Samaiyalattakaasam Jaleela Kamal


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, November 15, 2016

அதிசய நிலா

நேற்று  14.11.16

அதிசிய நிலா
70 ஆண்டுக்கு ஒர் முறை
வானில் பூக்கும் முழு நிலா என்று எங்கு பார்த்தாலும் மெசேஜ்  நான் பார்க்க முடியுமா? ஆபிஸ் லிருந்து நேராக ஏதாவது பார்க்கில் போய் உட்கார்ந்து பார்க்கலாமா> இப்படி எல்லாம் நினைத்து கொண்டு கிளம்பும் போது   என்னால் எங்கும் போக முடியவில்லை.  
வீட்டுக்கே சென்று விட்டு சில வேலைகளை முடித்து விட்டு 

"பால்கனிய திறந்தால் கண் எதிரில் நிலா" ஒரு கனம் ஒன்றுமே புரியவில்லை இவ்ளோ கிட்ட பார்த்ததில்லை சுபுஹானல்லாஹ். 
மிக்க மகிழ்சி , உடனே இரண்டு கிளிக் கிளிக்கியாச்சு, சரி கொஞ்சம் நேரம் கழித்து இன்னும் சரியாக எடுக்கலாம் என்று போட்டோ எடுக்க போனால் அது அங்கிரு மறைந்து விட்டது . பிறகு தான் நினைத்துகொண்டேன் அது எனக்காகவே என் கண் முன் வந்து பிறகு மறைந்தது, அல்லாஹ் மிகக்கிருபையாளன். அல்லஹம்து லில்லாஹ்


இது என் டைரி போல தானே ஒரு நினைவு போல் என் சந்தோஷத்தை இங்கு  பதிந்து கொண்டேன்


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, November 12, 2016

காலிப்ளவர் தக்காளி சாதம்


தேவையான பொருட்கள்:
காலிப்ளவர் பூ - 200 கிராம்
தேங்காய் எண்ணை - இரண்டு தேக்கரண்டி
கடுகு
கருவேப்பிலை
பூண்டு
முந்திரி - 3 ( தேவைபட்டால்)
பழுத்த தக்காளி 2
சாம்பார் பொடி - ஒருதேக்கரண்டி
உப்பு தேவைக்கு

செய்முறை:
* காலிப்ளவர் பூவை வெண்ணீரை கொதிக்க விட்டு அதில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து வடிகட்டவும்/
* தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து தக்காளியை பொடியாக அரிந்து சேர்த்து சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி கூட்டு பதம் ஆகும் வரை வேக விடவும்.
* கடைசியாக வடித்து வைத்த காலிப்ளவரை சேர்த்து நன்கு கிளறி 2 நிமிடம் சிம்மில் வேக விட்டு இரக்கவும்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, November 10, 2016

மொரு மொருன்னு முருங்கக்கீரை அடை
moringa leaves adai/ Moringa pancake
தேவையானவை
கடலை பருப்பு – 50 கிராம்
உளுந்து – 25 கிராம்
நவதாணியம் - 100 கிராம்
உப்பு
பெருங்காயம் – கால் தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
பச்ச மிளகாய்  – 3
இஞ்சி – ஒரு இன்ச் அளவு
முருங்கக்கீரை - ஒரு கப்
எண்ணை - ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணை
செய்முறை
நவதானியவகைகளை தனியாக 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
பருப்பு வகைகளை தனியாக 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
மிக்சியில் மிளகாய், இஞ்சி கருவேப்பிலை சேர்த்து அரைத்து அரிசி சேர்த்து அரைக்கவும்.   பருப்பு வகைகளையும் சேர்த்து கொர கொரப்பாக முக்கால்பதத்துக்கு அரைத்து எடுக்கவும்.அரைத்த மாவில் தேவைக்கு உப்பு சேர்த்து முருகக்கீரையை சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்
.தோசை தவ்வாவில் தடிமனான தோசைகளாக சுற்றிலும் எண்ணை விட்டு இருபுறமும் மொருகலாக  சுட்டு எடுக்கவும்.
,இதற்கு புதினா சட்னியும் வெல்லமும் சூப்பர் காம்புனேஷன்.
.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, November 8, 2016

காலிப்ளவர் தேங்காய் சாதம்

#சைவபேலியோ
பெயர் : ஜலீலாகமால்
உணவுவகை : சாதம் வகைகள்
உணவுமுறை :பேலியோ
உணவின் பெயர் : காலிப்ளவ்ர் தேங்காய் சாதம்
காலிப்ளவர் தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள்:
துருவிய காலிஃப்ளவர் – கால் கிலோ
துருவிய தேங்காய் – அரை கப் (100 கிராம்)
தாளிக்க:
நெய் – 1 மேசைகரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கருவேப்பிலை சிறிது
பூண்டு – இரண்டு பல்
பச்சமிளகாய் – ஒன்று
காஞ்சமிளகாய் – ஒன்று
அலங்கரிக்க
கொத்துமல்லி தழை – சிறிது
துருவிய தேங்காய் - சிறிது
செய்முறை:
காலிப்ளவரை துருவி வெண்ணீரில் உப்பு போட்டு இரண்டு கொதி கொதிக்க விட்டு தண்ணீரை வடிக்கவும்.
ஒரு வாயகன்ற வானலியில் தாளிக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி காலிஃப்ளவர் மற்றும் தேங்காய் சேர்த்து ஒரு கை தண்ணீ தெளித்து வதக்கி முடிபோட்டு 3 நிமிடம் வேகவிட்டு இரக்கவும்.
கடைசியாக சிறிது கொத்துமல்லி தழை மற்றும் ப்ரஷ் தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிடவும்.

கவனிக்க: இதே போல காலிப்ளவ்ரில் தயிர் சாதம், தக்காளி சாதம், புளிசாதம், தேங்காய் சாதம், ஃப்ரைட் ரைஸ் என விரும்பியதை செய்து சாப்பிடலாம்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, November 6, 2016

இறால் பார்பிகியு/ கிரில் Prawn BBQ with Electric Grill#Prawn BBQ/Grill
இறால் பார்பிகியு
பெரிய இறால் - அரைகிலோ
மிளகாய் தூள் - தேக்கரண்டி
உப்பு - முக்கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னறை தேக்கரண்டி
லெமன் -ஜுஸ் ஒரு பழம்
ஆச்சி கபாப் மசாலா - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணை - இரண்டு மேசைகரண்டி
பார்பிகியு ஸ்டிக் - தேவையான அளவு
செய்முறை


பார்பிகியு ஸ்டிக்கை தண்ணீரில் ஊறவைக்கவும்.
இறாலை நன்கு சுத்தம் செய்து முதுகில் வயிற்றில் உள்ள அழுக்குகளை எடுத்து விட்டு நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள மசாலாக்களை இறாலில் தடவி அரை மணி நேரம் மேரினேட் பண்ணவும்.
ஊற வைத்த பார்பிகியு ஸ்டிக்கில் மேரினேட் செய்த இறாலை இடைவெளி விட்டு சொருகி இரண்டு புறமும் 10, 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
இது எலக்ரிக் பார்பிகியு அடுப்பில் செய்தது
20 நிமிடத்தில் தயாராகிடும்
இந்த அடுப்பை பயன் படுத்தும் விதம்
இதன் அடியில் மார்க் செய்துள்ள கோடு வரை தண்ணீரை நிறப்பவும்.மேலே உள்ள கம்ம்பியில் பட்டர் தடவி சொருகி வைத்துள்ள கம்பியை வைத்து இருபுறமு பார்பிகியு செய்யவும்.
சூட்டின் அளவை கூட்டலாம் குறைக்கலாம்.
சுவையான இறால் பார்பிகியு 65 ரெடி.
இதற்கு சைட் டிஷ் அவகோடா பாதாம் ஹமூஸ் அண்ட் சாலட்
ஆக்கம்
#ஜலீலாகமால்
பேலியோ டயட் ரெசிபி கிரில் ரெசிபி
#paleospecial recipe


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/