Sunday, November 6, 2016

இறால் பார்பிகியு/ கிரில் Prawn BBQ with Electric Grill



#Prawn BBQ/Grill
இறால் பார்பிகியு
பெரிய இறால் - அரைகிலோ
மிளகாய் தூள் - தேக்கரண்டி
உப்பு - முக்கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னறை தேக்கரண்டி
லெமன் -ஜுஸ் ஒரு பழம்
ஆச்சி கபாப் மசாலா - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணை - இரண்டு மேசைகரண்டி
பார்பிகியு ஸ்டிக் - தேவையான அளவு
செய்முறை


பார்பிகியு ஸ்டிக்கை தண்ணீரில் ஊறவைக்கவும்.
இறாலை நன்கு சுத்தம் செய்து முதுகில் வயிற்றில் உள்ள அழுக்குகளை எடுத்து விட்டு நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள மசாலாக்களை இறாலில் தடவி அரை மணி நேரம் மேரினேட் பண்ணவும்.
ஊற வைத்த பார்பிகியு ஸ்டிக்கில் மேரினேட் செய்த இறாலை இடைவெளி விட்டு சொருகி இரண்டு புறமும் 10, 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
இது எலக்ரிக் பார்பிகியு அடுப்பில் செய்தது
20 நிமிடத்தில் தயாராகிடும்
இந்த அடுப்பை பயன் படுத்தும் விதம்
இதன் அடியில் மார்க் செய்துள்ள கோடு வரை தண்ணீரை நிறப்பவும்.மேலே உள்ள கம்ம்பியில் பட்டர் தடவி சொருகி வைத்துள்ள கம்பியை வைத்து இருபுறமு பார்பிகியு செய்யவும்.
சூட்டின் அளவை கூட்டலாம் குறைக்கலாம்.
சுவையான இறால் பார்பிகியு 65 ரெடி.
இதற்கு சைட் டிஷ் அவகோடா பாதாம் ஹமூஸ் அண்ட் சாலட்
ஆக்கம்
#ஜலீலாகமால்
பேலியோ டயட் ரெசிபி கிரில் ரெசிபி
#paleospecial recipe


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா