Thursday, December 1, 2016

சப்ஜி பிரியாணி ( காய்கறி பிரியாணி)

சப்ஜி பிரியாணி ( காய்கறி பிரியாணி) -Vegetable Biriayni



              
தரமான பாசுமதி அரிசி – 600 கிராம்
வெங்காயம் – 300 கிராம்
தக்காளி – 300 கிராம்
எண்ணை – 150 மில்லி
பட்டை  ஒரு இன்ச் சைஸ்
இஞ்சி பூண்டு பேஸ்ட்  மூன்று மேசைகரண்டி
கொத்துமல்லி புதினா  அரைகப்
பச்சமிளகாய்  4
தயிர்  - இரண்டு மேசை கரண்டி
எலுமிச்சை பழம் சிறியது  அரை + அரை
உப்பு தேவைக்கு
மிளகாய் தூள்  ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள்  அரை தேக்கரண்டி


காய் கறி வகைகள்
உருளை கிழங்கு  - 100 கிராம்
கேரட் – 50 கிராம்
பீட்ரூட் – 50 கிராம்
பட்டாணி – 50 கிராம்
கார்ன்  - 50 கிராம்
காலிப்ளவர்  - 25 கிராம்
பீன்ஸ் – 25 கிராம்


செய்முறை

காய்கறிகள் அனைத்தையும் கழுவி ரிந்து வைக்கவும்.
வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் அரிந்து வைக்கவும்.
கொத்துமல்லி புதினாவை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி வைக்கவும்.
அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
வாயகன்ற நான்ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி காயவைத்து எண்ணையை ஊற்றி
 சூடாக்கி பட்டை , லவங்கம், ஏலம் சேர்த்து தாளிக்கவும்.
பிறகு வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்து இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கி தீயின் தனலை குறைவாக வைத்து
 பச்சை வாடை போனதும் உருளை, கேரட் சேர்த்து வதக்கவும்.பீட்ரூட் சேர்த்து வதக்கவும். கொத்துமல்லி புதினா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தககாளி மற்றும் பச்சமிளகாய் 
சேர்த்து சிறிது உப்பும் போட்டு சிம்மில் வைத்து 5 நிமிடம் வேக விடவும்.
தக்காளியை குழைவாகும் வரை கிண்டி மீதி உள்ள காலிப்ளவர், பீன்ஸ், பட்டாணி, கார்ன், தயிர் சேர்த்து நிமிடம் வேகவிட்டு வதக்கவும்.
அடுத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தூள், ஆகியவை சேர்த்து நன்கு வதக்கி சிம்மில் 10 நிமிடம் விடவும்,
வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் ஊறவைத்த அரிசியை சேர்த்து உப்பு போட்டு முக்கால் வேக்காடாக வேகவிடவும், அரிசி ஒன்றோடு ஒன்றாக ஒட்டாமல் இருக்க ஒரு ஸ்பூன் எண்ணை மற்றும் லெமன் சாறு சேர்த்து வடிக்கவும்.
 வடித்த அரிசியை வைத்துள்ள காய்கறி அக்னியில் அரிசியை தட்டி மேலே கேசரி கலர் பொடி கரைத்து தெளித்து, புதினா கொத்துமல்லி தூவி சிறிது நெய் ஊற்றி 20 நிமிடம் தம் போட்டு இரக்கவும்.


கவனிக்க : பீட்ரூட் சேர்த்தால் கலர் மாறும், பீட்ரூட்டை ஒரு நாள் முன்பே அரிந்து பிரிட்ஜில் வைத்தால் அப்படி அதிகமாக கலர்மாறாமல் இருக்கும்.

Tag:Vegetable Biriyani,காய்கறி பிரியாணி, பார்டி உணவு,Party Special,

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

2 கருத்துகள்:

கோமதி அரசு said...

அருமை.

Unknown said...

super madam

good info

www.nattumarunthu.com nattu marunthu kadai online

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா