தேவையானவை
வேகவைத்த வேர் கடலை - அரை கப்
வெள்ளரி - அரை
கேரட் - அரை
சாட் மசாலா - அரை தேக்கரண்டி
உப்பு - அரைதேக்கரண்டி
சர்க்கரை - இரண்டு சிட்டிகை
எலுமிச்சை - அரை பழம்
செய்முறை
வேகவைத்த வேர்கடலையுடன் வெள்ளரி , காரட்டை பொடியாக அரிந்து போட்டு சாட் மசாலா, உப்பு,சர்க்கரை,சேர்ந்த்து குலுக்கி, எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடவும்.
டயட் செய்பவர்களுக்கு பெஸ்ட் பிரேக் பாஸ்ட், ஒரு பவுள் ஃபுல்லா சாப்பிட்டு, ஃபுருட் ஜூஸ் குடித்தால் நல்ல பில்லிங்காக இருக்கும்.
இதில் இன்னும் அவல் சிறிது தண்ணீரில் ஊறவைத்து பிழிந்து சேர்க்கலாம். கொத்துமல்லி தழை, மற்றும் மாங்காய் இருந்தால் அதையும் சேர்த்து கொள்ளலாம்.
Tweet | ||||||
20 கருத்துகள்:
காலையில் நல்ல சலாட் :)
வாழ்க வளமுடன்
ஹை சலாட் எனகே எனக்குதான் :)))
illa illa naan vanduten pangu poda
//வேகவைத்த வேர் கடலை - அரை கப்//
வேக வைத்து வேர்கடலை உங்க ஊர்ல கிடைக்குதா ? எங்க ஊர்ல வேர்கலலைய வாங்கி நாம தான் வேக வைக்கணும் ..
வித்தியாசமான,சத்தான சாலட்.
சீனி போட்டு இந்த salad சாப்பிட்டது இல்லை.... இனிக்காம இருக்குமா?
அக்கா வேர்கடலை எனக்கு மிகவும் பிடிக்கும் பதிவு நல்லாயிருக்கு அக்கா வீட்டில் செய்ய சொல்லணும். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந் வாழ்த்துக்கள்
//வேக வைத்து வேர்கடலை உங்க ஊர்ல கிடைக்குதா ? எங்க ஊர்ல வேர்கலலைய வாங்கி நாம தான் வேக வைக்கணும் .. //
மங்குனி அமைச்சர் என்பதை நொடிக்கொருதரம் நிறுபிக்கிறீர். :)
வேர்கடலை அதிகமா சாப்பிட்டா பித்தம்பாங்களே உண்மையா அக்கா.
ஜலிகா எனக்கு ரெம்ப பிடிச்ச ஐடம் இது கூடவே கொஞ்சம் மிக்சர் சேர்த்து சாப்ட்டா இன்னும் சுவையா இருக்கும்...நன்றி ...
Looks sooooooo Good!!!!!
எங்கள் ஊரில் உடனேயே பறித்த கச்சானைத் தான் அவிப்பார்கள். சாதாரணமாக கடையில் கிடைக்கும் உடைத்த கச்சனை அவிக்கலாம் என்று எங்கோ படித்தேன். உண்மைதானா அக்கா? எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா, அம்மா கரட்டை கிரேட் பண்ணிப் போடுவாங்க. ஐ மிஸ் இட்.
ஆனால் சீனி போடுவதில்லை. அம்மா கொஞ்சம் காரமாகத் தான் செய்வார். இனிக்காதா இது?
வேர்க்கடலை நிறைய சாப்பிட்டால் “பித்தம்” இல்லையா?
இல்லையென்றால், வேகவைத்தால் ஓகேவா?
சூப்பர் ஆ இருக்கு
ஹெல்தியான சாலட் அக்கா
சிம்பிளா இருக்கு, வூட்டு அம்மனி துனையில்லாம, நனே செய்து சாப்பிட்டுகிறேன்:)
veekavaiththa veerkadalai piththam kidaiyaathu
anaivarrukkum nanRi
சாலட் நன்றாக இருக்கின்றது சகோதரி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
நன்றி ஹைஷ்
உங்களுக்கே தான் எடுத்து கொள்ளுங்கள்
சரி ஒகே எல் கே விற்கும் இதில் பங்குண்டு,
மங்கு அதெல்லாம் உங்கல் தங்கமணி கிட்ட சொல்லுங்க.
நன்றி ஸாதிகா அக்கா
சித்ரா சீனிய நிறைய போடுவதில்லை ருசி அதிகரிக்க சிறிது. நல்ல இருக்கும் இனிக்காது.
நன்றி சசி தம்பி
அக்பர் வேர்கடலை அதிகம் சாப்பிட்டால் பித்தம் என்பது வறுத்த வேர்கடலைய தான் சொல்லுவாங்க.
வேகவைத்தது ஒன்றும் செய்யாது.
நன்றி சீமான் க்னி
நன்றி ஜெய்லானி விருதுக்கு மிக்க நன்றி
நன்றி தெய்வ சுகந்தி
அனாமிகா கேரட்டும் சேர்க்கலாம்.
கருத்திட்டமைக்கு மிக்க நன்றி
கோபி வேகவைத்த வேர்கடலையில் ப்பித்தம் கிடையாது
நன்றி சௌமியா
நன்றி மலிக்கா
நன்றி ஜெய்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா