Saturday, July 17, 2010

பிஸி பேளா பாத்


ஈசியாக குக்கரில் பிஸிபேளா பாத் ரெடி செய்துடலாம்தேவையானவை
அரிசி = இரண்டு டம்ளர்
துவரம் பருப்பு = ஒரு டம்ளர்
வேர்கடலை = 100 கிராம் (வேகவைத்தது)
புளி = லெமென் சைஸ்
வருத்து திரிக்க‌ப்பொடி
த‌னியா (முழு கொத்தும‌ல்லி) = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி
மிள‌காய் வ‌த்த‌ல் = எட்டு
க‌ட‌லை ப‌ருப்பு = இர‌ண்டு மேசைக‌ர‌ண்டி
சீர‌க‌ம் = ஒரு தேக்க‌ர‌ண்டி
தேங்காய் துருவ‌ல் = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி
ப‌ட்டை = இர‌ண்டு அங்குல‌ம் அளவு
கிராம்பு முன்று
வெந்த‌ய‌ம் = கால் தேக்க‌ர‌ண்டி
க‌ருவேப்பிலை = முன்று ஆர்க்
பெருங்காயத்துண்டு = சிறியது.
தாளிக்க
எண்ணை = ஒரு மேசைக‌ர‌ண்டி
கடுகு = ஒரு தேக்கரண்டி
சின்ன‌ வெங்காய‌ம் = 12
பூண்டு = மூன்று (தேவைப்படால்)
கருவேப்பிலை = சிறிது
த‌க்காளி = இர‌ண்டு
கேர‌ட் = ஒன்று
பீன்ஸ் = 10
நெய் = ஒரு குழி க‌ர‌ண்டி
கொத்தும‌ல்லி த‌ழை = சிறிது( க‌டைசியாக‌ மேலே தூவ‌)

செய்முறை
1.காலையில் செய்து பள்ளிக்கோ, ஆபிஸுக்கொ, இல்லை டூர் போக எடுத்து செல்ல‌ இரவே பாதி வேலையை தயார் செய்து விடலாம்.
2. வருத்து பொடிக்க கொடுத்தவைகளை சிறிது எண்ணை விட்டு சீரகத்தை தவிர வருக்கவும், (வருக்கும் போது கருகாமல் வருக்கவும்.இரக்கியதும் சீரகம் சேர்க்கவும்.3.புளியை அரை டம்ளர் தண்ணீரில் ஊறவிடவும்.4.அரிசி பருப்புவகைகளை ஊறவைத்து விடலாம்.வேர்கடலையையும் ஊறவைக்கவும்.
5.காலையில் முதலில் வருத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை பொடிக்கவும்.குக்கரை ஆன் செய்து அதில் எண்ணை விட்டு க‌டுகு,க‌ருவேப்பிலை, சின்ன‌ வெங்க‌ய‌ம், பூண்டு சேர்த்து தாளித்து, த‌க்காளி , பீன்ஸ், கேர‌ட்டை வ‌த‌க்க‌வும்.


அடுத்து ஊறிய அரிசி பருப்பு, வேர்கடலை,சேர்த்து ஒரு கப்புக்கு இரண்டறை டம்ளர் வீதம் தண்ணீர் சேர்த்து ஊற்றவும்.அப்படியே குக்கரை மூடாமல் கொதிக்க விட்டு புளியையும் கரைத்து ஊற்றி, வருத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து நெய் சிறிது சேர்த்து குக்கரை மூடி வெயிட் போட்டு முன்றாவது விசில் விட்டு இரகக்வும்


//பிஸிபேளா பாத் வேறு, சாம்பார் சாதம் வேறு.//
சாம்பார் சாதம், காய்களை வேகவைத்து சாம்பார் போல தயாரித்து, அரிசி பருப்பை தனியாக வேகவைத்து கடைசியில் எல்லாவற்ற்றையும் ஒன்று சேர்த்து தாளிக்கனும்.
பிஸி பேளா பாத் அதற்கென பொடித்யாரித்து செய்யனும், அந்த பொடியின் மணம் ஜோராக இருக்கும்.
இது தேங்காய் துருவல் சேர்த்தால் வருக்கவும் பொடிக்கவும் வசதியக இருக்கும். நான் அவசரத்துக்கு பத்தையை கட் செய்து போட்டுள்ளேன்.
தேங்காய் பத்தைக்கு பதில் கொப்பரை தேங்காய் கிடைத்தால் ருசி அபாரமாக இருக்கும்.
அப்படியே பொட்டு கடலை, கசகசா சிறிது சேர்த்து செய்தாலும் நல்ல இருக்கும்.

இதற்கு தொட்டு கொள்ள அப்பளமே போதுமானது , நான் காலிபிளவர், உருளை வறுவல் செய்து இருக்கேன்.


15 கருத்துகள்:

Umm Mymoonah said...

Looks very delicious, nice explanation too. I'm hosting a event this month in my blog regarding iftar, i would like your support by sending me your entries. Please check the details here:
http://tasteofpearlcity.blogspot.com/2010/07/iftar-moments-hijri-1431-event.html

Starjan (ஸ்டார்ஜன்) said...

புதுசா இருக்கே...

Vijiskitchencreations said...

நம்ம வீட்டுல அடிக்கடி இது தானுங்க. எங்க வீட்டு பிஸியும் இதே போல் தான். சில நேரம் பொடி தயாரித்து செய்வேனெ, அவசரத்திற்க்கும் இருக்கவே இருக்கு எம்.டி.ஆர். பிஸி பௌடர். உண்மை சொல்லனும் என்றால் ப்ரெஸ்ஸா செய்து சாப்பிடால் தான் ருசி. எப்ப ஊரில் இருந்து திரும்பினிங்க. பயனம் எப்படி இருந்தது.

Aruna Manikandan said...

hmmmmm.... supera irruku :-)

Menaga Sathia said...

very nice recipe!!

தெய்வசுகந்தி said...

நானும் அடிக்கடி செய்யறது இது. ஈசியா வேலை முடிஞ்சுரும்.

R.Gopi said...

பூண்டு சேர்க்காத பிஸிபேளாபாத் சூப்பர் டேஸ்டா இருக்கும்....

நல்ல பிஸிபேளாபாத் சாப்பிட்டு வெகுநாட்களாகிறது....

Kanchana Radhakrishnan said...

super recipe.

Geetha6 said...

wav!!!! tasty and delicious ...super!

சாருஸ்ரீராஜ் said...

very nice recepie

பாத்திமா ஜொஹ்ரா said...

வழக்கம்போல அருமை,அக்கா

Asiya Omar said...

பிஸிபேளாபாத் பார்க்க அருமையாக இருக்கு.

ஸாதிகா said...

உங்கள் முறையிலும் ஒரு முறை செய்து பார்க்கிறேன் பிஸி பேளாபாத்.

Jaleela Kamal said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி உம்மு மைமூன்,

ஸ்டார்ஜன் மிக்க நன்றி

விஜி நீங்க வெஜ் ராணி உங்க கிட்ட நிறக முடியாது. பிஸி பொடி தனியாக விற்கிறதா?

Jaleela Kamal said...

நன்றி அருனா

நன்றி மேனகா

நன்றி தெய்வ சுகந்தி

நன்றி கோபி, உங்களை பேச்சுலர் பாடு பாவம் தான்.

நன்றி கீதா

நன்றி காஞ்சனா

நன்றி சாரு


நன்றி பாத்திமா

நன்றி ஆசியா

நன்றி ஸாதிகா அக்கா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா