Thursday, July 29, 2010

பேரித்தம் பழம் இனிப்பு சட்னி - dates sweet chutney


குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும், நல்ல எனர்ஜியும் கிடைக்கும், கிஸ்மிஸ் பழம் சேருவதால் சளி தொல்லைக்கும் குட் பை சொல்லலாம்.
தேவையான பொருட்கள்
பேரித்தம் பழம் - எட்டு
கிஸ்மிஸ் பழம் - பதினைந்து
புளி - ஒரு கொட்டை பாக்குஅளவு
உப்பு - ஒரு பின்ச்
வெல்லம் - ஒரு பிட்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி (வருத்தது)
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி



செய்முறை
முதலில் கிஸ்மிஸ் பழம், பேரித்தம் ,புளியை கொட்டை நீக்கி விட்டு முன்றையும் கழுவி ஒரு பவுளில் வைத்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவில் இரண்டு நிமிடம் வேக வைத்து வெளியில் எடுத்து ஆறவைக்க வேண்டும்.
ஆறியதும் அதை மிக்சியில் போட்டு அதனுடன், வெல்லம்,உப்பு,சீரகம், மிளகாய் தூள் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
சுவையான இனிப்பு சட்னி ரெடி.
குறிப்பு:பஜ்ஜி, சமோசா, வடை போன்றவைகளுக்கு தொட்டு சாப்பிடலாம்--



Thursday, July 22, 2010

ஜோவர் ஆட்டா,ராகி லட்டு

தேவையானவை

ஜோவர் ஆட்டா - அரை கப்
சர்க்கரை - இரண்டு மேசை கரண்டி
ராகி - கால் கப்
நெய் ஒரு மேசை கரண்டி
நட்ஸ் - இரண்டு மேசை கரண்டி (பொடியாக அரிந்தது)
ஏலக்காய் - ஒன்று



செய்முறை
1. நட்ஸ் வகைகளை நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.

2. ஜோவர் ஆட்டா, ராகியை லேசாக வறுக்கவும்.
சர்க்கரையை ஏலக்காயுடன் சேர்த்து பொடித்து கொள்ளவும்.

3. மாவுடன் சர்க்கரை, நட்ஸ் சேர்த்து சிறிது நெய் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.

4. இதன் மனமும் ருசியும் சொல்ல வார்த்தைகள் இல்லை.



விஜியின் ராகி லட்டு பார்த்ததும் ஜோவர் ஆட்டாவில் இதை செய்து பார்த்தேன்.

ஜோவர் ஆட்டா என்றால் தினை மாவு.




Saturday, July 17, 2010

பிஸி பேளா பாத்










ஈசியாக குக்கரில் பிஸிபேளா பாத் ரெடி செய்துடலாம்



தேவையானவை




அரிசி = இரண்டு டம்ளர்
துவரம் பருப்பு = ஒரு டம்ளர்
வேர்கடலை = 100 கிராம் (வேகவைத்தது)
புளி = லெமென் சைஸ்
வருத்து திரிக்க‌ப்பொடி
த‌னியா (முழு கொத்தும‌ல்லி) = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி
மிள‌காய் வ‌த்த‌ல் = எட்டு
க‌ட‌லை ப‌ருப்பு = இர‌ண்டு மேசைக‌ர‌ண்டி
சீர‌க‌ம் = ஒரு தேக்க‌ர‌ண்டி
தேங்காய் துருவ‌ல் = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி
ப‌ட்டை = இர‌ண்டு அங்குல‌ம் அளவு
கிராம்பு முன்று
வெந்த‌ய‌ம் = கால் தேக்க‌ர‌ண்டி
க‌ருவேப்பிலை = முன்று ஆர்க்
பெருங்காயத்துண்டு = சிறியது.
தாளிக்க
எண்ணை = ஒரு மேசைக‌ர‌ண்டி
கடுகு = ஒரு தேக்கரண்டி
சின்ன‌ வெங்காய‌ம் = 12
பூண்டு = மூன்று (தேவைப்படால்)
கருவேப்பிலை = சிறிது
த‌க்காளி = இர‌ண்டு
கேர‌ட் = ஒன்று
பீன்ஸ் = 10
நெய் = ஒரு குழி க‌ர‌ண்டி
கொத்தும‌ல்லி த‌ழை = சிறிது( க‌டைசியாக‌ மேலே தூவ‌)

செய்முறை




1.காலையில் செய்து பள்ளிக்கோ, ஆபிஸுக்கொ, இல்லை டூர் போக எடுத்து செல்ல‌ இரவே பாதி வேலையை தயார் செய்து விடலாம்.
2. வருத்து பொடிக்க கொடுத்தவைகளை சிறிது எண்ணை விட்டு சீரகத்தை தவிர வருக்கவும், (வருக்கும் போது கருகாமல் வருக்கவும்.இரக்கியதும் சீரகம் சேர்க்கவும்.



3.புளியை அரை டம்ளர் தண்ணீரில் ஊறவிடவும்.



4.அரிசி பருப்புவகைகளை ஊறவைத்து விடலாம்.வேர்கடலையையும் ஊறவைக்கவும்.
5.காலையில் முதலில் வருத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை பொடிக்கவும்.







குக்கரை ஆன் செய்து அதில் எண்ணை விட்டு க‌டுகு,க‌ருவேப்பிலை, சின்ன‌ வெங்க‌ய‌ம், பூண்டு சேர்த்து தாளித்து, த‌க்காளி , பீன்ஸ், கேர‌ட்டை வ‌த‌க்க‌வும்.






அடுத்து ஊறிய அரிசி பருப்பு, வேர்கடலை,சேர்த்து ஒரு கப்புக்கு இரண்டறை டம்ளர் வீதம் தண்ணீர் சேர்த்து ஊற்றவும்.



அப்படியே குக்கரை மூடாமல் கொதிக்க விட்டு புளியையும் கரைத்து ஊற்றி, வருத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து நெய் சிறிது சேர்த்து குக்கரை மூடி வெயிட் போட்டு முன்றாவது விசில் விட்டு இரகக்வும்






//பிஸிபேளா பாத் வேறு, சாம்பார் சாதம் வேறு.//
சாம்பார் சாதம், காய்களை வேகவைத்து சாம்பார் போல தயாரித்து, அரிசி பருப்பை தனியாக வேகவைத்து கடைசியில் எல்லாவற்ற்றையும் ஒன்று சேர்த்து தாளிக்கனும்.
பிஸி பேளா பாத் அதற்கென பொடித்யாரித்து செய்யனும், அந்த பொடியின் மணம் ஜோராக இருக்கும்.
இது தேங்காய் துருவல் சேர்த்தால் வருக்கவும் பொடிக்கவும் வசதியக இருக்கும். நான் அவசரத்துக்கு பத்தையை கட் செய்து போட்டுள்ளேன்.
தேங்காய் பத்தைக்கு பதில் கொப்பரை தேங்காய் கிடைத்தால் ருசி அபாரமாக இருக்கும்.
அப்படியே பொட்டு கடலை, கசகசா சிறிது சேர்த்து செய்தாலும் நல்ல இருக்கும்.

இதற்கு தொட்டு கொள்ள அப்பளமே போதுமானது , நான் காலிபிளவர், உருளை வறுவல் செய்து இருக்கேன்.














Sunday, July 11, 2010

சாதம் குழைந்து விட்டால் என்ன செய்யலாம்?



சாதம் குழைந்து விட்டால் என்ன செய்யலாம்.
சில பேருக்கு சாதம் குழந்தை விட்டால் சில பேருக்கு பிடிக்காது.
அதற்கு சாதம் குழைந்தால் இரண்டு மடங்கு அதிகரிக்கும். எடுக்க எடுக்க வந்து கொண்டே இருக்கும்.


1. சுட சுட ரசம் செய்து பிசைந்து சாப்பிடலாம்.
2. ரைஸ் சிப்ஸ் செய்யலாம் ( இது ஈரானிகள் செய்வது) குட்டி குட்டியா தட்டை வடிவத்தில் தட்டி ,என்னையில் வடை பொரிப்பது போல் பொரித்து ருசிக்கு ஏற்றார் போல மசாலா போட்டு சாப்பிடலாம்.
3. தயிர் சாதம் செய்து சாப்பிடலாம்.
4 பொங்கல் தாயாரிக்கலாம்.
5. சாம்பார் சாதம், பிஸி பேளா பாத் செய்யலாம்.
6 நோன்பு கஞ்சி, வெள்ளை மற்றும் மட்டன், சிக்கன், வெஜ் கஞ்சி தயாரிக்கலாம்.
7. ரைஸ் பகோடா தயாரிக்கலாம்.
8. தயிர் சாதம் தயாரிக்கலாம்.
9. மோர் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்.


டயட் செய்பவர்கள் ஏன் அரிசி உணவை தவிர்கக் வேண்டும்.
ஒரு கப்பு ரைஸ் வடிக்கும் போது வடிக்காமல் அப்படியே வைத்து பாருங்கள் ரொம்ப பொங்கி நிற்கும்.
அது போல் தான் நாம் சாப்பிடும் போதும் வயிற்றில் பொங்கி நிற்கும்.அதான் ஒரு கரண்டி சாப்பிட சொல்கிறார்கள்.
முன்று நாலு கரண்டி வைத்து தம் கட்டினால் ரொம்ப மஸ்தாகி வெயிட் போடும்.
அரிசி உணவில் பைபர் ஜாஸ்தி மூளைக்கு ரொம்ப நல்லது. அதான் எல்லா பெரிய வெளிநாட்டு கம்பேனியிலும் அங்கு செயல் படுவது நம் இந்தியனின் மூளை தான்.
நம்ம் மக்களுக்கு ஒரு பிடி சோறு சாப்பிட்டாதான் இரவில் தூக்கமே வரும் என்பார்கள்.









Thursday, July 8, 2010

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்

ப்பலோ மருத்துவமனை "Billion Hearts Beating" என்றொரு நல்ல பணியை துவக்கியுள்ளனர். இது பற்றி மேலும் அறிய http://www.billionheartsbeating.com/ என்ற இணைய தளத்தை பாருங்கள்.

குறிப்பாக இந்த பக்கத்தில் "இதயத்தை பாதுகாக்க யோசனைகள்" என்ற தலைப்பில் இவர்கள் தந்துள்ள குறிப்புகள் பயன் தரக்கூடியவை . கிட்டத்தட்ட 92 யோசனைகள் அவர்கள் தந்துள்ளனர்.

அதில் சில முக்கியமான குறிப்புகள் மட்டும் மெயிலில் வந்துள்ளது, அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


.

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்


***********
1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.

2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.

3. உடல் எடை குறைவு - சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும். குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம்.

4. நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம். அவற்றை குறைவாக, அவ்வபோது சாப்பிடுங்கள்.

5. மீனில் சில நல்ல அமிலங்கள் இருப்பதால், மீன் சாப்பிடுவது நம் இதயத்துக்கு நல்லது.

6. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுங்கள். ப்ரிட்ஜில் வைக்கப்படும் காய் - பழங்கள் 50 முதல் 60 % வரை சத்துக்களை இழக்கின்றன.

7. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.

8.உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும் உபயோகபடுதாதீர்கள்.

9.புகை பிடிப்பதும் அதிக எடையுடன் இருப்பதும் இதயத்துக்கு அதிக தீங்கை விளைவிக்கும்.

10. தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.

11. சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதியாய் இருங்கள்.

12. மிக சிறிய , உபயோகம் இல்லாத விஷயங்களால் தான் பெரும்பாலும் (90 %) நமக்கு மனச்சுமை (Stress) வருகிறது.

13. மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.

14. எல்லா விஷயங்களும் மிக சரியாக (perfect ) இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள். நீங்கள் perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள். இது உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.

15. சில வேலைகளை பிறரிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள் ( Delegate ).

16.கோபம், வருத்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளி காட்டி விடுங்கள். அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.


17. அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். வேலையை விட்டு செல்பவர்களை விட, அவர்களை வேலையை விட்டு அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கபடுகிறார் !

18. குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.

19. உங்கள் படுக்கை அறையில் தொலை காட்சி, கணினி, வளர்ப்பு பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள்.

20. உடல் எடை கூடுவதற்கு தொலை காட்சி ஒரு முக்கிய காரணம் ஆகும்

21. உங்கள் அலை பேசியை உங்கள் பார்ட்னர் ஆக்கி கொள்ளாதீர்கள்; அது மோசமான பழக்கம்; மேலும் மனச்சுமையை கூட்டும்.

22. மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை.

23. சிரிப்பு ( Laugh therapy) புற்று நோய், இதய நோய், மன சுமை போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்க பட்டுள்ளது.

24. தவறு செய்தால் அதனை ஒப்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகபடுத்த உதவும்

25. உங்கள் பிரச்சனைகளை முடிந்த வரை பேசி தீர்க்க பாருங்கள்.

26. நேர் மறை எண்ணங்களையே மனதில் முடிந்த வரை கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என ( Optimist ) நம்புங்கள்.

27. மகிழ்வாக வாழும் கணவன்- மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு. தனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.

28. நம்பிக்கையும் நேர் மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து மீள உதவும்

29. வருடத்திற்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை மிக மிக அவசியம்.

30. பழைய நட்புகளை விடாது தொடருங்கள். புது நட்புகளும் உருவாக்கி கொள்ளுங்கள். நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும்.


மெயிலில் வந்த தகவல், சொந்த குறிப்பு கிடையாது

Thursday, July 1, 2010

வேர்கடலை சாலட்



தேவையானவை
வேகவைத்த வேர் கடலை - அரை கப்
வெள்ளரி - அரை
கேரட் - அரை
சாட் மசாலா - அரை தேக்கரண்டி
உப்பு - அரைதேக்கரண்டி
சர்க்கரை - இரண்டு சிட்டிகை
எலுமிச்சை - அரை பழம்


செய்முறை

வேகவைத்த வேர்கடலையுடன் வெள்ளரி , காரட்டை பொடியாக அரிந்து போட்டு சாட் மசாலா, உப்பு,சர்க்கரை,சேர்ந்த்து குலுக்கி, எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடவும்.
டயட் செய்பவர்களுக்கு பெஸ்ட் பிரேக் பாஸ்ட், ஒரு பவுள் ஃபுல்லா சாப்பிட்டு, ஃபுருட் ஜூஸ் குடித்தால் நல்ல பில்லிங்காக இருக்கும்.
இதில் இன்னும் அவல் சிறிது தண்ணீரில் ஊறவைத்து பிழிந்து சேர்க்கலாம். கொத்துமல்லி தழை, மற்றும் மாங்காய் இருந்தால் அதையும் சேர்த்து கொள்ளலாம்.
டிஸ்கி: மேலும் இதை பற்றி சந்தேகம் இருந்தால் போன மாதம் ஜெய்லானி டீவியில் ஒலிபரப்பான சந்தேகத்தில் தெளிவு படுத்தி கொள்ளுங்கள்.