Thursday, December 29, 2011

மசாலா மிக்ஸ் - 3






ஆச்சரியம் : உலகித்திலேயெ பெரிய மோதிரம் கின்ன்ஸில் ரெகார்டில் இடம் பெற்றுள்ளது.


துபாயில் உள்ள கோல்ட் மார்கெட்டில் மக்கள் பார்வைக்கு வைக்க பட்டுள்ளது.

/ஆமா இவ்வள்வு பெரிய மோதிரத்த எப்படி போட்டுக்குவாங்க.
//
துபாயில் உள்ள நகைகடையில் நகைகள் அப்படியே வெளியிலேயே சரம் சரமாக கண்ணணாடி பெட்டியில் அடைத்து வைத்திருப்ப்து தெரியும். ஆனால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது, அங்காங்கே C I D கள் சுற்றி கொண்டிருப்பார்கள்.
இப்ப இருக்கிற விலை ஏற்றத்தில் எல்லா நகைகளுமே இப்படி ஷோக்கேஸாக தான் பார்த்து கொள்ளனும்.








வெறுப்பு : புதுசா பொண்ணு பார்க்கிறவங்க இப்ப யாரும் கார் , பைக், வீடு என கேட்பதில்லை. 25 சவரன், 50 சவரன் என்பதெல்லாம் போய் இப்ப

80 சவரன், 100 சவரன், அடுத்து புதுசா 300 சவரன் என கேட்கிறார்களாம்.
கேட்டா குடும்ப கவுரமமாம். விவஸ்த கெட்டவங்க, என்ன கொடுமை இது.
இருந்தாலும் வசதி உள்ள் சிலர் இப்படி அதிகமாக நகையை போட்டு திருமணம் செய்து வைப்பதால் , அது மற்றவர்களையும் பாதிக்கிறது.
இப்படி நிலை நீடித்தால் பெண்ணை பெற்ற  பெற்றோர்களுக்கு எல்லாருக்கும் சிறு வயதிலேயே ஹார்ட் அட்டாக் தான்  வரும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


கொண்டாட்டம்: டிசம்பர் 2 யு ஏ யி 40 வது வருட நேஷனல் டே ரொம்ப கோலாகலமான அவர்கள் நாட்டு வண்ண கொடியில் எல்லா கட்டிடங்களிலும் லைட்களும், எங்கு எல்லா வீடுகளிலும் யு ஏ யி கொடி தோரணமாக கட்டப்பட்டிருந்தது.

  வழக்கத்துக்கு மாறாக ரொம்ப நாட்டு பற்றை தெரிவிக்கும் வகையில்  காரிலும், அரபு வீடுகளிலும் , எல்லா பொருட்களிலும் , துணிமணி வகைகளிலும், பேன்சி அயிட்டங்கள் எல்லாம் யி ஏ யி வண்ண கொடி தான், நிறைய செலவு செய்து இருக்காங்க . விட்ட பணத்த எப்படி பிடிப்பது. கீழே பாருங்க அப்படி தான், (இன்னும் நி்றைய படங்கள்பிறகு த்னியாக இனைக்கி்றேன்.)

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பாவப்பட்ட இந்தியர்கள் :
.........
1.இப்ப துபாயில் பேச்சுலர்கள் லுங்கி அணிந்து வெளியே சென்றால் பைனாம். ( யாரு நம்ம ஊர் மக்காஸ் ட்தானே லுங்கி போட்டுகொண்டு சு்ற்றுவது்

2.அடுத்து எல்லா இடத்திலும் கார் பார்க்கிங் பேய்ட் பார்க்கிங். ஆக்கியாச்ச்சு

3.எல்லாருக்கும் எமிரேட்ஸ் ஐடி இருந்தாகனும் இல்லன்னா அதுக்கும் பைன்

4.தெருவில் எச்சில் துப்பினால், சிக்ரேட் குடித்தால் எல்லாத்துக்கும் பைன்.

5.பிஷ் மார்கெட் பக்கமா மெட்ரோ டிரெயின் இருக்கு தப்பி தவறி வாங்கிட்டு உள்ளே நுழைத்திடாதீங்க அதுக்கும் பைன் தான். இப்படி தான் நம்ம மக்காஸ் கிட்ட விட்ட பணத்த எடுக்கிறாங்க/.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இங்குள்ள டிரைவர்கள் சம்ப்ளம் வாங்கி ஊருக்கு அனுப்புவதை விட யு ஏ யி - யில்  ஸ்பீட் லி்மிட்ட தாண்டி, பைன் கட்டி காசு கட்டுவ்து தான் அதிகம், பின்ன அவனா நானா ந்னு பார்த்துடலாமுன்னு ஊர் பந்தாவ இங்க காணபிச்சா எப்புடி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஹிஹி : பெண்கள் சாலையை கடக்கும் போது தூரத்தில் இருந்து எப்பேர் பட்ட வண்டியாக இருந்தாலும் தானா நின்றுடும்.
இதே நம்மூரா இருந்தா ஐய்ய சாவு கிராக்கி இன்னாமே உட்ல சொல்டு வந்துட்டீயா . காலையா யார் முகத்துல முழிச்சேனோ என்பார்கள்

ஹாஹா பிலிப்பைனிகள் சாலைய கடக்கும் எல்லாம் கைய கோர்த்து கொண்டு வாத்து கூட்டம் போல அந்த அழகே தனி தான்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



வருத்தம்:ஓரு பேச்சுலர், இந்தமாத கடைசியில் அவர் திருமணததுக்காக ஊர் செல்ல இருந்தார் , பத்திரி்கை எல்லாம் வந்துவிட்டதாம். என்ன கொடுமை நேற்று அவ்ஙக் அப்பா இறந்துட்டாராம் வெளிநாட்டுக்கு வந்து சம்பாதித்து  நிம்மதியா ஊர் தி்ரும்ப கூட மு்டியல.கேட்டுட்டு ரொம்ப வருத்தமாகி விட்டது/

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7&&&
சந்தோஷம் : துபாயில் மெட்ரோ கிரீன்லைன் வந்ததில் இருநந்து 1 மணி நேரமா டிராபிக்ல மாட்டி நொந்து போகமா ரொம்ப சொகுசா 10 , 15 நிமிடத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்றுவிடலாம், இப்ப பஜார் போக ரொம்ப சுலபம் ஆனாபோகதான் நேரம் கி்டைக்க்ல// முன்பெல்ல்ாம் பஜாருக்கு பஸிலோ காரிலோபோனால் காரிலேயே ஒரு குட்டி தூக்கம் போட்டுடலாம். அந்த அளவுக்கு ட்ராபிக் . இப்ப எல்லாம் சுலபம் .
ம்ம் அல் அயினுக்கும், அபுதாபிக்கும் போக மெட்ரோவந்ந்து்டுச்சினா ஆசியா விட்டுக்கும் (தளி, ஹுூஸைனாம்மா வீட்டுககும் ஈசியா போய்வரலாம்

********************************************************************************


Sunday, December 25, 2011

சமையல் அட்டகாசங்கள் ஒரு பார்வை

சென்ற வருட உலகம் ஒரு பார்வை போல போல, என் சமையல் அட்டகாசங்கள் ஒரு பார்வை.

600 ஆவது பதிவு


பிளாக் ஆரம்பித்து முன்று வருடம் முடிவடைகிறது,
ஊக்கப்படுத்தி கருத்து தெரிவிக்கும் வலை உலக தோழ தோழியர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி


1 சமையல் , அசைவம், சைவம், டயட் சமையல், இனிப்பு,அயல் நாட்டு உணவு,பிலிப்பைனி, குஜராத்தி, அரபிக்
2. முத்தான துஆக்கள் -பணியாளர்களை நேசித்தல்
////எல்லாப் பெண்களுமே மகாராணிகளே.....
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம் கேட்டார்;
''நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று சொல்லி தடுக்கின்றீர்கள்..?''
முஸ்லிம் கேட்டார்;

'உங்கள் நாட்டு எலிஸபெத் ராணியின் கரங்களை உங்களால் குலுக்க முடியுமா...?

அதற்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்குமா...?''
அவசர அவசரமாக மறுத்தார் அந்த ஆங்கிலேயர்...
''அதெப்படி முடியும்..? அவர்கள் மகாராணியாயிற்றே....!''
முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ சொன்னார்;
''எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே.
அந்த மகாராணிகளுக்கு உரிமையானவர்கள் மட்டுமே அவர்களது கரங்களை தொட முடியும்.

எனவேதான் அந்நிய ஆடவரிடம் எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் கை குலுக்குவதை நாங்கள் அனுமதிப்பதில்லை.''
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

''உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணைத் தொடுவதை விட,

இரும்பு ஊசியால் தன்னுடைய தலையைக் காயப்படுத்திக்கொள்வது சிறந்ததாகும்." /////


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

3. கர்பிணி பெண்களுக்கு
4. குழந்தை வளர்பு:
5. மருத்துவ குறிப்பு
6. பெண்கள் பகுதி
7. ஆண்களுக்கு டிப்ஸ்
8. ஜலீலாவின் டிப்ஸோ டிப்ஸ்


9. சென்னை ப்ளாசா  கடை விபரம் புது மாடல்கள் , தனியாக இந்த் வெப்சைட்டில் http://www.chennaiplazaik.com/ போட்டு இருக்கேன்.  பேன்சி அயிட்டம் எல்லாம் இனி இந்த வலையில் போட்டு கொண்டு இருக்கிறேன். வலை உலக தோழ தோழியர்கள் இதில் பாலோவராக இனைந்து கொள்ளும் படி அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
10 அவார்டு அன்பான தோழ தோழியர்கள் கொடுத்த அவார்டுகள். அனைவருக்கு் மிக்க நன்றி.

நேரமின்மையால் பல லிங்க்குகள் இங்கு என்னால் இனைக்க முடியல.
11. ......... ?????

என்னைப்பற்றி

அனைவருக்கும் மிக்க நன்றி.


டிஸ்கி: என் பதிவுகள் பூஸாருக்கு டேஷ் போர்டில்வரலையாம், இன்னும் யார் யாருக்கு என் பதிவுகள் வரன்னன்னு தெரியல தேவை படுபவர்கள் என் பிலாக்கை அன் பாலோ செய்துட்டு மீண்டும் பாலோ செய்து கொள்ளுங்கள்.

Monday, December 19, 2011

பிஞ்சு குழந்தைகள் இழப்பு

zசின்ன குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்களை பார்த்து கொள்வதில் கூடுதல் கவனம் தேவை,



அந்த காலத்தில் எப்படியும் குழந்தைகளை பார்த்து கொள்ள கூட்டு குடும்பத்தில் நிறைய பேர் இருப்பார்கள்,. ஒருவர் வேலையா இருந்தால் மற்றொருவர் வைத்து கொள்வார்கள். ஆனால் வெளிநாடுகளுக்கு வருகிறவர்களுக்கோ எல்லாமே அம்மா அப்பா மட்டும் தான்..

எழுத நிறைய இருக்கு எதை முதலில் எழுதுவது.அதற்குள் கீழே உள்ள இந்த செய்தி ரொம்ப கலங்க வைத்து விட்ட்து. ஷார்ஜா, அபுதாபி சைட் எல்லாம் 16 அடுக்கு கட்டிடங்கள், 20 அடுக்கு இது போல் இருக்கும்.


சும்மா நாலாவது மாடியில் இருந்து எட்டி பார்த்தாலே தலை சுற்றும்.

இப்ப்டி வசிப்பவர்கள் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டியது மிக முக்கியம்.


கடந்த டிசம்பர் 4 ந்தேதி சிரியன் நாட்டு 3 வயது பையன் ஷார்ஜாவில் 14 வது மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டான். இந்த செய்தி பார்ததிலிருந்து ஒரே மனகஷ்டம். நினச்சி நினச்சி ரொம்ப வே வேதனையாக இருந்த்து. குழந்தைகளுக்கு என்ன தெரியும்.அடிபடும் உயிரே போய் விடும் என்பது அதுக்கு தெரியுமா? 

பச்ச குழந்தை விழுந்து விட்ட்து என்றால் எப்படி யாராலும் ஜீரனச்சிக்க முடியும். அம்மா குழந்தை இருவரும் விளையாடி கொண்டி இருந்த போது படிக்கட்டில் விளையாட்டு சாமான்கள் போட்டு பையனும் அம்மாவும் பையன் போட அம்மா எடுதது வர விளையாடி கொண்டு இரு்ந்த போது விளையாட்டு சாமானை அம்மா எடுத்து வர சென்ற சமயம் தலையை கம்பி வழியா எட்டி பார்த்ததில் தவறி விழுந்து ஸ்பாட்லேயே குழந்தை..........

என்ன செய்ய யாரை குறை சொல்வது இதே போல் ஷார்ஜாவில் 19.11 அன்று 4 வயது பொண்ணு 15 வது மாடியில் இருந்து, 24.11 அன்று 3 வயது பையன் 14 வது மாடியில் இருந்து ,30.11 அன்று 4 வயது பையன் 16வது மாடியில் இருந்து தவறி விழுந்து இருக்கிறார்கள்.

எத்தனை பிஞ்சுகள் குழந்தைகள் இறப்பு.

இன்னும் எத்தனை இடங்களில் இப்படி நடந்து கொண்டு இருக்கோ.

யாரை குறை சொல்வது பிள்ளைகள் துடிப்பானவர்கள்.
குழந்தைகள் என்று வந்து விட்டால் வளர்ந்து அவர்களுக்கு புரியும் வரை மிகவும் பாதுகாப்பாக வளர்க்கனும்.

பிள்ளைகள் எதை செய்யவேண்டாம் என்று சொல்கிறோமோ அதை தான் முதலில் செய்வார்கள். பால்கனியில் எட்டி பார்க்காதே என்றால் கண்டிப்பாக எட்டி பார்ப்பார்கள்.

வீடு கட்டும் போது அந்த காலத்தில் குட்டி குட்டியா ஜாலி வைத்த்து போல் யாரும் உள்ளே வெளியே நுழையாத வண்ணம் கட்டுவார்கள்
இப்ப எல்லாமே அழகுகாக இடைவெளியிடன் கம்பிகள் போடும், வளைந்தபால்கனிகளும், மேல் திண்டு வழவழப்பாகவும் கட்டு கின்றனர்.

அடுக்குமாடி குடி இருப்புகளில் இருப்பவர்கள் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய அவசியம் உள்ளது.


இங்குள்ள பால்கனி டோர் கள் கூட அப்படியே ஸலைட் போல் சார்த்தும் போது கொஞ்சம் தவ்றினால் கை விரல் நரம்பு கட்டாகும் அளவுக்கு ரொம்ப ஸ்ட்ராஙகாக இருக்கும்.

அம்மாக்கள் மேலும் ஒன்றும் குறை சொல்ல முடியாது குழந்தைகள் எந்த நேரத்தில் எபப்டி ரியாக்ட் கொடுக்கிறாங்கன்னு நம்மால் யூகிக்கவே முடியாது.

எல்லா பிள்ளைகளுக்கும் பால்கனியில் இருந்து எட்டி பார்க்க ரொம்பவே பிடிக்கும், நான் என் பசங்கள கண்னெதிரிலேயே தான் வைத்து கொண்டு சமைப்பது



ஆனால் பொதுவாக குழந்தைகள் அங்க கிங்க கொஞ்சம் நகர்ந்தாலும் கண்டிப்பாக அவர்களுக்கு எப்படி தான் கண்டு பிடிப்பார்களோ தெரியாது கூர்மையான விளையாட்டு பொருட்கள் கொண்டு கண்ணை குத்தி கொள்வது ஒருவருக்கொருவர் ச்ண்டையிட்டு் கடித்து வைப்பது, தள்ளி விடுவது , சாமான்களை தூக்கி முகத்தில் அடிப்பது இது போல் பல குழ்ந்தைகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.





இப்படி தான் போன வருடம் ஒரு பையனுக்கு கண்ணும் கருத்துமாக கையிலேயேதூக்கி கொண்டு வைத்திருப்பாங்க , அன்னைக்கு பார்த்து கிச்சனில் கூடவே வைத்து இருந்து மற்ற பிள்ளைகளுக்கு பாலை கரைத்து கொண்டு , சிறிய 2 வயது பையனுக்கும் பால் கரைத்து விட்டு தனக்கு பிலாக் டீ போட்டு டீ பேக்குடன் டம்லரை வைத்து விட்டு கை கழுவிட்டு வருவதற்குள் கீழே நின்று கொண்டு இருந்தவன் டீ பேக் தொங்குவதை பார்த்து பிடித்து இழுத்து விட்டான் அவ்வளவு தான் அரை நொடியில் ஒரு டம்ளர் கொதிக்கும் டீ முகத்தில் அப்ப்டியே குளிப்பது போல ஊற்றி கொண்டான் பையன் துடித்து விட்டான், அந்த பெண்ணும் பதறி விட்டால் இவ்வளவு நல்ல வைத்து இருந்தும் இப்படி நடந்து விட்ட்து. கடைசியில் ஹாஸ்பிட்டலில் வைத்து 3 மாதம் கழித்து சரியானது. ஆனால் திட்டியவர்கள் அவன் இழுக்கும் வரை இவள் என்ன செய்தாள் என தாயை தான் வசை, எந்த தாயாவாது இப்படி நடக்க நினைப்பாளா?

குழந்தைகள் விழியத்தில் யாராக இருந்தாலும் என்ன வேலையாக இருந்தாலும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.


ஒன்னறை வருடம் முன் ஒரு வீட்டுக்கு போயிருந்த போது கையில் பெரிய க்ட்டு என்னன்னு கேட்டால் எலக்ரானிக் ஆனியன் சாப்பர் நிறைய பிளேட் உடன் கூடியது கடையில் இரு்ந்து வாங்கி வந்து பிரிச்சி பார்த்து அதை உள்ளே எடுத்து வைப்பதறகுள் கூர்மையான பிலேட எடுத்து உடனே கை விரல் வெட்டி கொண்டதாம். என்ன செய்வது பிள்ளைகள் துடுப்பானவர்கள்.

குழ்ந்தை வைத்து இருப்பவ்ர்கள் சில விஷியங்களை நினைவில் கொள்ளுஙக்ள்;

1. டிவி தானே பார்க்கிறார்கள் என்று நீங்க பாட்டு கிச்ச்னில் வேலை பார்க்காதீர்கள்.


2 பாத்ரூமில் போய் தண்ணிய திறந்து விடுறேன்னு ஹாட் வாட்டரை திறந்து விட நேரிடலாம்.

3. கிச்சனில் நின்று கொண்டிருந்தாலும் கத்தி போன்ற பொருட்களை கண் பார்வையில் வைக்காதீர்கள்.

4. மெயினா போன் வந்து விட்ட்து பேசி கொண்டு இருக்கும் போது சேட்டைகள் அதிகம் இருக்கும்



5. வெளியில் செல்லும் போது ரோடில் நடந்து போகும் போது கூட கை பிடித்து கொண்டு தான் வந்திருப்பார்கள் , ஒரு சனத்தில் கை உருவி கொண்டு ஓடுவார்கள். பிள்ளைகளை கூப்பிட்டு செல்லும் போது நாம ரொம்ப பராக் பார்க்க கூடாது.



6. மிக்சி மறந்து ஆனில் இருந்தால் நாமும் ஆன் பண்ணி பார்க்கலாமேன்னு டக்கு ஆன் செய்து சத்தம் வந்த்தும் பயத்தில் ஓடி விடும்.

7. அயர்ன் பாக்ஸ் அயர்ன் பண்ணுவதை பார்த்து கொண்டே இருந்து நானும் அயர்ன் பண்றேனே ஆன் செய்து ஒரு இட்த்தில் துணி கருகிவிட்ட்து, மற்றொரு வீட்டில் அப்ப்டியே தொடை அந்த குழந்தை வைத்து கொண்ட்து, இன்னும் ஒரு இட்த்தில் சோபாவ அயர்ன் பண்றென்னு அப்படியே உள்ளே வரை எரிந்து விட்ட்து என்றார்கள்.



8. சும்மா தூங்க வைத்து விட்டு கதவ சாத்தி விட்டு வேலை பார்த்து கொண்டு இருந்தாலும் உள்ளே அவர்கள் சத்தமில்லாம வொயர் பிளக் போன்றவைகளை குடைந்து கொண்டு இருப்பார்கள்.



ஓவ்வொன்றில் கண்டிப்பாக விழிப்புணர்வுடன் இருங்க,
வாழ்வில் குழந்தை செல்வம் தானே உலகத்திலேயே பெருஞ்செல்வம். அதை கண்ணும் கருத்துமாய் வளர்க்கவேண்டியது உங்கள் கடமை அல்லவா//

















Wednesday, December 14, 2011

கருப்பட்டி குழிபணியரம் - Palm sugar kuzipaniyaram



தேவையான பொருட்கள்
கருப்பட்டி குழி பணியாரம்
பச்சரிசி – அரை டம்ளர்
மைதா – அரை டம்ளர்
கருப்பட்டி வெல்லம் – முக்கால் டம்ளர்
துருவிய தேங்காய் – இரண்டு மேசை கரண்டி
பல்லாக நருக்கிய தேங்காய் – இரண்டு மேசை கரண்டி
ஏலக்காய் பொடி – அரை தேக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
வருத்த முந்திரி – 6 ( பொடியாக அரிந்து கொள்ளவும்)
முட்டை – ஒன்று (விருப்ப பட்டால்)
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை




செய்முறை



அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து அத்துடன் மைதா ,உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.அரைத்த மாவில் பொடியாக அரிந்த் தேங்காய், முட்டை,துருவிய தேங்காய் ஏலக்காய் பொடி இட்லி சோடா கலந்து வைக்கவும்.

கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கரைந்த்தும் அதை கலக்கிய மாவில் வடிகட்டவும்.குழி பணியார சட்டியை காய வைத்து எண்ணை + நெய் சிறிது ஊற்றி மாவை முக்கால் பாகம் இருக்குமாறு ஊற்றவும்.தீயின் தனலை மிதமாக வைக்கவும், இல்லை என்றால் கரிந்து விடும்.இரண்டு முன்று நிமிட்த்தில் வெந்து விடும்,ஒரு பக்கம் வெந்த்தும் திருப்பி போட்டு மறுபக்கமும் வேகவிட்டு இரக்க்வும்.

சுவையான கருப்பட்டி குழிபணியாரம் ரெடி.


காலை உணவிற்கு(காரம்+ இனிப்பு) குழிபணியாரத்துடன்  சுண்டலும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். குட்டியாக இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.எத்தனை உள்ளே போகுதுன்னே தெரியாது  செட்டி நாடு ஸ்பெஷல்  குழிபணியாரம்.இது என் சுவைக்கு ஏற்ப செய்துள்ளேன் சுவைத்து மகிழுங்கள்
தேங்காய் பல்லாக கீறிய தேங்காயாக இருந்தால் இன்னும் நல்ல இருக்கும், இதில் துருவிய தேங்காய் சேர்த்துள்ளேன்.




Saturday, December 10, 2011

மேத்தி ரொட்டி, காலி பிளவர் பீஸ் குருமா- methi rotti & cauliflower peas kurma







மேத்தி ரொட்டி காலிப்ளவ்ர் பீஸ் குருமா




மேத்தி ரொட்டிக்கு தேவையானவை

கோதுமைமாவு – அரை கிலோ

எண்ணை – 1 மேசைகரண்டி

உப்பு – முக்கால் தேக்கரண்டி

வெந்தயகீரை(மேத்தி) – ஒரு கட்டு

எண்ணை – சுட தேவையான அளவு.

கரம் மசாலா பொடி – கால் தேக்கரண்டி

மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி

காலிப்ளவர் பீஸ் குருமாவுக்கு.

காலிப்ளவர் – கால் கிலோ

பட்டாணி – 100 கிராம்

வெங்காயம் தக்காளி – தலா ஒன்று

இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு தேக்கரண்டி

கொத்துமல்லி ,புதினா – சிறிது

தேங்காய் பவுடர் – ஒரு மேசை கரண்டி

மிள்காய் தூள் – ஒரு தேக்க்ரண்டி

மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

உப்பு தேவைக்கு

முந்திரி – 5

தாளிக்க

எண்ணை – நெய் – 1 மேசை கரண்டி

பட்டை,ஏலம், கிராம்பு – தலா ஒன்று

பிரியாணி இலை – ஒன்று சிறியது.



செய்முறை \

வெந்தயகீரையை அலசி ஆய்ந்து அத்துடன் கோதுமை மாவு, கரம் மசாலா பொடி ,மிளகாய் தூள்,உப்பு,எண்ணை கலந்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.



குருமாவுக்கு

காலிப்ளவர் பூவை தனித்தனியாக பிரித்தெடுத்து உப்பு கலந்த வெண்ணீரில் இரண்டு நிமிடம் ஊறவைத்து கழுவி எடுக்கவும்.



எண்ணையை காயவைத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயம் அரிந்து சேர்த்து வதக்கவும், வெங்காயம்கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சைவாடை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்க்கவும்.

தக்காளி மடங்கியதும் மசாலாவகைகள், உப்பு கலந்து காலிப்ளவரியையும் பட்டாணியையும் சேர்த்து கிளறி சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

கடைசியாக முந்திரியை பொடித்து அத்துடன் தேஙகாய் பவுடர் சேர்த்து மிக்சியில் அரைத்து குருமாவில் சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்.


ரொட்டிமாவை 10 ரொட்டிகளாக பிரித்து சதுரவடிவ்மாக திரட்டி மாவில் எண்ணை தடவி குறுக்கும் நெடுக்குமாய் சதுரவடிவாக மடித்து மீண்டும் திரட்டி ரொட்டிகளாக சுட்டெடுக்கவும்.

சுவையான மேத்தி ரொட்டியும், காலிப்ளவர் பீஸ் குருமா ரெடி.


Wednesday, December 7, 2011

நீங்கவிதவிதமாவாட்ச்அணிபவர்களா?


 

சிலருக்கு விதவிதமாக வாட்ச் அணிவது ரொம்பபிடிக்கும்.


அதுவும் பெண்கள் இப்பசேலை, சுடிக்குமேட்சாக ,பட்டுசேலைக்கு மேட்சாக வாட்ச் அணியும் கிரேஸ் உள்ளவர்களாக இருக்கின்றனர்



ஆண்கள் லெதர், மெட்டல், கோல்ட் எனபல மாடல்கள் வைத்திருப்பனர்.

அப்படி எல்லாமே உபயோகிக்க போவதில்லை ,சிலவாட்ச்கள் பீரோவில் தூங்கும் அப்படி ரொம்பநாள் கழித்து எடுத்துபோடும் போதுபேட்டரிபோய் விடும்.இல்லை கருத்துவிடும்
பேட்டரி போகமால் இருக்க வாட்ச்டைம் செட் செய்யும் ஸ்க்ரு இருக்கும்.

அதை லேசாக இழுத்து விட்டால் மணி ஓடாது நின்றுவிடும்.
அப்படியே பீரோவில் வைத்து விட்டு எடுத்து பயன்படுத்தும் போது அந்த ஸ்க்ரூவை அழுத்தி விட்டு டைம் செட்செய்து போட்டுகொள்ளலாம்





இதனால் வாட்ச் பேட்டரி நீண்ட நாள் முடிந்து போகாமல்இருக்கும்.

வாட்ச்கருத்து போகாமல் இருக்க செண்ட் போன்ற வாசனை திரவியங்கள் பட்டால்கருத்து வெளுத்து போய்விடும்.

எல்லா பொருட்களுடனும் போட்டுவைக்காமல்தனியாக அதற்குறியபாக்ஸிலோஅல்லது டிஷு பேப்பரில் சுருட்டியோ வைக்கலாம்


Thursday, December 1, 2011

பனீர் வெஜ் மின்ட் கறி -Paneer Mint Curry


தேவையான பொருட்கள்

வதக்கி அரைக்க



புதினா - ஒரு கட்டு

கொத்து மல்லி - அரை கட்டு

கருவேப்பிலை - கால் கட்டு

பச்ச மிளகாய் - நான்கு

இஞ்சி - ஒரு லெமென் சைஸ்

பூண்டு - 5 பல்

வெங்காயம் - முன்று

தக்காளி - நன்கு

எண்ணை - ஒரு மேசை கரண்டி

பட்டாணி - 100 கிராம்

கேரட் - 100 கிராம்

பீன்ஸ் - 100 கிராம்

பன்னீர் - 100 கிராம்



தாளிக்க


எண்ணை

சீரகம்







செய்முறை

முதலில் எண்ணையை காயவைத்து வெங்காயம், இஞ்சி,பூண்டு,தக்காளி,பச்ச மிளகாயை வதக்கவும்.

கடைசியாக கொத்து மல்லி, புதினா, கருவேப்பிலையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி அதையும் சேர்த்து வதக்கவும்.

வதக்கியதை ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

எண்ணையை காய வைத்து சீரகம் தாலித்து அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவேண்டும், அதோடு பண்ணீரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

காய் களை பொடியாக அரிந்து மைக்ரோ வேவில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

இப்போது வெந்த காயை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.

சுவையான ஆரோக்கிய மான மின்ட் கறி ரெடி

எல்லா சத்தும் நிறைந்த கறி, கர்பிணி பெண்களுக்கு ஏற்ற அருமையான சத்தான உணவு. சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கும் பனீர் ரொம்ப பிடிக்கும்.