கார்லிக் பிரட் & ஏலக்காய் டீ
தேவையானவை
பிரட் ஸ்லைஸ் – 8
பூண்டு – 4 பற்கள்
சால்ட் பட்டர் – 3 மேசை கரண்டி
கொத்து மல்லி தழை – 1 மேசை கரண்டி பொடியாக நருக்கியது.
வெள்ளை மிளகு தூள் – சிறிது
ஏலக்காய் டீ க்கு
ஏலக்காய் டீ
தண்ணீர் – 2 டம்ளர்
பால் பவுடர் – 2 தேக்கரண்டி முழுவதும்
சர்க்கரை - 2 தேக்கரண்டி (தேவைக்கு)
டீ தூள் - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் - 2
செய்முறை
பூண்டை அரைத்து அத்துடன் மிளகு தூள், கொத்துமல்லி தழை,பட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிரட் ஸ்லைஸில் பரவலாக தடவி தவ்வாவில் பொரித்து எடுக்கவும்.
சுவையான கார்லிக் பிரட் ரெடி
ஏலக்காய் டீ தயாரிக்கும் முறை
தண்ணீரில் பால் பவுடரை கலக்கி அதில் ஏலக்காயை தட்டி கொதிக்க விடவும் .
கொதி வந்த்தும், டீ தூள் சேர்த்து நன்கு டீ ரங்கு இரங்கியதும் சர்க்கரை சேர்த்து வடிக்கவும்.
சுவையான கார்லிக் பிரட் & ஏலக்காய் டீ ரெடி.
குறிப்பு:
(பால் பவுடரில் டீ போட்டா திரிந்து போய் விடுமே என சிலருக்கு டவுட் உண்டு, உபயோகிக்கும் பாத்திரம், டீ கெட்டில், வடி கட்டி, கலக்கும் கரண்டி டீ க்கு மட்டுமே பயன் படுத்தனும், மசாலா வாடை உள்ள கரண்டி , டீ கெட்டில் என்றால் திரிந்து தான் போகும்.)
ரொம்ப ஈசியான காலை உணவு. இதே போல் பண்ணிலும் செய்யலாம்.
டிஸ்கி : எல்லோரும் நலமா?
அனைவருக்கும் ரமலான் முபாரக்.
நோன்பு கால சமையல் டிப்ஸ் - புது பதிவு பிறகு போடுகிறேன். இது முன்பு கொடுத்த டிப்ஸ் சிலருக்கு பயன் படும்..
Tweet | ||||||