கார்லிக் பிரட் & ஏலக்காய் டீ
தேவையானவை
பிரட் ஸ்லைஸ் – 8
பூண்டு – 4 பற்கள்
சால்ட் பட்டர் – 3 மேசை கரண்டி
கொத்து மல்லி தழை – 1 மேசை கரண்டி பொடியாக நருக்கியது.
வெள்ளை மிளகு தூள் – சிறிது
ஏலக்காய் டீ க்கு
ஏலக்காய் டீ
தண்ணீர் – 2 டம்ளர்
பால் பவுடர் – 2 தேக்கரண்டி முழுவதும்
சர்க்கரை - 2 தேக்கரண்டி (தேவைக்கு)
டீ தூள் - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் - 2
செய்முறை
பூண்டை அரைத்து அத்துடன் மிளகு தூள், கொத்துமல்லி தழை,பட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிரட் ஸ்லைஸில் பரவலாக தடவி தவ்வாவில் பொரித்து எடுக்கவும்.
சுவையான கார்லிக் பிரட் ரெடி
ஏலக்காய் டீ தயாரிக்கும் முறை
தண்ணீரில் பால் பவுடரை கலக்கி அதில் ஏலக்காயை தட்டி கொதிக்க விடவும் .
கொதி வந்த்தும், டீ தூள் சேர்த்து நன்கு டீ ரங்கு இரங்கியதும் சர்க்கரை சேர்த்து வடிக்கவும்.
சுவையான கார்லிக் பிரட் & ஏலக்காய் டீ ரெடி.
குறிப்பு:
(பால் பவுடரில் டீ போட்டா திரிந்து போய் விடுமே என சிலருக்கு டவுட் உண்டு, உபயோகிக்கும் பாத்திரம், டீ கெட்டில், வடி கட்டி, கலக்கும் கரண்டி டீ க்கு மட்டுமே பயன் படுத்தனும், மசாலா வாடை உள்ள கரண்டி , டீ கெட்டில் என்றால் திரிந்து தான் போகும்.)
ரொம்ப ஈசியான காலை உணவு. இதே போல் பண்ணிலும் செய்யலாம்.
டிஸ்கி : எல்லோரும் நலமா?
அனைவருக்கும் ரமலான் முபாரக்.
நோன்பு கால சமையல் டிப்ஸ் - புது பதிவு பிறகு போடுகிறேன். இது முன்பு கொடுத்த டிப்ஸ் சிலருக்கு பயன் படும்..
Tweet | ||||||
20 கருத்துகள்:
அக்கா, வந்தாச்சா? நலமா?
//பூண்டை அரைத்து ... பட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்//
இங்கே இப்ப Lurpak பிராண்டில் கார்லிக் பட்டரே கிடைக்குதுக்கா. அதைத் தடவி, மேலே ஷ்ரெட்டட் சீஸ் போட்டு ஓவன்/ தவால வச்சு எடுத்தா, பீட்ஸாவோடு வரும் கார்லிக் ப்ரட் மாதிரியே இருக்கும். (ஹி.. ஹி.. ஸாரி)
Healthy and yummy evening snack....
அவசியம் இந்த கார்லிக் பிரட் செய்து பார்த்திட வேண்டும் ஜலி.
காலையில் ஒரு முறை உங்கள் தளத்திற்கு வந்தேன்.
இப்போது மீண்டும் ஒரு முறை : வீட்டில் ஏலக்காய் டீ போடுவதற்காக...
நன்றி..
என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?
கார்லிக் ப்ரெட் நல்லா இருக்கு ஜலீலாக்கா! கொத்துமல்லிதழை சேர்த்து செய்வது நல்லா வாசனையா இருக்கும்னு நினைக்கிறேன். செய்துபார்க்கிறேன். டீயும் சூப்பர்! :)
ரமதான் கரீம்! :)
ஆமாம் ஹுஸனாம்மா வந்தாச்சு,
பதிவிட நேரமில்லை.
முன்பு செய்து வைத்த நிறைய குறீப்புகள் இருக்கு அதில் ஒன்று தான் இது.
சமீபத்தில் நானும் பார்த்தேன் கார்லிக் பட்டர்.
பையனுக்கு பிட்சா வில் வைக்க்கும் கார்லிக் பிரட் ரொம்ப பிடிக்கும் ஆகையால் அடிக்கடி லன்ச் பாக்ஸ்க்கு இப்படி வைப்பது.
வருகைக்கு மிக்க நன்றி
குறிஞ்சி வாங்க உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
ஸாதிகா அக்கா செய்து பாருங்க பிறகு அடிக்கடி செய்வீங்க
திண்டுக்கல் தனபாலன் சார் வருகைக்கு மிக்க நன்றி.
ஏலக்காய் டீ கண்டிப்பாக செய்து பாருங்கள்
ஆமா மகி கொத்து மல்லி வாசம் நல்ல தூக்கலாக இருக்கும்.
வருகைக்கு மிக்க நன்றி மகி
Healthy snack.
ஜலீலாக்கா எப்படி இருக்கிக.. ரொம்ப நாளாச்சி உடம்புக்கு பரவா இல்லயா. ரமலான் கரீம் வாழ்த்துகள்.
சூப்பர் அக்கா... செய்து பார்க்கிறேன் .... ரமலான் கரீம் வாழ்த்துகள்.
ஜலீலா நலமா?
ரமலான் நோன்பு வாழ்த்துக்கள்.
வருகைக்கு மிக்க நன்றி காஞ்சனா
விஜி பார்த்திபன் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
ரமலான் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க கோமதி அரசு நலம்.
ரமலான் வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
மின்மினி வாங்க எப்படி இருக்கீங்க
உடம்பு இப்ப கொஞ்சம் பரவாயில்ல.
உங்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள்
ரமலான் நோன்பு கால வாழ்த்துகள் ஜலீலா.
சில கடைகளில் ஏலக்காய் டீ என்று சொல்லித் தருகிறார்களே... அதுவும் இப்படித்தான் தயாரிக்கிறார்களோ... செய்து பார்த்திர வேண்டியதுதான்...
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா