Friday, May 1, 2015

கருப்பு உளுந்து கார சுண்டல்







கருப்பு உளுந்து இனிப்பு சுண்டல் -Black Urad Dhal Sundal

இடுப்பெலும்பை பலப்படுத்தும் கருப்பு உளுந்து, இதில் உளுந்து சாதம், உளுந்து களி, உளுந்து புட்டு உளுந்து இனிப்பு மற்றும் கார சுண்டல் போன்றவை செய்யலாம்.
வட இந்தியர்கள் தால் மக்கானி என்று ஒரு குழம்பு வைப்பார்கள் அது கருப்பு உளுந்து மற்றும் ராஜ்மாவில் செய்வது. இது பூப்பெய்திய பெண்களுக்கு , கர்பிணி பெண்களுக்கு, பிள்ளை பெற்றவர்களுக்கு இடுப்பெலும்பு பலம் பெற கருப்பு உளுந்தில் இது போன்ற உணவு வகைகளை சமைத்து கொடுக்கலாம்.
ஆண்களுக்கும் நல்லது.கூடுமான வரை இட்லிக்கு, அடை வகைகளுக்கு அரைக்கும் போது வெள்ளை உளுந்துக்கு பதில் கருப்பு உளுந்தும் சேர்த்து செய்வது நல்லது.




கருப்பு உளுந்து கார சுண்டல்


கருப்பு உளுந்து - 100 கிராம்
உப்பு - கால் தேக்கரண்டி

தாளிக்க

எண்ணை - 1 தேக்கரண்டி
கடுகு , உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
முழு மிளகாய் - காஞ்ச மிளகாய் - இரண்டு
கருவேப்பிலை - சிறிது
பெருங்காயம்  - ஒரு சிட்டிக்கை
துருவிய தேங்காய்  -  கால் கப் + தேவைக்கு

செய்முறை

உளுந்தை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைத்து எடுக்கவும்.

வெந்ததும் தண்ணீரை வடித்து மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெந்த உளுந்தை சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும்.
சுவையன உளுந்து சுண்டல் ரெடி.

பண்டிகை கால சமையல் , நோன்பு கால சமையல்

  https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

1 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் செய்முறைப்படி செய்து பார்க்கிறோம்... நன்றி...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா