முட்டை வட்லாப்பம்
இஸ்லாமிய இல்லங்களில், திருமண விசேஷங்களில் மிகவும் பிரத்தி பெற்ற இனிப்பு வகைகளில் முதன்மையான இனிப்பு வகை இது,
இது எங்க அம்மாவின் ஸ்பெஷல் ஸ்வீட் , அவர்களிடம் இருந்து கற்றுகொண்ட முதல் இனிப்பு வகை இதுவே.
முன்பெல்லாம் பள்ளிகாலங்களில் அம்மா வருடா வருடம் புது வருட பிறப்புக்கு இதை தான் செய்வார்கள். கொண்டாட மாட்டோம் ஆனால் இனிப்பு கண்டிப்பாக உண்டு.
காக்காவுக்கும் இந்த முட்டை வட்லாப்பத்துக்கும் என்ன சம்பந்தம் என்று பார்க்கிறீர்களா? கிழே படியுங்கள்.
2011 - பாலவாக்கம்
நாத்தனார் பொண்ணு கல்யாணத்தில் முட்டைவட்லாப்பமும் காகமும்...
இடியாப்பம் , முட்டை வட்லாப்பம் , கால்பாயா ( இடியாப்பம் , கோதுமை ரொட்டி) சூப்பர் காம்பினேஷன்..
தேவையான பொருட்கள்
முட்டை - பத்து (அ) 12
சர்க்கரை – இரண்டு டம்ளர்
(அதிக இனிப்பு சாப்பிடாதவர்கள் தேவைக்கு அரை டம்ளர் குறைத்து கொள்ளலாம்)
தேங்காய் – ஒரு முழு பெரிய தேங்காய்
ஏலக்காய் - முன்று
முந்திரி - 6
நெய் - அரைதேக்கரண்டி
அலங்கரிக்க
பாதாம் , முந்திரி
மாதுளை முத்துக்கள்
செய்முறை
தேங்காயை அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கட்டியாக பால் எடுக்கவும்.
(மீதி இருப்பதை மறுபடி பிழிந்து தேங்காய் பால் சாதம், சால்னா வகைகளுக்கு பயன் படுத்தி கொள்ளலாம்.)
முட்டையை நல்ல நுரை பொங்க அடித்து கொள்ளவும்.
சர்க்கரை பொடித்து வைக்கவும்.
சர்க்கரை, தேங்காய் பால், முட்டை முன்றையும் நன்கு கலக்கவும்.
முந்திரியை பொடியாக அரிந்து நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
ஏலக்காயை பிரித்து உள்ளே உள்ள விதையை எடுத்து லேசாக வறுத்து பொடித்து சேர்த்து நன்கு கலக்கி குக்கரில் அடியில்வைக்கும் தட்டை வைத்து அதன் மேல் , ஒரு டிபன் பாக்ஸில் கலவையை ஊற்றி முடிபோட்டு குக்கரை மூடி 5 விசில் விட்டு 10 நிமிடம் சிம்மில் வைத்து அவிக்கவும்.
சுவையான சூப்பரான முட்டை வட்லாப்பம்ரெடி.
இது இடியாப்பம், ஆப்பம், தோசை ஆகியவற்றிற்குபொருந்தும், இஸ்லாமிய இல்ல ஸ்பெஷல் உணவாகும்.சர்க்கரை அதிகம் விரும்பாதவர்கள் சர்க்கரையின் அளவை அரை டம்ளர் குறைத்து கொள்ளலாம்
கவனிக்க: இடுப்பு எலும்புக்கு பலம் பெறும். .பூப்பெய்திய பெண்களுக்கு இதை செய்து கொடுப்போம்.
மேலே உள்ளது 100 பேருக்கு நாங்க எல்லாரும் சேர்ந்து நாத்தானார் (எங்க மைனி )மகள் திருமணத்தின் போது 2011 லில் இந்த முட்டை வட்லாப்பத்தை ஆளுக்கு ஒரு வேளையாக செய்து கொண்டு இருக்கும் போது ....
நான் முட்டையை உடைத்து பிளண்டரில் அடிக்க, பெரிய நாத்தனார் மகள் கல்வத் தேங்காயை உடைத்து துண்டுகள் போட, பெரிமா பொண்ணு மீரா தேஙகாய் அரைத்து ஊற்ற, சின்ன நாத்தனார் பொண்ணு குட்டி அஃப்ரின் முந்திரி பாதாம் வெட்டி கொடுக்க எல்லாரும் சேர்ந்து செய்தோம், அப்ப வீட்டின் வெளியில் ஷாமியானா போட்டு இருந்தார்கள்.
அப்ப தான் தீடீரென்று ஒரு காக்கா வெளியில் இருந்து ஹால் வழியாக கிழே கிரவுன்ட் ஃப்ளோரில் வந்து படிக்கட்டில் உட்கார்ந்து விட்டது. வெளியே எங்கும் போக இடம் இல்லை, சுற்றி இருந்தவர்கள், மேலே ஹாலில் இருந்தவர்கள் எல்லாம் ஒரே கூச்சல் போட
கிழே கிச்சனில் நாங்க எல்லோரும் முட்டை , தேஙகாய் பால் , எல்லாவற்றையும் காப்பாற்றுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.
.
உடனே சிங்கம் போல என் மகன் ஓடி வந்தான் அப்படியே அந்த காகத்தை கையில் மெதுவாக பிடித்து வெளியில் கொண்டு போய் விட்டான், இதை எங்க யாராலும் மறக்க முடியாது.
அங்கு ஒருத்தங்க ஒரு இறந்து போன எங்க மாமாவுக்கு முட்டை வட்லாப்பம் ரொம்ப பிடிக்கும் அதான் வந்து இருக்காங்களா என்று சொன்னார்கள்...
நீங்க யாராவது காக்கா வை பிடிச்சி இருக்கீங்களா.
இந்த குறிப்பு ஓவ்வொரு முறையும் போடனும் என்று தளளி போய் கொண்டே இருந்தது.அறுசுவை டாட்காமில் நான் கொடுத்த முதல் இனிப்பு வகையும் இதுவே..
எங்க வீட்டுகல்யாணங்களில் திருமணம் முடிந்து மறுநாள் மாப்பிள்ளை தஸ்தர் என்று வைப்பார்கள் அதில் கண்டிபபாக இந்த ஸ்வீட் இடம் பெறும் , இப்ப எலலாரும் ஆர்டர் கொடுத்து விடுகிறார்கள்,
குக்கரில் அரைமணி நேரம் செய்து முடித்தது நல்ல ஆறவைத்து பிரிட்ஜில் வைத்து துண்டுகள் போட்டால் தான் நல்ல வரும்.
இது கொஞ்சம் பெரிய வேலை தான் ஆனால் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது.
ருசித்து மகிழுங்கள்.
இது 10 முட்டைக்கு ஒரு தேங்காயும் போடுவார்கள்
சில டைம் , 12 முட்டைக்கு ஒரு தேங்காயும் போடுவார்கள். தேங்காய் நல்ல முத்தலாக பெரியதாக இருந்தால் நல்லது.
முட்டை அதிகமானாலோ, தேங்காய் பால் கட்டியாக இல்லாமல் இருந்தாலோ கலர் கிரே கலர் வராது.
மேலே உள்ளது போல் இருக்கும்.
கிரே கலரில் இருக்கனும் அது தான் பதம்.
தேங்காய் பால் நல்ல கட்டியாக இருக்கனும். முட்டையை நன்கு அடிக்ககனும். இதில் பாதாம் முந்திரியும் அரைத்து ஊற்றலாம்.
ஜூன் மாதம் 2015 குங்குமம் தோழியில் 30 நான் வெஜ் ரமலான் ரெசிபியில் இதுவும் ஒன்று.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/