Thursday, October 22, 2015

குங்குமம் தோழியால் இணைந்த பள்ளி தோழிகள்






பள்ளி தோழிகளை பல வருடங்கள் கழித்து இணைத்த குங்குமம் தோழி நன்றி!!!





குங்குமம் தோழிக்கு ஜலீலா எழுதுவது


என் ரெசிபி ரமலான் இனைப்பில் பிரசுகரமானதும் நான் துபாயில் இருப்பதால் எனக்கு புக் கிடைக்கவில்லை, ஜூன் மாதம் புக் வெளியானதும் உடனே என் பள்ளி தோழி கவிதா குங்குமம் ஆபிஸ்க்கு தொடர்ந்து போன் செய்து என்னை தொடர்பு கொண்டார் கவிதா//


ஆம் பள்ளி காலத்தில் எனக்கு நிறைய நட்புகள் என்று கிடையாது எல்லாரிடமும் சமமாக தான் பழகுவேன். அதில் 4 பேர் ரொம்ப குலோஸ் சித்ரா, கவிதா, ஹசீனா, வள்ளி .  5 பேர் சேர்ந்தால் அங்கு கலகலப்பு அதிகமாக இருக்கும். பள்ளி பீச் பக்கம் என்பதால் அங்கு மரத்தடியில் மதியம் லன்ச் சாப்பிடும் போது உணவுபரிமாற்றம். வள்ளி கொண்டு வரும் பருப்பு உருண்டை குழம்பு, சித்ரா கொண்டுவரும் டபுள் பீன்ஸ் பிரிஞ்சி சாதம், ஹசீனா கொண்டுவரும் (எங்க பெரிமாவின் ஸ்பெஷல் ரொட்டி தக்காளி சட்னி) என் அம்மாவின் ஸ்பெஷல் பூரி உருளை கிழங்கு எல்லாருக்கும் பிடிக்கும். கவிதாவின் கொண்டைலை புளி சாதம் எல்லாம் கலந்து சாப்பிட்டு விட்டு பீச் காற்றில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு அங்கு விற்கு தள்ளூ வண்டியில் இருக்கும் குச்சி ஐஸ் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்த நாட்கள் இனி வருமா?
பீச் அருகிலேயே பள்ளி அருமை ஹிஹி நல்ல தூங்கலாம்..குளு குளுன்னு நல்ல காத்து வரும்.

அது ஒரு இனிய கானாக்காலாம்.



பள்ளிகாலம் முடிந்ததும் நட்புகளை மிகவும் மதிப்பவள். நாங்க பள்ளி காலம் முடியும் போதே ஒருவருக்கு ஒருவர் .. எப்படியாவது வருடம் ஒரு முறை கண்டிப்பாக சந்திக்கனும் என்று பேசி வைத்துகொண்டோம் , முதலில் என் திருமணத்துக்கு எல்லா தோழிகளூம் வந்தார்கள் கவிதா சித்ரா எனக்கு மேக்கபும் போட்டு விட்டார்கள். அடுத்து ஹசீனா , சித்ரா திருமணம் வரை சந்தித்தோம்.நான் கல்யாணம் ஆனதும்  சென்னையில் இருந்தவரை வருடம் ஒரு முறையாவது போய் தோழிகளை சந்திப்பேன்.ஆனால் துபாய் வந்ததில் இருந்து முன்பெல்லாம் 2 வருடம் ஒரு முறை தான் ஊருக்கு போக முடிந்தது , போனால் கண்டிப்பாக எல்லாரையும் மீட் பண்ணுவேன், வள்ளி எங்க வீட்டு கிட்டேயே திருவல்லி கேனியில் பிரிட்டிங் ப்ரஸில் வேலை பார்த்தாள், அடிக்கடி போய் பார்ப்பேன்.

சித்ராவும் பக்கம் தான் , ஹசீனா என் பெரிமா பொண்ணு தான் கவிதா மட்டும் பட்டினபாக்கம் தாண்டி உள்ள எஸ்டேட் , அங்கும் தவறாமல் போய் அவளையும் அவர்கள்குடும்பதாரையும் சந்திப்பேன், பிறகு கடந்த 20 வருடமாக ஹசீனாவை தவிர  யாருடனும் தொடர்பு இல்லை, முக நூல் முன்பே ஆரம்பித்தாலும் இப்ப 3 வருடமாக தான் தான் போஸ்டிங் போடுவதிலும் என் வியாபரம் சம்பந்தமாக கஸ்டமர்களை அனுகவும் பயன்படுத்தி வருகிறேன், அங்கு யாரும் என் பள்ளி தோழிகள் யாரும் இருக்கிறார்களா என்று அடிக்கடி தேடி பார்ப்பேன், இது வரை யாரும் கிடைக்கவில்லை.

 குங்குமம் தோழியில் என் சமையல் குறிப்பு வெளியானதை பார்த்து அன்றே  ஜலீயை கண்டு பிடிச்சிட்டோம் என்று என் பள்ளி தோழி கவிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை, , உடனே  குங்குமம் ஆபிஸ்க்கு போன் செய்து எனக்கு அவளுடைய நம்பரை தோழி வைதேகி மூலமாக எனக்கு முக நூலில் கொடுத்தாள் நன்றி குங்குமம் தோழி.

இப்போது குங்குமம் தோழி என்னையும் கவிதாவையும் இணைத்துள்ளது, கவிதாவிடன் நானும் இங்கு இருந்து போனில் பேசினேன் அவளும் பேசினாள்.  கவிதாவுக்கு என் பெரிமா பொண்ணு ஹசீனா நம்பரை நான் கொடுக்க மிகவும் சந்தோஷமாக ஹசீ கிட்ட பேசிட்டேன்டி ஏய் ஜலீ ரொம்ப சந்தோசம் டி என்றாள் இப்போது வாட்ஸ்அப்பில் இணைந்துள்ளோம், மற்ற தோழிகள் சித்ரா மற்றும் வள்ளியையும் இந்த குங்குமம் இணைக்கும் என்று நினைக்கிறேன்.என் முக நூல் ஐடி - jaleelakamal

என் இன்னும் பல தோழிகள் என்னை தேடுபவர்கள் இணைந்து கொள்ளுங்கள்.


நன்றி

குங்குமம் தோழி














https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Friday, October 16, 2015

இஞ்சி கொத்து பணியாரம் / பிஸ்கேட் - Ginger Shape Biscuit





இஞ்சி கொத்து 
inji koththu biscuit
தேவையானவை
மைதா மாவு – ஒரு டம்ளர்
சர்க்கரை – ஒரு குழி கரண்டி
பட்டர் (அ) நெய் – இரண்டு மேசை கரண்டி
உப்பு – அரை சிட்டிக்கை
ஏலப்பொடி – அரை தேக்கரண்டி

செய்முறை
பட்டரை உருக்கிகொள்ளவும், சர்க்கரையை பொடித்து கொள்ளவும்.
மைதாவுடன் , பட்டர், சர்க்கரை , ஏலப்பொடி உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை முன்று உருண்டையாக பிரித்து வட்டவடிவமாக தேய்த்து நீளமாக கட் செய்து இடை இடையே சரிவலாக  ஒரு இஞ்ச் அளவுக்கு கட் செய்து லேசாக திருப்பி விடவும். இதன் வடிவம் பார்க்க இஞ்சி போல் இருக்கும். இதை  டைமன்ட், போ போன்ற வடிவிலும் கட் செய்யலாம்.
எண்ணையை காயவைத்து கட் செய்து வைத்துள்ள இஞ்சி கொத்தை போட்டு பொரித்து எடுக்கவும்.
பள்ளி விடுமுறை நேரம் குட்டீஸூக்கு ஏற்ற சுவையான இஞ்சி கொத்து பிஸ்கேட்.

கவனிக்க : இதில் முட்டை மற்றும் சிறிது பாதாம் பவுடர் கலந்து செய்தால் இன்னும் நல்ல ருசியாக இருக்கும்.






https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, October 15, 2015

இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்கள்



உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இஸ்லாமிய வருடங்களில் முதல் வருடம் இந்த முஹரம் மாதம் தான், ஹஜ் மாதம் இஸ்லாமிய வருடங்களின் கடைசி மாதம்.
 நோன்பு, 9, 10 வைப்பது சிறப்பு.


முஹரம் மாதமும் ஆஷூரா நோன்பும்



Islamic  New Year - 1437

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/