இஞ்சி கொத்து
inji koththu biscuit
தேவையானவை
மைதா மாவு – ஒரு டம்ளர்
சர்க்கரை – ஒரு குழி கரண்டி
பட்டர் (அ) நெய் – இரண்டு மேசை கரண்டி
உப்பு – அரை சிட்டிக்கை
ஏலப்பொடி – அரை தேக்கரண்டி
செய்முறை
பட்டரை உருக்கிகொள்ளவும், சர்க்கரையை பொடித்து கொள்ளவும்.
மைதாவுடன் , பட்டர், சர்க்கரை , ஏலப்பொடி உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை முன்று உருண்டையாக பிரித்து வட்டவடிவமாக தேய்த்து நீளமாக கட் செய்து இடை இடையே சரிவலாக ஒரு இஞ்ச் அளவுக்கு கட் செய்து லேசாக திருப்பி விடவும். இதன் வடிவம் பார்க்க இஞ்சி போல் இருக்கும். இதை டைமன்ட், போ போன்ற வடிவிலும் கட் செய்யலாம்.
எண்ணையை காயவைத்து கட் செய்து வைத்துள்ள இஞ்சி கொத்தை போட்டு பொரித்து எடுக்கவும்.
பள்ளி விடுமுறை நேரம் குட்டீஸூக்கு ஏற்ற சுவையான இஞ்சி கொத்து பிஸ்கேட்.
கவனிக்க : இதில் முட்டை மற்றும் சிறிது பாதாம் பவுடர் கலந்து செய்தால் இன்னும் நல்ல ருசியாக இருக்கும்.
Tweet | ||||||
2 கருத்துகள்:
Super akka ..
அருமை அக்கா...
தோழியில் வெளியானமைக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா