காலை உணவிற்கு சர்க்கரை பொங்கலும் சுண்டலும் பொருத்தமான சமையல்.
அரிசி உணவில் தயாரிப்பதை விட ஹெல்தியான நவதானியத்தில் ஆரோக்கியமாக சமைத்து சாப்பிடலாம்.
நவ தானிய சர்க்கரை பொங்கல்
தேவையான பொருட்கள்
குதிரை வாலி
சாமை
தினை
வரகரிசி
எல்லா அரிசியும் சேர்த்து - 1 டம்ள்ர்
பாசிப்பருப்பு - கால் டம்ளர்
சுக்கு கருப்பட்டி - 1 டம்ளர்
பால் - ஒரு டம்ளர்
தண்ணீர் ஒரு டம்ளர்
ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி
நெய் - இரண்டு குழிகரண்டி
முந்திரி கிஸ்மிஸ் பழம் - 25 கிராம்
செய்முறை
சுக்கு கருப்படியில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு வடிக்கட்டவும்.
அரிசி வகைகளை களைந்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
முந்திரி கிஸ்மிஸ் பழத்தை நெய்யில் வறுத்து வைக்கவும்.
பால் தண்ணீர் இரண்டையும், கொதிக்க விட்டு அதில் ஊறிய அரிசிவகைகளை சேர்த்து கொதிக்க விடவும்.
பாதி கொதித்து வரும் போது வடித்து வைத்துள்ள சுக்கு கருப்பட்டியை மற்றும் ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும், கொதிக்கும் போது சிறிது நெய் விட்டு குக்கரை மூடி இரண்டு முன்று விசில் விட்டு இரக்கவும்.
ஆவி அடங்கியதும் வேறு பாத்திரத்தில் மாற்றி அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் கிஸ்மிஸ் பழத்தை சேர்த்து கிளறி பரிமாறவும்.
சுவையான நவதானிய கருப்பட்டி சர்க்கரை பொங்கல் ரெடி.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||