காலை உணவிற்கு சர்க்கரை பொங்கலும் சுண்டலும் பொருத்தமான சமையல்.
அரிசி உணவில் தயாரிப்பதை விட ஹெல்தியான நவதானியத்தில் ஆரோக்கியமாக சமைத்து சாப்பிடலாம்.
நவ தானிய சர்க்கரை பொங்கல்
தேவையான பொருட்கள்
குதிரை வாலி
சாமை
தினை
வரகரிசி
எல்லா அரிசியும் சேர்த்து - 1 டம்ள்ர்
பாசிப்பருப்பு - கால் டம்ளர்
சுக்கு கருப்பட்டி - 1 டம்ளர்
பால் - ஒரு டம்ளர்
தண்ணீர் ஒரு டம்ளர்
ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி
நெய் - இரண்டு குழிகரண்டி
முந்திரி கிஸ்மிஸ் பழம் - 25 கிராம்
செய்முறை
சுக்கு கருப்படியில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு வடிக்கட்டவும்.
அரிசி வகைகளை களைந்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
முந்திரி கிஸ்மிஸ் பழத்தை நெய்யில் வறுத்து வைக்கவும்.
பால் தண்ணீர் இரண்டையும், கொதிக்க விட்டு அதில் ஊறிய அரிசிவகைகளை சேர்த்து கொதிக்க விடவும்.
பாதி கொதித்து வரும் போது வடித்து வைத்துள்ள சுக்கு கருப்பட்டியை மற்றும் ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும், கொதிக்கும் போது சிறிது நெய் விட்டு குக்கரை மூடி இரண்டு முன்று விசில் விட்டு இரக்கவும்.
ஆவி அடங்கியதும் வேறு பாத்திரத்தில் மாற்றி அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் கிஸ்மிஸ் பழத்தை சேர்த்து கிளறி பரிமாறவும்.
சுவையான நவதானிய கருப்பட்டி சர்க்கரை பொங்கல் ரெடி.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
2 கருத்துகள்:
எனக்கு ரொம்ப உபயோகம். நிறைய சுக்குக் கருப்பட்டி பாக்கெட்டுகள் என்னிடம் இருக்கின்றன. அதை என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தேன். (சுமார் 25). கருப்பட்டிப் பொங்கல் ஒரு நாள் செய்துபார்த்துவிட வேண்டியதுதான். சுக்குக் கருப்பட்டியில் கல் அல்லது பனைஓலையின் பகுதி இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
நெல்லை தமிழன் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
வெல்லம் சேர்த்து செய்யப்படும் எல்லா சமையலுக்கும் அதற்கு பதில் இப்படி சுக்கு கருப்பட்டியை சேர்த்தும் செய்யலாம்.
எப்படியோ உங்களுக்கு இந்த குறிப்பு உதவியது ரொம்ப சந்தோஷம்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா