இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும்.
சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில்.
https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
சாதாரணமாக நாம உளுந்து வடை செய்வதை விட அதில் கேரட், கீரை, முட்டை கோஸ் போன்ற ஏதேனும் ஒருகாய் வகையை துருவி சேர்த்து குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் அல்லது ஒரு மீலாகவேகொடுக்கலாம்..
உளுந்து இடுப்பெலெம்பை பலப்படுத்தும் குழந்தைகளை
காய் சாப்பிட வைத்தது போலவும் ஆயிற்று.
இங்க பிலாக்கில்நிறைய உளுந்து வடை தயிர் வடை , உளுந்து வடை டிப்ஸ் நிறைய கொடுத்துள்ளேன் அந்த லின்ங் எல்லாம்
கிழே கொடுக்கிறேன். http://samaiyalattakaasam.blogspot.ae/2009/08/blog-post_29.html
பாரம்பரிய சமையல்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
வெயிட் குறைக்க இதை தினம் செய்து குடிக்கலாம். ஆப்ரேஷன் செய்து இருப்பவர்களுக்கு சூப் கொடுக்க சொல்வார்கள் அப்ப என்ன செய்வது என்று தெரியாது , அந்த நேரத்தில் இது போல சூப் செய்து குடிக்கலாம்.
கிட்னி பிராப்ளம் இருப்பவர்கள் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம். நல்ல பலன் தெரியும். சுரைக்காயை வடிகட்டிட்ட்டு மீதி உள்ள காயை லேசாக தாளித்து தேங்காய் சேர்த்து பொரியல் போலவும் சாப்பிடலாம்
சூப் செய்வது பெரிய வேலை மலைப்பாக நினைக்கிறீர்களா வாங்க இது போல கூட சிம்பிளாக தினம் ஒரு காயில் செய்து சாப்பிடலாமே.
இன்னும் பயனுள்ள பல கிச்சன் ரகசியங்களுடன் பதிவுகள்வரும். அதுக்கு முதலில் என் சேனலை சப்ஸ்கிரைப் செய்து தொடர்ந்து பார்க்கவும்.
சமையலே செய்யதெரியாதவர்களும் ஈசியாக இதை பார்த்து செய்துவிடலாம்.
ஆறு மாத குழந்தைகளுக்கு முதல் முதலில் என்ன சூப் செய்யலாம் என்று ஒரே குழப்பமாக இருக்கும்.
இது மஞ்சள் பூசனி சேர்த்து செய்துள்ளேன் இதே போல தினம் ஒரு காயில் கேரட், முல்லங்கி, கீரை பீட்ரூட் , உருளை என இதே போல செய்து கொடுக்கலாம், தேவைப்பட்டால் இதில் சிக்கனை வெந்து சேர்த்து கொள்ளலாம்.
வியட்நாமில் தினப்படி சமையலில் இந்த சூப் கண்டிப்பாக இடம் பெறும்,
தேவையான பொருட்கள்
மஞ்சள் பூசனி - 200 கிராம்
சின்ன வெங்காயம் 5 அ பெரிய வெங்காயம் - ஒன்று
உப்பு - தேவைக்கு
செய்முறை
ஒரு பெரிய வாயகன்ற சட்டியில் 3 டம்ளர் தண்ணீரை கொதிக்கவிட்டு அதில் அரிந்து போட்டு , பொடியாக நறுக்கிய வெங்காயம் , உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வெந்தததும் நன்கு மசித்து வெந்த சூப்பை வடிகட்டவும்.
மஞ்சள் பூசனி என்பதால் மசிக்கும் போது கொஞ்சம் கிரீமியாக கெட்டியாக வரும்.
இது குழந்தைகளுக்கு கொடுக்கும் போது சிறிது நெய் விட்டு தேவைபட்டால் மிளகு தூள் தூவி சாப்பிடலாம். /
செய்து பார்த்து உங்கள் கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஏற்கனவே சுரைக்காய் சூப் இங்கே கொடுத்துள்ளேன்.
அந்த லின்க் இங்கே
இதை செய்பவர்கள் என் அந்த சமையலை ஒரு போட்டோ எடுத்து என் மெயில் ஐடிக்கு அனுப்பினால் முகநூலில் ஷேர் செய்வேன்.
மறக்காம என் சேனலை சப்ஸ்கிரைப் பன்ணிடுங்கள் , அப்ப தான் உடனுக்குடன் நான் இங்கு பதியும் குறிப்புகள் உடனே உங்களுக்கு கிடைக்கும்.
cookbookjaleela@gmail.com
தினம் செய்யும் சமையலுக்கு மிகவும் தேவையான பல சமையல் பொருட்களில் இஞ்சி பூண்டு பேஸ்ட் க்கு தான் முதலிடம்.
செய்யும் சமையலை ஜீரணமாக்க கண்டிப்பாக இஞ்சி பூண்டு பேஸ்ட் நாம் சேர்க்கனும்.
அதன் அளவுசெய்முறை விளக்கங்கள், கிழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.
சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்து கமன்ட் பண்ணுங்கள். எதுவும் சந்தேகங்கள் இருந்தால்கேளுங்கள்.
உங்கள் தோழ தோழியர்களுக்கு ஷேர் செய்து சப்ஸ்கிரைப் செய்ய சொல்லுங்கள்.
ஏற்கனவே முந்தய பதிவுகளில் தேங்காய் பவுடர் தயாரிக்கும் முறையை விளக்கி இருந்தேன் அந்த லிங்க் கிழே கொடுத்துள்ளேன். Cococnut Flour Coconut Bread
http://samaiyalattakaasam.blogspot.ae/2017/12/how-to-to-prepare-coconut-flour-for.html
http://samaiyalattakaasam.blogspot.ae/2017/12/paleo-bread-with-coconut-flour.html
தேங்காய் பவுடர் - அரை கப்
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
தேங்காய் எண்ணை - 3 தேக்கரண்டி
உப்பு ஒரு சிட்டிக்கை
டார்க் சாக்லேட் - ஒரு மேசைகரண்டி
பட்டை பொடி - கால் தேக்கரண்டி
முட்டை - ஒன்று
பால் (அ) தண்ணீர் (அ) காபி - ஒரு மேசைகரண்டி
நட்ஸ் தேவைப்பட்டால்
தேன் சிறிது - மெயிண்டனன்ஸ் டயட்டில் இருப்பவர்கள் சேர்த்து கொள்ளலாம்.
செய்முறை
முட்டை தேங்காய எண்ணை யை ஒன்றாக அடிக்கவும்
டார்க் சாக்லேட்டை உருக்கி சேர்த்து அடிக்கவும்.
பட்டை பொடி, தேங்காய் பவுடர் , பேக்கிங் பவுடர் உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்துசலித்து கொள்ளவும்.
முட்டை கலவையில் சிறிது சிறிதாக தேங்காய் பொடி கலவையை சேர்த்து கலக்கி தேவைக்கும் சிறிது பால் அல்லது தண்ணீர் சேர்த்து கலக்கவும். காபி சுவை பிடித்திருந்தால் காபியாக கலக்கி சேர்த்துகொள்ளலாம்
ஓவனை பிரீ ஹீட் செய்வது போல குக்கரில் அடியில் உப்பை கொட்டி பரப்பி விட்டு சிறு தீயில் வைத்து பிரீஹீட் செய்யவும்.
கலக்கிய கேக் கலவையை ஒரு கேக் ஓவன் அல்லது கண்ணாடி டம்ளர் அல்லது பேப்பர் கப்பில் ஊற்றி உள்ளே வைக்கவும்.
ஒரு முக்கியமான விஷியம் இதில் கவனிக்க வேண்டியது குக்கர் உள்ளே இருக்கும் வாசரை எடுத்து விடவேணும் ,
வாசரை எடுத்து விட்டு மூடி போட்டு வெயிட் போடாமல் சிறு தீயில் 20 நிமிடம் ஓவனில் வைப்பது போலவே வைத்து வேகவைக்கவும்.
சுவை கொஞ்சமும் மாறாதா ஓவன் கேக் போலவே இருக்கும்.
உங்கள் விருப்பத்துக்கு என்ன ப்ளேவர் கேக் வேண்டுமானாலும் வைக்கலாம்.
சுவையான தேங்காய் பூ கேக் ரெடி..
Coconut Flour Paleo Cake Without oven cooker method
இங்கு என் பிலாக்கை பல வருடமாக பார்த்து வருகிறீர்கள்,
இதில் உள்ள பல பயனுள்ள டிப்ஸ் சமையல் வகைகளைபார்த்து கண்டிப்பாக அனைவரும் பயனடைந்து இருப்பீர்கள்.
இதுவரை ஆதரவு கொடுத்த நீங்கள் என் யுடியுப் சேனைலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
என்னால் முடிந்தவரை பதிவுகளை போட்டு பதிந்து வருகிறேன் என்னால் உடனுக்குடன் லின்குகளை பகிர முடியவில்லை.
இதில் பயனுள்ள 6 கிச்சன் டிப்ஸ் கொடுத்துள்ளேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பயனளிக்கும் உங்கள் அனைத்து நண்பர்களுடனும் என் சேனலை பகிர்ந்து சப்ஸ்கிரைப் பண்ண சொல்லுங்கள்.
நீங்கள் சப்ஸ்கிரைப் செய்து வைத்து கொண்டால் தான் நான் போடும்பதிவுகளை உடனுக்குடன் பார்க்க முடியும்.
Please subscribe My Channel and share with your friends
சின்ன குட்டி வாண்டுக்கு கூட பிடிச்சிருக்கு இது ஸ்வீட் பாஸ்தாவில் பித்தன் சார் பாஸ்தாவை பற்றி கேட்டு இருந்தார் அவருக்காக இந்த பதிவு. பார்த்து...
About Me
Jaleela Kamal
சமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு.
தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.