மனத்தக்காளி கீரை ப்ரைட் ரைஸ்
My You tube channel please visit and like , comment, subscribe and share with your friends/
மேலே உள்ள லின்க் என் யுடியுப் சேனல் யார் யார் பார்க்கிறீங்கன்னு தெரியல என் சேனல் ஓப்பன் செய்ததும் பக்கத்தில் சிவப்பு கலரில் சப்ஸ்கிரைப்ன்னு இருக்கும் அதை கிளிக் செய்து சப்ஸ்கிரைப் செய்து விட்டு அதற்கு பக்கத்தில் இருக்கும் பெல் பட்டனையும் கிளிக் பண்ணிடுங்கள். இப்படி செய்தால் நான் போடும் பதிவுகள் உடனுக்குடன் உங்களுக்கு கிடைக்கும்.
மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் , எப்படி இருக்கு சரியா பேசி இருக்கேனான்னும் தெரியல , சில பேர் என் குரல் மெதுவாக இருக்கு என்று சொல்கிறார்கள், எனக்கு கேட்டா கரெக்டா இருக்கமாதிரி தான் தெரியுது.
நீங்க பார்த்து கமெண்டில் நிறை குறைகளை சொன்னால் தான் எனக்கு சரி செய்து கொள்ள முடியும்.
தொடர்ந்து இந்த பிலாக்குக்கு வருகைதந்து ஆதரளித்தது போல என் சேனலுக்கும் தொடர்ந்து வந்து லைக் , கமென்ட் , சப்ஸ்கிரைப் செய்து ஆதரவளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
ஒகே இப்ப குறிப்பு வருவோம்
பச்சை கீரை வகைகள் பயன் படுத்தி 100 ரெசிபி செய்து இருக்கிறேன் அதில் 30 சமையல் குறிப்புகள் விகடனில் வெளி வந்தது. அந்த 100 ரில் கிழே உள்ள ரெசிபியும் ஒன்று ஏற்கன்வே போன குறிப்பில் புதினா நெல்லிக்காய் ஜூஸ் போட்டு இருக்கிறேன்.
இதில் செய்து இருப்பது கீரை ப்ரைட் ரைஸ்
கீரைன்னு சொன்னாலே சிலருக்கு பிடிக்காது ஒரே பொரியல் , பிரட்டல் கூட்டுன்னு செய்து சாப்பிட்டு போரடிக்க்கும்.
அதை இப்படி எல்லாருக்கும் பிடித்த பாஸ்ட் புட்டில் சேர்த்து செய்தால் எப்படி ஒரு சத்தான சமையல் செய்து கொடுத்தது போல ஆச்சு
இதில் மனத்தக்காளி கீரை சேர்த்துள்ளேன், நீங்கள் வேர எந்த கீரை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.
மணத்தக்காளி கீரை: வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும்,
தேமல் போக்கும்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 200 கிராம்
பட்டர்
சோயா சாஸ்
உப்பு வெஜ் ஸ்டாக் - கால் துண்டு
மனத்தக்காளி கீரை – அரைகட்டு
கேரட்- நீளவாக்கில் பொடியாக அரிந்தது – அரை கப்
முட்டை கோஸ் – நீளவாக்கில் பொடியாக அரிந்தது அரை கப்
வெங்காய தாள் – முன்று ஸ்டிக்
சோயா சாஸ் – ஒரு மேசைகரண்டி
டொமேட்டோ கெட்சப் – ஒரு மேசைகரண்டி
வினிகர் – ஒரு தேக்கரண்டி
கொட மிளகாய் – பொடியாக அரிந்தது – கால் கப்
சர்க்கரை – இரண்டு சிட்டிகை
பச்சமிளகாய் – ஒன்று
பூண்டு – இரண்டு பல்
பட்டர் - தேவைக்கு
செய்முறை
சாதத்தில் சிறிது உப்பு, சோயா சாஸ் பட்டர் , வெஜ் ஸ்டாக் கியுப்
சேர்த்து உதிரியாக வடித்து ஆறவைக்கவும்.
வெங்காய தாளை வெள்ளை பாகம் தனியாக பச்சை பாகம் தனித்தனியாக கட்
செய்து வைக்கவும்
ஒரு வாயகன்ற பேனில் பட்டர் சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய
பூண்டு, பச்சமிளகாய், பூண்டு, சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
காய் வகைகள் வெங்காய தாள் வெள்ளை பாகம். கேரட் , முட்டை கோஸ்
சேர்த்து வதக்கவும். ( ஹை ப்லேம் வைத்து ஐந்து நிமிடம் வதக்கவும்
மனத்தக்காளி கீரை கொட மிளகாய், சேர்த்து வதக்கவும்.
கெட்சப், வினிகர், சோயா சாஸ் ,வெள்ளை மிளகுதூள், உப்பு சேர்த்து
நன்கு வதக்கவும்.
முட்டையில் சிறிது உப்பு போட்டு கலக்கி தோசைகளாக ஊற்றி பொடித்து
வதக்கி கொண்டுள்ள காய் கறி கலவையில் சேர்க்கவும் , மேலே வெங்காய தாள் பச்சை
அரிந்து வைத்துள்ளதை சேர்த்து வதக்கவும்.
இத்துடன் ஆறவைத்த சாதத்தையும் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
சாப்பிடும் போது சிறிது பட்டர் சேர்த்து கலந்து வைத்துள்ள
சாதத்தை போட்டு சூடு படுத்தி வைக்கவும்.ஒரு வித்தியாசமான மனத்தக்காளி கீரை ப்ரைட்
ரைஸ் ரெடி.
கவனிக்க: மனத்தக்காளி கீரை கசக்கும், சிலருக்கு பிடிக்காது குழந்தைகளும் சாப்பிட மாட்டார்கள், அதற்கு
இப்படி ஃப்ரைட் ரைஸ் போல செய்து சாப்பிடும் போது காய்கறிகளோடு இதும் சேர்ந்தால்
கீரை போட்ட மாதிரியே தெரியாது.
சாதம் சர்க்கரை கெட்சப்
எல்லாம் சேருவதால் கசப்பு தெரியாது. பக்க உணவாக காலிப்ளவர் மன்சூரியன் உடன்
சாப்பிடலாம்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/