இளநீர் கடற்பாசி Tender Coconut Agar Agar
கடல் பாசி நோன்பு காலத்தில் செய்யும் பலவகை பதார்த்தங்களில் இதுவும் ஒன்று. இது ஒரு சைவ உணவு
தேவையானவை
செய்முறை
ஒரு வாய் அகலமாக உள்ள சட்டியில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கடல்பாசி மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும்
நன்கு கொதித்து கடல் பாசி கரைந்து தண்ணீர் தெளிய ஆரம்பிக்கும் போது சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்
இறக்கி வைத்திருக்கும் கடல்பாசி கலந்த தண்ணீரை மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டியில் தங்கும் கடல் பாசியை மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்
சதுரமாக உள்ள இரண்டு பாத்திரங்களில் வடிகட்டிய தண்ணீரை ஊற்றி அதில் இளநீரை சேர்த்து அதில் உள்ள வழுக்கையை கரண்டியால் சுரண்டி மேலே தூவி விடவும். பாதாமை மேலே தூவவும்.
சூடு அறியதும் லேசாக கெட்டி ஆகும். இப்போது அந்த இரண்டு பாத்திரங்களையும் ப்ரிட்ஜில் வைக்கவும்
கடல் பாசி நன்கு கெட்டியாக மாறி குளிர்ச்சியடைந்ததும் எடுத்து விரும்பிய வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.
இது சாப்பிட சாப்பிட நிறைய சாப்பிடனும்போல் தோன்றும் அவ்வளவுருசியாக இருக்கும்
Note:
கடல் பாசி நோன்பு காலத்தில் செய்யும் பலவகை பதார்த்தங்களில் இதுவும் ஒன்று. இது ஒரு சைவ உணவு. இதை ஜெல்லியை போல் ஹோட்டல்களில் பாலுடா மற்றும் விதவிதமான ஸ்வீட் வகைகளில் பயன்படுத்துவார்கள். இது நோன்பு பிடிக்கும் போது ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும். கடல் பாசியை பல வகையாக செய்யலாம், ப்ளைனாக செய்து அதில் வேண்டிய புட்கலர் சேர்த்து நட்ஸ் தூவி கொள்ளலாம். இல்லை பழ வகைகளை நறுக்கி போட்டு செய்யலாம். பால், ஜவ்வரிசி, கடல்பாசி சேர்த்து காய்ச்சி செய்து சாப்பிடலாம். ரூ ஆப்ஷா மற்றும் டேங்க் பவுடர், தேங்காய் உடைத்த தண்ணீரிலும் செய்யலாம்
Tweet | ||||||