https://samaiyalattakaasam.blogspot.com/2019/04/giveaway-from-chennai-plaza-cp-zeeba.html
Giveaway
இட்லி முட்டை கோஸ் பகோடா
மீதியான இட்லியில் பகோடா, ஆமாங்க நல்ல மொறமொறுப்பாக வரும்..
இட்லி மீதியாகிவிட்டால் அதை உதிர்த்து போட்டும் பகோடா செய்யலாம்.
தேவையானவை
உதிர்த்த இட்லி - 4
துருவிய முட்டை கோஸ் - அரை கப்
ரவை - ஒரு மேசைகரண்டி
வெங்காயம் - 1
இஞ்சி துருவல் - 1 தேகக்ரண்டி
பொடியாக அரிந்த பச்ச மிளகாய் - 1
பூண்டு - 3 பல் (தட்டியது)
இட்லி சோடா - 1 சிட்டிக்கை (optional)
உப்பு தேவைக்கு
கடலை மாவு - 2 குழிகரண்டி
மிளகாய் தூள் - அரை தேகக்ரண்டி
கருவேப்பிலை கொத்துமல்லி - ஒரு கைப்பிடி
எண்ணை - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் எண்ணைய தவிர கெட்டியாக பிசைந்து பகோடாக்களாக பொரித்து எடுக்கவும்.உப்புமாவுடன் சாப்பிட்ட அருமையாக இருக்கும்.
குறிப்பு: மீதியான இட்லியை பகோடாவாகவும் செய்யலாம்.
Tag:Leftover food, Idli pakoda,Evening Snacks.
இது வல்லமை தளத்தில் நான் முன்பு கொடுத்த குறிப்பு //
வீடியோ இப்ப நோன்பில் போட்டுள்ளேன் , கூட முடக்கத்தான் கீரை பொடியும் சேர்த்துள்ளேன்..
Tweet | ||||||
2 கருத்துகள்:
பக்கோடாவும் மீந்து போனா என்ன பண்ணலாம் ?
உணவகம் நடத்தும் ஐடியா உண்டு .. அதுக்காக கேக்குறேன்
ஆஹா... இந்த ஐடியா நல்லா இருக்கே! மீந்து போகும் அளவுக்கு இட்லி செய்வதில்லை என்றாலும் பக்கோடா செய்வதற்காக இட்லி கொஞ்சம் அதிகம் வைத்தால் ஆச்சு!
பகிர்வுக்கு நன்றி.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா