பொன்னாங்கண்ணி கீரை கண்பார்வைக்க்கு மிகவும் நல்லது. முடிவளர இதை எண்ணையில் சேர்த்து காய்ச்சி தேய்க்கலாம்.
பொன்னாங்கண்ணி கீரை பக்கோடா
தேவையான பொருட்கள்
வெங்காயம் – 3 (நீளவாக்கில் நறுக்கியது)
பூண்டு – 3 பெரிய பல் (தட்டியது)
இஞ்சி – 1 தேக்கரண்டி (துருவியது)
பச்சமிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
கடலை மாவு – 175 கிராம்
வறுத்த ரவை – 25 கிராம்
உப்பு - தேவைக்கு
கருவேப்பிலை சிறிது
பொன்னாங்கண்ணி கீரை – ஒரு கட்டு
முந்திரி – 5 பொடியாக அரிந்தது
எண்ணை – ஒரு தேக்கரண்டி
எண்ணை – பக்கோடா பொரிக்க தேவையான அளவு
செய்முறை
பொன்னாங்கன்னி கீரையை நன்கு கழுவி தண்ணீரை வடித்து அதில் வெங்காயம் , பூண்டு, இஞ்சி,பச்சமிளகாய் , உப்பு, முந்திரி எண்ணை அனைத்தையும் சேர்த்து நன்கு பிசறவும்.
கடைசியாக கடலை மாவு + ரவை சேர்த்து லேசாக கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும்.
எண்ணையை காயவைத்து மிதமான தீயில் பிசறிவைத்த பக்கோடா கலவையை சிறிது சிறிதாக போட்டு கருகாமல் சிவற பொரித்து எடுக்கவும்.
அவள் விகடனில் 2017 வந்த என் ரெசிபி இது.
(மாலை நேர சிற்றுண்டி என்றில்லை பகோடாவை ரசம் சாத்ததுடன் மதிய உணவுக்கும் சாப்பிடலாம், அப்படி செய்யும் போது ஆரோக்கியமாக அதில் நம் தேவைக்கு கிடைக்கும் ஹெல்தியான கீரைவகைகளை சேர்த்து செய்து சாப்பிடலாம்.)
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா