Wednesday, February 18, 2009

குழந்தைகள் திடீரென்று அழுதால்


1. குழந்தைகள் திடீரென்று அழுதால் ஏதாவது பூச்சி கடித்திருக்கும்.

2. உடனே பக்கத்தில் உள்ள அனைத்து துணிகளையும் நல்ல உதரி போடுங்கள்.ஏதும் எறும்பு இருக்கான்னும் பார்க்கவும்.

3. குழந்தைகளுக்கு அணியும் ஆடை லட் கலராக இருந்தால் எந்த பூச்சி இருந்தாலும் உடனே தெரியும்.

4. வயிற்று வலியா இருந்தாலும் அழுவார்கள், அதற்கு வயிற்றில் எண்ணை தடவிவிட்டு, கொதித்து ஆறிய வெண்ணீரை பாலைடயிலோ (அ) ஸ்பூனாலோ ஊற்றி விடுங்கள் கொஞ்சம நேரத்தில் சரியாகிடும்.

5. ஆகையால் தான் நல்ல சப்போட் கொடுத்து அடக்கமா தூங்க வைத்து அழக்குங்கள்/.

6. ஒரே தூக்கி பழக்க படுத்தி கையிலேயே வைத்து தூக்கி பழக்க படுத்தியவர்கள் கொஞ்சம் அவர்களை விட்டு நகர்ந்தாலும் உடனே வீல்லென்று சத்தம் வரும்.

7. அடுத்து அடுத்து இரண்டு குழந்தை உள்ள வீட்டில் பெரிய குழந்தை கூட சின்ன குழந்தையையே கொஞ்சுகிறார்களே என்ற பொறாமையில் கைய கால கூட இழுத்து விட்டு விடுவார்கள்.அதையும் ஜாக்கிரதையா கண்காணிக்கனும்.

8. குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்கு கிறார்களோ அவ்வளவு நல்லது.அதற்குன்னு வயிற்றுக்கு கொடுக்காமல் அப்படியே விடக்கூடாது. ஒரு மனி நேர்த்திற்கு ஒரு முறை பார்த்து காலை சுரன்டி விட்டால் (அ) காது மடலை லேசாக தொட்டால் கொஞ்சம் எழுந்திருப்பர்கல் வயிற்றை நிறைத்து மறு படி ஏப்பம் விட வைத்து தூங்க போடவும்.

9. பாத்ரூம் (ஒன், டு) போய் விட்டால் கூட அழுவார்கள் அதையும் அப்ப அப்ப செக் பண்ணி மாற்றி விடுங்கள்.

10. குழந்தைகளை பேனுக்கு நேரா படுக்க வைக்காதீர்கள்.
எப்போதும் கொஞ்சம் சரிவலாக படுக்க வையுங்கள்.
அப்படி நேராக படுக்க வைத்தால் நெஞ்சின் மேல் ஒரு டவலை மடித்து மேலே வையுங்கள்.

ஜலீலா

Tuesday, February 17, 2009

தியானம் செய்யுங்கள்.




இஸ்லாமிய சகோதரிகளே

//


லாயிலாக இல்லல்லாஹூ//

என்ற ஜிக்குர் செய்யுங்கள்.

எல்லா துன்பமும் தீர சலாவாத்து, தெரிந்த சலாவாத்து ஓதுங்கள்.

"லாயிலாஹா இல்லா அன் த சுபஹானக்க இன்னி குன் து மினல்லால்லிமீன்"
ஓதுங்கள்
.


பஸ்ஸில், காரில் செல்கிறோம் அப்போது வாய் சும்மா தான் இருக்கு அப்ப ஓதலாம்.

மனுஷாட்களோடு பேசி நம் கழ்டத்தை சொல்வதை விட ஆண்டவனிடம் தினம் பேசுங்கள்.கண்டிப்பாக வழி


ஜலீலா

Monday, February 16, 2009

குழந்தை வளர்பும் உணவும்.

1. குழந்தை பிறந்து முன்று மாதங்களுக்கு தாய் பால் கொடுப்பது தான் சிறந்தது.
2. அப்ப கொஞ்சமா நன்கு காய்ச்சி ஆறிய வெண்ணீர் ஒரு ஒரு ஸ்பூன் கொடுக்கலாம்.

3. குழந்தைகளுக்கு உண்வு தயாரிக்க தனியாக சாமான்களை பயன்படுத்தவும்.(வடிகட்டி, ஸ்பூன்,வெண்ணீர் போடும் பாத்திரம்)
குழந்தைகள் பாத்திரத்தை தேய்க்கவும் தனியாக சாமான் தேய்க்கும் நார் பயன் படுதவும்.

4. குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்குகிறார்களோ அவ்வளவு உடம்பிற்கு ரொம்ப நல்லது.சும்மா கையில் தூக்கி தூக்கி அவரகள் உடம்பை குலைக்க கூடாது.

5. கீழே ஷீட்டில் டவலை விரித்து அதில் படுக்க வைத்து நல்ல கைய கால ஆட்ட விடனும்.

6. அது அவர்களுக்கானா உடற்பயிற்சியும் கூட.

7. தொட்டிலில் போட்டு ஆட்டி பழக்க படுத்தாதீர்கள்.

ஜலீலா
(தொடரும்)

தினமும் செய்ய வேண்டிய ஜிக்குர்கள்




1. லாயிலாஹ இல்லல்லாஹ் - எவ்வளவு முடியுதோ அவ்வளவு ஓதலாம்.

2.லாயிலாஹ இல்லாஅன் த சுபுஹானக்க இன்னி குன் து மினல்லால்லிமீன்.

இது கர்பிணிபெண்கள் பிரசவம் ஆகும் நேரம் ஓதுவது,ஆனால் இதை நாமும் தினம் ஓதலாம் அல்லா எல்லாவிதமான கழ்டத்திலிருந்தும் நம்மை பாதுகாப்பானாக.

3.ரப்பனா ஆத்தினா பிதுன்யா ஹஸனத்தில் வபில் ஆகிரத்தி ஹஸனத்தின் வகினா அதாபன்னார்.

4.சலவாத்து தெரிந்த சலவாத்து எவ்வளவு ஓதமுடியுமோ அவ்வளவு ஓதலாம்.

5.ஹஸ்புனுல்லாஹி வனிஃமல் வகீல்.

ஜலீலா

Saturday, February 14, 2009

அவ்வாபீன் தொழுகை

அவ்வாபீன் தொழுகை என்பது ஆறு ரக்காயத்துகளை கொண்டது.


இது மக்ரீஃப் தொழுகைக்கு பிறகு தொழனும்.



1.முதலில் தவ்வாஃப் (நபீல்) தொழுகை இரண்டு ரக்காயத்து தொழனும்.
தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை இந்த உலகில் .நாம் செய்யும் தவறுகளை மன்னிக்கும் படி கேட்டு தினம் இரண்டு ரக்காயத்து நபீல் தொழுது தூவா கேட்டு கொண்டால் நல்லது.



2.இரண்டாவதாக ஹாஜத் (நபீல்) தொழுகை இரண்டு ரக்காயத்து தொழனும்.நாம் நினைக்கும் நாட்டம் நிறைவேற இந்த ஹாஜத்து நபீலை தொழலாம்.





3.முன்றாவதாக சுக்கிரியா (நபீல்) தொழுகை இரன்டு ரக்காயத்து தொழனும்
சுக்கிரியா நாம் காரியத்தை அல்லா அழகான முறையில் நிறை வேற்றுகிறான். அதற்கு நன்றி சொல்லும் வண்ணம் இந்த தொழுகையை தொழலாம்
.



ஜலீலா

Wednesday, February 11, 2009

ஐ வேளை தொழுகையின் போது ஓத வேண்டிய பொதுவான தூஆ

அல்லாஹும்ம அலா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அதத மாபி இல்மில்லாஹி ஸலவாத்தன் தாயிமத்தின் பிதவாமி முல்கில்லாஹ்.

மிகக்கிருபை உடையவனே! அருளாளனே!வானத்தையும் பூமியையும் புதுமையாய் படைத்தவனே! மேன்மையும் சங்கையும் உடையவனே! ஆகக் கிருபை உடையவனே உன்னிடமிருந்து நல்ல கிருபையாக உதவியும் கிருபையும் செய்வாயாக, அந்த கிருபையும் உதவியும் உன்னை அல்லாதவரின் உதவியை விட்டு தேவையற்றதாக ஆக்கிவிடுவாயாக! அல்லாவே! ஒப்பில்லாதவனே!தனிமையானவனே!தோன்றியிருப்பவனே!கொடையாளனே!விரிவுடையவனே!சங்கையானவனே!அள்ளித்தருபவனே!சீமானே சீமானுக்கு சீமானே!திறப்பவனே!உணவு அளிப்பவனே!அறிபவனே!நுண் அறிவுடையோனே ஜீவியமானவனே!நித்தியமானவனே!நீங்கள் உதவி வேண்டுவீர்களானால் நிச்சயமாக உங்களுக்கு உதவி கிடைத்து விட்டது. உனக்கு நாம் பகிரங்கமான வெற்றியாக வெற்றி உண்டாக்குகிறோம்.அல்லாவிடமிருந்து உதவி கிடைத்து இருக்கிறது மேலும் வெற்றி அருகில் உள்ளது இரட்சகா! ஆரம்பத்தில் தோற்றுவிப்பவனே!மேலும் மீட்டு தருபவனே!பிரியமானவனே!மிக்க மகத்துவம் உடையவனே விரும்பியதை செய்பவனே உனது ஹாலைக் கொண்டு ஹராமானவற்றிலிருந்து நீக்கிவிடுவாயாக உன் அருளால் பிறரிடம் செல்ல தேவையற்றவனாக்கி வைப்பாயாக எதனால் வேதத்தை பாதுகாத்தாயோ, அதனால் என்னையும் பாதுப்பாயாக திருத்துதர்களுக்கு எவ்வறு உதவி புரிந்தாயோ அவ்வாறு எனக்கும் உதவி புரிவாயாக நிச்சயமாக நீ எல்லா பொருட்களுடத்திலும் சக்தியுடையவனாவாய்.

அல்லாஹும்ம அலா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அதத மாபி இல்மில்லாஹி ஸலவாத்தன் தாயிமத்தின் பிதவாமி முல்கில்லாஹ்.

ஐவேளை தொழுகையின் போது கேட்க வேண்டிய தூவா.

1. சுஃஹூ தொழுகையில் - யா அல்லாஹ் மௌத் உடைய கழ்டத்தை எளிதாக்குவாயாக என்று கேட்க வேண்டும்.

2.லுஹர் தொழுகையில் - யா அல்லாஹ் கபுருடைய இடுக்கத்தையும் அதாபையும் எளிதாக்குவாயாக என்று கேட்க வேண்டும்.

3.அஸர் தொழுகையில் - யா அல்லாஹ் முன்கர் நக்கீர் உடைய கேள்வி கணக்கை எளிதாக்குவாயாக எனறு கேட்க வேண்டும்.

4.மக்ரீப் தொழுகையில் - "மீஸான்" தராசில் நன்மையை அதிகமாக்கி வைப்பாயாக என்று கேட்க வேண்டும்.

5.ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை எளிதாக கடக்க கிருபை செய்வாயாக என்றும் தூவா கேட்க வேண்டும்.


//இது என் கிரான் மா எனக்கு சொன்னது.இதற்கு ஒரு கதையும் சொன்னார்கள் அந்த பேப்பர் கிடைக்கவில்லை பாதி துண்டு தான் இருக்கு ஆகையால் போட முடியல//


ஜலீலா