Thursday, May 7, 2009

டயட் அடை (Barely ,horsegram adai)

கொள்ளு = கால் கப்

பார்லி = கால் கப்

பர்கல் = கால் கப்

வெள்ளை சென்னா = கால் கப்

புழுங்கல் அரிசி = கால் கப்

வால் நட் = கால் கப்

ராகி மாவு = ஒரு மேசை கரண்டி



இஞ்சி = ஒரு அங்குல‌ துண்டு

பூண்டு = முன்று ப‌ல்

ப‌ச்ச‌ மிள‌காய் = ஒன்று

கொத்து ம‌ல்லி, புதினா, க‌ருவேப்பிலை சிறிது (பொடியாக‌ கசாப் செய்த‌து)

சின்ன‌ வெங்காய‌ம் ‍ = ஆறு (பொடியாக‌ க‌ட் செய்த‌து



உப்பு = தேவைக்கு

ஆலிவ் ஆயில் (அ) நல்லெண்ணெய் = சுட்டெடுக்க‌





கொள்ளு , வெள்ளை சென்னா , அரிசி யை இரவே ஊற போடவும்.

பர்கல், பார்லி அரைப்பதற்கு ஒரு மணி நேரம் முன் ஊறவைக்கவும்.



வால் ந‌ட்டை ஒரு ம‌ணி நேர‌ம் முன் கொதிக்கும் வெண்ணீரில் ஊற‌வைத்து தோலெடுக‌க்வும்.

அரைக்கும் போது பூண்டு இஞ்சியை சேர்த்து அரைத்து கொள்ள‌வும்.

அரிசியை போட்டு ந‌ன்கு அரைத்து கொண்டு மீதி உள்ள‌ அனைத்து பொருட்க‌ளையும் முக்கால் ப‌த‌த்திற்கு அரைக‌க்வும்.



அரைத்த‌ க‌ல‌வையில் வெங்காய‌ம், கொத்து ம‌ல்லி, புதினா க‌ருவேப்பிலையை பொடியாக அரிந்து சேர்க்க‌வும்.





அரைத்த‌ க‌ல‌வை க‌ட்டியாக இருக்க‌வேண்டும்.

தோசைக‌ளாக‌ கொஞ்ச‌ம் ஆலிவ் ஆயில் தெளித்து சுட்டெடுக்க‌வும்.

இத‌ற்கு தொட்டு கொள்ள‌ மீன் குழ‌ம்பு, கார‌ குழ‌ம்பு, வ‌த்த‌ குழ‌ம்பு, அல்ல‌து புதினா துவைய‌ல்.

இத்தாலிய‌ன் கிரில் சிக்க‌ன்

சிக்கன் = ஒரு கிலோ

சீஸ் = ஒரு கப்

உப்பு = தேவைக்கு

தயிர் = ஒரு கப்

இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒன்னறை மேசை கரண்டி

ஆலிவ் ஆயில் = இரண்டு மேசை கரண்டி

பச்ச மிளகாய் பழுத்தது = நான்கு



சிக்கனை கழுவி அதில் பழுத்து ரெட் கலர் பச்ச மிளகாயை அரைத்து ஊற்றவும்.மீதி உள்ள சீஸ்,உப்பு,தயிர்,ஆலிவ் ஆயில், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு சிக்கனில் விறவவும்.

சிக்கனை முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.





250 டிகிர் முற்சூடு ப‌டுத்திய‌ அவ‌னில் அரை ம‌ணி நேர‌ம் பேக் செய்து எடுக‌க்வும்.

பேக் செய்யும் போது த‌ண்ணீர் கீழே நிற்கும் அத‌ற்கு முத‌லில் ந‌டு டிரேவில் இருப‌து நிமிட‌ம் வைத்து வைக்க‌வும்.

அடுத்து கீழ் டிரேவில் ப‌த்து நிமிட‌ம் வைத்து எடுக‌க்வும்.

சுவையான‌ இத்தாலிய‌ன் கிரில் சிக்க‌ன் ரெடி.

ச‌ப்பாத்தி, கோதுமை ரொட்டி, குபூஸ்,கார்லிக் சாஸ், ஹமூஸ் போன்றவைக‌ளுட‌ன் சாப்பிட‌லாம்.



Tuesday, May 5, 2009

கர்பிணி பெண்களுக்கு




 சில கர்பிணி பெண்களுக்கு மசக்கை சமயத்தில் என்ன சாப்பிட்டால் வாந்தி நிற்கும் வாக்கு ருசி படும் என்று தெரியாது, அதற்கு என் அனுபவ டிப்ஸ் உங்களுக்காக..

1.கர்பிணி பெண்கள் நான்கு மாதங்கள் வரை ஒரு நாளைக்கு 6 டம்ளர் பால் அருந்த வேண்டும். இது குழந்தைக்கு தேவையான கால்சியம் இதில் குழந்தைக்கு கிடைத்து விடும்.


2. ஸ்வீட்டுக்கு போடும் கிஸ்மிஸ் பழம் நிறைய சாப்பிட்டால் வாந்தி கட்டு படும்.
மயக்கமாக இருந்தால் குளுக்கோஸ், ஹார்லிக்ஸ் போன்றவை குடிக்கலாம்.

3. தலைவலி, ஜுரம், சளி, பல் வலி போன்றவைக்கு டாக்டரிம் கேட்காமல் எந்த மாத்திரையும் சாப்பிட வேண்டாம்.

4. சூடு தன்மை உள்ள பழங்கள் காய்கள், உண்வுகள் அதிகம் சாப்பிடவேண்டாம்.

5. சாப்பிட கூடாத பழங்கள்
கொய்யா , பப்பாளி, அன்னாசி, கருப்பு திராட்சை.

6. தினம் சாப்பிட வேண்டிய பழங்கள்
ஆப்பில், பச்சை திராட்சை,மாதுளை, ஆரஞ்ச்


7. இறால், சிக்கன், பீஃப் போன்றவை கூட ரொம்ப சூடு ‍இதேல்லாம் கூட தவிர்ப்பது நல்லது.
சிக்கன் நிறைய தயிர் சேர்த்து செய்து கொஞ்சமாக சாப்பிட்டு கொள்ளலாம்.

8. புரோகோலி மற்றும் ஸ்பினாச் கீரையில் அதிக அயர்ன் இருக்கு, இவை இரண்டையும் அடிக்கடி சமைத்து உண்ணலாம். ஸ்பினாச் சூப், கூட செய்து குடிக்கலாம்.

9. நெல்லிக்காய் நிறைய வாங்கி சர்க்கரை பாகு காய்ச்சி அதில் நெல்லிக்காயை வேகவைத்து பாகில் ஊறவைத்து தினம் ஒன்று சாப்பிடலாம்

10.பெருங்காயம், பூண்டு,சோம்பு சிறிது குறைத்து பயன் படுத்தவும்.

Sunday, May 3, 2009

மூக்கில் இரத்தம் வருகிறதா?

உடல் அதிகம் சூடானால் மூக்கிலிருந்து இரத்தம் வரும்.
ஒன்றும் பயப்பட தேவையில்லை.

1. தலையை அன்னாந்து படுக்க வைக்கவேண்டும்.

2. த‌லைக்கு ந‌ல்லெண்ணை தேய்த்து குளிக்க‌ வேண்டும்.

3. த‌யிர், மோர் போன்ற‌வைக‌ளை அதிக‌மாக‌ சேர்த்து கொள்ள‌லாம்.

மோர் குழ‌ம்பு, த‌யிர் சாத‌ம், ப‌ருப்பு கீரை க‌டைச‌ல், வெள்ளை க‌ஞ்சி போன்றவை சாப்பிட‌லாம்.

4. குளிர்சியான‌ காய் வ‌கைக‌ளை ப‌ருப்புட‌ன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட‌லாம்.
5.ரூஆப்ஷா மில்க் ஷேக் ரொம்ப‌ ந‌ல்ல‌து.

6. மாதுளை ஜூஸ் குடிக்க‌லாம்.

7.டீ காபியை த‌விர்க்க‌ வேண்டும்.

8.மோரில் (இஞ்சி , கொத்தும‌ல்லி,ப‌ச்ச‌மிள‌காய் ஐஸ் க‌ட்டிக‌ள் சேர்த்து நுரை பொங்க‌ மிக்ஸியில் அடித்து குடிக்க‌லாம்.


9. இளநீர் குடிக்கலாம்.

10. கடற் பாசி வித விதமாக செய்து சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு மோஷன் பிராப்ளமா?

சில குழந்தைகளுக்கு வயிறு கல் மாதிரி ஆகி மோஷன் டைட்டாடும்.

சரியா மோஷன் போக வில்லை என்றால் குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வாமிட் வருவது போல் இருக்கும்.

வயிற்றில் விளக்கெண்ணையை சர்குலர் மூமெண்ட்டில் தடவி விடவும்.
சூடான வெது வெதுப்பான வெண்ணீரை அடிக்கடி கொடுக்கவும்.


ஒரு தேக்க‌ர‌ண்டி சோம்பை க‌ர்காம‌ல் வ‌றுத்து அத்துட‌ன் சிறிது சுக்கு சேர்த்து ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் கொதிக்க‌வைத்து அரை ட‌ம்ள‌ராக‌ வ‌ற்ற‌விட்டு அதில் பால் க‌ல‌ந்து ச‌ர்க்க‌ரை சேர்த்து கொடுக்க‌வும்.
டீ, காபி குடிக்கும் பிள்ளைக‌ளாக‌ இருந்தால் பாலில் காபி பொடி க‌ல‌ந்து சுக்கு சோம்பு த‌ண்ணீருட‌ன் க‌ல‌ந்து கொடுக்க‌வும்.


கெட்டியான உணவை தவிர்க்கவும்.
ரசம் சாதம் குழைவாக, பருப்பு கீரை கடைசல், வெள்ளை வாயு கஞ்சி போன்றவை கொடுத்தால் ரிலீஃப் ஆகும்.

அப்படியும் எப்போதுமே மோஷன் பிராப்ளம் என்றால் அத்தி பழம் கொடுக்கலாம், சாப்பிட வில்லை என்றால் ஹல்வா பதத்தில் கிளறி கொடுக்கவும்.

Saturday, May 2, 2009

பிறந்த குழந்தைகளின் முகம் மற்றும் உடம்பில் உள்ள முடியை அகற்ற‌

சில பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு முகம் மற்றும் உடம்பு பகுதியில் நிறைய முடிகள் இருக்கும் அதை அகற்ற.


1.முட்டை வெள்ளை கருவில், தாய்ப்பால் மற்றும் மஞ்சள் தூள் கலந்து தேய்த்து ஆறிய வென்னீரில் பஞ்சு அல்ல மெல்லிய மல் துணியை நனைத்து துடைத்து எடுக்கவும்.

2. சமீபத்தில் நான் கேள்வி பட்டது கோதுமை மாவில் நெய் கலந்து தேய்த்தாலும் போய் விடும்.

கவனிக்க வேண்டியது:

1. பெண்குழந்தைகளுக்கு புருவத்தில் படாமல் தேய்க்கவும்.

2. ஆண் குழந்தைகளுக்கு தாடி, மீசை வளரும் இடத்தில் படமால் தேய்க்கவும்.

துணி வெட்டும் போது கழுத்து பகுதி பெரியதாகி விட்டதா?

1.பிளவுஸ் மற்றும் சல்வார் வெட்டும் போது கழுத்து பகுதி பெரியதாகி விட்டால் கவலை பட தேவையில்லை, அதே போல் அரை இன்சுக்கு கழுத்து வரைந்து ஒட்டு கொடுத்து விட்டு ஒட்டு தெரியாமல் இருக்க லேஸ், அல்லது மணி, இல்லை ஜரிகை லேஸ் வைத்து தைத்து கொள்ளலாம் என்ன சல்வாரோ அத்ற்கு ஏற்றார் போல்.

2.அதே போல் சாதாரண சல்வார் கம்மீஸ் கூட கழுத்து , சைட் பகுதி, கையில் மணி அல்லது லேஸ் வைத்து தைத்தால் நல்ல ரிச் லுக் கிடைக்கும்.


3.இப்போது யாரும் பட்டு சேலை அவ்வளவாக உடுத்தி கொள்வதில்லை வொர்க் வந்தது தான், மைசூர் சில்க் போன்றவை தான் கட்டு கிறார்கள்.
அப்ப பழைய பட்டு சேலையை கூட சல்வார் கம்மீஸாக தைத்து கொள்ளலாம்.