Sunday, May 9, 2010

துபாயில் மெட்ரோ டிரெயினில் சல்மான் கான்

துபாய் மெட்ரோவை சும்மா போடுவதை விட இப்படி போட்டா பார்க்க நல்லாதானே இருக்கும்











































Saturday, May 8, 2010

பாயா குருமா, வட்லாப்பம்


எல்லோருக்கும்உலகில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும். அன்னையர் தின வாழ்த்துக்கள்.

இது என் அம்மாவின் ஸ்பெஷல் முட்டை வட்லாப்பம்,சின்னதில் ஓவ்வொரு புது வருடபிறப்புக்கும் கண்டிப்பாக செய்வார்கள்.


இது இஸ்லாலிய இல்லத்தில் கல்யாணவீடுகளில் மாப்பிள்ளை தஸ்தரில் வைக்கும் பல உணவுகளில் இந்த காம்பினேஷனும் உண்டு. (இடியாப்பம், வட்லாப்பம், கால் பாயா, ரொட்டி)


வட்லாப்பம்
முட்டை - பத்து
சர்கக்ரை - இரண்டு டம்ளர்
தேங்காய் ஒரு முறி முழுவதும்
ஏலக்காய் - முன்று
முந்திரி - 6
நெய் - அரை தேக்கரண்டி

செய்முறை


தேங்காயை அதிகம் தண்ணீர் ஊற்றாமல் கட்டியாக பால் எடுக்கவும்.
முட்டையை நல்ல நுரை பொங்க அடித்து கொள்ளவும்.
சர்க்கரை பொடித்து , தேங்காய் பால்,சர்க்கரை, முட்டையை ஒன்றாக நன்கு கலக்கவும்.
முந்திரியை பொடியாக அரிந்து நெயில் வறுத்து சேர்க்கவும்.
ஏலக்காயை அப்படியேவும் போடலாம், நேரம் கிடைப்பவர்கள் ஏலக்காயின் உள்ளே இருக்கு விதைகளை மட்டும் எடுத்து லேசாக வறுத்து பொடித்து போட்டால் சுவை சூப்பராக இருக்கும்.
எல்லாம் கலக்கிய்தும் கலவையை ஒரு முடி போட்ட சில்வர் டிபன் பாக்ஸில் வைத்து குக்கரி ஆவி வந்து வெயிட் போட்டு ஐந்து விசில் வந்ததும் தீயின் தனலை சிம்மில் வைத்து பத்து நிமிடம் கழித்து இரக்கவும். குக்கர் அடியில்







சரியான அளவு தண்ணீரை ஊற்றி கொள்ளவும்.


சுவையான சூப்பரான முட்டை வட்லாம் ரெடி.



இது இடியாப்பம், ஆப்பம், தோசை ஆகியவற்றிற்கு பொருந்தும், இஸ்லாமிய இல்ல ஸ்பெஷல் உணவாகும்.


பாயா குருமா
ஆட்டுகால் - ஒரு செட்
வெங்காயம் - ஐந்து
தக்காளி - ஐந்து
பச்ச மிளகாய் - நான்கு
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
உப்பு தூள் - ருசிக்கு தேவையான அளவு
த்னியாதூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கொத்து மல்லி, புதினா - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முன்று மேசைகரண்டி
எண்ணை - நான்கு மேசை கரண்டி
பட்டை கிராம்பு, ஏலம் - தலா நான்கு
தயிர் - நான்கு மேசைகரண்டி
தேங்காய் - அரை மூறி
முந்திரி - பத்து
கசகசா- ஒரு மேசைகரண்டி

செய்முறை

1. முதலில் சுத்தம் செய்த பாயாவில் முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பு ,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு மேசை கரண்டி அளவு சேர்த்து கலக்கி குக்கரில் நன்கு வேகவிடவும், பாய வேக 20 லிருந்து 30 நிமிடம் எடுக்கும்.

ஐந்து விசில் வந்ததும் தீயின் தனலை குறைத்து வைத்து பிறகு வேகவிட்டு இரகக்வும்.

2. தேங்காய்,கசகச, முந்திரியை நல்ல மையாக அரைத்து கொள்ளவும்.

3. ஒரு வாயகன்ற சட்டியில் எண்ணையை காயவைத்து பட்டை + கிராம்பு+ஏலம் சேர்த்து வெடிய விட்டு, வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து நன்கு வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு கலர் மாறும் வரை வதக்கவும்.

4. அடுத்து சிறிது கொத்துமல்லி ,புதினா, தக்காளி, பச்சமிளகாய், மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள், உப்பு தூள், எல்லாம் சேர்த்து வதக்கி, தயிரையும் சேர்த்து நன்கு கிரேவி பதம் வர தீயின் தனலை சிம்மில் வைத்து கூட்டை
கிரிப்பாக்கவும்.

5. கால் வெந்ததும் கூட்டில் அரைத்த தேங்காய் கலவையையும் ஊற்றி தேவைக்கு குழம்பு பததிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு தேங்காய் வாடை அடங்கும் வரை கொதிக்க விட்டு, மீதி உள்ள கொத்து மல்லி புதினாவை தூவி இரகக்வும்



.


குறிப்பு

குருமா என்று சொல்லும் போது தனியாத்தூள் அதிகமாக சேர்க்க தேவையில்லை. நாங்க ரொம்ப கம்மியாக தான் இதில் சேர்ப்போம், சில பேருக்கு தனியாதூள் சேர்த்து செய்து பழக்கம் ஆகையால் குறைந்த அளவில் இதில் கொடுத்துள்ள்ளேன்.
கால்பாயா மிளகு சால்னாவில் (மிளகு, தனியா தூள் கூடுதலாகவும் சேர்க்கனும்) இது பாயா குருமா.
ஆட்டு பாட்ஸில், கால், குடலில் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும் ஆகையால் அதிக எண்ணை தேவையில்லை.
இதற்கு கோதுமை ரொட்டி நல்ல இருக்கும்.
நடக்க ஆரம்ப்பிக்கும் குழந்தைகளுக்கு இது காரமிலலாமல் அடிக்கடி செய்து கொடுப்பது நல்லது,
அதிக கால் வலி மூட்டு வலி உள்ளவர்களும் அடிக்கடி செய்ட்து சாப்பிடலாம்.



வெளிநாடுகளில் பிரிந்து வாழ்பவர்கள். பல வேலை பிஸியில் இருப்பீர்கள், வாரம் ஒரு முறையாவது அம்மாவை தனிப்பட்ட முறையில் விசாரியுங்கள், தாய் தன் தேவையை யாரிடமும் கூறுவதில்லை.தன்னை கவனித்துகொள்வதும் இல்லை. நீங்களா பார்த்து என்ன தேவை என்பதை உரிய நேரத்தில் செய்யுங்கள். பிழைப்பை கருதி அனைவரும் பிரிந்து வாழ்கிறோம். தாயிக்கென சிறிது நேரமாவது ஒதிக்கி இனிதாய் பேசுங்கள்.
தாய் என்றும் நம்மையே நினைத்து கொண்டு இருப்பவள். என்ன வீட்டு செலவிற்கென பணம் அனுப்பினாலும் , அம்மாவிற்கு என்று தனியாக ஒரு தொகை அனுப்புங்கள்.
தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்/
உலகில் உள்ள அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்.


Thursday, May 6, 2010

கலர் ஃபுல் கடல்பாசி - colourful agar agar



கலர் புல் அகர் அகர் சாப்பிடுஙக்ள் வெயில்காலத்தில் கூல் கூலாக இருங்கள்.
கடல் பாசி என்னும் அகர் அகர், சைனா கிராஸ் ஏற்கனவே போன வருடம் நோன்பு நேரத்தில் இதன் விளக்கங்கள் போட்டுள்ளேன்.
இப்ப சம்மர் சீசன் ஆரம்பித்து விட்டது. வெயிலின் தாகம் தீர்க்க அதிகமாக நீராகாரம் உட்கொள்வது நல்லது. நிறைய ஜூஸ் வகைகள், தயிர் ,மோர்,தர்பூசனி , இது போல் சாப்பிடுவது நல்லது.
அதுபோல் நீர்சத்து அதிகமுள்ள காய்களை உட்கொள்வதும் நல்லது.

வெயில் காலத்தில் ஏற்படும் கொப்புளங்கள், வேனல் கட்டிகள், வயிற்று புண் அல்சர்,வாய் புண் எல்லா வற்றிற்கும் இது நல்லது. உடலுக்கு குளிர்சி தரக்கூடியது. இது ரெஸ்டாரன்களில் அதிகமாக பயன் படுத்துவார்கள், ஜெல்லி வகைகளுக்கு, ஐஸ்கீரிம், புட்டிங் ஆகியவற்றிற்கு அதிகமாக பயன் படுத்துவார்கள்.



இது கடல் பாசியை ஏற்கனவே, டேங்க் கடல் பாசி,இளநீர் கடல் பாசி, ஜவ்வரிசி கடல் பாசி, ரோஸ் மில்க் கடல் பாசி, புரூட் கடல் பாசி, பால் கடல் பாசி, நட்ஸ் கடல் பாசி என பல வகையாக செய்யலாம் என்று சொல்லி இருக்கேன்.

இது நான் நேற்று முயற்சி செய்தது கலர் புல் கடல்பாசி.

பார்த்ததும் வைத்ததும் உடனே தட்டு காலி.
சரியாக அரெஞ்ச் செய்து போட்டோ எடுக்கல, அதுவரை பொருமை இல்லை, அடுத்த முறை இன்னும் சூப்பரா போட்டோ போட்டுடுவோம்.

இந்த கலர் புல்லே முன்று வகையான எசன்ஸில் செய்துள்ளேன்.

முதலில் பிளைனாக கடல் பாசியை எடுத்து ஒரு கை பிடி அளவு ஒன்னறை டம்ளர் தண்ணீரில் உதிர்த்து போட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கெட்டியாகும் போது முன்று பாகமாக பிரித்து கிண்ணங்களில் ஊற்றி ஒரு கிண்ண்டத்தில் பாதம் எஸன்ஸ், அடுத்துள்ள கிண்ணத்தில் ரோஸ் எஸன்ஸ், மறொரு கிண்ணத்தில் ஆரஞ்சு புட் கலர் சேர்த்து ஆரவிட்டு , பிரிட்ஜில் வைத்து குளிர வைத்து கட் செய்து சாப்பிடவும்.

இதில் கலர் சேர்த்ததும் சிறிது நட்ஸ் வகைகள் (அ) பழங்கள் சேர்த்து செய்தாலும் இன்னும் நல்ல இருக்கும்.

இதில் பச்சை வண்ணம் சேர்த்து செய்தால் இன்னும் நல்ல கலர் ஃபுல்லாக இருக்கும்






இளநீர் கிடைக்காதவர்கள், வெளி நாடுகளில் டின் இளநீர் கிடைக்கிறது , அதுவும் இல்லை என்றால் தேங்காய் உடைத்த தண்ணீரை வடிகட்டி செய்யலாம்

Wednesday, May 5, 2010

வாங்க வந்து அவார்டு வாங்கிக்கங்க, தோழிகளின் சமையல்




ஒரே அவார்டு தான் போங்க எங்க எத்தனை முறை அவார்டு வாங்கினாலும் சந்தோஷம் தான். இதெல்லாம் ஏற்கனவே பெற்று இருந்தாலும் மறுபடி பெற்று கொண்டேன்.


கிருஷ்ன வேனி கிச்சன் இவர்கள் சந்தவை செய்வதில் கை தேர்ந்தவங்க, அவர்கள் இதில் உள்ள அவார்டு எல்லாம் எனக்கே எனக்காம்.



ராஜா கிரீடத்தை கீழே உள்ள நபர்களுக்கு கொடுக்கிறேன்.
1. சிங்கக்குட்டி - பதிவுகள் அனைத்தும் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளது.
2. அதே கண்கள் - பாண்டி அண்ணாத்தே (பிளாக்கருக்கு பயனுள்ள பதிவ கொடுத்து கொண்டு இருந்தார், எல்லோரும் என்ன அக்கா அக்கா ந்னு சொல்றாங்க, பாண்டி அண்ணாத்த மட்டும் தான் தங்காச்சி ந்னு சொல்வார்,

3. சகோ.ஹைஷ். பயனுள்ள மருத்துவ பதிவ போட்டு கொண்டு இருக்கிறார்.

4. பருப்பு த கிரேட் பருப்பு - இவர் அமைச்சர மிஞ்சனுமுன்னு பார்க்கிறார்.

5.மேக்கி makice இப்ப தான் வலை உலகில் கலக்க ஆரம்பித்துள்ளார், இடுகைகளும் பயனுள்ள இடுகைகள்.

வேற யார் யாரெல்லாம் கிரீடம்பெறவில்லை என்று தெரியல மேலே உள்ள ஐந்து நபர்களுக்கு இப்போதைக்கு கொடுக்கிறேன். நிறைய பிளாக்கில் பின்னூட்டம் போடவில்லை என்றாலும் நேரம் கிடைக்கும் போது சென்று படிப்பதுண்டு.
===============================================


ராணி கிரீடத்தை கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து ராணிகளுக்கும் கொடுக்கிறேன்.


1. சுஹைனா என் எழுத்து இகழேல் ,கவிதை மற்றும் ஹஜ் விளக்கம், பிளாக்கர் உதவி போன்ற பயனுள்ள் பதிவுகளுக்காக.


2. அநன்யா எண்ண அலைகள் மொக்கைபதிவு + ஐயர் ஆத்து தமிழ் ரொம்ப நல்ல இருக்கும்.

3. அனாமிகா துவாரகன் இரண்டு சதஙகள் என்ற பெயரில் எழுதி வருகிறார்கள். அவர்கள் பதிவுகள் எல்லாமே படிக்க படிகக் சுவாரசியம் அதிகம்.


4. கவிசிவாவின் கவி பக்கம், எல்லா இடுகைகளும் மொக்கை + பயனுள்ள தகவல். ஊருக்கு போய் இருக்காங்க வந்து கலக்குவாஙக/


5. வித்யாஸ் கிச்சனுக்கும் இந்த கிரீடத்தை கொடுக்கிறேன். வித்யா கிச்சன் மட்டும் இல்லை, பகோடா பேப்பர் மற்றும் குழ்ந்தைகளுக்கு ஹிந்தி கற்று கொடுக்கும் வண்ணம் ஹிந்தி பிளாக்கும் எழுதி வருகிறார்கள்.

6.பிரியாவின் என் மனதிலிருந்து.கவிதை ஓவியம், மற்ற பதிவுகளும் அருமையாக இருக்கும்.

7.காஞ்சனாவின் மீராஸ் கிச்சன் ,நல்ல வித விதமான சமையல்கள்

8.Geetha's womens Special பல பய்னுள்ள அறிய தகவல்களுடன் பிளக்கர் உதவியும்.இங்கு உண்டு

9. எழுத்தோசை தமிழரசி சுவையாய் கவிதை படைக்கும் கலையரசி என்று சொல்லலாம். முன்பு அடிக்கடி போய் நிறைய கவிதைகள் படித்து இருக்கேன், இப்ப இவர்கள் பிளாக் ஓப்பன் செய்தால் நிறைய எரர் வருவதால் படிக்க முடியல.

10.ஜெஸ்வந்தியின் மௌனராகங்கள். அருமையான பகிர்வுகள்.




இது என் பதிவுகளுக்கு தொடர்ச்சியாக வந்து பதில் தரும் கிருஷ்ன வேனி கொடுத்தது, இத்தனையும் எனக்கே எனக்காம். ஏற்கனவே இதே அவார்டை வாங்கி இருந்தாலும் அவர்கள் அன்பாக கொடுத்ததால் மறுபடி வாங்கி கொள்கிறேன்.
மிக்க நன்றி கிருஷ்ன வேனி.







எல்லா அவார்டுக்கும் மிக்க நன்றி கிருஷ்ன வேனி.
இது மனோ அக்காவின்


கேரட் பீனட் ரைய்தா (அசல் பாதம் பச்சடி போலவே இருந்தது) .மனோ அக்காவின் கேரட் பீனட் ரைய்த்தா போன வாரம் செய்த இறால்,மீன், வெஜ் (மிக்ஸ்ட்) பிரியாணிக்கு சூப்பரான பச்சடியாக இருந்தது. போன வாரம் (மீன்,இறால், வெஜ்) சேர்த்து ஒரு மிக்ஸட் பிரியாணி செய்தேன். அதற்கு தொட்டு கொள்ள மனோ அக்காவின் கேரட் பீனட் ரெய்தா செய்தேன்.ஹஸ் சாப்பிட்டு விட்டு பாதம் தயிர் சட்னியா? ஏதோ வித்தியாசமா இருக்கு என்றார்.



இது மேனகாவின் உருளைகிழங்கு ஜாமூன். குலோப் ஜாமுன் செய்ய் தெரிந்தாலும் உருளைகிழங்கு ஜாமூன் செய்ததில்லை. அதான் மேனகாவின் அளவை பார்த்தே செய்து விட்டேன்.

கீதா ஆச்சலின் பார்லி ஓட்ஸ் பால் கொழுக்கட்டை.இது என் தங்கை வீட்டில் ஆறு மாதம் முன்பு செய்தது. போட்டோ எடுக்கல.இது நாங்க செய்யும் சுத்திரியான் போல தான்.

மலிக்காவின் உளுந்து அடை இது என் குறிப்பிலேயே இருக்கு.
ஹர்ஷினியின் வேபில் பார்த்து வைத்துள்ளேன்.செய்ய நேரம் கிடைக்கல/

ஆசியாவின் பூண்டு மீன் குழம்பு, பொதுவாக மீன் குழம்பை துண்டுகள் சேர்க்காமா வால் பகுதி, தலைபகுதி மட்டும் தான் போட்டு செய்வேன், தலை போடுவதால் எல்லா மசாலாவையும் அரைத்தே சேர்த்து விட்டேன்.

டிஸ்கி: சமையல் குறிப்பை சிக்கிரமா நிமிஷத்தில் போட்டு விடலாம் ஆனால் இது போல் விருது வழங்க ஆட்களை தேர்ந்தெடுத்து பிளாக் விலாசத்தை இனைப்பது, அடுத்து ஓவ்வொரு வீட்டுக்கா போய் விருது கொடுத்துள்ளது பற்றி அறிப்பது தான் பெரும் வேலையாக இருக்கு. எப்படிதான் இந்த ஜெய்லாணி எல்லோருக்கும் வைர விருது கொடுக்கும் போது இனைத்தாரோ தெரியல. ரொம்ப உழைத்து இருப்பார் என நினைக்கிறேன்.


Monday, May 3, 2010

இனிய மாலை பொழுதினிலே ஒரு குதுகல சந்திப்பு




இனிய மாலை பொழுதினிலே, அறுசுவை தோழிகள், தமிழ் குடும்ப தோழிகள், பிளாக் தோழிகள் சந்திப்பு. ரொம்ப சந்தோஷம் 7.30 மணியிலிருந்து 11 மணி வரை நேரம் போனதும் தெரியல சந்தோஷத்துக்கும் அளவே இல்லை.





இது இரண்டாவ்து பதிவர் சந்திப்பு. முதலில் நானும் மலிக்காவும், இப்போது பல தோழிகள் சேர்ந்து அறட்டை அடித்தது, பள்ளி நாட்களை ஞாபகபடுத்தியது.



ஸாதிகா அக்கா இந்தியாவில் இருந்து கத்தார் சென்று அங்கிருந்து போன வாரம் ஷார்ஜா வந்திருந்தார்கள். எப்படி சந்திப்பது எங்கு சந்திப்பது. எல்லாம் ஓவ்வொரு மூலையில் உள்ளோம். நான்கு நாட்களாக தோழிகள் மெயில் மூலம் பேசி ஒரு வழியா துபாயிலேயே சந்திக்கலாம் என முடிவு செய்தோம்.




ஸாதிகா அக்கா(எல்லா புகழும் இறைவனுக்கே) முன்பு பத்திரிக்கைகளுக்கு கதை எழுதுபவர், அறுசுவையில் பல சுவையான குறிப்பு கொடுத்தவங்க, இப்ப பிளாக்கில் அறிய தகவல் களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.




டிரெங்கு பெட்டிய இந்த டிரெங்கு பெட்டிய திறந்தா பொக்கிஷம் வராது ஆனால் நிறைய பழங்கால அனுபவ மேட்டர் வரும். இப்ப தெரிந்து இருக்குமே யாருன்னு ஜீன்ஸ், இப்ப ஹீரோ பேனா வ பற்றி எழுதும் ஹுஸைனாம்மா தான் சரியாக எல்லோரையும் இனைக்க பெரும் பாடு பட்டு விட்டார்கள்.





மனோ அக்காவின் முத்து சிதறல், இதில் பல பயனுள்ள முத்துக்கள் கிடைக்கும். 35 வருட அனுபவம் , என்ன ஒரு சாந்தம் பொருமை, அவர்கள் பொருமையின் சிகரம் என்பதற்கு மேலே அவர்கள் வரைந்துள்ள இந்த படமே ஒரு எடுத்து காட்டு. அவ்வளவு தத்ரூபமாக வரைந்து இருக்கீறார்கள்.









ஆசியா சமைத்து அசத்தலாம் செம்மையாக சுவையான நெல்லை கிச்சனை படைத்து வரும் ஆசியா அல் அயினில் இருந்து எப்படியும் தோழிகளை சந்தித்தே ஆகனும் , இத விட்டா நல்ல சான்ஸ் எப்போதும் கிடைக்காது என்று அவங்களும் எப்படியே வந்து கலந்த்து கொண்டார்கள்.



அநன்யாவின் எண்ண அலைகள், அநன்யாவின் பிராமன ஆத்து பேச்சு நடையில் பதிவு ரொம்ப நல்ல இருக்கும். ஹா ஹா இவர்களின் பேச்சு கல்யாணத்துக்கு முன் உள்ள ஜலீலாவை பார்த்த மாதிரி இருந்தது.






பிரியாணி நாஸியா, ஹா ஹா எல்லோரும் அவரவர்களை அறிமுகப்படுத்திய போது நாஸியா பிரியாணி என்றார்கள். மனோ அக்கா விற்கும் அநன்யாவிற்கும் ஒன்றும் புரியல, அபப்ரம் ஹுஸைனாம்மா அவர்கள் பிளாக் பேரு பிரியாணி என்றார்கள்.



மலர் பதிவில் பழக்கம் நேரில் பார்த்ததும் ஒரு ஷாக் அடிக்கடி நிறைய இடத்தில் சந்தித்துள்ளோம்.பதிவு அவ்வளவா போட வில்லை என்றாலும் எல்லா பிளாக்குக்கும் தவறாமல் கருத்து தெரிவித்து ஊக்கமளிபார்கள்.
ஆனால் வந்ததும் சீக்கிரம் போய் விட்டாஙக், பிறகு மனசு கேட்காம ஹி ஹி திரும்ப வந்தாங்க.




அடுத்து நீரோடை மலிக்கா இவர்களை தெரியாதவர்கள் வலை உலகில் யாரும் இல்லை. கவிதையரசி, பல புத்தகங்களில் இவங்க கவிதை இடம் பெற்றுள்ளது. எல்லாம் சந்திக்கலாமுன்னு முடிவானது ஒரு குண்ட தூக்கி போட்டாங்க மக்ரூஃப் க்கு ரொம்ப ஜுரமா இருக்குன்னு. ஹாஸ்பிட்டல் போகிறேன் என்று. ஹாஸ்பிட்டல்போய் மருந்து சாப்பிட்டு மாலைக்குள் சரியாகி விட்டது.


மற்ற் படி வல்லியம்மா, சுந்தரா, ரேணு, அப்சாரா இவர்களால் சந்திக்க வரமுடியவில்லை.
அதோடு சேர்த்து இந்த அட்டகாச ராணியையும் சேர்த்து கொள்ளுஙக்ள்.

எல்லோரும் லூ லூவில் சேர்ந்து பிறகு வேறு இடத்துக்கு போய் விடலாம் என்று முடிவெடுத்து, 7.30 லிருந்து எட்டு என சொல்லி வைத்திருந்தோம் , மலிக்கா பெரிய சாப்பாடு மூட்டைய தூக்கி வந்ததால் மஹ்ரூஃப்க்கு உடம்பு சரியில்லை என்றதாலும் நேரகா பார்க்கிற்கு போய் விட்டு அங்கிருந்து போன் செய்தார்கள். நானும் 7.25 க்கு லூ லூவில் ஆஜர், யாரும் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை.
முதலில் ஹுஸைன்னாம்மா வர அவர்களின் இரண்டு வாண்டுகளை பார்த்ததும் கண்டுபிடித்து விட்டேன். அடுத்து மலர் வந்தாங்க அவர்கள் நுழைந்ததுமே அடிக்கடி பார்த்த முகம் நிறைய இடத்தில் யாருன்னு தெரியாமலே சந்தித்துள்ளோம், ஒகே அடுத்து ஆசியா அவஙக் மகள் ருமானா வை பார்த்ததும் ஆசியா வந்தாச்சு,, ஆசியா தேடி கொண்டே வந்தார்கள், கை அசைத்து கூப்பிட்டோம். அடுத்து ஸாதிகா அக்காவும் அவங்க தங்கையும் வந்தார்கள். ஒரே எல்லோருக்கும் கலகலப்பு தான் கிக்கி கிக்கி தான்,

மனோ அக்கா, பிரியாணி ,அநன்யா வர லேட்டாச்சு, . எவ்வள்வு நேரம் நிற்பது உடனே நானும் ஹுசைனாம்மாவும் வெயிட் செய்து கூப்பிட்டு வரோம் என்று மற்றவர்களை மலர் கூட் அனுப்பினோம்.


எனக்கு கிடைத்த ஒரு மணி நேரத்தில் ஏதாவது செய்யலாம் என்று பார்த்தால் எல்லோருக்கும் இரவு வெளியில் பார்டி, ஆனால் தூரம் தொலைவில் இருந்து வருகிறவர்களுக்கு ஏதாவது கொண்டு போகனும் என்று, முர்தபா, வேக வைத்த வேர் கடலை, மசால் வடை, எடுத்து பேக் செய்து பையனை கொண்டு வர சொல்லிட்டு வந்துட்டேன்.

எல்லோரும் ஒன்று கூடினோம் சரியான கும்மி தான் ஹா ஹா அதிரா புகை விட படாது. இப்படி ஒரு சந்திப்பை எதிர் பார்க்கவே இல்லை.உடனே ஜெய்லானிக்கு காது கிர்ருன்னும், என்ன பேசிக்கிடிட்டாங்க..

ஸாதிகா அக்காவின் தங்கை ரொம்ப அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள்.
எல்லோருடனும் நல்ல பேசி கொண்டார்கள்

ஆஹா அப்ப தான் மலிக்கா ஹொலோ எக்சுசுமி தள்ளுங்க சூப்பரா கோதுமை ஸடஃப்டு எக் நூடுல்ஸ் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தார்கள், முதலில் அதை வெட்டியாச்சு, உடனே நான் முதலில் என் பையனை கூப்பிட்டு டேஸ்ட் பார்க்க சொன்னேன், சூப்பர் என்றான், பையன் சொல்லிட்டானான்னா அதுக்கு அப்பீலே இல்லை, (என் கணவர் அங்கிருந்து எல்லோரையும் ஹோல்டலுக்கு கூப்பிட்டு போய் விடு என்றார் ஆனால் அல் அயின், ஜார்ஜா, அபுதாபியில் இருந்து எல்லோரும் துபாய் வரும் போது நாமளே ஏதாவது செய்து கொண்டு போய் விடுவோம் என்று முடிந்ததை செய்து கொண்டு வந்துட்டேன்) நானும் கொண்டு வந்ததை எடுத்து வைத்தேன். முதலில் குழந்தைய சாப்பிட சொன்னோம், பிறகு எல்லொரும் சாப்பிட்டோம்.

மனோ அக்கா பல வேலைகளுக்கிடையில் வந்தது ரொம்ப சந்தோஷ்மாக இருந்தது. நான் சிம்பிளாக எழுதி விட்டேன், யாராவது தித்திப்பான சண்ட்திபபி போடுவார்கள் என்று பார்ர்த்தேன்.
மலிக்கா வந்து விபரமா போடுவார்கள்.மீதியை சந்தித்த மற்ற தோழிகளின் பதிவில் பார்க்கலாம்.
ஆசியா அல் , அநன்யா, மனோ அக்கா கிளம்பியாச்சு, அடுத்து பிரியாணியும் கிளம்பியாச்சு, நான், ஸாதிகா அக்கா, ஹுஸைனாம்மா மலிக்கா கடைசியாக சென்றோம்.
11 மணி வரை என் பையன் எனக்கு துணையாக இருந்து, என்ன மம்மி ஜாலியா இருண்ட்தீங்களா? என்றான், ஆமாம் ரொம்ப ரொம்ப ஜாலி ஹே ஹே என்றேன்.

ஏதோ ஹுஸைனாம்மாவை கொண்டு எல்லோரும் அன்று சந்தித்தோம். எழுத இன்னும் நிறைய இருக்கு 4 நாட்கள் ஆகியும் யாரும் போடததால் சிம்பிளா முடித்துட்டேன். அடுத்து வரும் தோழிகள் ம்ம்ம்ம்ம் (ஸ்டாட் மியுசிக்) உங்கள் சந்திப்பு சுவரசியத்தையும் போடுங்கள்.










Saturday, May 1, 2010

முழுபயறு தால் தர்கா, பஞ்சி ஆப்பமும் தேங்காய் பாலும்

முழு பயறு தால் தர்கா

தேவையானவை

முழு பச்சை பயறு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கொத்துமல்லி கருவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
தேங்காய்பவுடர் தேவை பட்டால் = ஒரு தேக்கரண்டி
பச்ச மிளகாய் = ஒன்று சிறியது
மிளகாய் தூள் கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு - ருசிக்கு ஏற்ப
கொத்துமல்லி தூள் = கால் தேக்கரண்டி


முழு பாசிபயறை எட்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.




குக்கரில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து, முழுபயறு சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு நாலு, ஐந்து விசில் விட்டு இரக்கவும். (சித்ரா ரஜினி படம் பார்க்கும் போது அடிக்கும் விசில் அல்ல) குக்கர் விசில்.

சுவையான ஆப்பம், முழுபயறு தால் தர்கா, காலை நேர டிபனுக்கு, இரவு டிபனுக்கும் நன்றாக இருக்கும்.










தேவையான பொருட்கள்


ஊற வைக்க
பச்ச அரிசி - ஒரு கப்
புழுங்கல் அரிசி - ஒரு கப்
வெந்தயம் - கால் தேக்கரண்டி
ஜவ்வரிசி - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் கப்
சேர்த்து அரைக்க
சாதம் - ஒரு கை பிடி
தேங்காய் துருவல் - கால் முறி
செய்முறை
அரிசி, உளுந்து, வெந்தயம், ஜவ்வரிசியை இரவே ஊறவைத்து காலையில் அரைக்கும் போது தேங்காய், சாதம் சேர்த்து அரைக்கவும்.எட்டு மணி நேரம் புளிக்க விட்டு பிறகு சுடவும்.

(ஆப்பம் சுடும் போது பிஞ்சி பிஞ்சி வந்தால் முதலில் சூடான வானலியில் கொஞ்ச்மா எண்ணை விட்டு வெங்காயத்தை அரை வட்டமாக அரிந்து சுற்றி முழுவதும் தடவவும்.அப்ப தான் ஒட்டாமல் வரும்.சுடும் போது மாவை ஊற்றியதும் மூடி போட்டு வெந்தததும் அப்படியே எடுக்கவும். ).

ஒரு ஆழாமான இரும்பு வானலியில் சிறிது எண்ணை ஊற்றி துடைத்து விட்டு தீயின் தனலை மீடியாமாக வைத்து ஓவ்வொரு ஆப்பமாக ஊற்றி எடுக்கவும்.
ஏலக்காயுடன் தேங்காய் பாலை சேர்த்து அரைத்து பாலெடுத்து தேவைக்கு சர்க்கரை சேர்த்து ஆப்பத்துடன் சாப்பிடவும்.
ஏலக்காய் தேங்காய் பால்
தேங்காய் = 8 பத்தை
ஏலக்காய் = 2
சர்க்கரை = ருசிக்கு தேவையான அளவு

தேங்காயுட‌ன் ஏல‌க்காய் சேர்த்து பால் எடுத்து வ‌டிக்க‌ட்ட‌வும்.தேவைக்கு ச‌ர்க்க‌ரை க‌ல‌ந்து ஆப்ப‌த்துக்கு தொட்டு சாப்பிட‌வும்.ஏலக்காய் சேர்ப்பதால் நல்ல மணமாக இருக்கும், ஹோட்டலில் சாப்பிடுவது போல் இருக்கும்.
இது குழ‌ந்தைக‌ளுக்கும் பெரிய‌வ‌ர்க‌ளுக்கும் ரொம்ப‌ பிடிக்கும்.



குறிப்பு:
வெந்தயம் சேர்ப்பது மொருகலாக சிவற‌,ஜவ்வரிசி, சாதம் சேப்பது பஞ்சு போல் வர எல்ல வ‌கையான குருமாக்களும் இதற்கு பொருந்தும். முட்டை வட்லாப்பம் ரொம்ப நல்ல இருக்கும், தேங்காய் பாலும் ஊற்றி சாப்பிடலாம். தேங்காய் துருவல் சேர்த்து அரைப்பதற்கு பதிலாக, ஆப்பம் சுடும் போது ஆப்பத்திற்கு தொட்டு கொள்ள தேங்காய் பால் எடுக்கும் போது கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்ததை கூட சேர்க்கலாம்.

தால் தர்கா என்பது பாக்கிஸ்தானியர்கள் ரெஸ்டாரண்டில் ரொட்டிக்கு வைபப்து, இதை கடலை பருப்பில் தான் பெரும்பாலும் செய்வார்கள், நாம் பொங்க்லுக்கு போடும் பாசிப்பருப்பிலும் செய்ய்லாம் மூங் தால் , இது நான் முழுபயறில் செய்துள்ளேன்.
மலையாளிகள் பெரும்பாலும் , புட்டு கடலை கறி, ஆப்பம் முழுபயறு செய்வார்கள். இதை மலையாளிகளின் தால் தர்கா என்றும் வைத்து கொள்ளலாம். சுலபமான ஒரு சைட் டிஷ்.

லெமன் & ஹனி நட்ஸ் ஃப்ருட் சேலட்/ lemen honey nuts fruit salad


பழங்கள் நிறைய வாங்கி இனிப்பு சுவையின்றி போய் விட்டதா வேஸ்டே பண்ண வேண்டாம் வாங்க கட்டா மிட்டா நட்ஸ் ஃபுரூட் சேலட்.வாவ் உள்ளம் கேட்குமே மோர் மோர்,


நல்ல ஒரு புத்துணர்வு, நலல் ஒரு பில்லிங்ககாகவும் இருக்கும். பாஸ்கின் ராபின் ஐஸ் கிரீம் மேலே தூவி கொடுக்கும் நட்ஸ் போல இருக்கும்.


பழங்கள் நிறைய வாங்கி சுவையில்லாமல் இனிப்பில்லாமல் இருக்கிறதா எல்லாத்தையும் சேர்த்து ஒரு சுவையான புரூட் சாலட் தயாரித்து விடலாம்.



இதில் சேர்த்துள்ள பழங்கள் பப்பாளி,ஆப்பில்,பைனாப்பிள்கருப்பு திராட்சை, அவகோடா,பச்சை பியர்ஸ்.



பழஙகளை மீடியமாக அரிந்து கொள்ளுங்கள், தேன், ஒரு லெமன், நெல்லே கிரீம் ஒரு டின், நெயில் (அ) பட்டரில் வறுத்த (பாதம்,முந்திரி,அக்ரூட்,பிஸ்தா,ரெயிஸின்) கைக்கு ஒரு கை பிடி முழுவதும்






லெமனில் உள்ள கொட்டையை நீக்கி விட்டு பழங்களில் சேர்த்து நன்கு கலக்கவும்.


பிறகு நெஸ்லே கீரீமை சேர்க்கவும். கடைசியாக ஹனி, ரோஸ்டட் நட்ஸ் சேர்த்து கிளறி சாப்பிடவும்.




லெமன் சேர்ப்பதால் பழங்கள் கருக்காமல் இருக்கும். அதிக புளிப்பு சுவை விரும்பாதவர்கள் அரை பழம் பிழிந்தால் போதுமானது.



இனிப்பில்லாத எல்லா பழங்களும் சுவையுடன்.




ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யம்மியாக இருக்கும். சாப்பிட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கும். பார்டியில் வைத்தால் இதுக்கு தான் மவுசு அதிகாமாகும்