Sunday, December 12, 2010

சின்ன வெங்காய சாம்பார் வடை - Pearl Onion sambar vadai





தேவையான பொருட்கள்.





வடை தயாரிக்க
உளுந்து பருப்பு – 150 கிராம்
இஞ்சி – ஒரு மேசை கரண்டி
பச்ச மிளகாய் – 2
வெங்காயம் – 2 மிடியம் சைஸ்
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – இரண்டு ஆர்க்
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை
எண்ணை – வடை பொரிக்க தேவையான அளவு


சாம்பாருக்கு

பருப்பு வேகவைக்
பருப்பு 75 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
தக்காளி - ஒன்று பெரியது
பூண்டு – இரண்டு பல்
தாளிக்
எண்ணை - ஒரு மேசைகரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சின்னவெங்காயம் – 25 கிராம்
கருவேப்பிலை – இரண்டு ஆர்க்
நெய் – ஒரு தேக்கரண்டி
சாம்பார் பொடி – ஒரு மேசை கரண்டி
வெள்ளை புளி - ஒரு கொட்டைப்பாக்களவு.
அலங்கரிக்
கொத்துமல்லி தழை
பொடியாக அரிந்த வெங்காயம் - இரண்டு மேசை கரண்டி

செய்முறை
1.முதலில் வடைக்கு அரைக்க உளுந்தை ஒரு மணிநேரம் ஐஸ் வாட்டரில் ஊறவைத்து வடிக்கட்டியில் தண்ணீரை வடிகட்டி உப்பு, இட்லி சோடா சேர்த்து மையாக அரைக்கவும்.
2. அதில் வெங்காயம், கருவேப்பிலை,இஞ்சி, பச்சமிளகா முன்றையும் பொடியாக அரிந்து கலக்கி வைக்கவும்.

சாம்பார் தயாரிக்
1. பருப்பை களைந்து குக்கரில் சின்ன வெங்காயம் முழுதாக தோலை எடுத்து போடவும். தக்காளியை இரண்டாக அரிந்து சேர்க்கவும்.மேலும் மஞ்சள் தூள் சீரகத்தையும் சேர்த்து ஒன்றிற்கு இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊறவைத்து அடுப்பில் ஏற்றவும், வெயிட் போட்டு தீயின் தனலை குறைத்து வைக்கவும்.

2. இரண்டு முன்று விசில் வந்த்தும் இரக்கவும். குக்கர் ஆவி அடங்கியதும். மத்தால் (அ) கரண்டியால்,(அ) பிளண்டாரால் வெந்த பருப்பை நன்கு மசிக்க்வும்.

3. அரை டம்ளர் தண்ணீர் சாம்பார் பொடியை கரைத்து, கால் டம்ளர் சுடு வெண்ணீரில் புளியை ஊறவைத்து கரைத்து இரண்டையும் பருப்பில் சேர்த்து கொதிக்க விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கடைசியாக் நெய்யை விடவும்.

4. இப்போது அரைத்து வைத்துள்ள வடைமாவை வடைகளாக சுட்டெடுத்து எண்ணையை வடித்து ஒரு பெரிய வாயகண்ற பவுளில் வைக்கவும்.

5. தாளித்து வைத்து இருக்கும் சின்ன வெங்காய சாம்பாரை வடையின் மேல் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம் மற்றும் கொத்துமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.

6. பத்து நிமிடம் கழித்து நன்கு வடையில் சாம்பார் ஊறி இருக்கும்.
தனியாக தேவைக்கு எடுத்து பரிமாறவும்.
சுவையான கம கம சாம்பார் வடை ரெடி
குறிப்பு:
உளுந்து வடையில் இட்லிசோடா விருப்பம் இல்லை என்றால் போட வேண்டாம்./இது வடைக்கு என்பதால் இதில் எந்த வகையான காயும் சேர்க்கவில்லை. உளுந்தை ஐஸ்
வாட்டரில் ஊற வைப்பதால் நிறைய மாவு காணும்.





those recipe goes to priya's complete my thali GMT DAAL/KHADI/SAMBAR/RASAM EVENT



செட்டி நாடு மட்டன் கிரேவி - chettinad mutton gravy



தேவையானவை

மட்டனில் வரட்டி கொள்ள
எலும்புடன் மட்டன் – 400 கிராம்
உப்பு தேவைக்கு
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய்தூள் – கால்

தாளிக்க

எண்ணை – இரண்டு மேசை கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி
வெங்காயம் – இரண்டு
தக்காளி – ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு மேசை கரண்டி
கருவேப்பிலை – இரண்டு முன்று ஆர்க்
மிளகாய்தூள் – கால்
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

தேங்காய் பவுடர் – முன்று தேக்கரண்டி

வறுத்து பொடிக்க

மிளகு – ஒன்னறை தேக்க்ரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்க்ரண்டி
கருப்பு ஏலக்காய்- ஒன்று, பச்சை ஏலக்காய் – ஒன்று
பிரியாணி இலை – முன்று
கிராம்பு – முன்று
பட்டை – சிறியட் துண்டு
முழு தனியா – ஒரு தேக்கரண்டி ( அ) தூள்
முந்திரி - நான்கு

செய்முறை

1.மட்டனில் வரட்டி கொள்ளவேண்டியவைகளை சேர்த்து வரட்டிபாதி வேக்காடு வெந்து வைத்து கொள்ளவும்.வறுத்து பொடிக்க வேண்டியவைகளை வறுத்து பொடிக்கவும்.
2. குக்கரில் எண்ணையை காய வைத்து கருவேப்பிலை , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3.வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் தக்காளி மடங்கியதும், பொடித்த பொடி,உப்பு,தேங்காய் பொடி சேர்த்து நன்கு பிரட்டவும்.
5. ஒரு சேர எல்லாவற்றையும் நன்கு கிளறவும்.கிளறி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்க்ரில் முன்று விசில் விட்டு இரக்கவும்.
மட்டன் பஞ்சு மாதிரி வெந்து கிரேவியும் சேர்ந்து சுவை சூப்பராக இருக்கும்.

Note:

சுவையான செட்டி நாடு மட்டன் கிரேவி ரெடி.
பிளெயின் சாதம், ரொட்டி,நான்,பிரைட் ரைஸ் சப்பாத்தி வகைகளுக்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும்.

சுவை எபப்டி இருந்ததுன்னு கண்டிபாக வந்து சொல்லனும்.





Saturday, December 11, 2010

குழந்தை வளர்ப்பு படங்கள்

முன்பு மெயில் வந்த படங்கள்












Thursday, December 9, 2010

உன்னை ஒன்று கேட்பேன்


(பார்த்த ஞாபகம் இல்லையோ , காதோடு தான் நான் பாடுவேன், அத்தையடி மெத்தையடி, ஆயிரம் நிலவுகள் வருவதுண்டு , வெள்ளி கிழமை விடியும் வேலை, வான் மேகம் பூ பூவாய் தூவும், நீ என்ன சொன்னாலும் கவிதை ,ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான், பாடவா என் பாடலை , இதுபோல் நிறைய பாடல் கள் அப்படியே மனதில் ஓடுது,) இதேல்லாம் தவிர்து கிழே பத்து ஏன் பத்து தான் போடனுமா என்ன நான் பதினொன்னா போடு கிறேன்)




ஸாதிகா அக்கா பெண்பாடகிகள் பாடிய பெண்கள் பாடல் அழைக்க அழைத்து இருந்தார்கள் .
இப்ப இருக்கிற டென்ஷனுக்கு இத யோசித்தி எழுதி பாடலை தேர்ந்த பாடல்ல்களை முனுமுனுத்து கொண்டு இருபப்து மனதிற்கு ரொம்ப இதமாக இருக்கு. என்ன பாட்டு தேர்வு செய்வது பார்த்த எனக்க்கு பிடித்த பாடல்கள்
எல்லோரும் தேர்வு செய்து விட்டார்கள்.





1. படம்: பஞ்சவர்னகிளி
பாடியவர்: பி.சுசீலா

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர் – இன்ப ingku senRu keedkavum

2. படம் : புதிய பறவை
பாடியவர்: பி.சுசீலா

சிவாஜி, சரோஜா தேவி

பாடல் : உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தேன்றும்



3. படம்: ஜானி
பாடியவர்: ஜானகி

பாடல் : காற்றில் என் தன் கீதம்
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
தலைவா



4. படம்: வெற்றி கொடி கட்டு
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்

முரளி, மாளவிக்கா

பாடல்: கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு

என் கண்ணு இரண்டும் ,
இந்த பாட்ட முனுமுனுக்காதவர்கள் யாருமே கிடையாது




5. படம் :எங்க ஊர் பாட்டு காரன்
பாடியவர்: ஆஷா போஷ்லே

ராமா ராஜான், நிஷாந்தினி

பட்டு பட்டு பூச்சி போல – சென்பகமே சென்பகமே
தென் பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே


6.படம் :உல்லாச பறவைகள்
பாடியவர் :ஜென்சி

பாடல்:'' தெய்வீக ராகம் தெவிட்டாத கானம்
கேட்டாலே போதும் உள்ளங்கள் கூடும்.;;

( அப்பப்பா இந்த பாடலை கேட்கும் போது என்ன ஒரு இனிமை)


7. படம் :பூவே பூச்சூடவா

பாடிய்வர்:சித்ரா

நதியா

பாடல்: சின்ன குயில் பாடும் பாட்டு கேட்குதா கூ கூ
தம்பி களே, தங்கைகளே தேறில் என்னை ஏறுங்கள், உற்சாகமாய் உலாசமாய் ஊரை சுற்றி காட்டுங்கள்.

8. படம் :தில்லானா மோகனாம்பாள்
பாடியவ்ர் : பி.சுசீலா

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

நாட்டிய பேரொளி பத்மினி ஆடிய நடனத்தையும் , சிவாஜியையும் யாராலும் மறக்க முடியாது.

9. படம் : ரோஜா
பாடியவர் : மின்மினி

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவைத் தொட்டு முத்தமிட ஆசை
என்ன இந்த பூமி சுற்றி வர ஆசை



10.படம்: மெல்ல திறந்தது கதவு
பாடியவர்: ஜானகி
பாடல்: ஒரு சனம் தூங்கிருச்சு, ஊத காற்றும் அடிச்சிடுச்சி
பாவி மனம் தூஙக்லையே அதுவும் ஏனோ தெரியலையே


பாடல்களை தேர்வு செய்து விட்டு இவ்வளவு தூரம் படிச்சிங்க பாடலை காது குளிர கேட்கவேண்டாமா, லின்க் கேட்டு நம்ம் குட்டி சொர்க்கம் கிட்ட கேட்டதற்கு தேன்கின்னத்தை அறிமுக படுத்தினாங்க. ஏற்கனவே எப்பவாவது போய் பார்க்கும் பிலாக்க் தான் அதிலிருந்து தேட நேரமில்லாததால் முன்று பாடல் கள் லின்க் கொடுத்துள்ளேன் சுவை த்து மகிழுங்கள்.

11. படம் : மே மாதம்
பாடியவர்: ஷோபா சந்திர சேகரன்
மார்கழி பூவே மார்கழி பூவே உன் முகம் கான
இங்கு போய் பாட்ட கேட்டு கொள்ளுங்கள்





(பார்த்த ஞாபகம் இல்லையோ ,காதோடு தான் நான் பாடுவேன், அத்தையடி மெத்தையடி, ஆயிரம் நிலவுகள் வருவதுண்டு , வெள்ளி கிழமை விடியும் வேலை, வான் மேகம் பூ பூவாய் தூவும், நீ என்ன சொன்னாலும் கவிதை ,ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான், பாடவா என் பாடலை , இதுபோல் நிறைய பாடல் கள் அப்படியே மனதில் ஓடுது,) இதேல்லாம் தவிர்து கிழே பத்து ஏன் பத்து தான் போடனுமா என்ன நான் பதினொன்னா போடு கிறேன்)





இனிய பாடல்கள் எல்லாமே கேட்க கேட்க தெவிட்டாது,மனதுக்கு அமைதி டீவியில் அமுத கானம் தேன் கின்னம் என்று பாட்டு ஒளித்தால் என்ன வேலையா இருந்தாலும் அப்ப்டியே போட்டு விட்டு ஒரு நிமிடம் அபப்டி மெய் மற்ந்துடுவேன்.

பின்னாடியே என் ரங்ஸ் பார்த்து அடுப்புல ஏதாவது இருக்கா? என்று கேட்டு ஞாபகப்படுத்துவார், எல்லாம் ஆஃப் பண்ணிட்டுத்தான் வந்து உட்காருவேன், ஒரு 10 நிமிடம் ஒரு மனசு ரிலாக்ஸ் தானே/////


தொடர் பதிவ நான் பாட அழைப்பது

புதுசா பிளாக் உலகில் வந்துள்ள என் பழைய அறுசுவை தோழி தளிகா

மழை மேகம், குறிஞ்சி மலர்கள் என்ற பெயரில் அருமையான கவிதை, கதை கட்டுரைகள் எழுதி கொண்டு இருக்கும் சுந்தரா,

என் பதிவுகளை தொடர்ந்து படித்து அடிக்கடி வந்து பாராட்டி செல்லும் கோபி

(பித்தனின் வாக்கு ) நகைச்சுவையான கமெண்ட்டை அள்ளிதெளிக்கும் சுதாகர் சார். அப்ப நல்ல சமைக்கவும் சொல்லி த்ருவார்

இன்னும் யார் யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கோ அவர்கள் தொடரலாம்.

Monday, December 6, 2010

தையல் மிஷினில் எண்ணை விட்ட பிறகு



1. தையல் மிஷினில் எண்ணை விட்ட பிறகு ஊறியதும் உடனே துணியை தைக்க கூடாது.

2. அதில் முதலில் ஒரு நியுஸ் பேப்பரை வைத்து தைத்துவிட்டு அடுத்து ஏதாவது பழைய துணியில் தைத்த பிறகு தான் நாம் தைக்க இருக்கும் துணியை தைக்கனும்.

3. புது துணிகளை எண்ணை போட்டதும் உடனே தைக்கக்கூடாது. லைட் கலர் துணி என்றால் முழுவதும் கறையாகிடும்.

4. புதிதாக தையல் பழகுபவர்களும் நியுஸ் பேப்பரின் ஓரங்களை மடித்து வைத்து அதில் தையல் போட்டு பழகலாம். கர்சீஃப் ஓரங்களை மடித்து தைத்தும் பழகலாம். பழைய துணிகளில் முதலில் தைத்து பழக வேண்டும்.

5. பட்டன், கொக்கி, கிழிந்ததை இனைப்பது , ஹெம்மிங், ஓட்டு தையல் இது போல் சின்ன சின்ன தையலை கற்று கொள்வது மிகவும் நல்லது, அவசரத்துக்கு நாமே தைத்து கொள்ளலாம்.

6. வெளிநாடுகளுக்கு போகும் பெண்கள் கண்டிப்பாக தையல் கற்று கொள்வது மிகவும் அவசியம், இல்லை என்றால், சின்ன சின்ன கிழிந்த துணிகளை தைக்க, ஓட்டு தையல் போட, டைட்டனா போன சோளி சல்வார்வை பிரித்து மிண்டும் தைக்க, வேலைகளுக்கெல்லாம் டெயிலரை தேடி கொண்டு போகமல் நாமே தைத்து கொள்ளலாம் .


7. புடவை ஓரம் மடித்து தைப்பது, பால்ஸ் மடித்து தைப்பது எல்லாம் நாமே செய்து கொள்ளலாம்

இல்லை என்றால் அதிக பணம் டாலர், திர்ஹம்ஸில் செலவழிக்க வேண்டிவரும்.


வித விதமான கழுத்து மாடல்கள் இது நான் தயாரித்தது.



Thursday, December 2, 2010

39 ஆம் வருட கொண்டாட்டம் - 39 U.A.E.NATIONAL DAY














இன்று யு ஏ யி நேஷனல் டே, துபாய்,அபுதாபி,ஷார்ஜா,அல் அயின்,ராசல் கைமா ஃபுஜெரா எல்லா இடங்களிலும் பயங்கர அலங்கராமாக இருக்கும்,

அரபி பசங்க காரில் ஹோலி போல் வண்ணங்கள் தூவி ஆடுர ஆட்டம் இருக்கே, எப்பா/
டம்.



எல்லா பில்டிங்குக்கும், மரஙகளுக்கும் கலர் கலரா லைட் மாலைகள் மாலையா மாலையாக தொங்க விட்டு இருக்கு, போனவருடம் ரொம்ப டவுன், தீடீர் சரிவு , போன வருடத்த விட இந்த வருடம் பரவாயில்லை கொண்டாட்டம் அதிகாமாக இருக்கு. அதிக ஜோடிப்பா இருக்கு.
பார்கக்வும் அழகாக இருக்கு.











கார்னிஷ் , டேரா அப்ரா சைடில் தண்ணீரில் போட் வைத்து ஃப்வர் வொர்க்ஸ், மிக பிரமாண்டமாக டிசைன் டிசைனா வெடிப்பார்கள் இந்த வான வேடிக்கையை பார்க்க ஒட்டு மொத்த திரல்களையும் அங்கு காணலாம்.இதை பார்க்க குழந்தைகலுக்கு ரொம்ப கொண்டாட்டம்.

39 ஆம் வருட கொண்டாட்டாம்





இங்கு அடிக்கடி நடப்பது அவார்டு விஷாதான்.

தும்மினா இருமினா கூட அவார்டு கொடுத்துடுவாங்க போல
நிறைய அவார்டுகள் பரிசுகள்



அரபி பெண்களும் யு ஏ ஈ கொடி வண்ணத்தில் தலைக்கு ஸ்கார்ஃப்,குடை, வாட்ச்,வளையல், ரிங்க் ஆகியவைபோட்டு கொள்ளவார்கள்









பள்ளிகளில் சிறுமிகள் அனைவரும் ஒரே வண்ணத்தில் ஹேர் கிளிப்,தலைக்கு கேப்,கழுத்துக்கு மணி , எல்லோரும் கொடியும் குத்தி கொண்டு பரைட் பன்ணி அனைவரும் பார்க் சென்று பிள்ளைகளுக்கு ஆப்பிள்,பிட்சா, சாக்லேட் எல்லாம் கொடுத்து மறுபடி பள்ளிக்கு கூப்பிட்டு வருவார்கள்.

பள்ளிசிறுமிகளின் கொண்டாட்டாம்.






இங்கு வாரத்தில் வெள்ளி சனி

விடுமுறை. இது போல் ஈத், நேஷனல் டே என்றால் கவர்மெண்ட் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஒரு நாள் லீவு சேர்ந்து வரும் வெள்ளி சனி கணக்கு கிடையாது அத கழிச்சிட்டு கூடுதல் விடுமுறைவேறு, பிரைவேட் கம்பேனிகளுக்கு வெள்ளி சனி லீவில் இது போல் பெஸ்டிவல் லிவு வந்தால் அந்த லீவிலேயே முடிந்து விடும்.




பொதுவா காருக்கு பயங்க ர அலகாரம்மாக இருக்கும், அரபிகள் காரில் மேல் புறம் நின்று கொண்டும் கதவு வழியாக எட்டி பார்த்து கொண்டும் காரை ஓட்டி செல்வார்கள் , இந்த வருடம் அபுதாபியில் எந்த கார் நல்ல அலங்காரமாக இருக்கோ அதில் 10 காருக்கு பரிசி கொடுக்க போகிறார்களாம்




வானவேடிக்கை. அருமையாக இருக்கும்

























அமீரக ஷேக்குகள்






ஷேக் வருகை




அடுத்த வாரம் வருகிற முஹர்ம் நியு இயர் லீவையும் இதில் சேர்த்து வைத்து கொண்டார்கள், இந்த ஷேக்குகளை கேட்க யாரும் இல்லை. அவஙக் வசதிக்கு அவர்கள் வைப்பது தானே சட்டம்/ இப்படி லீவ மாற்றி வைத்து கொள்கிறார்கள்.


Wednesday, December 1, 2010

துபாயில் எங்கு பார்த்தாலும் இப்ப‌ ப‌ச்ச‌ க‌ல‌ரு ஜிங்குச்சா தான்.






துபாயில் எங்கு பார்த்தாலும் இப்பச்சரு ஜிங்குச்சா தான்.

காரு, ஸ்ஸு,பைக்கு மாதிரி இப்பசைக்கிள் அதிகமாகி விட்டது.
எங்கு பார்த்தாலும் விபத்து சிகனலில் கார் வருவது கூட் தெரியாமல் பாய்ந்து செல்கிறார்கள்,

என்ன செய்வது புழப்பு , மெயினாக சாப்பாடு டெலிவரிக்கு செல்பவர்கள் உரிய நேரத்தில் கொண்டு சென்றாகனுமே, வீட்டு சாமான்கள் டெலிவரிசெய்யும் குராசரிமேன் , துணி சலவை செய்யும் டோபிகள் இவர்கள் எல்லாம் தான் இது போல் சைக்கிளில் செய்வது.

ஆகையால் எல்லா சைக்கிள் ஓட்டுனர்களுக்கு இப்பபுதுசா, இது போல் ரூல்ஸ்

போலிஸ்கள் , வீடு மெயின்டஸ் பார்ர்கருபர்கள் எல்ல்lலாம் தான் முன்பு இது போல் பச்சகலரு ஜாக்கெட்டோடு வருவார்கள்.

இப்பஎங்கபார்த்தாலும் சைக்கிள் ஓட்டுனர்கள்பச்சரு ஜாக்கட்டும், ஹெல்மெட்டுமா துபாய் இப்ப ஜக ஜோதியாக இருக்கு.

அப்படி போடாம போனால் 200 திர்ஹம் பைனாம்.


***************************%%%%%%%%%%%%************************

காரில் பின்னாடி நாலு பேரவைத்து கூப்பிட்டு போனா 5000 பைனாம்..
காரில் கூலிங்க் பேப்பமுழுவதும் ஒட்டி உள்ளே இருபர்கள் யார் என்று தெரியாமல் இருந்தா அதற்கும் பைனாம், இது ஷார்ஜா, ( ஜார்ஜாவுல‌ ) தான் அதிகமா ஆட்க்ள் பிடி டுகிறார்களாம்.

எப்படியோ இன்னும் எப்படி எல்லாம் த்தக்கல்லாமுன்னு தீவிரயோசனையாம்.

துபாய் க்காஸ் ரோட்டுலராக்கு பார்க்காமஉஜாரா போங்க