இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும்.
சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில்.
https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
#முஸ்லீம்வீட்டுகல்யாண# பச்ச போடும் நாஷ்டா #பாய் வீட்டுமட்டன் சேமியா பிரியாணி#
#பாய்வீட்டு# கல்யாணத்தில் செய்யும் டிபன் வகைகளில் மிகவும் பிரபலமான உணவு
இதில் ஆட்டுகறீ 1 1/4 கிலோ என்பது கல்யாண விருந்துகளுக்கு அப்படி சேர்க்கனும் சாதாரனமாக வீட்டில் செய்வதாக இருந்தால் முக்கால் கிலோ போட்டால் போதும்.டால்டான்னு சொன்னது பெரிய விருந்து களீல் டால்டா சேர்ப்பார்கள்.
தேவையான பொருட்கள்
சேமியா - 800 கிராம் பாக்கெட்
ஆட்டு கறி - 1 1/4 கிலோ
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/2 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - எட்டு தேக்கரண்டி
எண்ணெய் - அரை கப் (100 கிராம்)
நெய் - 50 கிராம் கால் கப்
மிளகாய் தூள் - முன்று தேக்கரண்டி
டால்டா or ghee - இரண்டு தேக்கரண்டி (சேமியா வறுக்க)
கொத்தமல்லி தழை - அரை கட்டு
புதினா - பத்து இதழ்
பச்சை மிளகாய் - ஐந்து
பட்டை - ஒரு அங்குலம் துண்டு இரண்டு
ஏலம், கிராம்பு - தலா இரண்டு
தயிர் - அரைகப்
உப்பு தேவைக்கு
மூஸ்லீம் வீட்டு கல்யாணடிபன் செய்வது எப்படி
சேமியாவை கருக விடாமல் சிவக்க நெய் அல்லது டால்டா சேர்த்து வறுத்து ஆற வைக்கவும்.
எண்ணெயை காய வைத்து பட்டை, ஏலம், போட்டு வெங்கயத்தை அரிந்து போட்டு வதக்கவும். வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி தக்களியை போட்டு மிளகாய் தூள், உப்பு சேர்த்து மூடிபோட்டு தக்காளியை வேக விடவும்.
வெந்ததும் கறியை போட்டு இரண்டு மூன்று நிமிடம் கிளறிக்கொண்டே இருக்கவும். பிறகு தீயை சிம்மில் வைத்து கறியை போட்டு வேக விடவும்.
சேமியா அளவு ஒன்றுக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் சேமியாவை கொட்டி இரண்டு மூன்று கொதி வந்ததும் சிம்மில் வைத்து வேக வைத்து அடுப்பை ஆஃப் பண்ணி விட்டு பத்து சிறூ தீயில் வைத்து தம்மில் விடவும், பதினைந்து நிமிடம் கழித்து பிரட்டி விட்டு பரிமாறவும்.
சுமார் 9 லிருந்து 10 பேர் சாப்பிடலாம்
இதற்கு தொட்டுக்கொள்ள புதினா துவையல், எல்லா வகையான ஊறுகாய்கள் பொருத்தமாக இருக்கும்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
அரேபியா பாரம்பரிய இந்த குனாஃபா அரேபியர்களின் திருமணம் மந்தி கப்ஸா என்னும் பிரியாணியுடன் ஸ்வீட்க்கு செய்வார்கள் மற்றும் ரோட்ரோர கடைகளில் நோன்பு காலங்களில் அதிக அளவில் செய்து விற்கப்படும்,
அந்த குனாஃக்கு என்று குனாஃபா சேமியா உண்டு அது இங்குள்ள எல்லா சூப்பர் மார்கெட்களிலும் ப்ரோஜன் ஏரியாவில் கிடைக்கும், ஒரு பாக்கெட் விலை 10 திர்ஹம், இந்த குனாஃபாவை பாக்கிஸ்தாணி சேமியாவான ஷீர்குருமா செய்யும் சேமியாவிலும் நம்ம ஊரில் உருது முஸ்லீம்கள் பாரம்பரியமாக ஈத் பெருநாளுக்கு செய்யும் சுருள் சுருளாக உள்ள ஷீர் குருமா (பாயாசம்), செய்யும் சேமியாவிலும் செய்யலாம் அதுவும் இல்லாமல் பபிரட்டிலும் சுலபமாக செய்ய்யலாம் .சுவைத்து மகிழுங்கள், செய்து பார்த்தவர்கள் கிழே உள்ள மெயிலுக்கு நீங்கள் செய்து பார்த்த போட்டோவை அனுப்பிவைக்கவும்.
குனாஃபா என்பது அரபிக் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று . இதற்கென குனாஃபா சேமியா சூப்பர் மார்கெட்டுகளில் ப்ரோஜன் ஏரியாக்களில் கிடைக்கும்.அது கிடைக்காதவர்கள் நம்ம ஊரு சேமியாவிலும் செய்யலாம். அப்படியே ப்ரட்டிலும் செய்யலாம்.
ப்ரட் குனாஃபா
தேவையான பொருட்கள்
வொயிட் ப்ரட் – 4 ஸ்லைஸ்
லுர் பார்க் பட்டர் – 3 மேசைகரண்டி
பொடியாக நறுக்கிய பிஸ்தா பருப்பு – 50 கிராம்
ப்ரெஷ் கிரீம் – ½ டின்
நெஸ்ல் கிரீம் – ½ டின்
சதுர வடிவ அல் மராய் சீஸ் கியுப் – 3 துண்டுகள்
சுகர் சிரப் – தேவையான அளவு
சாப்ரான் – 4 அல்லது 5 இதழ்
எலுமிச்சை சாறு – ½ தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் அல்லது கேவ்ரா எசன்ஸ் - ஒருதுளி
செய்முறை
புட் ப்ராசசர் அல்லது மிக்சியில் ப்ரட்டை பொடித்து கொள்ளவும்.
பிசறி வைத்த பிரட்டை இரண்டாக பிரித்து கேக் செய்ய்ம் மோல்டில் பாதி பகுதியை சமபடுத்தி அழுத்தி வைக்கவும்
ஒரு பவுளில் நெஸில் கிரீம், சீஸ் கியுப்,ப்ரஷ் கிரீம் முன்று சீஸையும் மிக்ஸ் செய்து பொடித்து வைத்துள்ள பிஸ்தாவை பாதி அளவு சேர்க்கவும். சிறிது வால்நட்டையும் பொடித்து சேர்க்கவும்.
சமபடுத்தி வைத்த ப்ரட்டின் மேலே பரவலாக ஊற்றி வைகக்வும்.
அதற்கு மேல் மீதி எடுத்து வைத்த ப்ரட் கலவையை மேலே பரவலாக வைக்கவும். வைத்து 180 டிகிரி யில் 20 நிமிடம் பிரீ ஹீட் செய்து 20 நிமிடம் பேக் செய்யவும், பிறகு 10 நிமிடம் வைத்து எடுக்கவும். குனாபா ரெடி ஆனதும் சர்விங் ப்ளேட்டில் மாற்றி மேலே பிஸ்தா கொண்டு அலங்கரிக்கவும்.
சுகர் சிரப் – அரை டம்ளர் சர்க்கரை அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கலக்கி கொதிக்கவைத்து அதில் சாப்ரான்,லெமன் சாறு,ரோஸ் வாட்டர் அல்லது கேவ்ரா வாட்டர் சிறிது சிறிது சேர்த்து வைக்கவும்.
குனாஃபா ரெடி ஆனதும், அதை சர்விங் பிலேட்டில்வைத்து ஒரு போர்க் வைத்து குத்தி விட்டு அதில் இந்த சுகர் சிரப் ஊற்றி சாப்பிடனும்
கிழே வீடியோ லின்கை கிளிக் செய்து பார்க்கவும், மறக்காமல் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
சேமியா குனாஃபா
ஷீர் குருமாவுக்கு செய்யும் சேமியா அல்லது பந்து போல உள்ள நம்ம ஊரு சேமியா – 50 கிராம்
பட்டர் – 3 மேசைகரண்டி
பொடியாக நறுக்கிய பிஸ்தா பருப்பு – 50 கிராம்
ப்ரெஷ் கிரீம் – 1/4 டின்
நெஸ்ல் கிரீம் – 1/4 டின்
சதுர வடிவ அல் மராய் சீஸ் கியுப் – 2 துண்டுகள்
சுகர் சிரப் – தேவையான அளவு
சாப்ரான் – 2
எலுமிச்சை சாறு – 1/4 தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் அல்லது கேவ்ரா எசன்ஸ் – ஒருதுளி
ஷீர் குருமா சேமியாவில் பட்டரை உருக்கி கலக்கி வைக்கவும். இரண்டு பாதியாக பிரிக்கவும்.
ஒரு கேக் மோல்டில் பாதி சேமியாவை சமப்படுத்தி வைக்கவும்.
ஒரு பவுளில் நெஸில் கிரீம், சீஸ் கியுப்,ப்ரஷ் கிரீம் முன்று சீஸையும் மிக்ஸ் செய்து பொடித்து வைத்துள்ள பிஸ்தாவை பாதி அளவு சேர்க்கவும். சிறிது வால்நட்டையும் பொடித்து சேர்க்கவும்.
சமபடுத்தி வைத்த சேமியாவின் மேலே பரவலாக ஊற்றி வைகக்வும்.
அதற்கு மேல் மீதி எடுத்து வைத்த சேமியா கலவையை மேலே பரவலாக வைக்கவும். வைத்து 180 டிகிரி யில் 20 நிமிடம் பிரீ ஹீட் செய்து 20 நிமிடம் பேக் செய்யவும், பிறகு 10 நிமிடம் வைத்து எடுக்கவும். குனாபா ரெடி ஆனதும் சர்விங் ப்ளேட்டில் மாற்றி மேலே பிஸ்தா கொண்டு அலங்கரிக்கவும்.
நான் இதில் சுகர் சிரப் தயாரிக்க வில்லை என்னிடம் குலோப் ஜாமூன் ஜீரா ( சுகர் சிரப்) மீதியானது இருந்தது அதில் சாப்ரான் எலுமிச்சை சாறு சேர்த்து செய்தேன்
சுகர் சிரப் – அரை டம்ளர் சர்க்கரை அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கலக்கி கொதிக்கவைத்து அதில் சாப்ரான்,லெமன் சாறு,ரோஸ் வாட்டர் அல்லது கேவ்ரா வாட்டர் சிறிது சிறிது சேர்த்து வைக்கவும்.
அரபிக் ஸ்வீட் குனாஃபா
Arabic Bread Kunefah/Kunafa - 1
Bread - 4 Slices
Butter - 3 tbspn
Chopped Pisthachio - 50 gram
Fresh Cream - 1/2 tin
Nestle Cream - 1/2 tin
Almarai Cheese cubes - 3 nos
Sugar syrub - required qty
Saffron - 4 to 5 Strands
Lemon juice 1/2 tpn
Arabic Vermicille Kunafa in Indian Twist - 2
Indian Sheer kurma Vermicille - one bunch (50 gram)
Please Visit and subscribe our channel and share with your friends and family.
திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி
How to Make Dindugal thalappakatti Biriyani?
பல திண்டுக்கல் பிரியாணி இருந்தாலும் ஊருக்கே பெயர் போன திண்டுக்கல் தலப்பாகட்டி மட்டன் பிரியாணி அதே ருசியில் .
முயற்சி செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
திண்டுகல் தலப்பாகட்டி பிரியாணி
சீரக சம்பா அரிசி – 1 kg
ஆட்டு கறி – ஒன்ன்றை கிலோ மட்டன்
நெய் – 200 கிராம்
கடலை எண்ணை (or) தேங்காய் எண்ணை – 100 கிராம்
ரீபைண்ட் ஆயில் – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 300 கிராம்
பெரிய வெங்காயம் 3
தக்காளி - 2
மிளகாய் தூள் – ஒரு மேசைகரண்டி
தயிர் – அரை கப் 200 gram
கொத்துமல்லி புதினா – இரண்டு கை பிடி
எலுமிச்சை பழம் – 1
இஞ்சி பூண்டு அரைத்தது – 200 கிராம்
பச்சமிளகாய் – 5
தாளிக்க - பட்டை 1 inch size, ஏலம் 4, கிராம்பு 4
தனியாக மேலே தூவ பட்டை ஏலம் கிராம்பு தூள் – 1 tspn
தனியாதூள் - 25 gram (or) 10 gram
மிளகாய் தூள் - 25 gram
===
ஒன்ன்றை கிலோ மட்டன்
மிளகாய் தூள்: ஒரு மேசைகரண்டி
உப்பு ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு மேசைகரண்டி
மட்டனில் மிள்காய் தூள் உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
செய்முறை
ஆட்டுக்கறியை சுத்தம் செய்து மீடியாமான துண்டுகளாக போட்டு கழுவி தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும்.
சீரக சம்பா அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
சின்ன வெங்காயத்தை ஒன்றும் பாதியுமாய் அரைத்து வைக்கவும்.
பிரியாணி செய்ய தேவையான சட்டியை அடுப்பில் ஏற்றி காயவைத்து அதில் நெய், கடலை எண்ணை or தேங்காய் எண்ணை,ரீபண்ட் ஆயில் சேர்த்து சூடானதும் பட்டை ஏலம் கிராம்பு போட்டு தாளித்து நீளமாக வெட்டிய ஒரு பெரியவெங்காயம் மற்றும் அரைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
கொத்துமல்லி புதினா தழை முக்கால் பாகம் சேர்த்து வதக்கி தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து அதில் பச்சமிளகாயை ஒடித்து சேர்க்கவும்.
சிறிது வதங்கியதும் அதில் மிளகாய் தூள் மற்றும் உப்பு தூள் சேர்த்து வதக்கி வேக வைத்துள்ள ஆட்டுகறியை சேர்த்து நன்கு வதக்கி குறைந்த தீயில் வேகவிடவும்.
பிறகு தயிர் சேர்த்து கலக்கி நன்கு தனலை குறைத்து வைத்து தண்ணீர் வற்றியதும் அக்னி கறி போல வந்ததும்
தண்ணீரை ஒரு பங்கு அரிசிக்கு ஒன்னறை பங்கு ஊற்றி கொதிக்க விட்டு உப்பு சரி பார்த்து எலுமிச்சைசாற்றை பிழிந்து, அதன் மேல் கொத்துமல்லி, புதினா தழை , கரம் மசாலா தூள்(பட்டை, ஏலம் , கிராம்பு தூள் )சேர்த்து ,சிறிது நெய் சேர்த்து அரிசியை அதிக தீயில் 10 நிமிடம் வேக விட்டு, குறைந்த தனலில் 20 நிமிடம் தம் போடவும்.
பிரியாணி, சாதம் வகை, பாரம்பரியசமையல்,
இதுல ஒரு கிலோ rice அளவுக்கு செய்து இருக்கிறேன்.
.
1. திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணிக்கு சீரக சம்பா அரிசிதான் பயன் படுத்தனும்.
2. இதில் சேர்க்கவேண்டிய எண்ணை முக்கூட்டு எண்ணை ( கடலெண்ணை, நெய், ரீபைன்ட் ஆயில்)
3. சின்ன வெங்காயம் கண்டிப்பாக சேர்க்கனும். அதை கர கரப்பாக மிக்சியில் அரைத்து சேர்த்து தாளிக்கனும்..
4. வெந்த கறிகூட்டிலேயே தண்ணீர் அளந்த்து அரிசி தட்டி கொதிக்க விட்டு தம் போடனும்.
5. ரொம்ப் முக்கியமான விஷியம் கடையில் கரம் மசாலா தூவி நெய் ஊற்றி 5 நிமிடம் தம் போட்டு இரக்கனும்
கவனிக்க :கறி தாளிக்கும் போது அக்னி யோடு தான் போட்டு வேக வைக்கனும், எனக்கு நேரமில்லாததால் குக்கரில் வேகவைத்து சேர்த்துள்ளேன்.தக்காளி இதற்கு குறைவாக சேர்த்தால் போதும்.
சிலருக்கு தனியாத்தூள் சேர்ததால் பிடிக்காது வேண்டுமானால் குறைத்து கொள்ளுங்கள்
6 பேர் சாப்பிடலாம், மட்டன் தாளிப்பில் போட்டு வேகவிடனும் நான் நேரமின்மையால் குக்கரில் வேகவைத்துள்ளேன். பாரம்பரியமாக செய்யும் ராவுத்தர் வீட்டு பிரியாணி திண்டுக்கலில் உள்ள எங்க நாத்தனாரின் மருமகளின் நானிமா சொன்ன அளவுகள், இதற்கு முன் நான் என் இஷ்டத்துக்கு செய்து இருக்கிறேன், இது சரியான முறையில் கேட்டு செய்தது
Facebook: https://www.facebook.com/jaleela.kamal
Face Book Page:https://www.facebook.com/Samaiyalattakaasam/
Dubai Burka Group wholesale and Retail:https://www.facebook.com/groups/Dubaiburka/
Tamil Blog:http://samaiyalattakaasam.blogspot.com
English Blog:http://cookbookjaleela.blogspot.com/
for Inquiry: cookbookjaleela@gmail.com
உங்கள் அபிமான சென்னை பிளாசா இப்பொழுது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலும்
கடந்த எட்டு வருடங்களாய் பைகிராப்ட்ஸ் சாலையில் மக்களின் மனம் கவர்ந்த சென்னை பிளாசா, (துபாய் புர்கா, துபாய் ஷால் , ஹிஜாப், மக்கன்னா, சின்ன தொப்பி, பேஸ் கவர், கால் சாக்ஸ் கை சாக்ஸ்) ( Burka/abaya/Fardha - size 22 to 62 என அனைத்து இஸ்லாமிய பெண்கள் அணியும் துணிவகைகளும் அடங்கிய சென்னை ப்ள்சா துபாய் புர்கா, இப்போது
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ரத்னாகேஃபே , ஆப்பிள் ஷாப்பிங் மால் எதிரில் புது பொலிவுடன் திறந்துள்ளோம்
Ladies Under Garments In Wholesale and Retail - Chennai Shop
எங்களது இந்த புதிய கிளையில் பெண்களுக்கு தேவையான உள்ளாடைகளும் 14 மாடல் களில் பிராண்டட் (branded cloth- Cotton and baniyan size 30 to 40 ) துணியில் தயாரிக்க பட்டு விற்பனை செய்கிறோம்.மற்றும் பெண்களுக்கு தேவையான அணைத்து துணி வகைகளும் ( பாட்டியாலா பேண்ட், லெகின்ஸ் பேன்ட், ( லூஸ் பிட்டிங் மற்றும் டைட் பிட்டிங் ) டாப்ஸ்,நைட்டி வகைகள் , மீடியம் சைஸிலிருந்து 3 எக்சல் சைஸ் வரை மொத்தமாகவும் சில்லறையாகவும் உயர்ந்த தரத்தில், குறைந்த விலையில் கிடைக்கும். விழா கால சலுகைகளும் உண்டு.
உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம் வாருங்கள் வாருங்கள்
வாருங்கள், வாரி செல்லுங்கள்.
Available Sizes 30 to 40 MRP Price + Courier charge Extra
#cpzeeba#Chenaniplaza#Ladiesinnerwearshopinchennai#Women'sundergarmentsinchennai#Triplicane#
Ladies innerwear wholesale shop in Chennai Plaza
அருமை தோழிகளே பெண்களின் உள்ளாடைக்கென்றெ தனி கடை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் இதை ஷேர் செய்யுங்கள். வீட்டில் இருந்து தொழில் செய்யும்பெண்களுக்கு அருமையான வாய்ப்பு , யாருக்கும் மொத்தமாக சில்லறையாக (wholesale/ Retail) விற்பனை செய்ய வேண்டும் என்றால் என்னை அனுகுங்கள். ( Resellers most welcome)
https://www.chennaiplazaik.com/…/ladies-inner-wear-wholesal… பெண்களுகான உள்ளாடை வாங்க சென்று பல பெரிய பெரிய கடைகளில் ஒரு மூலையில் வைத்துஇருப்பார்கள், அதை அங்கு போய் வாங்க வெக்க பட்டுகொண்டு டிசைன் பிடித்திருந்தாலும் கேட்ட கூச்ச பட்டு கொன்டு சில பெண்கள் சரியான அளவான்னு கூட சரி பார்க்காமல் வாங்கி வருகிறார்கள், உங்களுக்காக சென்னையில் (ஜீபா.. ) Cp Zeeba -
வாருங்கள் உங்களுக்கு பிடித்தமாதிரி பொறுமையாக தேர்வு செய்து வாங்கி செல்லுங்கள்கடை முழுவதும் உள்ளாடைகள் மட்டுமே,மற்றும் பக்கத்தில் மற்றொரு கடையில் புர்கா ஷால், சுடி, பாட்டியாலா, நைட்டி டாப்ஸ் உண்டு.
Cp Zeeba
Zeeba Classy
Item No -1
Fabric - Cotton, Style Back Open.
Available Colours
White colour Black colour Skin colour
அருமை தோழிகளே இத பற்றின உங்கள்கருத்துகளையும் தெரிவிக்கலாம். பெண்களுக்கும் அதிக முதலிடீல்லாத சிறு தொழில்.. cpzeeba@gmail.com
DubaiGoldSouq#shoppingFestival#ArabicWeddingcollections#UAE#Dubai Gold Souq is famous Tourist Place,Largest Gold market.
1.Dubai Gold Souq Deira Bazzar - Part One Arabic Wedding Jewellery Designs
Please click below link https://createyoutube.com/st/rxmysDNC72w வாங்க துபாய் நகைகடையை சுற்றி பார்க்கலாம். இதுவரை யாரும் பார்த்திராத தங்கை நகைகளின் பல விதமாக , அந்த காலத்து ராஜா ராணிகள் அணிவது போல உள்ள டிசைன்கள். அதற்கு முன் நம் சேனலை சப்ஸ்கிரைப் செய்து பக்கத்தில் இருக்கும் பெல் பட்டனை கிளிக் செய்து வைத்து கொண்டால் நான் பதியும் பல பயனுள்ள பதிவுகள் உடனுக்குடன் கிடைக்கும். மறக்காமல் உங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தாருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி துபாய் நகைகடை #Dubai#jewellery shop Dubai Gold Souq is famous Tourist Place,Largest Gold market. Deira Gold souq Timings/
//இந்த பதிவ படிக்கும் ரங்கமணிகளே உங்கள் தங்கமணிகளுக்கு கண்டிப்பாக இந்த டிப்ஸை சொல்லலுங்கள்.// எல்லா பெண்களும் வெளியில்...
About Me
Jaleela Kamal
சமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு.
தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.