Wednesday, July 1, 2009

ஃபிரிட்ஜ் டிப்ஸ் (ஐஸ் பெட்டி ஹி ஹி)

ஃபிரிட்ஜில் பொருட்களை வைக்கவும், பராமரிக்கவும். டிப்ஸ்//அன்றாட தேவையில் துணி அனைத்தையும் பீரோவில் வைப்பது போல், ஃபிரிட்ஜில் அனைத்து பொருட்களையும் இழ்டத்துக்கும் திணிப்பார்க‌ள்.
இதில் ஃப்ரீஜ‌ரில் ஸ்டடோர் செய்வ‌து ப‌ற்றி நிறைய‌ பேர் என்னிட‌ம் கேட்டு இருக்கிறார்க‌ள் மெயில் மூல‌ம் விள‌க்கி உள்ளேன். அதில் சில‌ டிப்ஸ்க‌ள் உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்கிறேன். //


1. நிறைய மட்டன், மீன் போன்றவை வாங்கி வந்தால் அதை ஃபீரிஜரில் ஒரு மாதம் வரை,ஸ்டோர் பண்ணி வைக்கலாம்.
முன்பெல்லாம் ஒரு வருடம் வரை கூட ஸ்டோர் செய்து இருக்கிறார்கள்.


2. இந்தியாவில் அன்றாட தேவைக்கு வாங்கி செய்வார்கள்.
வெளிநாடுகளில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் வாரம் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை தான் மொத்தமாக வாங்குகிறார்கள்.


3. வாங்கி வரும் பொருளை உடனே பாக்கெட்களில் போடவும். ரொம்ப நேரம் வெளியில் வைத்து விட்டு எடுத்து போட்டால் அதில் இருந்து தண்ணீர் ஊறி வாடைவரும்.


4. முதலில் ப்ரீஜரில் திக்கான கவரை அடியில் விரித்து கொள்ளுங்கள்.இது வைக்கும் பொருள் அடியில் ஒட்டாமல் இருக்க, அப்படியே வைப்பதால் வைக்கும் இறைச்சி கவர் ஒட்டிக்கொண்டு தினம் எடுக்கும் போதெல்லாம் அதோடு கிடந்து சண்டை போட வேண்டிவரும் நீயா நானா என்று.


5. மீன், மட்டன், சிக்கன், இறால் என்று தனித்தனியாக எல்லாத்திலும் ஒவ்வொரு கிலோ என்றால் நான்கு நான்கு பாக்கெட்டாக போட்டு கொள்ளவும்.


6. நான்கு வேவ்வேறு கவரில் தனித்த்தனியாக வைக்கவும். இப்போது நான்கு கவரில் நான்கு நான்கு பாக்கெட்டுகள் இருக்கும்.


7. தின‌ம் ஒரு நாள் சிக்க‌ன் என்றால், ம‌றுநாள் இறால், அடுத்து ம‌ட்ட‌ன், அடுத்து மீன் என்று ஒவ்வொரு பாக்கெட்டாக‌ எடுத்து செய்ய‌ வ‌ச‌தியாக‌ இருக்கும்.

8. எல்லாத்தையும் தினித்து வைத்து என்ன‌ வைத்தோம் என்று தெரியாது அது ஒரு வார‌ம் க‌ழித்து குப்பைக்கு போகும், என்ன‌ பொருள் வைத்தாலும் முன்று நாட்க‌ளுக்கு ஒரு முறை செக் ப‌ண்ணி க‌ளையுங்க‌ள்.

9. ரொம்ப‌ செய்து விட்டீர்க‌ள் என்றால் உட‌னே எடுத்து ஒரு க‌ண்டெயின‌ரில் வைத்து ஃபீஜ‌ரில் வைக்க‌லாம் அடுத்த‌ வார‌ம் கூட‌ ப‌ய‌ன் ப‌டுத்த‌லாம்.


10. ஃபீரிஜ‌ரில் போட்ட‌தை அடுத்த‌ வார‌ம் எடுத்து ப‌ய‌ன் ப‌டுத்தும் போது ம‌றுப‌டி உள்ளே வைக்க‌ வேண்டாம். அன்றே முடிக்க‌ வேண்டும்.


11. சிக்க‌ன், மீன் போன்ற‌வைக‌ளையும் பொரிப்ப‌த‌ற்கு ம‌சாலா த‌ட‌வி மேலே வைக்க‌லாம்.


12. ம‌ல்லிகை பூவை வைக்கும் போது அப்ப‌டியே வைக்க‌ வேண்டாம். ஒரு க‌வ‌ரில் முடிச்சி போட்டு (அ) டிப‌ன் பாக்ஸில் வையுங்க‌ள். இல்லை என்றால் வாச‌ம் எல்லா பொருட்க‌ளிலும் ப‌ர‌வும்.


13. ஊருக்கு போறீர்க‌ளா. சுத்த‌மா பிரிட்ஜை காலி செய்து ந‌ல்ல‌ துடைத்து லேசாக‌ திற‌ந்து வைத்து விட்டு போக‌வும்.இல்லை என்றால் அதில் பூஞ்சை பிடித்து வ‌ந்து திற‌ந்தால் அதை கிளீன் செய்வது ரொம்ப‌ சிர‌ம‌ம்.


14. அதில் பழம் ஏதும் வைத்து விட்டு போய் விடாதீர்கள். அது புழு பிடித்துவிடும்.பழம் என்றிலலை மற்ற எந்த பொருளா இருந்தாலும் புழுவைக்கும்.


15. பிரெஷாக சமைத்து உண்பது தான் நல்லது ஆனால் இப்போது இருக்கிற கால கட்டத்தில் சட்னி துவையல் முதல் கொண்டு அரைத்து பாக்கெட் போட்டு சீல் செய்து பீரிஜரில் ஏற்றி விடுகிறார்கள்.


16. நிறைய பேர் ஊருக்கு சொல்கிறேன் என்று கணவருக்கு நிறைய சமைத்து பிரீஜரில் ஸ்டோர் செய்து வைத்து செல்வார்கள்.17. நானும் நிறைய பேருக்கு என்ன எனன் சமைத்து வைக்கலாம் என்று சொல்லி இருக்கேன்.


18. அதை விட சிறந்தது ஏதாவது நான்கு வகை உணவை சமைக்க‌ கற்று கொண்டால் நல்லது.மாதம் ஒரு முறையாவது பிரிட்ஜை ஆஃப் செட்து துடைப்பது நல்லது.
தண்ணீரில் சோட மாவு ஒரு ஸ்பூன் கலந்து துடைத்து எடுக்கவும்.
சோப்பு போட்டும் ஸ்பாஞ்ச வைத்து கழுவலாம். உள்ளே துர்நாற்றம் அடிக்காமல் இருக்க எலுமிச்சைபழத்தை சின்னதாக வெட்டி அங்கேங்கே வைக்க‌லாம் அல்லது ஸ்வீட் ஆரஞ்ச் என சொல்லப்படும் கமலாபழ தோலையும் வைக்கலாம்


8 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

நாம் சாப்பிடற கோழியும் சரி மீனும் சரி உயிரோட இருந்த நாட்களை விட பிரிட்ஜ்ல இருந்த நாட்கள்தான் அதிகம். என்ன பண்றது

Jaleela said...

//நாம் சாப்பிடற கோழியும் சரி மீனும் சரி உயிரோட இருந்த நாட்களை விட பிரிட்ஜ்ல இருந்த நாட்கள்தான் அதிகம். என்ன பண்றது//

haa haa
ஆமாம் நவாஸ் நீங்கள் சொல்வது சரியே

முன்பெல்லாம் மொத்தமா வாங்கி வைத்தால் தான் முடியும், ஆனால் இப்ப அப்படி கிடையாது தடிக்கி விழுந்தா நாட்டாங்கடை என்பது போல் இப்ப எல்லாம் எல்லா இடத்திலும் கிடக்குது அதுவும் சேலுடன்..

தேவன் மாயம் said...

இங்கு கறி,மீன் ஃப்ரிஜ்ஜில் வைத்து சாப்பிட மனம் வரலைங்க!!

Jaleela said...

வருகைக்கு நன்றி தேவ‌ன்மாய‌ம்


இந்தியாவில் சிட்டியில் இருப்பவர்கள் அப்ப வாங்கி அப்ப செய்வார்கள், ஊரில் எங்க வீடுகளிலும் அப்படிதான்.

ஆனால் தொலைவில் இருப்பவர்கள் இப்படி செய்வர்கள்.

வெளிநாடுகளில் அவசரமாக இருவரும் வேலைக்கு போகிறவர்கள் எல்லாம் இப்படி தான்.


சிலர் இதுக்குன்னு தனி அலமாரி போல் ஃப்ரீஜரே வைத்து இருக்கிறார்கள்.

ஹர்ஷினி அம்மா said...

சுப்பர் டிப்ஸ் ஜலீலா அக்கா...மீன் வகைகளை சுத்தம் செய்து கட் பன்னி ஃப்ரீசரில் வைக்கலாமா?.

Jaleela said...

ஹர்ஷினி அம்மா நலமா?

மீன் வகைகளை சுத்தம் செய்து பிரைக்கு வேண்டுமானால் மசாலா போட்டு வைக்கலாம்.
வாங்கி வந்ததும் உடனே பாக்கெட் போட்டு மேலே போட்டு வைத்து விடுங்கள்.

உடனே ஃஃப்ரீஜ் ஆகிவிடும் பிறகு சமைக்கும் போது 11 மணிக்கு செய்வதா இருந்தா 9 மணிக்கு எடுத்து போட்டா போதும், இதை மைக்ரோ வேவில் வைத்து டீஃரீஜ் செய்ய கூடாது அது மீன் வெந்து போய்விடும்.

அவசரத்துக்கு தண்ணீரில் பாக்கெட்டோடு ஊறவைக்கலாம் ஒரு மணி நேரத்திற்குள் வந்துவிடும்.

சுத்தம் செய்து வைத்தால் மறுபடி எடுத்து போடும் போது தண்ணீர் ஊறி பழைய ஸ்மெல் வரும்.(போன வாரம் ஒரு பிரெண்ட் மீன் மார்கெட் போனா நிறைய‌ வாங்கி வ‌ந்தா அதை ப‌த‌ப்ப‌டுத்த‌ தெரியல‌ ஆகையால் அரை கிலோ ம‌ட்டும் வாங்கிவ‌ந்து அப்ப‌டியே சாப்பிட்டு முடித்துவிடுவோம் என்றார்க‌ள்)

அதான் இந்த‌ டிப்ஸை எழுதினேன்.


ஆனால் சிக்க‌ன் ம‌ட்ட‌ன் வகை க‌ளை க‌ழுவி உப்பு, ம‌ஞ்ச‌ள் பொடி, சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு ரொம்ப‌ வேகாம‌ல் த‌ண்ணீர் வ‌ற்றும் வ‌ரை அடுப்பில் சுருள‌விட்டு எடுத்து அதை க‌ண்டெயின‌ரில் போட்டு வைக்க‌லாம்.

ஹர்ஷினி அம்மா said...

/அரை கிலோ ம‌ட்டும் வாங்கிவ‌ந்து அப்ப‌டியே சாப்பிட்டு முடித்துவிடுவோம் /

எங்க விட்டுலேயும் அதே மாதிரிதான் ஜலீலா அக்கா...அதனால் மாதம் ஒரு முறைதான் மீன் சமைக்க முடியும்... உங்க டிப்ஸ் ரொம்ப பயன் படும் நன்றி அக்கா..:-)

Jaleela said...

நானும் இங்கு வந்த புதிதில் அக்கம் பக்கம் எந்த கடையும் கிடையாது.

மீன் மார்கெட் போய் மொத்தமா (சங்கரா, சீலா, கிளங்கா, இறால் எல்லாம்) ஒரு கிலோ வாங்கி வந்து இப்படி தான் பாக்கெட் போட்டு வைத்துசெய்வேன்.

ஓவ்வொரு வாரம் சாப்பிட்டு முடியும் போது அடுத்து வாங்குவது.

முன்பு கறி , சிக்கனும் , ஸ்பேர் பாட்ஸ் எல்லாம் அப்படி தான்.

ஒரு மாதத்திற்கு இப்ப 10 நாளைக்கு தேவையானதை ஸ்டோர் பண்ணி கொள்வோம்.

ஒரு வாரத்தில் நான்கு நாள் எல்லாம் ஒரு ரவுண்ட் வரும் எல்லாமே சாப்பிடுவோம், மீதி இருக்கும் நாட்கள். வெஜ் தான்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா