ஈசியான காலை உணவு ,குழந்தைகளுக்கேற்ற ஹெல்தி உணவு. விருந்தாளிகள் வந்தால் உடனே நிமிஷத்தில் தயாரித்து விடலாம்.
பிரெட் ஸ்லைஸ் = 12 (சிறிய பாக்கெட்)
முட்டை = இரண்டு
சர்க்கரை = 100 கிராம்
முட்டை = இரண்டு
சர்க்கரை = 100 கிராம்
பால் = அரை டம்ளர்
பேக்கிங் பவுடர் = ஒரு சிட்டிகை
பேக்கிங் பவுடர் = ஒரு சிட்டிகை
வென்னிலா எஸன்ஸ் = சிறிது
உப்பு = ஒரு சிட்டிக்கை
பட்டர் + எண்ணை = பொரிக்க தேவையான அளவு
பட்டர் + எண்ணை = பொரிக்க தேவையான அளவு
பாலை காய்ச்சி ஆறவைக்கவும்.
முட்டையுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி, அதில் பேக்கிங் பவுடர், உப்பு, வென்னிலா எசன்ஸ் சேர்த்து பாலையும் சேர்த்து கலக்கவும்.
பிரெட் ஸ்லைஸ்களை ஒவ்வொன்றாக முட்டை கலவையில் தோய்த்து தவ்வாவில் கொள்ளும் அளவிற்கு பட்டர் + எண்ணை விட்டு கருகாமல் பொரித்தெடுக்கவும்.
பிள்ளைகளுக்கு வாரம் ஒரு முறை பள்ளிக்கு கொடுத்தனுப்பலாம்.
இதில் பாலுக்கு பதில் தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம்.
பட்டை பொடி சேர்த்து செய்தால் ஃப்ரென்ச்டோஸ்ட் என்று பெயர்.
பிரெட் கார டோஸ்ட்
காரத்தில் செய்ய வெங்காயம், பச்ச மிளகாய், சிறிது மிளகாய் தூள், இஞ்சி பூண்டு கருவேப்பிலை சேர்த்து அரைத்து முட்டையுடன் கலக்கி , உப்பு, சிறிது பால் சேர்த்து பொரித்தெடுக்கவும்.
சுவையான கார டோஸ்டும் நிமிஷத்தில் ரெடி பண்ணிடலாம்.
Tweet | ||||||
35 கருத்துகள்:
பார்க்கவே ரொம்ப நல்ல இருக்கு!!!
கருத்து தெரிவித்தமைக்கு நன்றி, சுவையான சுவை,
பத்து நாளைக்கு ஒரு முறை கண்டிப்பாக இந்த டிபன் எங்கள் வீட்டில் உண்டு.
Good blog.
Portugal
அந்த பத்தாவது நாள சொல்லுங்க சாப்புட வர்றோம்
//அந்த பத்தாவது நாள சொல்லுங்க சாப்புட வர்றோம்//
repeat akka (nejama)
அக்கா, நீங்க தண்ணிய சுட வச்சா கூட ருசி கூடிடும் போல........
காலை டிபன் சாப்பிட அருமையான ஐட்டங்கள் அக்கா...இனி என்னை போன்றவர்களுக்கு காலை டிபன் ஈஸியோ ஈஸி... சூப்பர் அக்கா...
ஆஹா நேற்று இது தான் சாப்பிட்டேன்.
சரி அடுத்த முறை இதை கடைப்பிடித்து பார்ப்போம் காரம் தான் நம்ம சாய்ஸ்
இன்னைக்கு ப்ரேக்ஃபாஸ்ட் மெனு இது தான்.. அவங்களுக்கு ரொம்ப புடிக்கும்
http://abebedorespgondufo.blogs.sapo.pt/
வருகைக்கு மிக்க நன்றி.
அண்ணாமலையான், கருவாச்சி பத்தாவது நாள் செய்யும் போதா கண்டிப்பாக சொல்றேன்.
அட சித்ரா இந்த கிண்டல் தானே வேண்டாம் என்பது. தண்ணியா எந்த தண்ணி பா
சீமான் கனி இதன் பெயர் பேச்சுலர் பாம்பே டோஸ்ட் ந்னு கூட வைத்து இருக்கலாம் போல
நட்புடன் ஜமால் காரம் ரொம்ப அருமையா இருக்கும் அதுக்கு பெயர் பிரியாணி டோஸ்ட் என்று கூட சொல்லலாம்.
அன்பு தங்கை நாஸியா செய்யுங்க, வென்னிலா எசன்ஸ், பேக்கிங் பவுடர் சேர்ப்பதால், கேக் வாசனை வரும்
சூப்பர் அக்கா
பசங்க அடிக்கடி செய்ய சொல்லி கேட்பது இது தான் . பேக்கிங் பவுடர், எஸென்ஸ் சேர்த்தது இல்லை அடுத்த முறை செய்து பார்கிறேன்
வழக்கம் போல கலக்கிடீங்க சகோதரி .....
தெரிந்த குறிப்புத்தான்.இருந்தாலும் ஜலியின் கைவண்ணத்தில் மணக்குமே!!
பரவாயில்லை பேச்சிலர்ஸ் ஸ்பெஷலா போட்டுகிட்டு இருக்கீங்க. ரொம்ப நல்லது.
hey my favorite dish.,,இத என் அம்மா செய்வாங்க கா,,,,
Hi Jaleela,
how r u.. long time no see...
hope u r doing good
முட்டை போடமல் பட்டருடன் செய்யலாம் அல்லவா. ஆனா எங்க வீட்டில் குழந்தையில் காய்ச்சல் வந்தால் மட்டும் பிரட் கொடுப்பார்கள். ஆதலால் எனக்கு பிரட் என்றால் காய்ச்சல்காரன் உணவு என்பது போல ஆகிவிட்டது. நன்றி ஜலில்லா
// எதாவது சொல்லிட்டு போனா எனக்கு உற்சாகமா இருக்கும்!//
கமண்ட எதாவது சொல்லிட்டுத்தான போகனும்,, ஒகே சொல்லறன் கேளுங்க............
ஒன்று
இரண்டு
மூன்று
நாலு
ஜந்து
போதும்மா இன்னமும் சொல்லனுமா ? ஹா ஹா ஹா
நன்றி. நான் வெறும் முட்டையும் சக்கரையும் வைத்து தான் செய்வேன். உங்கள் முறைப்படி செய்து பார்க்கிறேன்
நன்றி பாத்திமா
சாருஸ்ரீ வென்னிலா எஸன்ஸ், பேக்கிங் சேர்த்தால் கேக் வாசனை வரும்.
நன்றி மகா
ஸாதிகா அக்கா ஆமாம் இது எல்லோருக்கும் தெரிந்த குறிப்பு, நான் அடிக்கடி செய்வதால் ஈசியான குறிப்பு பேச்சுலர்களுக்கு பயன் படும் என்று தான் கொடுத்தேன்
நவாஸ் காரம் டோஸ்ட் அது செய்து பாருங்கள். ரொம்ப நல்ல இருக்கும்
போனி பேஸ் உங்கலுக்கு பேவரிட் டிஷ் ஷா உங்கள் அம்மாவை ஞாபகப்படுத்தி விட்டேனா,கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
batticola வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி,
சுதாகர் சார் இப்ப எவ்வளவோசாண்ட் விச் பிரெட்டில் தயாரிக்கலாம், நீஙக் பிரெட் என்றாலே ஜுரம் ஞாபகம் வருது என்கிறீர்கள்.
நீங்கள் வந்து கருத்து தெரிவித்தது அதுவும் 1,2,3,4,5 போட்டு தெரிவித்தது அதை விட ரொம்ப சந்தோஷம்.
உமா மாதவன் செய்து பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
Bombay toast supera irruku.
intha mathiri nan try pannathu illa.
vithiasama irruku....
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா