Saturday, January 30, 2010

வாழையில் இவ்ளோ இருக்கா பாக‌ம் 1வாழை பழத்தை பற்றி ஒரு நீளமான பதிவு இது மெயிலில் வந்தத தகவல் யாருக்கு பொருமை இருக்கோ அவர்கள் மெதுவாக படித்து அதன் பயனை அடைந்து கொள்ளுங்கள்.
இந்த வாழைபழம் தகவல் மெயிலில் வந்தது, ஆனால் இதில் சில டிப்ஸ்கள் எனக்கு தெரிந்து இருந்தாலும், பல ஆச்சரியப்படும் தகவல்கள் இருக்கு. இதை எழுதிய புண்ணியவான் வாழ்க வளமுடன்.
என் பிலாக் மூலம் பல சகோதர சகோதரிகள் இதை பற்றி தெரிந்து கொள்வது எனக்கு மிக்கவும் சந்தோஷமாக இருக்கிறது.

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது.விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள்.


வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது.இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ-யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.
மக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்கவும்முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்து வருகிறது.
நாம் தினமும் சாப்பிடும் இரண்டு வாழைப்பழங்கள் இரத்தக் கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தும்.
நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால், பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விட
முடியும்.
விளையாட்டு வீரர்களின் கடைசி நேர மனநிலையை வெற்றியா தோல்வியா என் நிர்ணயிப்பது அதன்படி முழு வேகத்துடன் செயல்படுவது என அனைத்தையும் நிர்ணயிப்பது அவர்களின் உடலில் உள்ள பொட்டாசியம்தான். பொட்டாசியம் அளவு குறையாமல் இருந்தால் நான்காவதாக ஓடி வரும் வீரர் அந்தக் கடைசி நொடியில் முடிவு எடுத்து முதல் ஆளாக ஓடி வந்து வெற்றி பெற்று விடுவாராம். விளையாட்டு வீரர்களுக்கும் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற உறுதியானவர்களுக்கும் முழுமையான சக்தி நிரப்பப்பட்டுள்ள பழம் வாழைப்பழம்தான்.


சத்துக்கள்: எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழத்தில் இல்லாத சத்துக்களே கிடையாது.இதில் கர்போஹைடிரேட், புரதம், சிறிய அளவில் கொழுப்பு குளூக்கோஸ், நார்ச்சத்தும் ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் கால்சியம், , சோடியம், பாஸ்பரஸ், சல்பர், மக்னீசியம், இரும்பு, சிறிய அளவில் செம்புச்சத்தும் மற்றும் வைட்டமின் பொட்டாசியம் 400 மில்லி கிராம், Folocin 20 மைக்ரோ கிராம், விட்டமின், ரிபோஃபிளேவின், தயாமின் சி, 10 மில்லி கிராம், விட்டமின் பி 6-.6 மில்லி கிராம். முதலான உணவுச் சத்துக்களும் A, B, C வைட்டமின்களும் சத்துக்கள் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.


மருத்துவக் குணங்கள் : வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது.

இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது.

உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.

நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது.

பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது.

உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது.வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.

வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.


வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட.

இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூளை வலிமை (Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை. சில நோய்களுக்கு

வாழையை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம் :

நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.

கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.

குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும்.மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள்.இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம்.குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது.
கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.

பூவன் : இந்த பழத்தை கதலி என்றும் அழைப்பார்கள். மலச்சிக்கல், மூலநோயால் அவதிப்படுவோருக்கு இந்த பழம் மிகவும் நல்லது.

பேயன் பழம் : குடற்புண் தீர்க்கும். வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் தினம் ஒரு பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தாலே போதும்.

மலைவாழை : சோகையை நீக்கும். எளிதில் ஜீரணத்தை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குகிறது இந்த மலைவாழை.


ரஸ்தாலி : இதில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம்.செவ்வாழை பலமளிக்கும்.மொந்தன் காமாலைக்கு நல்லது.பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும்.நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.

வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வரப் பயன்படுகிறதுதொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.

காசநோய் உள்ளவர்கள் அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு டம்ளர் இளநீர் ஆகியவை சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வர அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.


சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து தினமும் இரு வேளை வீதம் சாப்பிட வேண்டும்.பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து தினமும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.காய்ச்சல் வருவதுபோல் உணர்ந்தால் ஒரு வாழைப்பழத்தை உடனே சாப்பிடுங்கள்.

கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும் நீரிழிவு நோய் சர்க்கரை வியாதி உள்ளவர்களும் வாழைப்பழத்தைத் ஒதுக்கி தவிர்த்து விட வேண்டும்.சோம்பேறிகளுக்கு சுறுசுறுப்பைத் தரும் வாழைப்பழத்தை எல்லா வயசுக்காரர்களும் விரும்பிச் சாப்பிடலாம்.இதய நோய் காய்ச்சல் மூட்டுவலி மன உளைச்சல் முதலியவற்றை எளிதில் குணமாக்கும் அரிய பழம் அரிய மருந்து இது.


இதில் சில‌ டிப்ஸ்கள் எனக்கு தெரிந்தது தான், பல ஆச்சரியமான தகவல்கள் இருக்கு.
இது முற்றிலும் உண்மை, தினம் ஒரு வாழைபழம் சாப்பிட்டு எந்த குறைபாடும் இல்லாத ஒருவர், நல்ல உடலும் ஊளைசதை ஏதும் போடமல் இருக்கிறார். நேரில் கண்டுள்ளேன்.


இது பெரிய பதிவாக இருந்ததால் 4 பாகமாக பிரித்து போட்டுள்ளேன்.
இது என் சொந்த ஆக்கம் இல்லை.
இடைவெளியை சரி செய்ய என்னால் முடியவில்லை


18 கருத்துகள்:

Mrs.Faizakader said...

அக்கா கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து இருக்கலாமே.. பொறுமையாக படிக்கனும்..

jailani said...

டிப்ஸ்>>1. குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் செவ்வாழை பழம் (ஆண்,பெண்) தினமும் சாப்பிட்டு வர பலன் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தெரியும்.
டிப்ஸ்>>2. (சிறு) குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை தரும் போது அப்படியே தராமல் சுடுநீரில்(ஒரு கிளாஸில்)இரண்டு நிமிடம் வைத்து கொடுத்தால் சளிப் பிடிக்காது.

டிப்ஸ்கே டிப்ஸா (ஜலீலா மேடம் ஸாரி) என்று பாக்கவேண்டாம். மக்கள் இந்த பதிவை ப்ரிண்ட் எடுத்துவைத்துக்கொண்டால் நல்லது.அருமையான பதிவு..
முக்கனியில் மூன்றாவது அல்லவா

shirin said...

ரொம்ப அருமையான் பய்னுள்ள் ப்திவு உங்களுக்குதான் ரொம்ப பொறுமை அக்கா இவ்ளோ அழகா நிதான்மா எழுதி இருக்கீங்க 3 3/4 வயது குழ்ந்தைக்கு எந்த வாழை கொடுக்க்லாம் தினமும் கொடுக்க்லாமா சொல்லுங்கள்

seemangani said...

வாழையில் இவ்ளோ இருக்கா...அக்கா நல்ல பதிவு...
நடுவே இடைவெளி நிறைய வருதே அக்கா...

வேலன். said...

அருமையான விளக்கம் சகோதரி...இடையில்உள்ள இடைவெளிகளை குறைத்திருக்கலாம்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

நட்புடன் ஜமால் said...

மன உளைச்சல், மன வியாதி நீக்க உதவுமென்பது புது செய்தி.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்ச்ச்ப்பா சோடா ப்ளீஸ் ...

Jaleela said...

வேலன் சார் இடைவெளி குறைக்க முடியல,

இது எனக்கு முதலில் இருந்தே இந்த பிராப்லம் வருது, என்னால் சரி செய்ய முடியல,இடை வெளி வராமல் இருக்க என்ன செய்வது தெரிந்தவர்கள் உதவுங்களேன்.

சகோ.ஜமால் ரொம்ப கழ்டப்படு படிச்சி முடிச்சீங்க போல சோடா விற்கு பதில் ஆரஞ்சு ஜூஸ் வேண்டுமானால் போட்டு தரேன் களைப்பு தீரும்.

பாயிஜா இந்த பதிவை உங்களுக்காக முன்று பதிவா எடுத்து போட்டு விடுகீறேன்

Jaleela said...

சீமான் கனி கருத்து தெரிவித்தமைக்கு நன்றி
(இடைவெளி என்ன செய்வதென்று தெரியல ,,தெரிந்தவர்கள் உதவுங்கள்)

Jaleela said...

ஜெய்லானி ( டிப்ஸுக்கே டிப்ஸா அதெல்லாம் ஒன்றும் இல்லை எனக்கு தெரியாத பல டிப்ஸ்கள் உங்கள் எல்லோருக்கும் தெரிந்து இருக்கலாம்.

நீங்கள் உங்கள் டிப்ஸை போட்டது ரொம்ப நல்லதா போச்சு குழந்தை இல்லாதவர்கள் இதை படித்தால் அவர்களுக்கு பயன் படும்.

Jaleela said...

ஷீரின், பொருமையா நான் டைப் பண்ணல, மேலே மெயிலில் வந்த தகவல் என்று போட்டுள்ளேனே.

என் குறிப்பு, என் டிப்ஸை தான் நான் பொருமையா, தினம் கொஞ்சம் கொஞ்சமா டைப் செய்து வைத்து பிறகு பப்ளிஷ் செய்வேன்.

3 1/2 வயது குழந்தைக்கு தாராளமாக கொடுக்கலாம்.

இங்கு டாக்டர்கள் குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலிருந்து மசித்து கொடுக்க சொல்கிறார்கள். சின்ன குழந்தைகளுக்கு பேயன் வாழை பழம் என்று சொல்லும் ஒரு விரல் அளவிற்கு இருக்கும் அதை கொடுக்கலாம்.

இதில் வாழைப்பழத்தை பற்றி எனக்கு தெரிந்த டிப்ஸையும் போடுகிறேன்.

கண்மணி said...

Jaleela போஸ்ட் எழுதும் போது கம்போஸ் மோடுக்குப் போய் ப்ரிவியூ பார்த்து இடைவெளிகளைக் குறைத்துக் கொள்ளலாம்.
edit html மோடும் செய்யலாம்.ஆனால் கவனம் தேவை.
இரண்டுமே post editor bar ல் உள்ளதுதான்.

வாழைக்கு [பதிவுக்கு]நன்றி

S.A. நவாஸுதீன் said...

ஒரு தார் வாழைப்பழத்தோட உக்காந்து படிச்சும் பழம் முடிஞ்சு போச்சு. படிச்சு முடியலை. எவ்ளோ பெருசு. பரவாயில்லை. அவ்ளோ நல்ல விஷயங்களும் இருக்கு.

SUFFIX said...

வாழையின் மொத்த பல பலன்களை ஒரே இடத்தில்!! ரொம்ப பெரிய இடுகையா இருந்தாலும், பல உபயோகமான் தகவல்களை தந்திருக்கின்றீர்கள். நன்றி.

ஸாதிகா said...

நீண்ட பதிவாயினும் நிரப்பமான பதிவு ஜலி.

Jaleela said...

கண்மணி வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி,

இடைவெளியை சுருக்க சொல்லி கொடுத்தமைக்கும் நன்றி.

Jaleela said...

நன்றி நவாஸ் தார் வாழைப்பழமா அவ்வளவும் சாப்பிட்டாச்சா?

பரவாயில்லையே டிப்ஸை போட்டதும் ஒரு தாரோடு வாங்கி வந்து சாப்பிட ஆரம்பிச்சாசா, எல்லோரும் பயனடைய வேண்டும்.

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela said...

ஆமாம் ஷபி பெரிய இடுகையா இருந்ததால் சில பேர் படிக்க போரடித்து போய் விடுவார்கள்.

ஆகையால் 4 பாகங்களாக பிரித்து விட்டேன்.

Jaleela said...

ஸாதிகா அக்கா அனைத்தும் பயனுள்ள தகவல்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா