Tuesday, February 15, 2011

சிரிக்க..சிரிக்க.. மட்டும்

1) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....
2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...

3
) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா 


5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள். 
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....

**********************&&&&&&&&&&&&&&&&&&&&&&*****************

11) தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(
ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)

12) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா.. 13) முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்லுக்கு டாப்-அப் பண்ண

முடியுமா...முடியாதா...?

14) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?


லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...

எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?


16) கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?

மனைவி: பல்லி விழும் பலன்...

கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?

மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...


17) நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.


18) நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?


* J to the A to the V to the A --- JAVA
கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்லாத்தான் வரும்.
* C 
க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++


19) வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)
1. 
படிப்பு

2. 
விளையாட்டு
3. 
பொழுது போக்கு
4. 
காதல்
5.
6.
7.

ஹலோ... என்ன தேடுறீங்ககாதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப் போயிருமே...! 


37 கருத்துகள்:

எல் கே said...

//மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....
//
இது டாப்பு

Kurinji said...

ஹா ஹா ஹா.. எல்லாமே சூப்பர்..ரசித்து சிரித்தேன் .. நன்றி .. :-))))


குறிஞ்சி குடில்

asiya omar said...

நல்லா ரசித்து சிரித்தேன்,பகிர்வுக்கு மகிழ்ச்சி.

அன்னு said...

//* J to the A to the V to the A --- JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.
//
he he he sema comedy... oriyakkara javalathan work panraar. avartta sollanum... he he...

ennakka naan thantha awardai vaangikkalai? design pidikkalaiya? hi hi

blogu pakkam vaanga ... :)

முனைவர்.இரா.குணசீலன் said...

நன்றகாவுள்ளது.

ரமா said...

ரசித்து சிரித்தேன் ஜலீலாக்கா.நன்றாக இருக்கிறது.

சிநேகிதன் அக்பர் said...

இப்பதான் பன்னிக்குட்டி ராமசாமி பதிவை படிச்சிட்டுவாரேன்.இங்கேயும் காமெடியா.

சிரிச்சு வயிறு புண்ணாப்போச்சு ஹா.ஹா.ஹா..

இமா said...

;)

ஸாதிகா said...

நல்லாவே சிரிச்சாச்சு ஜலி.ஜோக் நம்பர் 6 - 10 காணவில்லையே?சிரித்துக்கொண்டே பதிவிட்டதில் எண்ணிக்கை விட்டுப்போச்சா?

சே.குமார் said...

ha... ha... haaaa....

யாசவி said...

:))))

Shama Nagarajan said...

nice jokes...too good

Moorthy said...

சூப்பர்

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் ஜலீலாக்கா..
எல்லாமே சூப்பர்..

//“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....//
இருந்தாலும் உங்கத்தா ரொம்ப மோசம்..இப்டியா சொலரது,,ஹ்ம்..

மனைவி கணவன் இலக்கணம்-அதென்னமோ இதுமாதிரி காமெடிகளத்தா மனசு ரொம்ப விரும்புது...

அன்புடன்
ரஜின்

angelin said...

nalla irukku ella jokesum.
ellame super

கே. ஆர்.விஜயன் said...

ஹலோ... என்ன தேடுறீங்க? காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப் போயிருமே...! //
காதலர் தினத்தில் இப்படி அப்பட்டமாய் உண்மையை சொன்னதை நான் வன்மையாய் கண்டிக்கிறேன்.

நாஞ்சில் பிரதாப்™ said...

ஹஹஹஹஹ...கலக்கல்... நிறைய ஜோக்கு புதுசா இருந்துச்சு....பின்றீங்க போங்க

Gopi Ramamoorthy said...

:-)

Akila said...

wow.... after my tired day i was laughing so loud and feel so relaxed... intha maathiri jokes podunga... romba enjoy panrom...

Dish Name Starts with F
Learning-to-cook
Regards,
Akila

சாருஸ்ரீராஜ் said...

ha ha ha ...akka kalakalana comedy..

Chitra said...

Very funny!

S.Menaga said...

ha ha super,good jokes!!

இளம் தூயவன் said...

படித்தேன் ரசித்தேன் சிரித்தேன்.

அப்பாவி தங்கமணி said...

ஹா ஹா ஹா... எல்லாமும் செம.... இப்படி சிரிக்க வெச்சா எப்படிங்க அக்கா? சூப்பர் ஸ்டார் கலக்கல்... :)))

Viki's Kitchen said...

Very nice jokes..like that Rajini - JAVA very much:)

Kanchana Radhakrishnan said...

எல்லாமே சூப்பர்.

Nahasi said...

எல்லாமே சூப்பர்.நிறைய ஜோக்கு புதுசா இருந்துச்சு.ரசித்து சிரித்தேன் .

R.Gopi said...

இது ரொம்ப நாளைக்கு முன்னாடி வந்த ஃபார்வர்ட் மெயிலாச்சே...

ஆனா, எப்போ, எத்தனை தடவை படிச்சாலும் சிரிக்காமல் இருக்க முடியாது...

சமையல் அட்டகாசங்களினூடே இது போன்ற நகைச்சுவை அட்டகாசமும் செய்வது ரசிக்கும் வகையில் இருக்கிறது...

வாழ்த்துக்கள் ஜலீலா மேடம்...

அஹமது இர்ஷாத் said...

ப‌டிச்சி சிரிப்பு தாங்க‌ல‌.. ப‌கிர்வுக்கு தேங்க்ஸ்..

அந்நியன் 2 said...

எல்லோருமே இப்போ சிரிப்பு பகுதி வெளியிடறது மனதுக்கு சந்தோசமா இருக்கு.

எல்லாமே சூப்பர் ஜோக் வாழ்த்துக்கள் சகோ !

athira said...

அருமையான தொகுப்பு... சிரித்துக்கொண்டிருக்கிறேன்.

அமைதிச்சாரல் said...

ஜோக்ஸ் நல்லாருக்குங்க :-))

நட்புடன் ஜமால் said...

2 & 16 :)

Anonymous said...

நலமா ஜலீலாக்கா? நான் ருக்சானா ..
உங்கள் ஜோக்ஸ் அனைத்தும் அருமை வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுபோகும் என்றது போல் நன்றாக சிரித்தேன் வாழ்த்துக்கள்.....

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவுன் ரஸித்துச் சிரித்தேன். அனைத்தும் அருமை. நன்றி. வாழ்த்துக்கள்.

apsara-illam said...

சலாம் ஜலீலா அக்கா..., எங்கிருந்தக்கா...இந்த ஜோக்ஸ் எல்லாம் பிடிச்சீங்க...? வாய் விட்டு சிரிக்க ஏற்ற பகிர்வு....

அன்புடன்,
அப்சரா.

cheena (சீனா) said...

அன்பின் ஜலீலாக்கா

அத்தனையும் அருமை - சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிறது. வி.வி.சி. வலைச்சரம் வழியாக வந்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா